உங்கள் மகளையோ, சகோதரியையோ குடிப்பழக்கம் உள்ள உயரதிகாரிக்கு மணம் முடிப்பதை விட, குடிப்பழக்கம் இல்லாத தொழிலாளிக்கோ, ரிக்ஷா ஓட்டுபவருக்கோ திருமணம் செய்து கொடுங்கள் என்று மத்திய இணையமைச்சர் கௌஷல் கிஷோர் கூறியிருக்கிறார். அவரது வார்த்தைகள் உண்மையானவை!(1/5) #EnforceTotalProhibition
மத்திய அமைச்சரின் வார்த்தைகள் வலி நிறைந்தவை. அவர் எம்.பியாக இருந்த போது அவரது மனைவி எம்.எல்.ஏ. ஆனாலும் மதுவுக்கு அடிமையான மகனை மீட்க முடியவில்லை. இளம் வயதில் அவர் இறந்தார். இளம் வயதில் மருமகள் கைம்பெண் ஆனார். அப்போது அவர்கள் குழந்தையின் வயது 2!(2/5) @KaushalOffice
இதே கொடுமை தான் தமிழகத்தில் தெருவுக்கு தெரு நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் இளம் கைம்பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். சாலை விபத்துகள், தற்கொலைகள், மன நல பாதிப்புகள் ஆகியவற்றில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதற்கும் மதுவே காரணம்!(3/5)
மத்திய அமைச்சர் கௌஷல் கிஷோரின் வலி நிறைந்த வார்த்தைகளை ஆட்சியாளர்களும், பொதுமக்களும் திறந்த மனதுடன் ஆய்வு செய்ய வேண்டும். குடிப்பழக்கம் உள்ளவர்கள் புத்தாண்டில் அல்ல.... நாளை அல்ல.... இன்றே, இந்த நிமிடமே மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும்!(4/5)
மதுவால் நாடு சீரழிவதைத் தடுக்கும் பொறுப்பு அரசுக்கு தான் கூடுதலாக உள்ளது. இளம்பெண்கள் கைம்பெண்களாவதையும், குழந்தைகள் ஆதரவற்றவர்கள் ஆவதையும் தடுக்க தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும். தமிழக மக்களுக்கு புத்தாண்டு பரிசாக அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்!(5/5) @CMOTamilnadu
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பண்ருட்டி ஜெ.என்.எஃப் செவிலியர் கல்லூரியில் படித்து வந்த மாணவியை அதன் தாளாளர் டேவிட் அசோக்குமார் உள்ளிட்ட மூவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அதை காணொலியில் பதிவு செய்து, அதைக் காட்டி மீண்டும், மீண்டும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியுள்ளனர்.(1/6) #StopSexualViolence
அதைத் தாங்கிக்கொள்ள முடியாத விழுப்புரம் மாவட்டம் ஆனைக்கவுண்டன் குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, பண்ருட்டி மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த மாணவி கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார்.(2/6)
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மூவர், அதற்கு துணையாக இருந்த கல்லூரி பெண் பொறுப்பாளர் உள்ளிட்ட நால்வர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து எளிதாக தப்பிவிடக்கூடிய ஆபத்து உள்ளது!(3/6) #StopSexualAssault#ProtectOurGirlChild
1.தில்லியில் 26ஆம் தேதி நடைபெறவிருக்கும் குடியரசு நாள் அணிவகுப்பில் வஉசி, பாரதியார், வேலுநாச்சியார் மற்றும் மருது சகோதரர்கள் உருவங்கள் அடங்கிய தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. அதற்காக கூறப்படும் காரணம் ஏற்க முடியாதது!#RepublicDay2022
2. இந்திய விடுதலையின் 75-ஆவது ஆண்டு கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பான தருணத்தில் விடுதலைக்காக போராடிய இவர்களின் உருவம் அடங்கிய அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம் பெறுவதே சிறப்பு. அவர்களை வெளிநாட்டு தலைவர்களுக்கு தெரியாது என்று கூறுவது தவறான வாதம்!#VeluNachiyar
3. வ.உ.சியின் 150 ஆவது ஆண்டு விழா இப்போது கொண்டாடப்படுகிறது. பாரதியார் உலகறிந்த கவிஞர். வேலுநாச்சியாரின் வீரத்தை அண்மையில் தான் பிரதமர் பாராட்டியிருந்தார். மருது சகோதரர்கள் வேலுநாச்சியாரின் போராட்டத்தை தொடர்ந்தவர்கள். இவற்றை விட வேறு என்ன தகுதி வேண்டும்?#Bharathiyar
#இடஒதுக்கீடு என்பது பல்வேறு நிலைகளில் உள்ள பல்வேறு சமூகங்களுக்காக பல்வேறு பிரிவுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். அது தான் உண்மையான சமூகநீதி ஆகும். (1/5)
ஆந்திரத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு ஏ, பி, சி, டி, இ என 5 பிரிவுகள் மற்றும் இஸ்லாமியர் என 6 தொகுப்புகளாக பிரித்து வழங்கப்படுகிறது. அதனால் ஒரே நிலையில் உள்ள சமுதாயங்களுக்குள் போட்டி ஏற்படுத்தப்பட்டு, முழுமையா #சமூகநீதி உறுதி செய்யப்படுகிறது!(2/5)
கர்நாடகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு பிரிவு 1 & 4%, பிரிவு 2ஏ &15%, பிரிவு 2 பி & 4%, பிரிவு 3ஏ &4%, பிரிவு 3பி & 5% என 5 பிரிவுகளாக பிரித்து வழங்கப்படுகிறது. அதனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள அனைத்து சமூகங்களும் பயனடைகின்றன.(3/5)
கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் சிலை மீது சில நச்சுக்கிருமிகள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமான விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!(1/4)
தந்தை பெரியாரின் சிலைகள் மட்டும் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறது என்றால், அவரது கொள்கைகள் தமிழகத்தில் கடந்த சில காலமாக ஊடுருவியுள்ள நச்சுக்கிருமிகள், விஷப்பாம்புகளை அச்சமடையச் செய்துள்ளன; அதன்விளைவு தான் இது என்பதை புரிந்து கொள்ள முடியும்!(2/4)
கொள்கை அடிப்படையில் எதிர்க்க துணிவில்லாத கொரோனாவை விட மோசமான இந்த நச்சுக்கிருமிகள் மிகவும் ஆபத்தானவர்கள்; சமுதாயத்தில் நஞ்சை பரப்புபவர்கள். அவர்களிடமிருந்து நமது பிள்ளைகளைக் காப்பதும், விழிப்புணர்வூட்டுவதும் தான் நமது முதல் கடமையாக இருக்க வேண்டும்!(3/4)
இந்தியாவில் கொரோனா நோயை தடுப்பதற்காக இந்திய தொற்று நோய் சட்டம் 1897 என்ற சட்டத்தின்படி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக மத்திய, மாநில அரசுகள் கூறுகின்றன. அந்த சட்டம் குறித்து பார்ப்போம். (1/6) #Coronavirus#LockDownTNnow
1. இந்திய தொற்று நோய் சட்டம் 1987-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பம்பாயில் பரவிய பிளேக் நோயை கட்டுப்படுத்துவதற்காக இயற்றப்பட்ட சட்டமாகும். அப்போது பிளேக் நோயால் ஆயிரக்கானோர் இறந்தனர். லட்சக்கணக்கானோர் மும்பையிலிருந்து வெளியேறினர். (2/6) #CoronaVirus#LockDownTNnow
2. பின்னர் தேசிய அளவில் தொற்றுநோய்களை கட்டுப்படுத்த இந்த சட்டம் விரிவுபடுத்தப்பட்டது. மலேரியா, காலரா, டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்ட போது அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டது! (3/6) #CoronaVirus#LockDownTNnow
1. முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறதாமே.... அப்படியானால், அந்த பட்டா வெளியிட்டது, அரசியலில் இருந்து விலகத் தயாரா? என்று சவால் விட்டதெல்லாம் வழக்கம் போல் வெற்றுச் சவடால் தானா?
2.அரசியல் உலகில் எவ்வளவோ பல்டிகள் அடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்திலும் ஆகச்சிறந்த பல்டி... முரசொலி நிலம் மீதான பழியைத் துடைப்போம் என்று வீர வசனம் பேசி விட்டு, இப்போது நாங்களே வாடகைக்கு தான் இருக்கிறோம் என்று சரண் அடைந்தது தான்?
3. முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் தான் இயங்குகிறது என்பதாவது உண்மையா? மூலப் பத்திரத்தைத் தான் வெளியிடவில்லை. குறைந்தபட்சம் வாடகை ஒப்பந்தத்தையாவது முரசொலி நிர்வாகம் வெளியிடுமா? கூடவே சவால் விட்டவர் அரசியலில் இருந்து விலகுவாரா?