Dr S RAMADOSS Profile picture
மருத்துவர் ச. இராமதாசு, நிறுவனர், பாட்டாளி மக்கள் கட்சி. The Official Twitter Account of Dr. S. Ramadoss, Founder, Pattali Makkal Katchi (PMK),
Dec 26, 2022 5 tweets 2 min read
உங்கள் மகளையோ, சகோதரியையோ  குடிப்பழக்கம் உள்ள உயரதிகாரிக்கு மணம் முடிப்பதை விட, குடிப்பழக்கம் இல்லாத தொழிலாளிக்கோ, ரிக்‌ஷா ஓட்டுபவருக்கோ திருமணம் செய்து கொடுங்கள் என்று மத்திய இணையமைச்சர் கௌஷல் கிஷோர் கூறியிருக்கிறார். அவரது வார்த்தைகள் உண்மையானவை!(1/5)
#EnforceTotalProhibition மத்திய அமைச்சரின் வார்த்தைகள் வலி நிறைந்தவை. அவர் எம்.பியாக இருந்த போது அவரது மனைவி எம்.எல்.ஏ. ஆனாலும் மதுவுக்கு அடிமையான மகனை மீட்க முடியவில்லை. இளம் வயதில் அவர் இறந்தார். இளம் வயதில் மருமகள் கைம்பெண் ஆனார். அப்போது அவர்கள் குழந்தையின் வயது 2!(2/5) @KaushalOffice
Jan 19, 2022 6 tweets 2 min read
பண்ருட்டி ஜெ.என்.எஃப் செவிலியர் கல்லூரியில் படித்து வந்த மாணவியை அதன் தாளாளர் டேவிட் அசோக்குமார் உள்ளிட்ட மூவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அதை காணொலியில் பதிவு செய்து, அதைக் காட்டி மீண்டும், மீண்டும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியுள்ளனர்.(1/6)
#StopSexualViolence அதைத் தாங்கிக்கொள்ள முடியாத விழுப்புரம் மாவட்டம் ஆனைக்கவுண்டன் குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, பண்ருட்டி மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த மாணவி கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார்.(2/6)
Jan 17, 2022 4 tweets 2 min read
1.தில்லியில் 26ஆம் தேதி நடைபெறவிருக்கும் குடியரசு நாள் அணிவகுப்பில் வஉசி, பாரதியார், வேலுநாச்சியார் மற்றும் மருது சகோதரர்கள் உருவங்கள் அடங்கிய தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. அதற்காக கூறப்படும் காரணம் ஏற்க முடியாதது!#RepublicDay2022 2. இந்திய விடுதலையின் 75-ஆவது ஆண்டு கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பான தருணத்தில் விடுதலைக்காக போராடிய இவர்களின் உருவம் அடங்கிய அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம் பெறுவதே சிறப்பு. அவர்களை வெளிநாட்டு தலைவர்களுக்கு தெரியாது என்று கூறுவது தவறான வாதம்!#VeluNachiyar
Nov 30, 2020 5 tweets 2 min read
#இடஒதுக்கீடு என்பது பல்வேறு நிலைகளில் உள்ள பல்வேறு சமூகங்களுக்காக பல்வேறு பிரிவுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். அது தான் உண்மையான சமூகநீதி ஆகும். (1/5) ஆந்திரத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு ஏ, பி, சி, டி, இ என 5 பிரிவுகள் மற்றும் இஸ்லாமியர் என 6 தொகுப்புகளாக பிரித்து வழங்கப்படுகிறது. அதனால் ஒரே நிலையில் உள்ள சமுதாயங்களுக்குள் போட்டி ஏற்படுத்தப்பட்டு, முழுமையா #சமூகநீதி உறுதி செய்யப்படுகிறது!(2/5)
Jul 17, 2020 4 tweets 1 min read
கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் சிலை மீது சில நச்சுக்கிருமிகள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமான விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!(1/4) தந்தை பெரியாரின் சிலைகள் மட்டும் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறது என்றால், அவரது கொள்கைகள் தமிழகத்தில் கடந்த சில காலமாக ஊடுருவியுள்ள நச்சுக்கிருமிகள், விஷப்பாம்புகளை அச்சமடையச் செய்துள்ளன; அதன்விளைவு தான் இது என்பதை புரிந்து கொள்ள முடியும்!(2/4)
Mar 23, 2020 6 tweets 4 min read
இந்திய தொற்று நோய் சட்டம் 1897 - சில தகவல்கள்

இந்தியாவில் கொரோனா நோயை தடுப்பதற்காக இந்திய தொற்று நோய் சட்டம் 1897 என்ற சட்டத்தின்படி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக மத்திய, மாநில அரசுகள் கூறுகின்றன. அந்த சட்டம் குறித்து பார்ப்போம். (1/6)
#Coronavirus #LockDownTNnow 1. இந்திய தொற்று நோய் சட்டம் 1987-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பம்பாயில் பரவிய பிளேக் நோயை கட்டுப்படுத்துவதற்காக இயற்றப்பட்ட சட்டமாகும். அப்போது பிளேக் நோயால் ஆயிரக்கானோர் இறந்தனர். லட்சக்கணக்கானோர் மும்பையிலிருந்து வெளியேறினர். (2/6)
#CoronaVirus #LockDownTNnow
Jan 30, 2020 4 tweets 1 min read
1. முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறதாமே.... அப்படியானால், அந்த பட்டா வெளியிட்டது, அரசியலில் இருந்து விலகத் தயாரா? என்று சவால் விட்டதெல்லாம் வழக்கம் போல் வெற்றுச் சவடால் தானா? 2.அரசியல் உலகில் எவ்வளவோ பல்டிகள் அடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்திலும் ஆகச்சிறந்த பல்டி... முரசொலி நிலம் மீதான பழியைத் துடைப்போம் என்று வீர வசனம் பேசி விட்டு, இப்போது நாங்களே வாடகைக்கு தான் இருக்கிறோம் என்று சரண் அடைந்தது தான்?
Oct 19, 2019 4 tweets 1 min read
1. முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா? 2.முரசொலி அலுவலகம் கட்டப்பட்டது எப்போது? அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது? அவற்றை விடுத்து 1985-ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால், இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன்? அதன் மர்மம் என்ன?