#விதுரர்_நீதி
திருதராஷ்டிரன் விதுரரைப் பார்த்து, மனிதனுக்கு ஆயுள் நூறு வருடங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தும், முழுமையான ஆயுள் வரை யாரும் வாழ்வதாகத் தெரியவில்லையே இது ஏன் என்று கேட்டார். அதற்கு விதுரர், ஆறு கூரிய வாள்கள் தான் மனிதனின் ஆயுளை அழிக்கின்றன – குறைகின்றன
என்றார். அவை:
முதல் வாள் - அதிக கர்வம்
தான் கெட்டிக்காரன், தான் செல்வந்தன், தான் கொடையாளி, தான் நல்லவன், பிறர் கெட்டவர்கள் என்று நினைப்பதால் கர்வம் அதிகரிக்கிறது. கர்வம் கொண்டவனைக் கடவுள் சீக்கிரம் அழித்து விடுவார். ஆகவே, கர்வம் கொள்ளாமலிருக்க, தன் விஷயத்தில் குற்றங்களைப் பார்க்க
வேண்டும். பிறர் விஷயத்தில் குணங்களைப் பார்க்க வேண்டும்.
இரண்டாவது வாள் - அதிகம் பேசுதல்:
அதிகம் பேசுகிறவன் வீண் விஷயங்களைப் பற்றிப் பேசி, வீண் வம்பை விலைக்கு வாங்குவான். அதனால்தான் பகவான் கீதையில் கடுமையில்லாததும், உண்மை ஆனதும், பிரியமானதும், நன்மையைக் கருதியதுமான வார்த்தை எதுவோ,
அது வாக்கினால் செய்யப்படும் தவம் என்கிறார்.
மூன்றாவது வாள்- தியாக மனப்பான்மை இல்லாமை: அனைத்தையும் நாம்தான் அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசையின் காரணமாகத்தான் நமக்குத் தியாக மனப்பான்மை ஏற்படுவதில்லை. நாம் இந்த உலகில் பிறந்ததே நமக்காக அல்ல, பிறருக்கு உதவுவதற்காகத் தான் என்று
உணர்ந்தால் தியாக மனப்பான்மை ஏற்படும்.
நான்காவது வாள் – கோபம்: கோபம்தான் மனிதனுடைய முதல் எதிரி. கோபத்தை வென்றவன் தான் வெற்றியாளன். அவன் தான் உலகில் சுகப்படுவான். கோபத்துக்கு வசப் பட்டவன், தர்மம் எது அதர்மம் எது என்ற விவேகத்தை இழந்து பாவங்கள் செய்கிறான். யார் நம்மைக் கோபித்துக்
கொண்டாலும் அவற்றைச் சகித்துக் கொள்ளக் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஐந்தாவது வாள்– சுய நலம்: சுயநலம்தான் எல்லாத் தீமைகளுக்கும் காரணம். தங்கள் காரியம் ஆக வேண்டும் என்பதற்காக எந்தப் பாவத்தையும் செய்ய அஞ்ச மாட்டார்கள். பிறர் இன்புறுவதைக் கண்டு நாம் இன்புற வேண்டும். பிறர் துன்புறுவதைக்
கண்டு நாம் துன்புற வேண்டும். இப்படிச் செய்தால் சுயநலம் போய்விடும்.
ஆறாவது வாள்- நண்பர்களுக்கு துரோகம் இழைப்பது: உலகில் நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது. அப்படியிருக்க, அவர்களுக்குத் துரோகம் செய்வதைப் போன்ற அநியாயம் உண்டா? பகவான் கீதையில் கூறியிருப்பது போல, நாம் எல்லோருடனும்
வெறுப்பின்றியும், நட்பு மனப்பான்மையுடனும், கருணையுடனும் பழக வேண்டும்.
இந்த ஆறு விஷயங்களிலிருந்தும் ஒருவன் விலகி வாழ்ந்தால் நிச்சயமாக அவன் நூற்றாண்டை நிறைவு செய்வான்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#அட்சதை#அக்ஷதை
பூஜைகளிலும், திருமணங்களிலும், சுப நிகழ்வுகளிலும் அட்சதைக்கென தனியிடம் அளிக்கப்பட்டிருக்கிறது.
"க்ஷதம்" என்றால் "குத்துவது" அல்லது "இடிப்பது" என்று பொருள்.
"அக்ஷதம்" என்றால் இடிக்கப்படாதது என்று பொருள். உலக்கையால் இடிக்கப்படாத, முனை முறியாத அரிசி அட்சதை
எனப்படுகிறது. முனை முறிந்த அரிசியைக் கொண்டு அட்சதை தயாரிப்பது வழக்கமல்ல. முனை முறியாத அரிசியோடு மஞ்சளையும் இணைக்கிறோம். பூமிக்கு மேல் விளையும் பொருள் அரிசி. பூமிக்குக் கீழ் விளையும் பொருள் மஞ்சள். இவை இரண்டையும் இணைக்கப் பயன்படுவது தூய பசுநெய் என்கிற ஊடகம். சந்திரனின் அம்சம்
கொண்ட அரிசி, குருவின் அம்சம் கொண்ட மஞ்சள், மஹாலக்ஷ்மியின் அம்சமான நெய் இவை யாவும் ஒன்று சேரும்போது, அங்கே நல்ல அதிர்வு உண்டாகி, அந்த இடமே சுபிட்சம் ஆகிறது. வெள்ளை அரிசியோடு மஞ்சள் நிறம் சேர்ந்து நெய்யின் மினுமினுப்போடு விளங்கும் இந்த அக்ஷதை, பெரியோர்களின் ஆசிகளைச் சுமந்து வரும்
அறுபத்தஞ்சு வயது வரைக்கும் மடத்துக்காகவே தொண்டு செய்து, பரமாசார்யா பாதமே கதி என்று இருந்தவர் பஞ்சாபகேசன் என்கிற தொண்டர், அதற்கு மேல் ஆசார்யாளுக்கு கைங்கர்யம் செய்ய
நினைத்தாலும் அவரின் தள்ளாமை இடம் கொடுக்கவில்லை. அதனால, பெரியவாவிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு தஞ்சாவூரில் இருந்த அவர் பிள்ளையிடம் போனார். அவரின் மகனும் நல்லவன் தான். ஆனா சதா காலமும் பெரியவா கைங்கர்யத்தில் இருப்பதற்கு அவன் நிலைமை இடம் கொடுக்கலை. அன்றாடம் உழைத்தால் தான் அன்றன்றைய
பிழைப்பு நடக்கும். பஞ்சாபகேசன் காஞ்சிபுரத்தில் இருந்து தஞ்சாவூருக்குப் போய் விட்டாலும் பெரியவா பேரால் ஏதாவது கைங்கர்யம் செய்யணும்,தான தர்மம்னு முடிந்த அளவுக்காவது பண்ணணும் என்று நினைத்தார். ஆனா பெரிதா எதுவும் பண்ண முடியவில்லை. இந்த நிலையில் ஒரு நாள் அவர் மகன் பேச்சுவாக்கில்
#மகாபெரியவா சென்னை ஸம்ஸ்கிருத கல்லூரியிலே 1956-57லே மஹா பெரியவா சில நாள் தங்கி இருந்தபோது மாலை தினமும் பிரசங்கம் நடைபெறும். பெரியவா பேச்சை கேட்க கூட்டம் அலைமோதும். அன்று ராஜாஜி வந்திருந்தார். என்ன பேசறதுன்னு மகாபெரியவா முடிவு செய்யவில்லை. பக்கத்தில் பேராசிரியர் சங்கரநாராயணன்
நிற்பதை பெரியவா பார்த்து அவரை பக்கத்தில் கூப்பிட்டார். அவரிடம் ஒரு ஸ்லோகத்தின் முதல் ரெண்டு வரியை சொன்னார்.
"உனக்கு அடுத்த ரெண்டு வரி இருக்கே அது தெரியுமா?”
“பெரியவா மன்னிக்கனும். எனக்கு தெரியலை”
இப்படி பெரியவா ஒரு ஸ்லோகத்தை பத்தி பேசினது மைக்கில் எல்லோருக்கும் கேட்டது.
கூட்டத்தில் ஒருவருக்கு அந்த ஸ்லோகம் தெரிஞ்சிருந்தது. அவர் மெதுவாக மேடைக்கு அருகே வந்து பேராசிரியர் சங்கரநாராயணனிடம் “சார், பெரியவா கேட்ட அந்த பாக்கி ரெண்டு அடி எனக்கு தெரியும். அது இதுதான் என்று அவரிடம் சொன்னதை பேராசிரியர் சந்தோஷமா மேடையிலேறி பெரியவா கிட்ட,
“பெரியவா அந்த மீதி
தீமைகளைச் செய்யாதீர்கள். புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர். தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்.
மனத்தை எண்ணங்களிலிருந்து விடுவிப்பதே சாதனையின் நோக்கமாகும். குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும் நிலையும் உண்டு.
தியானத்தில் ஆன்ம
தியானம் எனப்படுவதே சிறந்தது. அது சித்தியானால் மற்ற தியானங்கள் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ஒவ்வொருவர் உடைய மனப் பக்குவத்திற்கு ஏற்றவாறு தியான முறைகளைக் கை கொள்ள வேண்டும்.
கடவுளை ஒவ்வொருவரும் அவர்கள் இதயத்தில் தேடினால், கடவுள் அருளும் அவர்களை நிச்சயம் தேடும். கர்த்தா ஒருவன்.
நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட கருவிகளே! இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் பணிவு வராமல் போகாது.
மந்திரங்களை இடைவிடாது சொல்வதால் மனம் அடங்கும். பின் மந்திரம், மனம், மூச்சு என எல்லாம் ஒன்றே என்று ஆகும். ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம். ஒருவன் தான் யார் என்று அறிந்து
#அரங்கன்#பராசர_பட்டர்#ஶ்ரீவைஷ்ணவம்#தமிழ்
பராசர பட்டர், ஸ்ரீரங்கத்து அரங்கநாதனின் முன்னே நின்றார்.
‘என்னையும் என்னுடைய அழகையும் பாடிவிடுவீரோ நீர்?’ என அரங்கன் கேட்க,
‘முதலில், உம் ஆதிசேஷனைப் போல எனக்கு ஆயிரம் நாக்குகளைத் தாருங்கள், பார்க்கலாம்’ என்றார் பராசரர்.
‘அட! ஆயிரம்
நாக்குகள் இருந்தால் தான் பாடுவீரோ?’ என்று சிரித்த அரங்கன், கருணையும் வாஞ்சையும் மேலிட பராசரபட்டருக்கு, ஆயிரம் நாக்குகளை வழங்கினான். ஆனந்தத்தில் கைகள் குவித்து, சிரம் தாழ்த்தி நமஸ்கரித்தார் பராசரர்
”மன்னிக்கவும் ரங்கா! என்னால் உன்னை பாட முடியாது!” என்று சொல்லிவிட்டு, அமைதியாகி
விட்டார். ஆச்சரியம் தாங்கவில்லை அரங்கனுக்கு! பின்னே, பாடு என்று உத்தரவு போட்டாகி விட்டது. பராசரர் கேட்டபடி, ஆயிரம் நாக்குகளையும் அவருக்கு வழங்கியாகி விட்டது. அப்படியும் ‘பாட முடியாது’ என்று மறுத்தால்?
”என்ன விளையாடுகிறாயா? ஆயிரம் நாக்குகள் கேட்டாய், கொடுத்தேன். பிறகென்ன பாட
#மகாபெரியவா வேதம் பயிலும் குழந்தைகளிடம் பெரியவாளின்
தாய்ப்பாசம் ஈடற்றது. பற்பல முறை தன்னிடம் வரும் செல்வந்தர்களான
பக்தர்களிடம், எனக்கு நீ ஒரு உதவி
செய்வாயோ? என்று மஹாபெரியவா கேட்பார்கள். அவர் கேட்கும் உதவி வேதபாடசாலைக் குழந்தைகளுக்கு தித்திப்பு, காரம் பக்ஷணங்களை பண்ணி நீயே போய்
கொடுத்துட்டு வா என்பது தான். பிறகு சில நாட்களில் கழித்து அந்தப் பாடசாலை குழந்தைகள் மஹா பெரியவாளை தரிசிக்க வந்தால் உடனே அவர்களிடம், அன்று பக்ஷணம் வந்ததா? சாப்பிட்டாயா?என்று அக்கறையோடு கேட்பார்கள்.
மாடு கூடத் திங்காத அழுகல் வாழைப் பழம் வேதபாடசாலைப் பையன்களுக்கு, என்று பழமொழி போல்
கூறப்பட்ட காலத்தில் பெரியவாளின் பெரிய புரட்சி, பாடசாலை குழந்தைகளுக்கு அவர் காட்டிய அலாதி பிரியமும், அவர்களுக்கு செய்து கொடுத்த சௌகர்யங்களும்.
மகா பெரியவா வேதபாடசாலை குழந்தைகளுக்கான வசதிகளை உருவாக்கி கொடுத்த விதமே மிகச் சிறப்பு. ஒருமுறை பெரியவாளுக்கு அப்பளம் கொண்டு வந்த