அரசு தரப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே 3நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு பலர் மருத்துவ மனையில் உள்ள போதும் போராட்டம் தொடரும் என்றே உறுதியாக உள்ளார்கள்.
அரசுப் பள்ளிகளில் கடந்த 2009ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி, நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1ஆம் தேதி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் 3,170 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து 4வது நாளாக உண்ணாவிரத
போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். அவர்களில் 50 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், கோரிக்கை நிறைவேறும் வரை, பின்வாங்க போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். @Anbil_Mahesh#teachers#tamilnadu#protest
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வீதி நாடகக் கலைஞர், போராளி, கம்யூனிஸ்ட் தோழர் சப்தர் ஹஷ்மி படுகொலை செய்யப்பட்ட தினம் இன்று.
1989 ஜனவரி 1ல் ஜந்தர்பூர் எனும் உத்திரபிரதேசத்தில் உள்ள கிராமம், அங்கு தான் சப்தரின் ஜனநாட்டிய மஞ்ச் /ஜனம் நாடகக் குழு "Halla Bol - உரக்கப் பேசு" என்ற நாடகத்தை நடத்தியது. #Safdarhashmi
அப்போது காங்கிரஸ் கட்சியினர் குண்டர்களோடு வந்து ஜனம் நாடகக் குழு மற்றும் பார்வையாளர்களை கடுமையாக தாக்கியது.
அந்த தாக்குதலில் தோழர் சப்தர் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
தோழர். சப்தர் ஹஷ்மி வெறும் நாடககாரர் மட்டுமல்ல,
1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி, ஹனீப் மற்றும் கமர் ஆசாத் ஹாஷ்மிக்கு மகனாக சப்தர் ஹஷ்மி பிறந்தார். 1975 ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். மார்க்சிய சூழலில் வளர்ந்த ஹஷ்மி,
01/01/1959 கியூபா மக்களுக்கு மிகமுக்கியமான ஒரு புத்தாண்டு காரணம் 1959 டிசம்பர் 31 இரவு அந்நாட்டு அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரி அதிபர் பாடிஸ்டா நாட்டை விட்டு வெளியேற்றப்படிருந்தான், வீதிகளில் எல்லாம் "viva la revolution, viva la fidel, viva la cuba," 🧵 #Cuba#cubanrevolution#Cuban
என விவசாயிகளும் தொழிலாளர்களும் கோஷங்கள் எழுப்பி ஆரவாரத்தோடு பிறந்தது புத்தாண்டு. ஆம் இன்று கியூபா புரட்சி தினம்.
1953 பீடல்காஸ்ட்ரோ வும் மற்ற தேசிய விடுதலை குழுக்களும் தீவிரமாக போராடும் போது கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டனர்.
பின் 1956 ல் பீடல்காஸ்ட்ரோ, சே குவேரா, ரவூல் காஸ்ட்ரோ மற்றும் பல கொரில்லா வீரர்கள் எல்லாம் சியரா மாட்ரோ மலைபகுதிகளில் பயிற்சி பெற்று தொடர் தாக்குதல் நடத்தி முன்னேறினர்.
இரண்டு வருடங்களுக்கு பிறகு 1958 டிசம்பர் இறுதி நாட்களில் முக்கிய நகரங்களை கொரில்லா குழுக்கள் கைப்பற்றின
ஏழை மக்களின் பயோமெட்ரிக் விபரங்களை பெற ஒப்பந்தமே இல்லாமல் தனியார் நிறுவனத்தை பயன்படுத்தும் சென்னை மாநகராட்சி.
சென்னை கண்ணப்பர் திடல் பகுதில் உள்ள குடிசை வாழ் மக்களிடமிருந்து கைரேகை மற்றும் விழித்திரை ஸ்கேன் ஆகியவற்றை Impact technology எனும் தனியார் நிறுவனம் பெற்றுவந்துள்ளது. 1/9
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் (TNUHDB) மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் அப்பகுதியில் வாழும் வீடற்ற மக்களுக்கு வீடு வழங்குவதற்கு இந்த விபரங்கள் சேகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
2011 - 2015 வரை தான் Impact technology நிறுவனத்தோடு 2/9
சென்னை மாநகராட்சி ஒப்பந்ததில் இருந்தது. தற்போது நடக்கும் இந்த விபர சேகரிப்பு பணிக்கு எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை.
"Tamil Nadu Transparency in Tenders Act 1998" மற்றும் "The Tamil Nadu Transparency in Tenders Rules 2000" ஆகிய படி சட்டவிதிகள் படி தற்போது பணிகளை மேற்கொள்ளவில்லை
பெயரளவு கூலி? உண்மையான கூலி? என்ன வேறுபாடு? நம்ம இப்ப வாங்குறது என்ன கூலி?
முதலில் கூலி என்பது நாம் ஒரு நிறுவனத்திடம்/முதலாளியிடம் நம் உழைப்பை கொடுத்து நாம் உயிர் வாழ, சமூக வாழ்க்கையை மேற்கொள்ள தேவையான பொருட்களை வாங்க பெறப்படும் பணமே ஆகும்.
ஆனால் நாம் பெறும் கூலி வைத்து நம்மால் எவ்வளவு பொருட்கள் வாங்க முடியும் என்ற ஒப்பீட்டில் தான் உண்மையான கூலி என்று கூலியை வரையறுக்க முடியும்.
உதாரணத்திற்கு, ஒரு நபர் தன் வாழ்வாதார செலவினங்களுக்கு நாள் ஒன்றுக்கு 150 ரூபாய் தேவைபடுகிறது என்று வைத்துக்கொள்வோம்.
ஆனால் அந்த நபருக்கு 100 ரூபாய் தான் கூலியாக வழங்கப்படுகிறது என்றால் அந்த 100 ரூபாயை பயன்படுத்தி தன் பராமரிப்புக்கு தேவையான பொருட்களை எவ்வாறு வாங்க முடியும்? எனவேதான் இந்த கூலி பெயரளவு கூலி எனப்படுகிறது.
கலைத்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பெரிய முதலாளிகள் கடந்த 18 மாதங்களாகப் பேசி வந்துள்ளனர் எனவும் அவர்கள் நடத்திய சதி ஆலோனைகளின் குரல் பதிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. காஸ்டில்லோவை
ஜனாதிபதிப் பொறுப்பிலிருந்து நீக்குவதற்கான வழிமுறைகளை அவர்கள் தொடர்ந்து விவாதித்துள்ளார்கள்.
இரண்டு மாதங்களுக்கு முன்பாகப் பேசிய காஸ்டில்லோ, “இவ்வளவு நாட்கள் ஆகியும் நான் ஜனாதிபதியாகி விட்டேன் என்பதை இவர்கள் ஏற்றுக் கொள்ளவேயில்லை” என்று எச்சரித்தார்.