ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்த காலம், அப்போது ஒவ்வோர் ஆண்டின் தொடக்க நாளிலும் ஆங்கிலேய அதிகாரிகளைச் சென்று பார்த்து வணங்குவது ஊழியர்களின் வழக்கமாக இருந்தது.
புத்தாண்டில் ஒரு வெள்ளைக்கார துரையைப் பார்த்து வணங்குவதா என்று மனம் வருந்திய வள்ளிமலை ஸ்வாமிகளால் தொடங்கப்பட்ட வழிபாடுதான் திருத்தணிகை திருப்படி உற்சவ விழா.
ஆங்கிலப்புத்தாண்டில் துரைகளுக்கெல்லாம் துரையான முருகப் பெருமானை வேண்டி
அங்கு அமைந்திருக்கும் 365 படிகளுக்கும் பூஜை செய்து ஒவ்வொரு படியிலும் திருப்புகழை பாராயணம் செய்து புது விழாவினை 1917-ம் ஆண்டு முதல் தொடங்கினார்கள்.
இதனால் திருத்தணி முருகப்பெருமானுக்கு 'தணிகை துரை' என்ற பெயரும் உருவானது.
இப்படித்தான் திருத்தணி படிபூஜை 100 ஆண்டுகளாக இங்கு நடைபெற்று வருகிறது.
1870- ம் ஆண்டு அவதரித்து 1950-ம் ஆண்டு சமாதி நிலை கொண்ட வள்ளிமலை சுவாமி சச்சிதானந்தா, அருணகிரிநாதரின் தித்திக்கும் திருப்புகழ்ப் பாடல்களை நாடெங்கும் பரவச் செய்தார்.
முருகப்பெருமானின் பெருமைகளைப் பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்து கௌமார வழிபாட்டை மறுமலர்ச்சிப் பெறச் செய்தவர்.
இன்றும் வள்ளிமலையில் அவரது இஷ்ட தெய்வமான வள்ளியம்மையின் இருப்பிடத்தில் சமாதி கொண்டு அருள்செய்து வருபவர்.
இவரே இந்தப் படி பூஜையினைத் தொடங்கி பிரபலமாக்கி வழிநடத்தியவர்.
வள்ளிமலை சுவாமிகளால் 1917-ம் ஆண்டு முதல் படித்திருவிழா மற்றும் அன்னதான நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவர் இறுதிக் காலம் வரை சுமார் 33 ஆண்டுகள் நடத்தி வந்தார்.
அவரது மறைவுக்குப் பின் அவரால் தோற்றுவிக்கப்பட்ட "ஸ்ரீ வள்ளிமலை சுவாமி சச்சிதானந்தா திருப்புகழ் சபா"
உறுப்பினர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
ஒவ்வோர் ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31 இரவு திருத்தணிகை மலையின் கீழிருந்து ஒவ்வொரு படியாக நின்று, 365 படிகளிலும் இரவெல்லாம் பூஜித்து, அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ்ப் பாடல்களை படிக்கு ஒரு பாடல் வீதம் பாராயணம் செய்து,
ஜனவரி முதல் நாள் காலை படி பூஜையினை முடித்து திருத்தணிகை முருகப்பெருமானை தரிசித்து வருவதே படிபூஜை விழா.
நிகழாண்டிற்கான திருவிழா இன்று 31- ஆம் தேதி காலை 8 மணிக்கு சரவணப் பொய்கையில் தொடங்குகிறது.
காலை 11 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி மலைக்கோயில் மாடவீதிகளில் ஒருமுறை வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா்.
இதன் காரணமாக, மாலை 4 மணி முதல் ஜனவரி 1-ஆம் தேதி இரவு 9 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
இந்த நேரத்தில் பக்தா்கள் தொடா்ந்து கோயிலுக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்யலாம் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் 31-ஆ ம் தேதி காலை 11 மணி முதல் மலைக்கோயில் வளாகத்தில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
அவதார புருஷரான எம்பெருமானுடன் போரிட்டு, அவரின் அருள் பெற்ற மதுகைடவர்கள் என்ற அரக்கர்கள் இருவர், பெருமாளை நோக்கி தங்களின் மிகப்பெரிய பலனை உலகமக்களின் நலன் கருதி அவர்களுக்கும் அருள வேண்டும் என விரும்பினார்கள்.
அதாவது அரக்கர்கள் இருவரும் தாம் பெற்ற வைகுண்ட இன்பத்தை உலகில் உள்ள எல்லோரும் பெற வேண்டும் என்று விரும்பி
பெருமானிடம் வைகுண்ட ஏகாதசி தினத்தில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக தாங்கள் அர்ச்சாவதாரத்தில் வெளி வரும் போது தங்களை தரிசிப்பவர்களும்,
தங்களை பின் தொடர்ந்து வருபவர்களும்,
அவர்கள் எத்தகைய பாவங்கள் செய்து இருந்தாலும் அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
அவர்களின் வேண்டுகோளை பெருமான் ஏற்றுக் கொண்டார்.
அதன் காரணமாகவே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஸ்வாமி பவனி வரும் நிகழ்ச்சி ஏற்பட்டது.
108 திவ்யதேசங்களில் பெரும்பாலும் சொர்க்கவாசல் எனப்படும் பரம
பத வாசல் இருக்கும்.
ஆனால், கும்பகோணம் ஸ்ரீ சாரங்க பாணி ஆலயத்தில் சொர்க்கவாசல்
எனப்படும் பரம பத வாசல் கிடையாது.
இதற்கு காரணம் இருக்கிறது.
இத்தலத்து சுவாமி நேரே வைகுண்டத்திலிருந்து இங்கே வந்தார்.
மகாலட்சுமியின் அவதாரமான கோமளவல்லியை மணமுடிப்பதற்காக
திருமால் தான் எழுந்தருளியுள்ள ரதத்துடன் வைகுண்டத்தில் இருந்து
இங்கு வந்து கோமளவல்லியை மணந்து கொண்டார்.
எனவே, இவரை வணங்கினாலே பரமபதம் (முக்தி) கிடைத்துவிடும்
என்பதால், இந்த ஆலயத்தில் சொர்க்கவாசல் கிடையாது.
மேலும், இங்குள்ள உத்ராயண, தெட்சிணாயன வாசலைக் கடந்து சென்றாலே பரமபதம் கிட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது.