Dr.Devi PhD Profile picture
Jan 7 9 tweets 2 min read
கோழிக்கு மாதவிடாய் வருமா?
கோழிமுட்டை மாதவிடாயின் எச்சமா?

வாங்க #அறிவியல்_பேசுவோம்

1/9
Menstruationன்னதும் உங்களுக்கு இவங்க ஞாபகம் வந்தா அப்படியே அத கடந்து subjectகுள்ள வாங்க

2/9
மனித பெண்களின் கர்ப்பப்பை ஒவ்வொரு மாதமும் கரு உருவாகலாம் என்கிற எதிர்பார்ப்புடன் தனக்குள் epithelial செல்களை கொண்டு பல அடுக்குகளால் தடிமனான படுக்கை போல் தனது endometriumஐ உருவாக்கிக்கொள்ளும்.

3/9
கரு உருவாகாத பட்சத்தில் அந்த தடிமனான திசு படுக்கையை அழித்து ரத்தப்போக்குடன் வெளியேற்றுவதே ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு மாதவிடாயாக நிகழ்கின்றது.

4/9
மனிதஇனம் தாண்டி சில மனிதகுரங்கினங்களிலும், வவ்வால் போன்ற சில பாலூட்டிகளிலும் மாதவிடாய் நிகழும். இன்னும்சில பாலூட்டிகளில் endometriumதிசு படுக்கை அழிக்கப்பட்டாலும் உதிரப்போக்கு இல்லாமல் உடம்பே அந்த திசுக்களை உறிஞ்சிக்கொள்ளும் (covert menstruation).

5/9
So சுருக்கமாக மாதவிடாய் கருவை தன் கர்ப்பப்பையில் முழுவதுமாக வளர்த்து குட்டியாக ஈனும் viviparous உயிரினங்களில் அதுவும் குறிப்பாக சில பாலூட்டிகளில் மட்டுமே காணப்படும் நிகழ்வு.

6/9
கோழி மற்றும் அனைத்து பறவை இனங்களும் கருவை கர்ப்பப்பையில் சுமப்பவை அல்ல; Oviparous எனப்படும் முட்டை ஈனுபவை. கோழியில் கருப்பையில் உருவாகும் முட்டை அதன் கர்ப்பப்பையை அடைந்ததும் அதற்கான கால்சியம் ஓடு தயார்செய்யப்பட்டு cloaca வழியாக வெளியேறும்.

7/9
ஆகையால் கருவின் வளர்ச்சி தாயின் உடலிற்கு வெளியே நடக்கும். எனவே endometrium என்கிற பேச்சுக்கே கோழியின் reproductive systemல் இடமில்லை; ஆகையினால் கோழிக்கு மாதவிடாயும் வராது. கோழி மட்டுமல்ல எந்த உயிரினத்தின் முட்டையும் மாதவிடாயின் எச்சமும் அல்ல.

8/9
அது சரி, முட்டையில மூக்குச்சளி இருக்குனு சொன்னது சரியா?

அப்போ கோழிக்கு ஜலதோஷம் புடிக்குமா? ன்னெல்லாம் கேக்காதீங்க 🤫🤫

9/9

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Dr.Devi PhD

Dr.Devi PhD Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @itzmedevi

Jan 8
பம்பை நதியில் E.coli

கேரளா அரசு பம்பை நதியின் மாதிரிகளை சோதிச்சு பாத்தது பாராட்டுக்குரியது.

பக்தர்கள் கூட்டம் அதிகமா இருக்கும் இந்த seasonல E. coli மற்றும் மனிதக்கழிவுகள் மூலமா பரவுற இன்னும் சில பாக்டீரியாக்கள் நதி நீரை அசுத்தப்படுத்தி இருக்கலாம்.
1/4
சரி E. coli பாக்டீரியாவால எதும் மனித ஆரோக்கியத்திற்கு பாதிப்பு வருமா?

மனிதர்களின் குடலில் வசிக்கும் இந்த பாக்டீரியா பெரும்பாலான நேரங்களில் நோய் உண்டாக்குவதில்லை.

2/4
ஆனால் இதுல சில strainகள் (கொரோனா வைரஸ்ல ஒமிகிரான், டெல்டான்னு நெறய திருபுகள் இருக்குற மாதிரி, பாக்டீரியாவிலும் நெறய திரிபுகள் உண்டு) வயிற்றுப்போக்கு/ ரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் போன்ற அசௌகரியங்களை கொடுக்கும்.

3/4
Read 5 tweets
Nov 24, 2022
இந்திய ஆண்கள் மற்றும் இந்திய பெற்றோர்கள் எல்லாருக்கும் "ஆண் பெண் உறவு" பற்றிய ஒரு விதமான ignorant + இறுக்கமான மனநிலை இருக்கு.

<ஒன்னு அந்த உறவு கல்யாணத்துல முடியணும் இல்ல அந்த உறவு கல்யாணத்துல தான் ஆரம்பிக்கணும்>
1/8
இதுக்கிடையில trust, understanding, compatability, comfort, ரெண்டு பேராலயும் peacefulஆ life எடுத்துட்டு போக முடியுமான்ற விஷயங்களுக்கெல்லாம் இடமேஇல்ல.

Toxicனு தெரிஞ்சும், toxicஆ இல்லையானு கூட தெரியாமலும் ஒருபொண்ணோ பையனோ கல்யாணத்த நோக்கிதான் போகணும்ன்ற மனப்பான்மைதான் இங்க இருக்கு.2
இது ரொம்பவும் ஆபத்தானது. பல வகை உறவுச்சிக்கல் மற்றும் மனநல சிக்கலை உருவாக்கக்கூடியது.
இதுக்கிடையில தாலி தான் வேலி, ஆண் தான் protectorன்ற style வசனங்கள் வேற.

காதலோ கல்யாணமோ நட்போ கூடிப்பிரியும் அனுபவம் ஒருத்தர் ஒருத்தருக்கான தனிப்பட்ட வாழ்க்கையின் பக்குவத்தோட
3/8
Read 8 tweets
Nov 10, 2022
Genetics in #Crime_investigation

தன் 4 குழந்தைகளையும் கொலை செய்த குற்றத்தில் 40 ஆண்டு கால சிறை தண்டனை அனுபவிக்கும் “ஆஸ்திரேலியாவின் மிகக்கொடூரமான serial killer” என்று அழைக்கப்பட்ட காத்லீனுக்கு மரபியல் திருப்புமுனையாக அமையுமா?

வாங்க #அறிவியல்_பேசுவோம்
#அறிவோம்_மரபியல்

1/16
1999இல் தனது 18 மாத குழந்தை லாரா படுக்கையில் அசைவற்று இருப்பதைப் பார்த்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார் காத்லீன். குழந்தை காரணம் கண்டறியமுடியாத Sudden Infant Death Syndrome(SIDS) ஆல் மரணமடைந்திருக்கலாம் என்று யூகிக்கும் போதே தனது முந்தைய மூன்று குழந்தைகளும் SIDSஆல்

2/16
ஏற்கனவே மரணமடைந்தனர் என்றும், கடந்த 10 ஆண்டுகளில் தனது 4 குழந்தைகளை இழந்ததாகவும் கூறிய காத்லீனின் வாக்குமூலம் அவரின் மீதான முதல் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

3/16
Read 16 tweets
Sep 16, 2022
ஒரு கரு உருவாகணும்ன்னா தாய் தந்தை இரண்டு பேரோட மரபணுக்கள் தான தேவை. ஆனா இந்த ஆராய்ச்சியில மூணு பேரோட மரபணுக்களை உபயோகித்து ஒரு கருவை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்காங்க!

இந்த மாதிரி Three parent babyய ஏன் எதுக்காக உருவாக்குறாங்க?

வாங்க பாக்கலாம்

#அறிவோம்_மரபியல்

(1/13)
ஆண் பெண்ன்னு தனி தனியா இருக்குற sexually dimorphic உயிரினங்கள்ல ஒரு கருவிற்கு ஆணிடம் இருந்து nuclear மரபணுக்களும், பெண்ணிடம் இருந்து nuclear மரபணுக்கள் மற்றும் mitochondria மரபணுக்கள்ன்னு இரண்டு மரபணுக்கள் setஉம் கடத்தப்படுகின்றன.

(2/13)
So இம்மூன்றின் மூலமும் மரபியல் சம்பந்தப்பட்ட நோய்களும் ஒரு கருவிற்கு கடத்தப்படலாம். In case, இதுல தந்தையின் மூலம் அல்லது தாயின் மூலம் மரபியல் நோய்கள் கடத்தப்படலாம்னு கண்டுபிடிக்கப்பட்டால் donor மூலம் பெறப்பட்ட ஆரோக்கியமான sperm அல்லது eggஐ use பண்ணி IVF முறையில்

(3/13)
Read 14 tweets
Sep 16, 2022
My strong opinion: When it comes to marriage, Indian parents need to be educated a lot.

கல்யாணத்திற்கான முக்கியமான விஷயங்களாக ஒரு குடும்பம் பாக்குறது சாதி, income, ஜாதகம் (இத ஏன் தூக்கிட்டு அலையிறாங்கன்னு என்னால புரிஞ்சிக்கவே முடியல), grand wedding event.
(1/8)
இத தவிர ஒரு relationship successfulஆ இருக்க முக்கிய தேவையான compatability, respect, love இதெல்லாம் dealல விட்டுருவாங்க. கேட்டா "போக போக பழகிடும்"ன்னு சொல்லுவாங்க. இன்னைய தேதிக்கு இரண்டு பேர் சேந்து நிம்மதியா வாழ political compatabilityகூட முக்கியம் தான்.
(2/8)
ஆனா இன்னும் இவங்க ஜோசியக்காரன் சொல்ற கட்டத்தையே வேடிக்கை பாத்துட்டு உட்காந்திருக்காங்க.

Infact, கல்யாணம் பண்ணிக்க போற பையன் பொண்ண விட ஜோசியக்காரனுக்கும், brokerக்கும் தான் அந்த கல்யாண decisionல influence அதிகம்.
(3/8)
Read 8 tweets
Sep 13, 2022
ஒரே ஒரு மரபணு மாற்றம் - மனித இனத்திற்கு அடிச்சது ஜாக்பாட்!

#அறிவோம்_மரபியல்

> நம் பரிணாம வளர்ச்சிப்பாதையில் நமது அறிதிறனை (cognitive function) அதிகரிக்கச் செய்ததும் அது தான்

> நம்மை நமது கிளைச்சகோதரர்களான நியாண்டர்தால்களிடம் இருந்து பிரித்து காட்டியதும் அது தான்

(1/11)
> அவர்களை வென்று நாம் (Homo sapiens) ஆதிக்க இனமாக உருவாக துணை செய்ததும் அது தான்.

நியாண்டர்தால்களுக்கும் நமக்கும் மூளையின் அளவில் பெரிய மாற்றம் இல்லையென்றாலும்

சேர்ந்து வாழ்ந்த காலத்தில் நம் இரண்டு இனங்களுக்கு இடையில் புணர்வுகள் இருந்தாலும்

(2/11)
இன்றும் நம்மிடையே 2% நியாண்டர்தால்களின் DNA காப்பாற்றப்பட்டு வந்தாலும்
நம்மைப் போல் சிந்திக்கும் திறனும், மொழிவளமையும், கவிதை பாடும் ஞானமும், தொழில் உருவாக்கும் திறனும் இல்லாமல் போனது எதனால்?

(3/11)
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(