#கனகதாரா_ஸ்தோத்திரம்_உருவான_காரணம்
அத்வைத வேதாந்த தத்துவத்தை அறிமுகப்படுத்திய #ஆதிசங்கர_பகவத்பாதாள், லக்ஷ்மி தேவியைப் போற்றி கனகதாரா
ஸ்தோத்திரத்தை எழுதி, அவளிடம் பிரார்த்தனை செய்து, ஏழைப்
பெண்ணுக்கு செல்வத்தை அளித்தார்.
ஆதி சங்கர பிக்ஷை எடுக்க ஒரு வீட்டின் முன் நின்றார்.
கதவு திறந்திருந்தது, ஒரு பெண் வீடு முழுக்க தேடி, வீட்டில் இருந்த ஒரே அழுகின நெல்லிக்கனியை பிக்ஷை இட்டாள். ஆதிசங்கரர் அதை ஏற்று அவள் நிலைமையை எண்ணி இரங்கி, மகாலக்ஷ்மியிடம் பிரார்த்தித்து 21 ஸ்லோகங்களை பாடினார். முந்தைய பிறவியில் செய்த பாவங்களை அகற்றி இப்பெண்ணின் மேல் கருணை
கொண்டு செல்வத்தை பொழியுமாறு மனமுருக துதித்தார். தாயார் மனமிறங்கி அவ்வீட்டு கூரையின் மீது ஒரு நாழிகை தங்க நெல்லிக் கனிகளை பொழிந்து அப்பெண்ணின் வறுமையை நீக்கினார். கனகதாரா ஸ்தோத்திரத்தின் 21 சுலோகங்கள் கடன் மற்றும் கடனில் இருந்து விடுபடுவதற்கான ஒரு சக்தி வாய்ந்த ஸ்தோத்திரமாகும்.
கனகதாரா மந்திரத்தை ஓதி, செல்வத்தின் தெய்வமான லக்ஷ்மி தேவியின் ஆசீர்வாதத்தைப் பெற முடியும். கனகதாரா ஸ்தோத்திரத்தை மூன்று அல்லது ஐந்து முறை தொடர்ந்து சொல்வது மூலம்
செல்வம் மற்றும் செழிப்பு, மகிழ்ச்சி ஏற்பட மிகுந்த பலனை கொடுக்கிறது. கடந்தகால கர்மவினையால் அவதிப்பட்டு வறுமையில்
வாடுபவர்களின் நல்வாழ்வுக்காக கனகதாரா ஸ்தோத்திரத்தை அருளியுள்ளார் ஆதி சங்கரர். இந்த ஸ்தோத்திரத்தை அசைக்க முடியாத நம்பிக்கையுடனும், ஒருமுகத்துடனும், பக்தியுடனும் பாராயணம் செய்பவர், மங்கலப்
பெருமானின் அருளைப் பெற்று, கடன்களில் இருந்து விடுபட்டு,
ஏராளமான பணத்தைப் பெறுவார்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஆலங்காட்டு_ரகசியம்
சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை, சிதம்பர ரகசியம் என்பார்கள். ஆலங்காட்டு ரகசியம் என்னவென்று பார்ப்போம். நடராஜர் நாட்டியமாடிய முதல் தலம் திருவாலங்காடு ஆகும். இங்கு சிவபெருமான் வடாரண்யேஸ்வரராக கோயில் கொண்டருளுகிறார். ரத்தின சபை என்று
இத்தலம் போற்றப்படுகிறது.
சிவபெருமானைத் தரிசிக்க, காரைக்கால் அம்மையார் கயிலாயத்திற்கு தலைகீழாக நடந்து சென்று கொண்டிருந்தார். இப்படி வருவதைக் கண்ட பார்வதி, சிவபெருமானிடம், இவர் யார் கேட்டார். அதற்கு பதிலளித்த சிவபெருமான், இவர்கள் என் அம்மை என்றார். வெகு அருகே வந்துவிட்ட காரைக்கால்
அம்மையாரை, என்ன வரம் வேண்டும் என சிவபெருமான் கேட்ட போது காரைக்காலம்மை, எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் எனக்கு வேண்டும் என்றார். அப்படியே ஆகட்டும் என்று அருளினார் சிவ பெருமான். திருவாலங்காடு பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னனின் கனவில் அன்றே தோன்றினார்
#விசேஷதர்மம்
மரணத்துக்குப் பின் தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த
கர்ணன் சூரியனிடம், "தந்தையே! நான் என் நண்பன் துரியோதனனுக்கு செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டுமென்ற நல்ல எண்ணத்தில் அவன் பக்கம் போர் புரிந்தேன். ஆனால் வஞ்சகன் கண்ணன் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!” என்று
புலம்பினான். அப்போது சூரிய பகவான்,
"இல்லை கர்ணா! கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே. நீஒரு தவறு செய்து விட்டாய். செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் கண்ணனோ சாமானிய தர்மங்களை விட, உயர்ந்த விசேஷ தர்மமாக விளங்குபவன்.
"க்ருஷ்ணம் தர்மம் ஸனாதனம்” என்று
அதனால்தான் சொல்கிறோம். அந்தக் 'கண்ணன்' என்ற விசேஷ தர்மத்துக்கும்,
செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் என்ற சாமானிய தர்மத்துக்கும்,முரண்பாடு
வருகையில், விசேஷ தர்மத்தை கைக் கொள்ள வேண்டும். நீஅதை விட்டுவிட்டுச் சாமானிய தர்மத்தை கைக்கொண்டு விசேஷ தர்மத்தைக் கைவிட்டாய். அதனால்தான் அழிந்தாய்.
#MahaPeriyava It was during the nineties, just about a year before He attained Siddhi. Maha Periyava was telling His disciples around Him that He wanted to go to the Chidambaram temple and wanted to have a darshan of Sri Nataraja Swamy there, and of the "Kunjitha Paadam" -
a special garland made of various plant roots famous in the Chidambaram temple, and which you can see in the photo below on Sri Maha Periyava's head. It is common belief that if one has a darshan of the Kunjitha Paadam, he/she will be cured of all diseases and that he/she would
be able to attain Moksha (salvation). The disciples felt confused and sad on hearing this instruction of Periyava - because He was barely able to move about during those days, and to get him to travel so long in that stage was not advisable as well. To their surprise, the very
#ராமநாம_மகிமை
இந்த உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த நாமம், ராம நாமம் ஆகும். ஸ்ரீமன் நாராயணன் இந்த பூவுலகில் ஒரு சாதாரண மனிதனாக அவதரித்து, ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்று வழிகாட்டினான். ராம நாமமே தலைசிறந்த நாமம் என்பதற்கான காரணங்களைப் பார்ப்போம். #முக்திக்கு_வழிகாட்டி
ராம
நாமம் ஒன்றுக்கே #தாரகமந்திரம் என்கிற சிறப்புப் பெயர் உண்டு. தாரக என்ற சொல்லுக்கு படகு அல்லது மோட்சம் அளிக்க வல்லது என்று பொருள். ராம நாமத்தால் மட்டுமே இந்த சம்சார கடலிலிருந்து நம்மை கரை சேர்க்க முடியும் என்பதால் இது தாரக மந்திரம் என்று அழைக்கப் படுகிறது. அனைத்து நாமங்களையும்
உள்ளடக்கியது. ராம நாமத்தை ஜபிப்பதாலேயே கடவுளின் ஆயிரம் நாமங்களை ஜபிப்பதின் புண்ணியம் கிடைக்கிறது. ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சிவபெருமான் பார்வதி தேவியிடம் இந்த உண்மையை விளக்கி இருக்கிறார். (ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே)
#MagaPeriyava
Kanchi Saint Attains Maha Samadhi- News Article published in the Quarterly Journal #Hinduism_Today in March 1994.
His Holiness, Sri Chandrasekharendra Saraswathi, the Shankaracharya of Kanchi Kamakoti Peetam in South India, passed away in Kanchipuram, Tamil Nadu,
on Saturday, January 8th, 1994, just four months before he was due to complete his centenary. The end of the 68th pontiff of the Kanchi Mutt came suddenly at 2:58pm as he was relaxing in his room within the Mutt. All of India rushed to pay respect-Hindus, Muslims, Christians,
rich, poor, all castes alike. Prime Minister P.V. Narasimha Rao cancelled his programs to attend the internment. The sage, slightly indisposed due to a phlegm formation, had stopped giving darshan to the public since the first of this year. But he recovered fully and was talking
#பாலசுப்பிரமணிய_சுவாமி_திருக்கோவில் #ஆண்டார்_குப்பம் திருவள்ளூர் மாவட்டம்.
சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் கூட்டுச் சாலை வழியாக பொன்னேரி செல்லும் வழியில் அமைந்துள்ளது. இவரை தரிசித்து வழிபட்டால் பதவி யோகம் வாய்க்கும் என்பது பெரியோர் வாக்கு. மேலும் இக்கோவிலுக்கான
சிறப்பு என்னவென்றால், முருகன் காலை வேளையில் குழந்தையாகவும், மதியம் இளைஞராகவும், மாலை முதியவராகவும் மூன்று விதமான வடிவங்களில் பக்தர்களுக்கு இங்கு காட்சி தருகிறார். பால பருவத்தில் உலகத்தை சுற்றி வந்த முருகன் கருணையாலும், வீரத்தாலும் உலகை ஆண்டு, ஊரில் குடிகொண்டதால் ஆண்டார் குப்பம்
என பெயர் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. கைலாயம் சென்ற பிரம்மன் அங்கிருந்த முருகனை கவனிக்காமல் சென்றபோது, பிரம்மனை அழைத்த முருகன் நீங்கள் யார் என கேட்க, நான் படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மன் என அதிகார தோரணையுடன் பதிலளித்தார். அவரது அகங்காரத்தை போக்க நினைத்த முருகன் படைக்கும்