#GovernorRNRavi Raj Bhavan chennai has issued following clarification on today’s developments. DMK Govt seems to be on the back foot!
உண்மையில் என்ன நடந்தது? 6 பாயிண்டுகள். ஆளுநர் மாளிகை வட்டார தகவல்.
1. ஆளுநரின் உரையை நீக்குகிறேன் என அவர் அழகாக தமிழில் மேற்கோள் காட்டிய ஔவையாரின் Image
வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான் என்கிற வரிகளையும், பாரதியாரின் வாழிய பாரத மணித்திரு நாடு என்கிற கவிதை வரிகளையும், தமிழக மக்களுக்கு ஆளுநர் தமிழில் சொன்ன ஆங்கில புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகளையும்
நீக்கியுள்ளனர். ஆளுநர் உரையை ஜனவரி 6 அன்று அரசு அனுப்பி வைத்தது. அதில் உள்ள ஆட்சேபகரமான விஷயங்களை ஆளுநர் குறிப்பிட்டு கேட்டு அவைகளை நீக்கச் சொல்லி சொன்ன போது அச்சுக்கு போய்விட்டது, நீங்கள் பேசும்போது தவிர்த்து பேசுங்கள் என்று சொல்லியுள்ளனர். (அது ஆவணபூர்வமாக பதிவாகியுள்ளது.)
ஆனால் ஆளுநர் சபையில் அதை நீக்கி வாசித்த போது உடனடியாக சானல்களுக்கு அதை அனுப்பி வைத்தும், ஆளுநர் இருக்கும் போதே ஆளுநர் உரைக்குப் பின் சபை முடித்து வைக்கப்பட வேண்டும் என்கிற சபை மரபை மீறி தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஆளுநர் அவமானப் படுத்தப்பட்டுள்ளார். எதை எதை ஆளுநர் ஆட்சேபித்தார்
ஏன் என்பதை பார்ப்போம்.
2. ஜனவரி 12ம் தேதி சுவாமி விவேகானந்தரை நினைவுகூரும் இளைஞர் தினம். அந்த தினத்தை குறிப்பிட்டு சேர்த்து பேசியுள்ளார். இது அவை மரபை மீறிய செயல் அல்ல. ஆளுநர் ஆட்சேபித்த மற்றும் தவிர்க்கப்பட்ட பகுதிகள் அரசாங்கத்தைப் கண்டபடி பெரிதும் புகழ்ந்த பகுதிகள். நடைமுறை
வேறாக இருந்ததால் ஆட்சேபித்தார், பேசும்போது தவிர்க்கலாம் என்று சொன்னதால் தவிர்த்தார்.
3. "இந்த அரசாங்கம் வீரம் மற்றும் வீரியம் கொண்ட திராவிட மாடல் ஆட்சியில் தொடரும்" இதை ஆளுநர் சொல்ல முடியாது. முதல்வர் அவர் உரையில் பேச வேண்டியது. கொள்கை, செய்ய வேண்டியதை மட்டும் ஆளுநர் உரையில்
வைப்பார்கள். இதுபோன்ற அதீத புகழ்சிகளை தவிர்ப்பேன் என்று ஆளுநர் சொல்லிவிட்டார்.
4. இந்த மாநிலம் அமைதியின் சொர்க்கமாகத் தொடர்கிறது, வன்முறையிலிருந்து விடுபட்டுள்ளது என்று இல்லாத ஒன்றை பதிய வைப்பதை தவிர்த்தார். தினசரி நியூஸ் சேனல்கள், பேப்பர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை அடுக்காக
புகாராக சொல்லும்போது இந்த மாநிலம் அமைதியின் சொர்க்கமாக இருக்கிறது என்பது யதார்த்தம் அல்ல (சமீபத்தில் பொதுகூட்டத்தில் பெண் காவலருக்கு நடந்த பாலியல் சீண்டலில் குற்றவாளிகளை கைது செய்யாமல் பாதுகாத்ததும், பின்னர் எதிர்ப்பு கிளம்பியபின் கைது செய்ததும் நடந்தது)
5. இலங்கை கடற்படையால்
கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஏதோ மாநில அரசின் முயற்சியால் மட்டுமே விடுவிக்கப்பட்டதாக உள்ள வரிகளை எப்படி ஏற்க முடியும். அது சர்வதேச பிரச்சினை மத்திய அரசின் தலியீடு இல்லாமல் எப்படி நடக்க முடியும் என்பதால் மத்திய அரசின் முயற்சி என்கிற வார்த்தையை சேர்த்து படித்தது தவறா? பல இடங்களில்
மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு நன்றாக இருப்பதாகவும், அமைதி பூங்காவாக மாநிலம் திகழ்கிறது என்கிற வார்த்தைகள் முதல்வர் மற்றும் டிஜிபியை போற்றும் வகையில் இருந்தன. இந்த சொற்கள் ஆளுநரால் தவிர்க்கப்பட்டது.
#தொழிற்முதலீடு_குறித்த_மிகைப்படுத்தப்பட்ட_செய்தி
"கடந்த 1.5 ஆண்டுகளில்
இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிக அந்நிய நேரடி முதலீட்டை தமிழகம் ஈர்த்தது" என்பது ஜனவரி 7 ஆம் தேதி ஆளுநர் உரையில் இருந்தது இதை ஆளுநர் சுட்டிக்காட்டி மாற்றச் சொன்னார். அதை அப்படியே இருந்ததால் தவிர்த்தார்.
உண்மை என்ன? கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தமிழக அரசு ஈர்த்த
அந்நிய முதலீடு 2.5 பில்லியன் டாலர்கள் என பெருமையாக பதிவிடப்பட்டுள்ளது. ஆனால் இதே காலக்கட்டத்தில் மகாராஷ்டிரா - 28 பில்லியன் டாலர்கள் மற்றும் கர்நாடகா 25 பில்லியன் டாலர்கள் அந்நிய முதலீட்டை ஈர்த்துள்ளது இதில் பத்தில் ஒருபங்கை ஈர்த்துவிட்டு பெருமையடைவது பிழையான ஒன்று என்பதால்
தவிர்த்தார். சட்டசபை உறுப்பினர்கள் ஆளுநரை சுற்றி நின்று உரையை வாசிக்க விடாமல் கோஷமிட்டு கேரோ செய்தனர். இது இதற்கு முன் நடக்காத ஒன்று, ஆளுநர் பேச்சுக்கு எதிராக கேரோ செய்து கோஷம் எழுப்பும் போது சபாநாயகர் தடுக்காமல் அவர்களை வேடிக்கை பார்த்தார்.
6. ஆளுநர் முன்னால் சபாநாயகர்
இருக்கையில் இருக்கும் போது, ஆளுநர் உரைக்குப் பின் அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் படித்த பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் மற்றும் அமர்வு ஒத்திவைக்கப்பட வேண்டும். ஆனால் சபை மரபை மீறி முதல்வர் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தது சபை விதிகளின்படி இல்லை, அவை மரபை மீறிய செயல்.
சபாநாயகர் சபையின் தலைவராக இருந்தாலும் அரசியலமைப்புச் சட்டத்தின் தலைவராக உள்ள ஆளுநரின் பேச்சை சபைக்குறிப்பில் இருந்து நீக்குவது என்பது சட்ட வல்லுனர்கள் முன் உள்ள தீவிர விவாதப் பொருளாகும். இவ்வாறு ஆளுநர் மாளிகை வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
#GovernorRNRavi

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jan 9
#மகாபெரியவா பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். ஈச்சங்குடி கணேசய்யர் என்பவர் பெரியவாளிடம் நிரம்பவும் பக்தி பூண்டவர். அவருடைய மனைவிக்கு வயிற்றில் புற்றுநோய் ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டார். டாக்டர்கள் அந்த அம்மாளுக்கு ஆபரேஷன் செய்துதான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் பிழைப்பது அரிது
என்று சொல்லிவிட்டார்கள். பெரியவாளிடம் வந்து பிரார்த்தித்தார், கணேசய்யர்.
‘ஆபரேஷன் வேண்டாம். திருத்துறைப்பூண்டிக்குப் பக்கத்திலே திருநெல்லிக்காவல் என்று ஒரு ரயில்வே ஸ்டேஷன் இருக்கு. அந்த ஸ்டேஷனில் இறங்கி ஒரு கிலோமீட்டர் மேற்கே போனால், ஒரு வாய்க்கால் வரும். அதன் கரையில், கனகல்
என்று ஒரு மரம் இருக்கு. அதன் இலைக்காம்பை சாப்பிடச் சொல், கான்ஸர் குணமாகிவிடும்’ என்றார்கள் பெரியவா. அதன்படி அந்த அம்மாள், அந்த மரத்தின் இலையின் காம்பை மென்று தின்று வந்தாள். சில நாட்களில் நோய் மறைந்தேவிட்டது.
(துரதிருஷ்டவசமாக, அந்தக் கனகல் மரம் சமீபத்தில் பட்டுப் போவிட்டது)
Read 8 tweets
Jan 9
#MahaPeriyava
This is an incident that happened several years back. A man named Echankudi Ganesa Aiyer was a staunch devotee of Sri Maha Periyava. His wife had cancer in the stomach and was suffering a lot. Doctors advised that she had to be operated upon or else it would be
difficult for her to survive the disease. Ganesa Aiyer came to Periyava and appealed to Him. Sri Maha Periyava said, "There is no need for any operation. There is a railway station named Thirunellikaaval near ThiruturaiPoondi. If you get down at the station and go towards the
West for a kilometre, you can see an irrigation canal. There is tree on the banks of canal called “Kanakal” (in Tamil). Ask her to take the stalks of its leaves, her cancer will be cured." After receiving this advice, his wife ate the stalks of the leaves and within a few days
Read 5 tweets
Jan 9
#ஆலங்காட்டு_ரகசியம்
சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை, சிதம்பர ரகசியம் என்பார்கள். ஆலங்காட்டு ரகசியம் என்னவென்று பார்ப்போம். நடராஜர் நாட்டியமாடிய முதல் தலம் திருவாலங்காடு ஆகும். இங்கு சிவபெருமான் வடாரண்யேஸ்வரராக கோயில் கொண்டருளுகிறார். ரத்தின சபை என்று
இத்தலம் போற்றப்படுகிறது.
சிவபெருமானைத் தரிசிக்க, காரைக்கால் அம்மையார் கயிலாயத்திற்கு தலைகீழாக நடந்து சென்று கொண்டிருந்தார். இப்படி வருவதைக் கண்ட பார்வதி, சிவபெருமானிடம், இவர் யார் கேட்டார். அதற்கு பதிலளித்த சிவபெருமான், இவர்கள் என் அம்மை என்றார். வெகு அருகே வந்துவிட்ட காரைக்கால்
அம்மையாரை, என்ன வரம் வேண்டும் என சிவபெருமான் கேட்ட போது காரைக்காலம்மை, எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் எனக்கு வேண்டும் என்றார். அப்படியே ஆகட்டும் என்று அருளினார் சிவ பெருமான். திருவாலங்காடு பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னனின் கனவில் அன்றே தோன்றினார்
Read 16 tweets
Jan 9
#விசேஷதர்மம்
மரணத்துக்குப் பின் தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த
கர்ணன் சூரியனிடம், "தந்தையே! நான் என் நண்பன் துரியோதனனுக்கு செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டுமென்ற நல்ல எண்ணத்தில் அவன் பக்கம் போர் புரிந்தேன். ஆனால் வஞ்சகன் கண்ணன் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!” என்று
புலம்பினான். அப்போது சூரிய பகவான்,
"இல்லை கர்ணா! கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே. நீஒரு தவறு செய்து விட்டாய். செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் கண்ணனோ சாமானிய தர்மங்களை விட, உயர்ந்த விசேஷ தர்மமாக விளங்குபவன்.
"க்ருஷ்ணம் தர்மம் ஸனாதனம்” என்று
அதனால்தான் சொல்கிறோம். அந்தக் 'கண்ணன்' என்ற விசேஷ தர்மத்துக்கும்,
செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் என்ற சாமானிய தர்மத்துக்கும்,முரண்பாடு
வருகையில், விசேஷ தர்மத்தை கைக் கொள்ள வேண்டும். நீஅதை விட்டுவிட்டுச் சாமானிய தர்மத்தை கைக்கொண்டு விசேஷ தர்மத்தைக் கைவிட்டாய். அதனால்தான் அழிந்தாய்.
Read 7 tweets
Jan 9
#MahaPeriyava It was during the nineties, just about a year before He attained Siddhi. Maha Periyava was telling His disciples around Him that He wanted to go to the Chidambaram temple and wanted to have a darshan of Sri Nataraja Swamy there, and of the "Kunjitha Paadam" -
a special garland made of various plant roots famous in the Chidambaram temple, and which you can see in the photo below on Sri Maha Periyava's head. It is common belief that if one has a darshan of the Kunjitha Paadam, he/she will be cured of all diseases and that he/she would
be able to attain Moksha (salvation). The disciples felt confused and sad on hearing this instruction of Periyava - because He was barely able to move about during those days, and to get him to travel so long in that stage was not advisable as well. To their surprise, the very
Read 7 tweets
Jan 8
#ராமநாம_மகிமை
இந்த உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த நாமம், ராம நாமம் ஆகும். ஸ்ரீமன் நாராயணன் இந்த பூவுலகில் ஒரு சாதாரண மனிதனாக அவதரித்து, ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்று வழிகாட்டினான். ராம நாமமே தலைசிறந்த நாமம் என்பதற்கான காரணங்களைப் பார்ப்போம்.
#முக்திக்கு_வழிகாட்டி
ராம
நாமம் ஒன்றுக்கே #தாரகமந்திரம் என்கிற சிறப்புப் பெயர் உண்டு. தாரக என்ற சொல்லுக்கு படகு அல்லது மோட்சம் அளிக்க வல்லது என்று பொருள். ராம நாமத்தால் மட்டுமே இந்த சம்சார கடலிலிருந்து நம்மை கரை சேர்க்க முடியும் என்பதால் இது தாரக மந்திரம் என்று அழைக்கப் படுகிறது. அனைத்து நாமங்களையும்
உள்ளடக்கியது. ராம நாமத்தை ஜபிப்பதாலேயே கடவுளின் ஆயிரம் நாமங்களை ஜபிப்பதின் புண்ணியம் கிடைக்கிறது. ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சிவபெருமான் பார்வதி தேவியிடம் இந்த உண்மையை விளக்கி இருக்கிறார். (ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே)
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(