ஒரு சமயம், அபூர்வமான மந்திரம் ஒன்றை ஆஞ்சநேயருக்கு உபதேசித்த ஸ்ரீராமர், 'ஆஞ்சநேயா... இது மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம்; எல்லாருக்கும் சொல்லி விடாதே... பக்குவம் உள்ளவர்களுக்கு மட்டுமே இதை உபதேசிக்க வேண்டும். ஆகையால், இதை மனதிற்குள் உருவேற்று; வெளியிடாதே...' என்று கூறினார்.
மறுநாள், ஏதோ பறை ஒலிக்கும் சத்தம் கேட்டு, உப்பரிகைக்கு சென்று வீதியை பார்த்த ஸ்ரீராமர், திடுக்கிட்டார். காரணம், அங்கே, ஸ்ரீராமர், ரகசியமாய் உபதேசித்த மந்திரத்தை, பறை அறிவித்து, வீதிவீதியாய் சொல்லிக் கொண்டிருந்தார் ஆஞ்சநேயர்.
கோபமடைந்த ராமர், ஆஞ்சநேயரை வரவழைத்து, 'என்ன காரியம் செய்கிறாய்... பக்குவம் உள்ளோருக்கு சொல்ல வேண்டிய மந்திரத்தை, பறை அறிவித்து சொல்கிறாயே...' என்றார்.
அமைதியாக ஸ்ரீராமரை நமஸ்கரித்து, 'தெய்வமே... அடியேன் பக்குவம் உள்ளோருக்கு மட்டுமே உபதேசம் செய்திருக்கிறேன்; தங்கள் உத்தரவை மீறவேயில்லை.
உடனே, சிலரை வரவழைத்து, 'ஆஞ்சநேயன் சொன்னது உங்களுக்கு ஏதாவது புரிந்ததா?' எனக் கேட்டார், ஸ்ரீராமர்.கேள்வி ஒன்றுதான்; ஆனால், பதில்கள் தான் பலவிதமாக வந்தன...
'புரியவில்லை...' என்றனர். சிலர், 'மாருதி, ஏதோ மனம்போன போக்கில் உளறிக்கொண்டு போனான்...' என்றனர், மற்றும் சிலர்.
இன்னும் சிலரோ, 'அனுமன் பேசியது புரியாவிட்டாலும், நகைச்சுவையாக இருந்தது...' என்றனர்.
இவ்வாறு பலரும் பலவிதமாக கூற, பக்குவமான ஞானவான்கள் சிலர் மட்டும், 'ஸ்ரீராமச்சந்திர பிரபுவே... அனுமன் உபதேசித்தது, சாதாரண மந்திரமா... பிறவிப் பிணியையே தீர்க்கக் கூடிய மந்திரமாயிற்றே...' என்று சொல்லி, மெய் சிலிர்த்தனர்.
விதை ஒன்று தான்; நிலத்திற்கு தகுந்தாற் போல் தானே விளைகிறது. நிலம் நன்றாக இருந்தால் கூட, அவ்வப்போது நீர், உரம் இட்டு, பத்திரமாக பாதுகாத்தால் தானே நன்றாக விளைச்சல் காணும்.
அதுபோல, நல்ல விஷயங்களை பார்த்தாலும் /கேட்டாலும், அது, பக்குவப்பட்டோரின் உள்ளங்களில் மட்டுமே பதிந்து பயன் தருகின்றது.
சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான்..
தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர் !!
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய
வானியல் சாஸ்திரம்
சொல்லி வைத்த நமக்குத்
தெரியாத உண்மைகள்.
சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1
இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.
நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...?
"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.
என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.
#மயிலாப்பூர்#திருவள்ளுவர் கோயில் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை மூலவராகக் கொண்டு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு இந்துக் கோயிலாகும்.
ஏகாம்பரேஸ்வரர்–காமாட்சி கோயில் என்றும் அழைக்கப்படும் இக்கோயில், மயிலாப்பூரில்
ஏகாம்பரேஸ்வரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது.
திருவள்ளுவர் பிறந்த இடமாக மயிலாப்பூர் கருதப்பெறுவதால், அங்கு திருவள்ளுவருக்கென கோயில் அமைக்கப்பெற்றுள்ளது. பொ.ஊ. 16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டதாக நம்பப்படும் இக்கோயில் 1970-களில் விரிவாகப் புனரமைக்கப்பட்டது.
வள்ளுவரின் பிறப்பிடமாக பாரம்பரியமாக நம்பப்படும் இக்கோயில் வள்ளுவருக்குக் கட்டப்பட்ட மிகப் பழமையான கோயிலாகும். சிலர் இதை வள்ளுவரின் நினைவிடமாகவும் கருதுகின்றனர். தமிழ் மொழி ஆர்வலர்களின் சந்திப்புக்கான இடமாகவும் இக்கோயில் விளங்குகிறது.
சகல உயிர்களுக்கும் தாயான அம்பாள் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள ‘கருவளர்சேரி’ என்ற ஊரில் ‘அருள்மிகு அகிலாண்டேஸ்வரி’யாக அருள்பாலிக்கிறாள்.
1
கும்பகோணம் - வலங்கைமான் பாதையில் மருதா நல்லூரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கருவளர்சேரி.
2
கருவளர்சேரி திருத்தலத்துக்கு வந்து அம்பிகையை வழிபடுவோருக்கு ஜாதக ரீதியான தோஷங்கள் அனைத்தையும் விலக்கி குழந்தை வரத்தை அருளுகிறாள். மேலும், கர்ப்பம் தரித்த பெண்களும் இங்கு வந்து வழிபடுவதால், சிக்கலற்ற பிரசவம் நடக்கும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு பொங்கல் அன்றும் கல் யானைக்கு கரும்பு தந்த லீலை ஒரு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.
மதுரையை தலைநகராகக் கொண்டு அபிஷேக பாண்டியன் ஆட்சி செய்து கொண்டிருந்த காலகட்டம் அது.
ஒரு பொங்கல் திருநாள் அன்று அமைச்சர்கள், படைவீரர்கள் புடைசூழ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தான் அபிஷேகப் பாண்டியன். கோவிலுக்கு மன்னர் வருவதைக் கண்ட பக்தர்கள் அனைவரும் அவனுக்கு வழிவிட்டு ஒதுங்கினர்; ஒருவரைத் தவிர. அதைக் கண்டு மன்னனுக்கு கொஞ்சம் கோபம் வரத்தான் செய்தது.
அதற்குள் பணியாள் ஒருவன், ‘மன்னா! இவர் ஒரு சித்தர். சித்து வேலைகள் பலவற்றை நிகழ்த்தி இருக்கிறாராம்’ என்றான்.
தன்னை அலட்சியப்படுத்தியவர் ஒரு சித்தர் என்று அறிந்ததும், அவர் அருகில் சென்று வணக்கம் தெரிவித்தான் மன்னன்.
சூரியன் தன் ஒளிக்கிரணங்களால் காலை உதயவேளையில் கோபுரவாயில் மண்டபங்களைக் கடந்து கருவறையில் நிறைந்து சிவலிங்க மூர்த்தியை ஜோதி மயமாக்கும் திருத்தலங்களும் உண்டு. பொங்கல் நன்னாளில் இத்தலங்களையும் அருகிலுள்ளோர் தரிசிக்கலாம்.
1
இந்த தலங்களும் பாஸ்கர க்ஷேத்திரங்கள் என்றே அழைக்கப்படுகின்றன. இந்த ஆலயங்களில் சூரியனின் ஒளி ஆண்டுதோறும் குறிப்பிட்ட சில நாட்களில் கருவறையிலுள்ள சிவலிங்கத்தின் மீது விழுகின்றன. சிலர் இது கட்டிடக்கலை நுணுக்க அமைப்பால் அமைந்த விந்தை என்பர்.
2
என்றாலும் பக்திமான்கள் சூரியன் தன் ஒளிமாறாமல் சிவபெருமானை வழிபாடு செய்யும் நிலை என்றே எண்ணுவர். பெரும்பாலும் காலைவேளைகளில் மட்டுமே இவ்வாறு ஒளிக்கதிர்கள் இறைவன் மீது படியும் வகையில் அமைந்துள்ளதைக் காண்கிறோம்.