#Charlie777
இதெல்லாம் ஏன் இப்பொ சொல்றேனா?
லோக்கல் கேபிளில் மீண்டும் பார்க்கும் வாய்ப்பு வந்தது
வாழ்க்கையை தன் போக்கில் வாழும் யார் பற்றியும் கவலையற்ற ஒரு இளைஞனின் வாழ்வில்
ஒரு அநாதரவான நாய் குறுக்கிடுகிறது
சில பல காட்சிகளின் முடிவில் அந்த சார்லி என்ற நாய்க்கும்
தர்மா என்ற
இளைஞனுக்கும் ஒரு பிணைப்பு ஏற்படுகிறது தர்மாவுக்கும் வாழ்க்கையின் மீது ஒரு நம்பிக்கை வருகிறது
ஒரு கட்டத்தில் சார்லிக்கு கேன்சர் என்பதை அறிந்த தர்மராஜ் அதன் ஆசையை நிறைவேற்ற மேற்கொள்ளும் பயணம் பற்றிய கதை #சார்லி
நாய் சேகரையும்
நாய் சேகர் ரிட்டர்ன்ஸையும் பார்த்த நம் தமிழக சாரி
தமிழ்நாடு மக்களுக்கு ஒரு இளைஞனுக்கும் நாய்க்கும் உள்ள உறவை உள்ளது உள்ளபடியே காட்சிபடுத்தும் கன்னட சினிமாவை பார்த்து ஆச்சர்யம் ஏற்படுகிறது
சார்லிக்கு கேன்சர் நோய் இருப்பதை அறிந்த மறுகணமே தர்மாவுக்கு ஏற்படும் பதைபதைப்பு அதன் ஆசையை நிறைவேற்ற அவனுக்கு ஏற்படும் தடைகளை என நமக்கும்
தர்மாவின் படபடப்பு நம்மையும் தொற்றிக்கொள்கிறது
சார்லியின் கடைசி ஆசையாக அவன் நினைக்கும் பனிப்பொழிவை காட்ட தர்மா செய்யும் பயணக்கதையின் வழியுடனே நாமும் அவன் போக்கில் போக செய்யும் அளவுக்கான திரைக்கதை உள்ளது
சார்லிக்கு ஏன் கேன்சர் வந்தது எப்படி ஏற்பட்டது குணமடைய வாய்ப்பு இருக்கிறதா
கடைசியில் சார்லி குணமடைவாளா என்ற ஆதங்கம் நம்மையும் இறுக பற்றிக்கொள்கிறது
கடைசியில் சார்லியுடன் பனிப்பொழிவில் தர்மா விளையாடும் போது அந்த குதூகலமும் நம்மை ஆட்கொள்கிறது
ஏதோ நாம் வளரக்கும் நாயுடன் நாமும் சேர்ந்து விளையாடுவது போன்ற கற்பனையும் அந்த திரைக்கதை ஏற்படுத்துகிறது
சார்லியை காணாமல் பனிப்பொழிவுக்கு இடையே தேடும் கடைசி சில நிமிட காட்சிகளில் தர்மாவின் கண்களில் இருக்கும் பயமும் நம்மை அறியாமலேயே வந்துவிடுகிறது
க்ளைமாக்ஸில் சார்லி தர்மாவுக்கு நன்றி சொல்வதும்
அவனின் தோளில் சாய்ந்து மரணிக்கையில் தர்மாவின் அழுகையோடு நம் அழுகையும் ஒன்றோடு ஒன்றாக
கலந்து விடுகிறது
வாழ்வின் பிற்பகுதியில் இணைந்த ஒரு நாய்க்கும் இளைஞனுக்கும் இந்த அளவுக்கு பாசமும் பரிவும் இருக்குமா என்ற ஆச்சர்யமும் நமக்கு வந்துவிடுகிறது
கேஜிஎப்
காந்தாரா போன்ற கன்னட சினிமாக்களை விட நம் மனதுக்கு நெருக்கமான படமாக இந்த படம் நமக்கு மாறிவிடுகிறது
ஆனால் நம்முடைய
தமிழ் திரைப்படத்தில் ஒரு பணக்கார அப்பாவுக்கு வாழ்வின் கடைசி இறுதியில் கேன்சர் வருவதும் அதனால் வீட்டிலும் பிசினஸ்ஸிலும் ஏற்படும் போட்டி பொறாமைகளை தனி ஒரு ஆளாக மாற்ற துடிக்கும் முழு நேர குடும்ப திரைப்படம் நம்மில் ஒரு வித சலனத்தையும் ஏற்படுத்த முடியாமல் இருப்பதன் உளவியல் காரணம்
என்னவாக இருக்கும்
சார்லி என்ற நாய்க்கு கேன்சர் நோய் என்பதை அறிந்த போது நமக்கு ஏற்பட்ட பதட்டம் இந்த தமிழ் படத்தில் ஹீரோவின் அப்பாவுக்கு வரும்போது கூட அவரின் மீது பரிதாபம் வராமல் போவதன் காரணம் என்ன
டேய் அவன் நோய் வந்து செத்தால் என்ன
பிஸினஸ்லெ லாஸ் ஆனால் எங்களுக்கு என்ன
அந்த குடும்பம் ஒன்று சேர்ந்தால் என்ன சேராமல் போனால் என்ன
படம் பார்க்க வந்தவர்களை ஏண்டா இப்படி உசுரெ வாங்குறீங்க என்ற எண்ணம் தான் முதலில் வருகிறது
படம் பார்க்கும் மக்களிடம் கனெக்ட்டே ஆகாத இந்த அரதப்பழசான கதையில் ஏன் நடிக்க வேண்டும்
கதைதான் பழசு என்றால் அட்லீஸ்ட் திரைக்கதையாவது
ஒழுங்காக இருக்க வேண்டாமா
தர்பார்
அண்ணாத்தெ
வலிமை
பீஸ்ட்
கோப்ரா
டான்
ப்ரின்ஸ்
வாரிசு
துணிவு என மட்டமான படங்களை நம் தலையில் கட்டும் இவர்களின் வியாபார திறமையை பாராட்டுவதா இல்லை பட்ஜெட் படமோ காஸ்ட்லியான மசாலா படமோ அதற்கான திரைக்கதை அமைப்பில் நியாயம் செய்யும்
கன்னடம்
உள்ளாட்சி தேர்தல் முடிவுக்கு பிறகு பேசும் அத்தனை பேரும் @maiamofficial கள அரசியல் செய்வதை தவிர்த்தால் இது தான் கதி என்கின்றனர்
இவர்கள் சொல்லும் கழகங்களின் கள அரசியல் என்பது மக்களையும் ஊழல் மயப்படுத்திய கொள்ளை அரசியல்
காமராஜர் காலத்தில் மக்கள் நலனுக்காக தன் குடும்பத்தையும் இழந்து
ஊழல் லஞ்சம் என எவ்வித சோதனைக்கும் ஆட்படாத நேர்மையாளர்களின் ஆட்சி நடந்தது
அடுத்து வந்த அண்ணா கருணாநிதி எம்ஜிஆர் காலத்தில் " தேனை எடுப்பவன் புறங்கையை நக்க மாட்டானா " என வசனங்கள் பேசி அரசியலை ஒரு தொழிலாக மேற்கொள்ள முடியும் என்ற நிலையை உருவாக்கினர்
ஜெயலலிதா & கருணாநிதி காலத்தில்
ஊழல் என்பது நிறுவனப்படுத்த பட்ட அரசியல் செயல்முறை போல ஊராட்சி டெண்டர் முதல் மொத்தமாக அரசு கஜானாவை கொள்ளை அடிக்கலாம் ஊழல் ஒரு பிரச்சினையே இல்லை அப்படியே கொள்ளை அடித்தாலும் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று பாருங்கய்யா நாங்க எவ்வளவு நல்லவங்க என மக்களை ஏமாற்றி பிழைக்கும் இழிநிலை
#என்றும்_கமல்ஹாசனுடன்
மநீம சகோதர்களே,
"இதுவும் கடந்து போகும்"
நமக்கு வேண்டுமானால் சில இடங்களில் வெற்றி பெறலாம் என நினைத்த வேளையில் கூட்டு களவாணித்தனத்தால்
நம்மவரின் வெற்றி வாய்ப்பு பறிபோனது நம்மவரை சுற்றி இருந்த சில சுயநலவாதிகள் கட்சியை வெற்றி விலகி உள்ளனர்.
/1
மூன்று ஆண்டுகளுக்கு முன் மதுரையில் கட்சி ஆரம்பித்த வேளையில் இப்பொது விலகிய எவருமில்லை
இந்த கருங்காலிகளை நம்பியும் கட்சி ஆரம்பிக்கவில்லை
சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜி கோலோச்சிய ப்ரைம்டைமில் ஒரு இளைஞனாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் கமல்.
சிவாஜி எம்ஜிஆர் ஜெமினி போன்றவர்களின் /2
மடியில் தவழ்ந்த சிறுவன் பின்னொரு நாளில் அவர்களுக்கு இணையாக தமிழ்சினிமாவின் முக்கிய இடம்பெற்று வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் போல அவர்களின் கலையுலக வாரிசாக களம்கண்டவர்
உலகில் உள்ள அத்தனை தொழில்நுட்பத்தையும் கரைத்துகுடித்து தன்னை வாழவைத்த சினிமாவுக்கு தன்னையே அர்ப்பணித்தார் /3