#அறிவோம்கடை :
Shree Anandhaas,Near Lakshmi mill Junction, Coimbatore
ஆனந்தாஸ் பற்றி நிறைய முறை எழுதிட்டேன், இவங்க ஸ்வீட் கடை பற்றியும் எழுதி இருக்கேன். ஆனா இந்த branch பற்றி இன்னும் எழுதல. சமீபத்தில் டின்னர் சாப்பிட போயிருந்தேன். மெனு எல்லாம் பார்க்கவே அவ்ளோ tempting😍
பட்டாணி பரோட்டா : 4.75/5
இப்படி ஒரு Soft and Tasty பரோட்டா நான் veg ல இப்ப வரை சாப்பிட்டது இல்லை.. பட்டாணி சும்மா பேருக்கு போடாம, ஒவ்வொரு வாய்க்கும் வர மாதிரி நிறையவே இருந்திச்சு👌 இது தினமும் கிடைக்குமா னு தெரியல..அன்றைய special மெனு இது இருந்திச்சு னு try செஞ்சேன். செம worth💖
மாங்காய் மசாலா ரோஸ்ட் : 4.25/5
இதுவும் அன்றைய special தான். பேரே கேட்க புதுசா இருக்கு..சரி எப்படி தான் இருக்குன்னு பார்க்கலாம் னு ஒரு ஆர்வதுல வாங்கினோம். பச்சை மாங்காயை சாப்பிட்டா என்ன ஒரு புளிப்பு இருக்குமோ அந்த சுவை ல காரமான மசாலா.. ஒரு புது வகையான சுவையா இருந்திச்சு😊
முருங்கை கீரை மோர் குழம்பு இட்லி: 4.5/5
இதுவும் முதல் முறையா சாப்பிடறேன். அவ்ளோ நல்லா இருந்திச்சு👌 முருங்கை கீரை உடம்புக்கு அவ்ளோ நல்லது.. குழந்தைகள் உடன் சென்றால் நிச்சயம் இதை வாங்கி கொடுங்க😊
ஆப்பிள் கேசரி : 4.5/5
நெய் சொட்ட சொட்ட அப்படி ஒரு சுவை😍 ஆப்பிள் சிறு சிறு துண்டுகளாக உள்ள இருந்திச்சு👌👌 அளவான இனிப்பு தான்.. அது தான் அந்த ஆப்பிளின் சுவையை கூட்டி இருந்திச்சு. விலையும் முப்பது ரூபாய் தான்🤗 கண்டிப்பா try செஞ்சு பாருங்க
பண்ணீர் டிக்கா : 4/5
BBQ ல கொடுப்பாங்க ல அந்த மாதிரி ஓவர் coating செய்யாமல்..அளவான மசாலா, அளவான காரம். இதுக்கு கூட கொடுத்த mint சட்னி யும் நல்லா இருந்திச்சு.
பில்டர் காபி : 4.75/5
ஒரு கடையில் பில்டர் காபி இருக்குனா அதை try செய்யாம வந்ததே இல்லை.. அந்த அளவுக்கு காபி பிரியன்💖
இவங்க பில்டர் காபி எப்பவுமே நல்லா இருக்கும். அன்னபூரானா காபி மாதிரி Bitterness dominating ஆக இருக்காது..ஆனா அளவான கசப்புத்தன்மை இருக்கும்🤩
இது தான் நாங்க சாப்பிட்ட bill🤗ஒரு தரமான veg dinner சாப்பிட இங்க போகலாம். அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்🤩🌅 🤩
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
டீ பற்றி எழுதனும் னு ரொம்ப நாளா முயற்சி செஞ்சு நேரம் கிடைக்காதால் எழுதி எழுதி Draft செஞ்சு வெச்சுட்டு இருந்தேன். இப்போ இந்த #அறிவோம்_தேநீர் Poll க்கு பிறகு பதிவு செய்வது சரியான நேரம் னு நினைக்குறேன்.
காபியை விட அதிகமா குடிக்கும் ஒரு பானம்னா அது டீ தான்.ஆனா நாம் குடிக்கும் டீ பற்றி சில பேருக்கு தான் awareness இருக்கு.அது dust tea, leaf,Green tea எதுவானாலும் சரி.மேம்போக்காகா மார்க்கெட் ல கிடைக்கும் brand name மட்டுமே பார்த்து வாங்கறோம்.
//டீ வகைகள் நம் websiteல விரிவா எழுதறேன்
அதில் இருக்கும் ingredients, caffeine content, origin of garden இது பற்றி எல்லாம் யோசிப்பது கூட இல்லை. இதை பற்றி எல்லாம் யோசிக்க வேண்டுமா? எந்த டீ நல்லா இருக்கோ அதை வாங்கி குடிக்க வேண்டியது தானே என்று நீங்கள் கேட்கலாம்? இதை பற்றி எல்லாம் நாம் கேட்காததால் தான்
#அறிவோம்கடை : தம்பியண்ணன் இயற்கை நாட்டுக்கோழி விருந்து, கடத்தூர் பிரிவு, கணேசபுரம்
இந்த கடையை பற்றி எழுத ரொம்ப நாளா தவணை. இங்க நிறைய முறை சென்றிருக்கேன். இவங்க special மதிய உணவு தான்.
எப்போ இங்க போனாலும் Non veg மீல்ஸ் தான் சாப்பிடுவேன். உடன் கோச்சை கோழி வறுவல். எங்க போனாலும் பிராய்லர் தான் கிடைக்குது.. இந்த கோச்சை சாப்பிடவே இங்க போவேன். இவங்க நாட்டுக்கோழி குழம்பு கூட ரெண்டு வகையான ரசம் தருவாங்க.. அதுல பச்சை புளி ரசம் சும்மா அல்டிமேட் ஆக இருக்கும்👌
போன முறை போனப்போ மீல்ஸ் தீர்ந்திருச்சு னு. நாட்டுக்கோழி பிரியாணி வாங்கினேன். சீரக சம்பா அரிசில நல்லா இருந்திச்சு. அளவு போதுமானதாக இல்லை😓 ஆனா கொஞ்சம் white rice கேட்டாலும் தருவாங்க.. வாங்கி ரசம் போட்டு சாப்பிடுங்க👌
சமீபத்தில் திவ்யா என்ற பெண் தன் அனுபவத்தை கோவை புட் குரூப்பில் பகிர்ந்திருந்தார் .
சுருக்கமாக இங்கே :
இந்த ஆர்யாஸ் ஹோட்டல் ( ஓமலூர் #omalloor , கேரளா ) லில் restroom மட்டும் பயன் படுத்திவிட்டு , சாப்பாடு ஏதும் சாப்பிடாமல் வெளியேறி இருக்கார் . அதை பார்த்த உரிமையாளர்
உணவு ஏன் சாப்பிடலை னு கேட்டிருக்கார் . உடம்பு சரி இல்லை , நான் வேண்டும் என்றால் பார்சல் எதாவது வாங்கி கொள்கிறேன் னு சொல்லி இருக்கார். அதற்கு அந்த உரிமையாளர் இதென்ன 'Public Toilet' ah , யார் வேணா வந்து பாத்ரூம் போக .. ஒழுங்கு மரியாதையா 500 ரூபாய் எடு னு மிரட்டி இருக்கார்
இந்த பெண் கொடுக்க மறுத்து இருக்கார் . எந்த ஹோட்டல் போனாலும் இலவச தண்ணீர் , இலவச பாத்ரூம் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு ஹோட்டல் களின் கடமை னு சொல்லி இருக்கார் . இதை கேட்டு கெட்ட கெட்ட வார்த்தையில் அந்த பெண்ணை திட்டி இருக்கார் . தாங்க முடியாம அங்கயே அழுது இருக்கார் .
நான் சில வருடங்கள் முன்னாடி ஒரு மருத்துவரிடம் பேசிட்டு இருந்தப்போ அவர் சொன்னது.. முடிஞ்ச அளவு குழந்தைகளை வெளிய சாப்பிடுவதை தவிர்த்திடுங்க.. அதுலயும் இந்த சவர்மா னு ஒன்னு விக்கறாங்க ல அதை ஒரு முறை கூட ஆசைக்கு வாங்கி கொடுத்திட வேண்டாம். அதை ஒரு நாள் சாப்பிடுவது என்பது
ஒரு மாசம் junk food சாப்பிடுவதற்கு சமம்னு சொன்னார்.கூடவே coke or any carbonated drinks(Disolved carbondioxide gas)அது மதுவிற்கு மேல் தீங்கானதுனு குழந்தைக்கு சொல்லி வளர்க்க சொன்னார்.சவர்மா எவ்ளோ கேடானது,இதை நிறைய பேருக்கு தெரியப்படுத்தனும்னு தயார் செஞ்சது தான் மேல இருக்கற போஸ்டர்.
இப்போ சமீபத்தில் ஒரு பெண் சவர்மா சாப்பிட்டு இறந்தார் மேலும் நிறைய மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி னு செய்தி எல்லாரும் படிச்சிருப்பீங்க. கூடவே ஒரு மருத்துவர் சொல்ற அறிவுரையும் இங்கே பகிருந்துள்ளேன். படிங்க
#அறிவோம்கடை : Chin chin, Residency Towers,CBE
நான் நேத்து போஸ்ட் செஞ்ச பில் இங்க சாப்பிட்டது தான். இதுதான் முதல் முறையும் கூட.இது தான் கடைசி முறைனும் சொல்லலாம்.சில elite people கொடுத்த பில்ட்அப் எல்லாம் பார்த்து தான் இந்த ரெஸ்டரண்ட்க்கு போனேன்.சரி hypeக்கு worth ஆனு பார்க்கலாம்
இவங்க கிட்ட மெனு கார்டு கிடையாது.மெனுவை தெரிந்துகொள்ள இதோ கீழே படத்தில் உள்ளது போல் ஒரு QR கோட் இருக்கும் அதை ஸ்கேன் செய்தால் எல்லா dishes ம் விலையுடன் பார்த்து கொள்ளலாம்.நாங்க எல்லா dishesம் விலை பார்த்து தான் ஆர்டர் செய்தோம்.ஆனால் அளவு அதற்கு ஏற்றதாக இருந்ததா?வாங்க பார்க்கலாம்
Lung Fung Soup : 2.5/5
ரொம்ப சுமாரான சூப். ஒரு சூப் வாங்கி அதை 1 by 2 ஆக தர சொன்னோம்.
அளவு வகையில் இதை குறை சொல்ல முடியாது.. ஆனா டேஸ்ட் ரொம்ப சுமாராக தான் இருந்திச்சு. இதன் விலை : ₹300/-