#பஞ்சகிருஷ்ண_தலங்கள்
பஞ்ச கிருஷ்ண தலங்கள் என்பவை தமிழ்நாட்டில் உள்ள முக்கிய வைணவ ஆலயங்கள் ஆகும். இத்தலங்களின் திருமால் எப்போதும் பக்தர்களுடன் சஞ்சரித்துக் கொண்டிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன இவை கிருஷ்ண ஆரண்ய தலங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இத்தலங்களில் கிருஷ்ணனின் லீலைகளும்
நாகபட்டிணத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும், சிக்கலிலிருந்து 2 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
வசஷ்ட முனிவர் கண்ணன் மீது பக்தி கொண்டு வெண்ணையால் கண்ணனை உருவாக்கி வழிபட்டு வந்தார். அவரின் பக்தியின் காரணமாக வெண்ணைக் கண்ணன் உருகவில்லை. கண்ணன் ஒருநாள் சிறுவனாக வந்து வெண்ணைக் கண்ணனை உண்டு
ஓடத் தொடங்கினான். இதனை அறிந்த வசிஷ்டர் சிறுவனை பிடிக்க விரட்டினார். சிறுவன் ஓடிய வழியில் முனிவர்கள் சிலர் கண்ணனை நினைத்து தவம் இயற்றிக் கொண்டிருந்தனர். ஓடி வந்த சிறுவனை அவர்கள் கண்ணன் என உணர்ந்து இத்தலத்தில் தங்கி பத்தர்களுக்கு அருள்புரியுமாறு வேண்டிக் கொண்டனர்.
கண்ணனை தன்
அன்பினால் கட்டிப் போட்ட இடம் ஆதலால் இவ்விடம் கண்ணங்குடி என்று அழைக்கப்படுகிறது. மூலவரும் உற்சவரும் ஒரே மாதிரியாகக் காட்சி அளிப்பது இத்தலச் சிறப்பாகும். இங்கு கருடாழ்வார் கைகளைக் கட்டிய நிலையில் உள்ளார். இங்கு நடைபெறும் திருநீரணி விழா சிறப்பு வாய்ந்தது. இத்திருவிழாவில் பெருமாள்
உட்பட அனைவரும் திருநீறு அணிகின்றனர். சைவ வைணவ சமய ஒற்றுமைக்கு சான்றாக இவ்விழா நடத்தப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 18-வது ஆகும். குழந்தை வரம் வேண்டி இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் பால்பாயாசம் படைத்து வழிபாடு மேற்கொள்கின்றனர். வாக்குறுதிகளை
நிறைவேற்ற முடியாதவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களின் குறைகளை இத்தல இறைவன் தீர்த்து வைப்பதாக பக்தர்கள் கருதுகின்றனர் இங்கு திருமால் லோகநாதப் பெருமாள், சியாமளமேனிப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் லோகநாயகி என்ற பெயரிலும் அருள் புரிகிறார்கள். பிரம்மா, கௌதமர், வசிஷ்டர்,
பிருகு, உபரிசரவசு, திருமங்கை ஆழ்வார் ஆகியோர் இத்தல இறைவனை நேரில் தரிசித்துள்ளனர்.
#நீலமேகப்பெருமாள்_கோவில் திருக்கண்ணபுரம்
நன்னிலம் நாகபட்டிணம் சாலையில் திருப்புகலூரிலிருந்து 2 கிமீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. இவ்வாலயம் 2000 வருடங்களுக்கு முற்பட்டது.
ஒரு சமயம் திருமாலை
வேண்டி முனிவர்கள் பலர் இத்தலத்தில் தவம் இயற்றினர். இதனால் அவர்களின் தேகம் மெலிந்து நெற்பயிர் போலானது. திருமாலிடம் நமோ நாராயணா மந்திரத்தைக் கற்ற உபரிசிரவசு மன்னன் தன் படையினரோடு இவ்வழியே திரும்பிக் கொண்டு இருந்தான். படைவீரர்கள் பசியைப் போக்க நெற்பயிர்போல் காட்சியளித்த முனிவர்களை
வெட்டினர். இதனைத் தடுக்க திருமால் சிறுவனாக வந்து அவர்களுடன் போரிட்டார். உபரிசிரவசு நமோ நாராயணா மந்திரத்தை சிறுவனின் மீது உபயோகித்தான். மந்திரம் சிறுவனின் திருவடிகளில் விழுந்தது.
திருமால் நீலமேகப் பெருமாளாகக் காட்சியளித்தார். மன்னனின் வேண்டுகோள்படி இத்தலத்தில் இருந்து அருளுகிறார்.
திருமால் அடியவரான கோவில் அர்ச்சகர் ஒருவரை மன்னனின் தண்டனையில் இருந்து காப்பாற்ற அர்ச்சகரின் வேண்டுகோளுக்கு இணங்கி தன் திருமுடியை மன்னருக்கு காட்டி அருளினார். எனவே இத்தல பெருமாள் சௌரிராஜப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். இங்கு திருமால் நின்ற கோலத்தில் அருளுகிறார். பெருமாள்
கைகள் தானம் பெறுவது போல் (அதாவது பக்தர்களின் பாவங்களை எல்லாம் வாங்கிக் கொள்ளும் வகையில்) உள்ளன. இங்கு திருமால் எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாக கையில் முழுவதும் திரும்பிய பிரயோகச் சக்கரத்துடன் காட்சியளிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இத்தலம் கீழை வீடு என்று சிறப்பாக
அழைக்கப் படுகிறது. வைகாசி பிரம்மோற்சவ விழவாவின் போது காலையில் சிவன், மாலையில் பிரம்மா, இரவில் திருமால் என மும்மூர்த்தி வடிவில் அருளுவது இத்தலச் சிறப்பாகும். இராமர் இத்தலத்தில் விபீஷணனுக்கு திருமால் வடிவில் நடந்து காட்டியதாகக் கூறப்படுகிறது. இன்றைக்கும் அமாவாசை அன்று விபீஷணனுக்கு
காட்சியளிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோவிலில் மூலவரை நோக்கி ஒரே வட்டத்தில் நவகிரகங்கள் காட்சியளிக்கின்றன. இங்கு பெருமாள் வைகுந்த பதவியை வழங்குபவராகப் போற்றப்படுகிறார். இவரை வழிபட அனைத்து நியாயமான கோரிக்கைகளும் நிறைவேறும்.
இங்கு திருமால் நீலமேகப் பெருமாள், சௌரிராஜப்
பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் கண்ணபுரநாயகி என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள். நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார் ஆகியோர் இத்தல இறைவனை மங்களாசாசனம் செய்துள்ளனர்.
#பக்தவத்சலபெருமாள் திருக்கண்ணமங்கை
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில்
உள்ளது. திருவாரூர் இரயில் நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 25 கிமீ தொலைவிலும், திருச்சேரையிலிருந்து 15 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாதமுனிகளின் சீடரான திருகண்ணமங்கைஆண்டான் வாழ்ந்து வழிபாடு நடத்திய இடம். ஆதலால் அவருடைய
பெயரால் திருகண்ணமங்கை என்று அழைக்கப்படுகிறது. பாற்கடலில் இருந்து தோன்றிய திருமகள் திருமாலை நோக்கி தவம் இருந்து அவரை கணவராக அடைந்த தலம். திருமகளாகிய லட்சுமி வழிபட்ட இடம் ஆதலால் லட்சுமி வனம் என்று அழைக்கப்படுகிறது. திருமால் பாற்கடலை விட்டு வெளியே இத்தலத்திற்கு வந்து திருமகளை மணம்
புரிந்ததால் பெரும்புறக்கடல் என்ற திருநாமத்தில் அழைக்கப் படுகிறார். திருமால், திருமகள் திருமணம் நடைபெற்ற இத்தலம் #கிருஷ்ண_மங்கள_சேத்திரம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.
இறைவனின் திருமணத்தை காண தேவர்கள் தேனீக்கள் வடிவில் இத்தலத்திற்கு வந்தனர். நித்தமும் திருமணக் கோலத்தைக் காணும்
பொருட்டு தேனீக்கள் வடிவில் இத்தலத்தில் இன்றும் தங்கியுள்ளனர் என்பது இத்தல சிறப்பாகும். இங்கு ஓர் இரவு தங்கி வழிபட மோட்சம் கிட்டும் என்பது நம்பிக்கை. திருமால் பக்தர்களின் வேண்டுகோளுக்கு விரைந்து வருதால் இவர் பத்தராவி என்று அழைக்கப் படுகிறார். இங்கு உள்ள தீர்த்தத்தை தரிசனம் செய்த
உடனே சந்திரனின் சாபம் நீங்கப் பெற்றதால் இத்தலத் தீர்த்தம் தர்ஷன புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது. 108 திவ்யதேசங்களில் இத்தலம் 16-வது திவ்ய தேசமாகும். இங்கு திருமால் பக்தவத்சலப் பெருமாள், பத்தராவிப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் கண்ணமங்கை நாயகி, அபிசேகவல்லி என்ற பெயரிலும்
அருள்புரிகிறார்கள். திருமணத் தடை உள்ளவர்கள், பதவி உயர்வு வேண்டுபவர்கள், நல்ல காரியம் நடக்க வேண்டுபவர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் இத்தல இறைவன் அருளுவார்.
வருணன், ரோமசமுனி, முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆகியோர் இத்தல இறைவனை நேரில் தரிசித்துள்ளனர்.
#கஜேந்திரவரதப்பெருமாள் கபிஸ்தலம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் திருவையாறு சாலையில் கும்பகோணத்திலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. திருமால் கருணையினை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியான கஜேந்திர மோட்சம் இத்தலத்தில் நிகழ்ந்தது. ஆஞ்சநேயருக்கு அருள் வழங்கிய தலமாதலால் இது கபிஸ்தலம்
என்று அழைக்கப்படுகிறது. துர்வாசரின் சாபத்தால் இந்திரஜ்யும்னன் என்ற திருமால் பக்தன் காட்டு யானைகளின் தலைவனான கஜேந்திரனாகப் பிறந்தான். எனினும் திருமாலின் மீது கொண்ட பற்றினால் தினமும் தாமரை கொண்டு வழிபட்டு வந்தான். அகத்தியரின் சாபத்தால் கூஹூ என்ற அசுரன் முதலையாக குளத்தில் வசித்தான்.
ஒருநாள் திருமால் வழிபாட்டிற்காக தாமரையை மலரை எடுக்க கஜேந்திரன் யானை கூஹூ அசுரன் இருந்த குளத்தில் இறக்கினான். கஜேந்திரன் யானையின் காலை கூஹூ முதலை பற்றி இழுத்தது. கஜேந்திரன் யானை வலியால் “ஆதிமூலமே காப்பாற்று” என்று கதறியது. திருமாலும் விரைந்து வந்து சக்ராயுதத்தால் கூஹூவை வதம்
செய்து கஜேந்திரனைக் காப்பாற்றி இருவருக்கும் மோட்சம் அளித்தார். இங்கு திருமால் கஜேந்திர வரதப் பெருமாள், ஆதிமூலப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் ரமாமணி வல்லி, பொற்றாமரையாள் என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள். 108 திவ்ய தேசங்களில் இவ்விடம் 9-வது திவ்ய தேசமாகும். ஆடி பௌர்ணமியில்
இங்கு கஜேந்திர மோட்ச லீலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. இத்தல பெருமாளை உள்ளன்புடன் #ஆதிமூலமே என்று அழைத்தால் திருமால் விரைந்து நம்மைக் காப்பார் என்று கூறப்படுகிறது. நோய், கடன், வறுமை ஆகியவற்றை இத்தல இறைவனை வழிபட நீங்கும்.
மாவட்டத்தில் திருகோவிலூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் திரிவிக்ரமன் எனப்படும் உலகளந்தப் பெருமாளாக உள்ளார். திருமால் சன்னதியிலேயே துர்க்கையும் அருள்பாலிக்கிறாள். இத்தலத்தில் மாபலியின் கர்வத்தை அடங்க வாமனராக வந்து பின் திரிவிக்ரமனான காட்சியளித்த உலளந்த பெருமாளாக திருமால்,
மிருகண்டு முனிவருக்கு காட்சி அருளினார். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோருக்கு திருமால் காட்சியளித்து அவர்களை பாசுரம் பாட வைத்த தலம். இங்கு திருமால் இடக்கையில் சக்கரத்தினையும், வலக்கையில் சங்கினையும் மாற்றிக் கொண்டு பக்தர்களுக்கு ஞானத்தை வழங்குகிறார். திருமால்
திரிவிக்ரமர், உலகளந்தப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் பூங்கோவல் நாச்சியார் என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள். 108 திவ்ய தேசங்களில் இவ்விடம் 43-வது திவ்ய தேசமாகும். பதவி இழந்தோர், பதவி உயர்வு விரும்புவோர், நல்ல பதவி வேண்டுவோர், திருமண வரம், குழந்தை வரம் இத்தல இறைவனை வேண்ட
நினைத்தது கிடைக்கும். இத்தலம் நடுநாட்டு திருப்பதி என சிறப்பாக அழைக்கப்படுகிறது.
நாமும் பஞ்ச கிருஷ்ண தலங்கள் சென்று வழிபட்டு திருமால் அருளோடு வளமான வாழ்வு வாழ்வோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஏகலைவன்–மஹாபாரதத்தின் மாபெரும் கதாபாத்திரங்களுக்கு இடையில் மிகச் சிறியவன், ஆயினும் பிரபலமானவன். தன் மானசீக குருவான துரோணரின் விருப்பத்திற்கு இணங்கி தன் வலதுகை கட்டை விரலை தட்சணையாகக் கொடுத்தவன். குருவிற்காக கட்டை விரலையே
வழங்கிய ஏகலைவனை குரு பக்தியின் உதாரணமாகக் காட்டுகின்றனர். பாண்டவர்கள், கௌரவர்கள் என பலரும் துரோணரிடம் போர்க்கலை கற்று வந்தபோதிலும், அர்ஜுனன் தனது குருவின் மீது கொண்டிருந்த பெரும் மதிப்பினாலும் மரியாதையினாலும் மிகச்சிறந்த சீடனாகத் திகழ்ந்தான். அனைத்து கலைகளையும் நுண்ணியமாகக்
கற்றுக் கொண்ட அர்ஜுனன், துரோணருக்கு மிகவும் பிரியமானவனாக மாறினான்.
அர்ஜுனனுக்கு இருளில் உணவளிக்கக் கூடாது என்று துரோணர் சமையல்காரனுக்கு கட்டளையிட்டிருந்தார். ஒருமுறை, அர்ஜுனன் உணவருந்திக் கொண்டு இருந்தபோது, காற்றினால் விளக்கு அணைந்து விட்டது. அப்போது, விளக்கு இல்லாத போதிலும் தன்
#மகாபெரியவா
இல்லற தர்மத்திலே ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஒரு புத்திரன் பிறந்தால் அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யும் கைங்கர்யங்களின் மூலம் தந்தைக்கு நல்ல கதியைத் தருகிறான். ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான். இது சாஸ்த்ரத்தில்
உள்ளது. அப்போ பெண்ணை பெத்தவாளுக்கு?
"தசாநாம் பூர்வேஷாம் தசாநாம் பரேஷாம்
ஆத்ம நச்ச லோத் தாரண த்வாரா
நித்யநிரதிசய ஆனந்த ஸாஸ்வத விஷ்ணுலோக வாப்யர்தம்
கன்னிகா தானாக்ய மஹாதானம் கர்த்தும்
யோக்யதா ஸித்திம் அநுக்கிரஹாண"......
கன்னிகா தானத்தின் போது செய்கின்ற ஸங்கல்ப மந்திரம்.
தசாநாம்
பூர்வேஷாம் என்றால் எனக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறைகள் .
தசாநாம் பரேஷாம் என்றால் எனக்குப் பின்னாலே வரக்கூடிய பத்து தலைமுறைகள்.
ஆத்ம நச்ச என்றால் என்னுடன் சேர்த்து
21 தலைமுறைகளான என்னுடைய குலம் உத்தாரணம் பெறுவற்கும் நிலைத்த விஷ்ணு லோகத்தை நான் அடைவதற்கும் இந்த மாபெறும்
Sri Sankara Charitham by #MahaPeriyava – Determining the period of Sri Sankara’s life – Haala-Purnavarma — Proof from many evidences
"Apart from the belief passed through many generations and the testimonies of the Matams, let me speak of a few more (in support of the argument
that the life period of Acharya was 6-5 BC). When we study all the Puranas collectively, it can be observed that according to the ‘Genealogy’ (Royal lineage), the Mauryas ruled from 1500 BC to 1200 BC (I am only saying approximately); thereafter Sungas (शुङ्ग) had ruled upto
900 BC, later, Kanwas (कण्व) had reigned for about 100 years, and subsequently, Satavahanas [शातवाहन] – known as “Andhras” – had ruled for about five hundred years from the beginning of 8th Century. Although the Satavahana empire was founded in the Deccan, since it had spread
#ஸ்ரீவாழைமர_பாலசுப்ரமணிய_சுவாமி ஆலயம் விருதுநகர்
இறைவனே தேடி வந்து குடியிருக்கும் கிராமம், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன்குறிச்சி. சிவகாசியிலிருந்து சங்கரன்கோவில், கழுகுமலை செல்லும் மெயின்ரோட்டில், சிவகாசியில் இருந்து 17 கிமீ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது
இக்கோவில். 150 ஆண்டுகளுக்கு முன்னர் முருகப் பெருமான் மீது அன்பும் ஆழ்ந்த பக்தியும் கொண்டிருந்த வேலாயுதம் என்ற பக்தருக்கு காட்சி கொடுத்து, தான் வாழைமரத்தில் குடியிருப்பதாக கூறி அருள் பாலிப்பதால் வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி என அழைக்கப்படுகிறார். துலுக்கன்குறிச்சி கிராமத்தில்
வாழ்ந்த தேரியப்பர்-வீரம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் வேலாயுதம். இவர் தினமும் அதிகாலை வெம்பக்கோட்டை வைப்பாற்றில் குளித்து விட்டு வனமூர்த்தி லிங்காபுரம் விநாயகர் கோவிலில் உள்ள முருகனை தரிசித்து விட்டு அன்றாட பணிகளை செய்வதையே வழக்கமாக கொண்டிருப்பார். வைத்திய முறை தெரிந்து வைத்து
Author: Prof S.Kalyanaraman, Neurosurgeon, Chennai
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
Once we went for darshan to Kanchipuram. There was a need for a new elephant at Sri Ekambareswarar Temple. One of the senior officials of the Mutt
asked me whether I could buy and donate an elephant to the temple. I replied that I was not in a position to do so because of my financial position and commitment at that time. That person then probably thought that if Maha Periyava had asked me to buy an elephant and donate it,
I would certainly oblige. As I was having darshan, he told Maha Periyava, “Dr Kalyanaraman wants to donate an elephant to Sri Ekambareswarar temple, Periyava should bless him. Maha Periyava did not reply to him and continued to talk to devotees and give them darshan. Again the
#மகாபெரியவா "மாமா, இந்த மாசம் அப்பா ஶ்ராத்தம் அதுதான் உங்களுக்கு ஞாபகப் படுத்திட்டு போகலாம்னு வந்தேன்" என்றான் சந்துரு.
"இத நீ எனக்கு, ஞாபகபடுத்தணுமா? இந்த மாசம் 26ஆம் தேதி, தசமி திதிதானே எனக்கு ஞாபகம் இருக்கு, கார்த்தால பத்து மணிக்கு நான் அங்க இருப்பேன். நீ கவலைப்படாதே வழக்கம்
போல நல்லபடியா நடத்தி குடுத்துடறேன். பிராமணாள் கூட ஏற்பாடு பண்ணிட்டேன்" என்றார் மகாதேவ சாஸ்திரிகள்.
"ரொம்ப சந்தோஷம் மாமா. நமஸ்காரம் பண்றேன், ஆசீர்வாதம் பண்ணுங்கோ" என்ற சந்துரு, நமஸ்காரம் பண்ணி அபிவாதயே சொல்லி முடித்தவுடன், "க்ஷேமமா சௌக்யமா, இருப்பேடா அம்பி, தீர்காயுஷ்மான்பவா.
சீக்கரமேவ விவாக பிராப்திரஸ்து" என்று ஆசீர்வாதம் பண்ணி அனுப்பினார். சந்துரு சென்ற கொஞ்ச நேரத்தில் ஒரு சாஸ்திரிகள் அவரை பார்க்க வந்தார். வந்தவரை வரவேற்ற மகாதேவா சாஸ்திரிகள் என்ன விஷயம் என்று விசாரிக்க, "டெல்லியில் வேதபுரின்னு ஒருத்தர், மத்யஅரசுல பணி. நல்ல செல்வாக்கானவர்.