#ஸ்ரீவாழைமர_பாலசுப்ரமணிய_சுவாமி ஆலயம் விருதுநகர்
இறைவனே தேடி வந்து குடியிருக்கும் கிராமம், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன்குறிச்சி. சிவகாசியிலிருந்து சங்கரன்கோவில், கழுகுமலை செல்லும் மெயின்ரோட்டில், சிவகாசியில் இருந்து 17 கிமீ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது
இக்கோவில். 150 ஆண்டுகளுக்கு முன்னர் முருகப் பெருமான் மீது அன்பும் ஆழ்ந்த பக்தியும் கொண்டிருந்த வேலாயுதம் என்ற பக்தருக்கு காட்சி கொடுத்து, தான் வாழைமரத்தில் குடியிருப்பதாக கூறி அருள் பாலிப்பதால் வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி என அழைக்கப்படுகிறார். துலுக்கன்குறிச்சி கிராமத்தில்
வாழ்ந்த தேரியப்பர்-வீரம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் வேலாயுதம். இவர் தினமும் அதிகாலை வெம்பக்கோட்டை வைப்பாற்றில் குளித்து விட்டு வனமூர்த்தி லிங்காபுரம் விநாயகர் கோவிலில் உள்ள முருகனை தரிசித்து விட்டு அன்றாட பணிகளை செய்வதையே வழக்கமாக கொண்டிருப்பார். வைத்திய முறை தெரிந்து வைத்து
இருந்தார். அங்குள்ள மக்களுக்கு பணம் வாங்காமல் வைத்தியம் செய்து வந்தார். தர்ம சிந்தனையுடன் வைத்தியத்தின் மூலம் நோய் நீக்கினார். அவர் பக்தியை கண்டு மக்கள் அவரை சித்தர் என்று போற்றினர். வேலாயுதம் வழக்கம் போல் ஒரு நாள் அதிகாலை எழுந்து வெம்பக்கோட்டை வைப்பாற்றில் குளித்துவிட்டு முருகனை
தரிசனம் செய்ய செல்லும் போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் ஆற்றை கடக்க முடியவில்லை. அதனால் முருகனை தரிசிக்க முடியாமல் தன் இல்லம் வந்து விட்டார். அன்று முழுவதும் வேதனையுடன் இருந்தார். இரவு முருகனின் திருநாமத்தை சொல்லியவாறு கண் அயர்ந்த போது கந்தன் கனவில் வந்து வேலாயுதா
என்னை காண எங்கும் செல்ல வேண்டாம். நானே உன்னை தேடி வந்து விட்டேன். நீ ஆசையாக பராமரித்து வரும் வாழைத்தோட்டத்தில் ஒரே ஒரு குலை தள்ளிய வாழை மரத்தில் மட்டும் தான் இருப்பதாக சொல்லி மறைந்தார். மறுநாள் காலை வேளையிலும் குளித்து விட்டு தன்னுடைய தோட்டத்தை நோக்கி ஓடிச் சென்றார் மெய் மறந்து
செய்வதறியாது திகைத்து நின்றார். காரணம் கனவில் முருகன் கூறிய படி குலையுடன் வாழை மரம் இருந்து அதிசயம் கண்டு மனமுருகி வேண்டி நின்றார். இச்செய்தி பரவியதால் வாழைமரத்தை பக்தர்கள் வழிபட்டனர். ஒரு முறை செவல்பட்டி ஜமீன் அரண்மனையில் பிரதான கணக்கு பிள்ளையின் ஒரே மகனுக்கு திருமண விழாவுக்காக
அந்த வாழை மரத்தை வெட்ட வந்தனர். ஆனால் வேலாயுதம் வாழைமரத்தை வெட்ட அனுமதிக்க மறுத்துவிட்டார். இதனால் மணமகன் தானே நேரில் சென்று வாழை மரத்தை வெட்டிக் கொண்டு வருவதாக கூறி தோட்டத்துக்கு சென்றார். அவரிடமும் வேலாயுதம் தான் வாழைமரம் தரமுடியாது என்று உறுதியாக கூறினார். ஆனால் வேலாயுதம்
சொல்வதைக் கேட்காமல் தன் கையில் இருந்த அரிவாளால் மரத்தை ஓங்கி வெட்டினான். அடுத்த கணம் வெட்டிய வாழையிலிருந்து ரத்தம் வெளியேறி நாகமாக மாறி மணமகனின் காலை தீண்டியது. சிறிது நேரத்தில் மணமகன் இறந்துவிட்டான். கணக்குப் பிள்ளை அழுது புரண்டார். தன் மகனை காப்பாற்றுமாறு வேலாயுதம் காலில்
விழுந்து கெஞ்சினார். என்னால் ஒன்றும் செய்ய முடியாது, முருகனிடம் கேளுங்கள் என கூறினார். நீங்கள் நினைத்தால் காப்பற்றலாம் என வேண்டினார்கள். வேலாயுதம் தன் கையிலிருந்த பிரம்பால் இறந்த மணமகன் மீது முருகா முருகா முருகா என 3 முறை திருநாமத்தை கூற, உடனே அதிசயம் நடந்தது. இறந்த மணமகன் உயிர்
பெற்றான். இதை கண்ட ஜமீன்தார் இந்த இடத்தில் வாழைமர பாலசுப்ரமணியனுக்கு ஒரு கட்டிடம் அமைத்து கொடுத்தார். அதன்படி கோவில் அமைக்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வேலாயுதம் ஆசி வழங்கினார். அருள்வாக்கு கூறி அனைவருக்கும் நன்மைகள் செய்து வந்தார். இவரது காலத்திற்கு பின்பு அவருடைய
மகன் தேரியப்பர் கோவில் திருப்பணியை செய்து வந்தார். ஒருமுறை ஏற்பட்ட திடீர் புயல் மழை நாள் வெள்ளத்தால் கோவில் இடிந்து போனது. இடிந்துபோன கோவிலை புதுப்பிக்கும் வண்ணம் சிறிய அளவில் கோவில் கட்டப்பட்டது. அதன் பின் தெரியப்பர் வாரிசுதாரர்கள் பிழைப்புக்காக வெளியூர் சென்றுவிட கோவில்
பராமரிப்பு குறைந்து, ஆண்டுக்கு ஒரு முறை வைகாசி விசாகம் தோறும் பால்குடம் எடுத்து வழிபட்டு வருகின்றனர். வாயு மூலையில் உற்சவர் சிலை அழகாக வடிவமைக்கப் பட்டுள்ளது. கருவறையில் புன்னகை தவழும் முகத்துடன் நின்ற நிலையில் இடது கையை தொடையில் வைத்தபடி வலது கையில் அபய முத்திரை, பின்புறம் வாழை
மரம் இருக்குமாறு அற்புத வடிவமைப்புடன் அருள்பாலிக்கிறார். எத்தனை துன்பங்கள் நம் மனதில் இருந்தாலும் வாழைமர பாலசுப்ரமணியனை பார்த்த மாத்திரத்திலேயே நொடிப் பொழுதில் காணாமல் போகும் படி வசீகரத்துடன் உள்ளார் அழகன் முருகன். திருமண தோஷம், புத்திர தோஷம் நோய்களை தீர்க்கும் நிவர்த்தி தலமாக
உள்ளது. குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள், திருமண பாக்கியம் மற்ற குறைகள் தீர பக்தர்கள் தங்கள் கையால் யாகம் செய்யும் அரிய வாய்ப்பும் இக்கோவிலில் வழங்கப் படுகிறது. நோய்நொடி இன்றி பெருவாழ்வு வாழவும் சகல ஸௌபாக்கியத்துடன் வாழையடி வாழையாய் வாழ்வாங்கு வாழ ஸ்ரீ வாழைமர பாலசுப்ரமணிய சுவாமி
ஆலயம் வந்து வணங்கிச் செல்வோம்.
மேலும் விவரங்களுக்கு வி.டி.பாஸ்கரன் 98405 45860.
ஓம்சரவணபவாய
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஏகலைவன்–மஹாபாரதத்தின் மாபெரும் கதாபாத்திரங்களுக்கு இடையில் மிகச் சிறியவன், ஆயினும் பிரபலமானவன். தன் மானசீக குருவான துரோணரின் விருப்பத்திற்கு இணங்கி தன் வலதுகை கட்டை விரலை தட்சணையாகக் கொடுத்தவன். குருவிற்காக கட்டை விரலையே
வழங்கிய ஏகலைவனை குரு பக்தியின் உதாரணமாகக் காட்டுகின்றனர். பாண்டவர்கள், கௌரவர்கள் என பலரும் துரோணரிடம் போர்க்கலை கற்று வந்தபோதிலும், அர்ஜுனன் தனது குருவின் மீது கொண்டிருந்த பெரும் மதிப்பினாலும் மரியாதையினாலும் மிகச்சிறந்த சீடனாகத் திகழ்ந்தான். அனைத்து கலைகளையும் நுண்ணியமாகக்
கற்றுக் கொண்ட அர்ஜுனன், துரோணருக்கு மிகவும் பிரியமானவனாக மாறினான்.
அர்ஜுனனுக்கு இருளில் உணவளிக்கக் கூடாது என்று துரோணர் சமையல்காரனுக்கு கட்டளையிட்டிருந்தார். ஒருமுறை, அர்ஜுனன் உணவருந்திக் கொண்டு இருந்தபோது, காற்றினால் விளக்கு அணைந்து விட்டது. அப்போது, விளக்கு இல்லாத போதிலும் தன்
#மகாபெரியவா
இல்லற தர்மத்திலே ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஒரு புத்திரன் பிறந்தால் அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யும் கைங்கர்யங்களின் மூலம் தந்தைக்கு நல்ல கதியைத் தருகிறான். ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான். இது சாஸ்த்ரத்தில்
உள்ளது. அப்போ பெண்ணை பெத்தவாளுக்கு?
"தசாநாம் பூர்வேஷாம் தசாநாம் பரேஷாம்
ஆத்ம நச்ச லோத் தாரண த்வாரா
நித்யநிரதிசய ஆனந்த ஸாஸ்வத விஷ்ணுலோக வாப்யர்தம்
கன்னிகா தானாக்ய மஹாதானம் கர்த்தும்
யோக்யதா ஸித்திம் அநுக்கிரஹாண"......
கன்னிகா தானத்தின் போது செய்கின்ற ஸங்கல்ப மந்திரம்.
தசாநாம்
பூர்வேஷாம் என்றால் எனக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறைகள் .
தசாநாம் பரேஷாம் என்றால் எனக்குப் பின்னாலே வரக்கூடிய பத்து தலைமுறைகள்.
ஆத்ம நச்ச என்றால் என்னுடன் சேர்த்து
21 தலைமுறைகளான என்னுடைய குலம் உத்தாரணம் பெறுவற்கும் நிலைத்த விஷ்ணு லோகத்தை நான் அடைவதற்கும் இந்த மாபெறும்
Sri Sankara Charitham by #MahaPeriyava – Determining the period of Sri Sankara’s life – Haala-Purnavarma — Proof from many evidences
"Apart from the belief passed through many generations and the testimonies of the Matams, let me speak of a few more (in support of the argument
that the life period of Acharya was 6-5 BC). When we study all the Puranas collectively, it can be observed that according to the ‘Genealogy’ (Royal lineage), the Mauryas ruled from 1500 BC to 1200 BC (I am only saying approximately); thereafter Sungas (शुङ्ग) had ruled upto
900 BC, later, Kanwas (कण्व) had reigned for about 100 years, and subsequently, Satavahanas [शातवाहन] – known as “Andhras” – had ruled for about five hundred years from the beginning of 8th Century. Although the Satavahana empire was founded in the Deccan, since it had spread
#பஞ்சகிருஷ்ண_தலங்கள்
பஞ்ச கிருஷ்ண தலங்கள் என்பவை தமிழ்நாட்டில் உள்ள முக்கிய வைணவ ஆலயங்கள் ஆகும். இத்தலங்களின் திருமால் எப்போதும் பக்தர்களுடன் சஞ்சரித்துக் கொண்டிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன இவை கிருஷ்ண ஆரண்ய தலங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இத்தலங்களில் கிருஷ்ணனின் லீலைகளும்
நாகபட்டிணத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும், சிக்கலிலிருந்து 2 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
வசஷ்ட முனிவர் கண்ணன் மீது பக்தி கொண்டு வெண்ணையால் கண்ணனை உருவாக்கி வழிபட்டு வந்தார். அவரின் பக்தியின் காரணமாக வெண்ணைக் கண்ணன் உருகவில்லை. கண்ணன் ஒருநாள் சிறுவனாக வந்து வெண்ணைக் கண்ணனை உண்டு
Author: Prof S.Kalyanaraman, Neurosurgeon, Chennai
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
Once we went for darshan to Kanchipuram. There was a need for a new elephant at Sri Ekambareswarar Temple. One of the senior officials of the Mutt
asked me whether I could buy and donate an elephant to the temple. I replied that I was not in a position to do so because of my financial position and commitment at that time. That person then probably thought that if Maha Periyava had asked me to buy an elephant and donate it,
I would certainly oblige. As I was having darshan, he told Maha Periyava, “Dr Kalyanaraman wants to donate an elephant to Sri Ekambareswarar temple, Periyava should bless him. Maha Periyava did not reply to him and continued to talk to devotees and give them darshan. Again the
#மகாபெரியவா "மாமா, இந்த மாசம் அப்பா ஶ்ராத்தம் அதுதான் உங்களுக்கு ஞாபகப் படுத்திட்டு போகலாம்னு வந்தேன்" என்றான் சந்துரு.
"இத நீ எனக்கு, ஞாபகபடுத்தணுமா? இந்த மாசம் 26ஆம் தேதி, தசமி திதிதானே எனக்கு ஞாபகம் இருக்கு, கார்த்தால பத்து மணிக்கு நான் அங்க இருப்பேன். நீ கவலைப்படாதே வழக்கம்
போல நல்லபடியா நடத்தி குடுத்துடறேன். பிராமணாள் கூட ஏற்பாடு பண்ணிட்டேன்" என்றார் மகாதேவ சாஸ்திரிகள்.
"ரொம்ப சந்தோஷம் மாமா. நமஸ்காரம் பண்றேன், ஆசீர்வாதம் பண்ணுங்கோ" என்ற சந்துரு, நமஸ்காரம் பண்ணி அபிவாதயே சொல்லி முடித்தவுடன், "க்ஷேமமா சௌக்யமா, இருப்பேடா அம்பி, தீர்காயுஷ்மான்பவா.
சீக்கரமேவ விவாக பிராப்திரஸ்து" என்று ஆசீர்வாதம் பண்ணி அனுப்பினார். சந்துரு சென்ற கொஞ்ச நேரத்தில் ஒரு சாஸ்திரிகள் அவரை பார்க்க வந்தார். வந்தவரை வரவேற்ற மகாதேவா சாஸ்திரிகள் என்ன விஷயம் என்று விசாரிக்க, "டெல்லியில் வேதபுரின்னு ஒருத்தர், மத்யஅரசுல பணி. நல்ல செல்வாக்கானவர்.