#ஒத்தபனை_ஜடாமுனீஸ்வரர் வேலூரில் அதிசய ஆலயம். கடன் பிரச்சினை, எதிரிகளின் தொல்லை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இன்மை ஆகிய குறைகளோடு வந்து வேண்டிக் கொள்பவர்கள் விரைவில் அவர்கள் வேண்டுதல்கள் நிறைவேறப் பெறுகிறார்கள். சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் ரயில் பாதை
அமைக்கும் பணியைத் தொடங்கினார். வழியில் இருந்த ஒத்தப் பனையை அகற்றும் முயற்சியில் ரயில்வே ஊழியர்கள் இறங்கினர். ஆனால் முடியவில்லை. சிலர் வீம்பாக முயற்சி செய்தும் நடக்கவில்லை. மாறாக சில அபசகுணங்கள் நிகழ்ந்தன. அப்போது அந்த ஊர்க்காரர்கள், அந்த மரம் சக்தி வாய்ந்தது என்றும் அதில்
முனீஸ்வரர் குடியிருக்கிறார் என்றும் கூற உடனே ரயிலின் பாதையை சிறிது தூரம் தள்ளித் திட்டமிட்டு அவ்வண்ணமே அமைத்தனர். அது வரை ஒருசிலரே வழிபட்டு வந்த ஜடாமுனீஸ்வரரை அநேகர் வந்து வழிபட ஆரம்பித்தனர். இந்தப் பனைமரத்தைச் சுற்றி ஏழு வேப்பமரங்கள் உள்ளன. தானாகவே முளைத்த இந்த மரங்களில் சப்த
கன்னியர்கள் வாழ்வதாக நம்பப்படுகிறது. முனீஸ்வரர் வாழும் பனைமரத்தில் சந்தனம் பூசி வழிபடுகிறார்கள் பக்தர்கள். இந்த ஈஸ்வரனுக்கு கேந்திப் பூ மாலை உகந்தது என்கிறார்கள். ஜடாமுனீஸ்வரருக்கு அருகிலேயே பாறை வடிவில் பொன்னியம்மாள் எழுந்தருளியிருப்பதாக பக்தர்கள் கொண்டாடுகிறார்கள்.
பொன்னியம்மாளுக்கு பக்தர்கள் மஞ்சள் பூசியும் சந்தனம் கொண்டும் அலங்கரிக்கிறார்கள். வாரத்தின் ஏழு நாள்களும் மாறுபட்ட கோலத்தில் தரிசனம் கொடுக்கிறாள் அன்னை.
இங்கு வரும் பக்தர்கள், தங்கள் குறைகளைச் சொல்லி வேண்டிக் கொண்டால் அவர்களின் குறைகள் விரைவில் தீர்கின்றன. ஜடாமுனீஸ்வரருக்குப்
பொங்கல் வைத்து வேண்டிக் கொண்டால் தீராத துன்பங்களும் தீர்கின்றன என்பது நம்பிக்கை. கடன் பிரச்னை, எதிரிகளின் தொல்லை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இன்மை ஆகிய குறைகளோடு வந்து வேண்டிக்கொள்பவர்கள் விரைவில் அவர்கள் வேண்டுதல்கள் நிறைவேறப் பெருகிறார்கள் என்கிறார்கள் ஊர் மக்கள்.
வருடத்துக்கு ஒருமுறை வைகாசி மாதம் பனை மரத்தைச் சுற்றி இருக்கும் ஊர்களான ஏரி முனை, வெங்கடேசபுரம், கிளித்தாம்பட்டரை சார்ந்த இந்த மூன்று ஊர் மக்களும் ஊரைக் காக்க ஒன்றுகூடிப் பொங்கல் வைத்து முனீஸ்வரருக்கு நன்றி செலுத்துகிறார்கள். குடிப்பழக்கம் உள்ளவர்களின் கைகளில் பூஜை செய்யப்பட்ட
கயிறு கட்டப்படுகிறது. இந்தக் கயிற்றைக் கைகளில் கட்டிக் கொள்கிறவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடுகிறார்கள் என்பதும் நம்பிக்கை.
நம் தெய்வங்கள் நம்மை காத்து ரக்‌ஷிக்க உள்ளார்கள். நாம் சென்று தரிசிக்க வேண்டியது மட்டுமே நம் வேலை.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jan 29
#திருக்கானூர்_கரும்பேஸ்வரர்_கோவில்
காவிரி பாய்ந்து வளம் கொழிக்கும் தஞ்சை மாவட்டத்தில் திரும்பும் திசையெல்லாம் கோவில்கள் அமைந்து மக்களை காத்து வருவது நம் கொடுப்பினை. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு வடக்கு பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் கரையில் விஷ்ணம்பேட்டை Image
கிராமத்தில் அமைந்துள்ளது திருக்கானூர் கரும்பீஸ்வரர் திருக்கோவில். மணல் மூடிய ஆலயம், திருக்கானூர் என்றழைக்கப்படும் இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்து உள்ளது. இக்கோவிலின் உள்ளே நுழைந்த உடன் வடபுறத்தில் தெற்கு நோக்கி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் இறைவன் கரும்பீஸ்வரர். அம்மன் Image
ஸௌந்தரநாயகி அம்பாள். மூலஸ்தானத்தில் கோவில் கொண்டுள்ள இறைவனுக்கு கரும்பீஸ்வரர், செம்மேனிநாதர் தேஜோமயர், இஷுவனேஸ்வரர், செம்பேனியப்பர், முளைநாதர் ஆகிய பெயர்களும் உள்ளன. இக்கோவிலின் தீர்த்தம் கொள்ளிடம் மற்றும் வேத தீர்த்தம் ஆகும். தலவிருட்சம் வில்வ மரம். கோவிலின் அருகில் உள்ள Image
Read 15 tweets
Jan 29
#நற்சிந்தனை அரசன் அருணாச்சலம் தனது மந்திரியை அழைத்து, "மந்திரியாரே, நான் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தின் அரசனாக இருக்கிறேன். எனக்கு இல்லை என்று சொல்ல எதுவும் இல்லை. இருந்தும், மனநிம்மதி இல்லை. மனக் குழப்பம் என்னை வாட்டி வதைக்கிறது. சலிப்பும், வெறுப்பும் என்னை பின்தொடர்கிறது. ஆனால், Image
எதுவும் இல்லாத என் சேவகன் என்னை விட மனமகிழ்ச்சியுடன் இருப்பதை பார்க்கிறேன். ஆனந்தத்தில் அவன் மிதக்கிறான். பார்க்கப் பொறாமையாக இருக்கிறது" என்று ஆதங்கப் பட்டான். உடனே அந்த மந்திரி, அரசே! அந்த சேவகனிடம் 99 ஆட்டத்தை பரீட்சித்துப் பாருங்கள் என்றான். அதற்கு அரசன் அருணாச்சலம், "அது
என்ன 99 ஆட்டம்? புதுமையாக இருக்கிறதே!" என்றான். அதற்கு மந்திரி, "99 ஆட்டம் என்பது 99 பொற்காசுகளை எடுத்து ஒரு பையில் போட்டு சேவகனின் வீட்டு வாசலில் வைத்துவிடுங்கள். 100 பொற்காசுள் உங்களுக்கான அன்புப் பரிசு" என்று அதிலே எழுதி வைத்துவிட்டு வந்து விடுங்கள். பின்பு என்ன நடக்கிறது என்ற
Read 7 tweets
Jan 29
#மகாபெரியவா திருவையாறு க்ஷேத்ரத்தில் காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு என்ற ஐந்து நதிகள் பாய்வதால், திருவையாறு என்று பெயர் பெற்றது. 1942 ல் நடுக்காவேரியில் வசித்து வந்தது சின்னஸ்வாமி ஐயரின் குடும்பம். இறை பக்தி, ஆசார அனுஷ்டானங்கள், எல்லாவற்றுக்கும் மேலே பெரியவாளிடம் Image
அப்படி ஒரு ஆத்மார்த்தமான பக்தி!
திருவையாறு வரும்போதெல்லாம் பெரியவா இவருடைய க்ருஹத்துக்கு கட்டாயம் வருவார். சின்னஸ்வாமி ஐயர் தினம் வீட்டில் சிவபூஜை செய்து உள்ளூரில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று பரமேஸ்வரனை மனமுருகி வழிபடுவார். சாயங்கால வேளைகளில் இராமாயண உபன்யாசம் செய்வார்.
இவருடைய பிள்ளை நாட்டுப்பெண் பெயர் பொருத்தம் வெகு அழகாக ராமச்சந்திரன், ஸீதாலக்ஷ்மி என்று அமைந்தது. மனமொத்த குடும்பமாக இருந்தாலும், கல்யாணமாகி 13 வர்ஷங்கள் ஆகியும் ஸந்தானப்ராப்தி
இல்லையே என்ற குறை எல்லார் மனத்தையும் அரித்துக் கொண்டு இருந்தது. முதலில் பிறந்த குழந்தை தங்கவில்லை.
Read 14 tweets
Jan 29
#MahaPeriyava
Narrated by Archaeologist, Dr Sathyamurthy about one of his interactions with Him!

I have had His darshan right from my childhood. Once when I went to see Him after I became an archaeologist, He asked me, “What is your profession?”
I replied that I was involved in Image
the archaelogical studies of our temples.
“Have you been to Mahabalipuram? Can you tell me what you observed there?” He asked me.

“I saw the Pandavas’ chariot, Mahishasuramardhini etc there.”

“That place also has Pallavas’ clock, have you seen it there?” He asked me!

I assumed
that Periyava was teasing me and hence I responded, “Periyava, how come the Pallavas had timepieces in their olden days?”

“It is there, it is there. Try to see it when you go there next time” He replied emphatically!
When I went to have His darshan next time, He asked me,
Read 7 tweets
Jan 28
#பழநி பழநிக்கு சென்றால் சனிக் கிரக பாதிப்புகள் நீங்கும் என்பது பலருக்குத் தெரிந்திருக்காது. திருவாவினன்குடி வந்து தன்னை வழிபட்டால், சனியால் ஏற்படும் தொல்லைகள் தீரும் என்று நிடத நாட்டு அரசன் நித்தியநாதனுக்கு வரம் தந்தார் முருகப் பெருமான். பழநி என்றதும் ஞானப் பழத்துக்காக நடந்த
போட்டியும், முருகன் பெற்றோரைப் பிரிந்து வந்து இங்கு கோயில் கொண்ட கதையும்தான் நம் நினைவுக்கு வரும். இதே போல் இன்னும் பல தெய்வக் கதைகள் பழநிக்கு உண்டு. தெய்வங்கள் பலரும் தேடி வந்து வழிபட்டு வரம்பெற்ற கதைகள் அவை!
‘உயிர்கள் வாழ்வது என்னால்தான்!’ என்று கர்வம் கொண்ட சூரிய பகவானைச்
சபித்தார் சிவபெருமான். சாபம் தீர இங்கு வந்து பூஜித்தான் சூரியன். சிவ பெருமானுக்குத் தெரியாமல், தட்ச யாகத்தில் கலந்து கொண்டதால், ஈசனிடம் தண்டனை பெற்ற அக்னியும், வாயு பகவானும் இங்கு வந்து வழிபட்டுள்ளனர். விஸ்வாமித்திரர்- வசிஷ்டர் ஆகியோருக்கு இடையே நடந்த போரில் விஸ்வாமித்திரரின்
Read 7 tweets
Jan 28
#ரதஸப்தமி சனிக்கிழமை சுபக்ருத் தை மாதம் 14, 28.01.23

ரத ஸப்தமியன்று காலை ஏழு எருக்க இலை, பசுவின் சாணம், சிறிது மஞ்சள் அட்சதை இவற்றைத் தலையில் வைத்துக்கொண்டு 7 ஸ்நானம் செய்வதால் பாபங்கள் நீங்கும். அர்க்கன் என்றால் சூரியன். சூரியனுக்கு உகந்த பத்ரமாக இருப்பதால் எருக்க இலைக்கு,
அர்க்க பத்ரம் என்று பெயர். அர்க்க பத்ரம் என்பதே பிறகு எருக்க பத்ரம், எருக்க இலை என்று ஆனது. பாபங்களும், ரோகங்களும் சூரிய பகவான் அருளால் நீங்க வேண்டும் என்று ரத சப்தமியன்று அர்க்க பத்ர ஸ்நானம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ரத ஸப்தமி ஸ்னான அர்க்ய மந்த்ரம்:
ஸப்த ஸப்தி ப்ரியே தேவி
ஸப்த லோகைக தீபிகே ஸப்த ஜன்மார்ஜிதாம் பாபம் ஹரஸப்தமி ஸத்வரம்

யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு தன்மே ரோகம் சோகம் ச மாகரி ஹந்து ஸப்தமீ

நெளமி ஸப்தமி தேவி த்வாம் ஸப்தலோகைக மாதரம் ஸப்த அர்க பத்ர ஸ்நானேன மம பாபம்வ்யபோஹய

என்ற ஸ்லோகத்தைக் கூறியபடி ஸ்நானம் செய்ய வேண்டும்.
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(