#திருக்கானூர்_கரும்பேஸ்வரர்_கோவில்
காவிரி பாய்ந்து வளம் கொழிக்கும் தஞ்சை மாவட்டத்தில் திரும்பும் திசையெல்லாம் கோவில்கள் அமைந்து மக்களை காத்து வருவது நம் கொடுப்பினை. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு வடக்கு பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் கரையில் விஷ்ணம்பேட்டை
கிராமத்தில் அமைந்துள்ளது திருக்கானூர் கரும்பீஸ்வரர் திருக்கோவில். மணல் மூடிய ஆலயம், திருக்கானூர் என்றழைக்கப்படும் இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்து உள்ளது. இக்கோவிலின் உள்ளே நுழைந்த உடன் வடபுறத்தில் தெற்கு நோக்கி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் இறைவன் கரும்பீஸ்வரர். அம்மன்
ஸௌந்தரநாயகி அம்பாள். மூலஸ்தானத்தில் கோவில் கொண்டுள்ள இறைவனுக்கு கரும்பீஸ்வரர், செம்மேனிநாதர் தேஜோமயர், இஷுவனேஸ்வரர், செம்பேனியப்பர், முளைநாதர் ஆகிய பெயர்களும் உள்ளன. இக்கோவிலின் தீர்த்தம் கொள்ளிடம் மற்றும் வேத தீர்த்தம் ஆகும். தலவிருட்சம் வில்வ மரம். கோவிலின் அருகில் உள்ள
கொள்ளிடம் நதி பெருக்கெடுத்து ஓடியதால் இந்த கோவிலை மணல்மூடி மக்கள் கண்களுக்கு தெரியாமல் இருந்தது. இந்த நிலையில், மாடு மேய்க்கும் சிறுவர்கள் காலில் கோவில் கலசம் தென்பட்டதை தொடர்ந்து இந்த இடத்தை தோண்டி பார்க்க கோவில் முழுமையும் வெளியே கொண்டு வரப்பட்டது. இக்கூற்று உண்மை என்பதற்கு
சாட்சியாக தற்போது கோவிலின் மதில் சுவரை சுற்றி மணல்மேடு காணப்படுகிறது. இக்கோவில் இருந்த பகுதிக்கு பனிமதி மங்கலம், கரிகாற்சோழர் சதுர்வேதி மங்கலம் என வேறு பெயர்கள் இருந்ததாகவும் வரலாறு தெரிவிக்கிறது. இக்கோவில் பரசுராமனின் தோஷம் நீக்கிய தலம் ஆகும். அம்மன் சிவ தியானம் செய்ய பூவுலகில்
இத்தலத்தை தேர்வு செய்து சிவதியானத்தில் ஆழ்ந்தார். அப்பொழுது அம்பாளுக்கு இறைவன் ஒளி வடிவாக காட்சியளித்தார். இதனால் இத்தல இறைவனுக்கு தேஜோமயர், செம்மேனியப்பர், என்றும் அம்பாளுக்கு சிவயோக நாயகி என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. தல மகிமையாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 1, 2, 3
தேதிகளில் சூரிய உதயத்தில் மூலஸ்தான இறைவன் மீது படும் வகையில் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 3 நாட்களிலும் காலை உதய நேரத்தில் சூரிய கதிர்கள் மூலவர் மீது பட்டு சூரியபகவான் சிவனை பூஜிக்கும் விழாவாக நடைபெறுகிறது. ஆவணி மாத மூல நட்சத்திரத்தில் சந்தனக்காப்பு, தை மாத பவுர்ணமியை அடுத்து
வரும் வெள்ளிக்கிழமையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பிரதோஷ வழிபாடும் இக்கோவிலில் சிறப்பாக நடந்து வருகிறது. மகாசிவராத்திரி நாளில் 1008 திருவிளக்கு பூஜை நடக்கும். திருக்கானூர் கரும்பீஸ்வரர் கோவிலுக்கு திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர் வருகை தந்து வழிபட்டனர் என்பது
அவர்கள் எழுதிய பாடல்கள் வாயிலாக தெரிய வருகிறது . பண்டைய சோழ மன்னன் கரிகாலன் ஊர் இந்த கோவில் அமைந்துள்ள ஊர் என்றும், யானை மாலையிட்டு கரிகாற் சோழனை அழைத்துச் சென்றது இந்த ஊரில் இருந்து தான் என்றும் ஒரு செவிவழி செய்தி தெரிவிக்கிறது. மேலும் இந்த கோவிலுக்கு முதலாம் ராஜேந்திர சோழன்
நிலங்களை வழங்கி உள்ளதாகவும் கல்வெட்டு கூறுகிறது. இத்தலத்தில் உள்ள சிவனையும், அம்பாளையும் வணங்கினால் உடல் நலக்குறைவு நீங்கி திருமணத்தடை அகலும் என்றும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் வளமான வாழ்க்கையை கரும்பீஸ்வரர் அருள்வார் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. திருக்கானூர்
கரும்பீஸ்வரர் கோவிலில் தல விருட்சம் வில்வ மரத்தின் இலைகளால் செம்மேனி நாதருக்கு அர்ச்சனை செய்து வஸ்திரம் சாற்றி, நெய் தீபம் ஏற்றி சிவகவசம் பாராயணம் செய்தால் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்படுபவர்கள் நோய் நீங்கி நல்வாழ்வு பெறுவார்கள் என்றும், ஸௌந்தரநாயகி அம்பாளுக்கு
புத்தாடை அணிவித்து, செவ்வரளி மாலை சாற்றி தீபமிட்டு அர்ச்சனை செய்ய திருமண தடை நீங்கி, திருமணம் கைகூடும் என்றும், செம்மேனியப்பருக்கும், அம்பாளுக்கும் எருக்கமாலை அணிவித்து பால், தயிர், நெய், தேன், பன்னீர் அபிஷேகம் செய்ய சந்தானபாக்கியம் கிடைக்கும் என்பதும் ஐதீகம். சப்தமி நாளில்
இக்கோவிலில் மூலவரையும், அம்பாளையும் அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீ்ங்கும். இக்கோவிலின் நடை காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் திறந்திருக்கும். கடந்த 2019-ம் ஆண்டு திருக்கானூர் கரும்பீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு நடந்தது. முற்றிலும் கிராம
சூழலில் ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள இ்ந்த சிவாலயம். திருக்கானூர் கரும்பீஸ்வரர் கோவிலுக்கு தென் மாவட்டங்களில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் முதலில் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வர வேண்டும். பின்னர் தஞ்சையில் இருந்து பஸ் மூலம் திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்துக்கு வந்து
அங்கிருந்து ஆட்டோ மூலம் திருக்காட்டுப்பள்ளி காவிரி பாலத்தை கடந்து சென்றால் கோவிலை அடையலாம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#MahaPeriyava
Kamakshi Vilasam Stotram
Sri Maha Periyava once asked Brahmasri Vedapuri to chant and share this stotram with everyone. According to Him, this stotram is supposed to be chanted before taking bath to get Ambal’s kataksham. Anyone who cannot get daily darshan of
Kamakshi Ambal, will get equal benefit by chanting this.
“Lalitha Tirupura Sundari dwells here as Goddess Kamakshi, in a posture offering penance, with four hands with Pasa, Angusa, sugarcane bow and flower arrows. The Amman is always graceful and protects the devotees with Her
eyes. Her name Kamakshi itself signifies Saraswathi and Lakshmi aspects are in her eyes.”
He further said Kamakshi is enshrined in Padmasana posture in the sanctum sanctorum and is referred to as “Parabhrama Swarupini”, seated with Brahma, Vishnu, Rudra, Eswara and Sadasiva.
The
#மகாபெரியவா
அன்பு நிறைந்த தாம்பத்யம். எல்லா வசதிகளும் இருந்தன. ஆனால் ஒரே ஒரு குறை, தசரத மகாராஜாவுக்கு இருந்த மாதிரியான குறை. குழந்தைப் பேறு இல்லை. ராமேஸ்வரத்தில் திலஹோமம், நாக பிரதிஷ்டை, ஸர்ப்ப சாந்தி - எல்லாம் செய்தும் பலன் வரவில்லை. பெரியவாளிடம் வந்தார்கள். வித்யார்த்தி நாராயண
சாஸ்திரிகள் என்று ஒரு தொண்டர், "எல்லாப் பரிகாரமும் பண்ணிப் பார்த்துட்டா, குழந்தை பிறக்கலை இந்தத் தம்பதிக்கு" என்று பெரியவாளிடம் சொன்னார். பெரியவா சற்றுத் தொலைவிலிருந்த பெண்ணைப் பார்த்தார்கள்.
"ஏண்டா, கோணல் வகிடு போட்டுண்டு இருக்காளோ?"
ஆமாம் என்றார் வித்யார்த்தி.
"நேர் வகிட்டுக்கு ஸீமந்தம் என்று சம்ஸ்க்ருதத்திலே பேரு. பெண்ணுக்கு ஸீமந்தம் நடக்கணும்னா, நேர்வகிடு - ஸீமந்தம் இருக்கணும். வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு”
அந்தப் பெண்மணி அவ்வாறே செய்தாள். அடுத்த வருஷம் இரட்டைக் குழந்தைகள்.
#சிவசூரியநாராயணர்_கோவில்
சிவசூரியநாராயண கோவில், சூரியனை முதன்மையாகக் கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் என்ற சிறப்பு வாய்ந்தது. இக்கோவில் 1100 ல், குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்டது. இதன் கோபுரம் மொத்தம் மூன்று நிலைகளையும், ஐந்து கலசங்களையும் கொண்டுள்ளது.
சூரிய தீர்த்தம் என்னும் புனித நீர் நிலை இங்கு அமைந்துள்ளது. இக்கோவிலின் தனி சிறப்பாக குரு பகவான் சூரிய பகவானை தரிசிப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
முதலில் சூரியனார் கோவிலுக்கு அருகில் உள்ள திருமங்கலக்குடி சென்று அங்கு பிராணநாதரையும், மங்கள நாயகியையும் வழிபட்ட பிறகே சூரிய
நாராயணனையும் மற்ற நவக்கிரகங்களையும் வழிபட வேண்டும். சிவசூரியநாராயண கோவில் குறித்த ஒரு சுவையான புராணச் செய்தி உள்ளது. காலவ முனிவர் எதிர்காலத்தை கணிப்பதில் வல்லவராய் இருந்தார். தனக்கு தொழுநோய் வரப் போவதாய் முன் கூட்டியே அறிந்து, அக்கொடிய நோயில் இருந்து தன்னை காத்துக் கொள்ள
#ஸ்ரீவைஷ்ணவம்#எம்பார் வைணவ பெரியோர்களில் மிக்கப்புகழுடைய எம்பார் ஸ்ரீபெரும்பூதூர் அருகிலுள்ள மழலை மங்கலத்தில் (மதுரமங்கலம்) 1026 ஆம் ஆண்டு தை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் கமலநயன பட்டர், ஸ்ரீதேவி அம்மாள் என்பவருக்கும் மகனாக பிறந்தார். ஸ்ரீதேவி அம்மாள் இராமானுஜருக்கு சிற்றன்னை
தாய் மாமனான திருமலை நம்பி இவருக்கு இட்ட பெயர் கோவிந்தபட்டர். திருப்புட்குழியில் தன் அண்ணன் இராமானுஜருடன் யாதவ பிரகாசரிடம் கல்வி பயின்றார். பின்னாளில் எம்பார் என வைணவர்களால் புகழ்பெற்றவர் இவரே. அருளிச்செயலுக்கு பொருள் கூறுவதில் மட்டுமல்லாது, ஸ்ரீராமாயண ஸ்லோகங்களுக்கும் பொருள்
கூறுவதில் வல்லவர். ஸர்வேஸ்வரனான எம்பெருமானுக்கும் ஓர் அறியாமை, மறதி, மற்றும் செய்ய முடியாத ஒன்று உண்டு என்று எம்பார் அருளிச் செய்வாராம். எம்பெருமானை ஒருவன் சரணடைந்து விட்டால், அவன் செய்த குற்றங்களை எம்பெருமான் மறந்து விடுகிறான். அறியாமல் அவன் செய்யும் குற்றங்களை அறியாமல் இருந்து
#நற்சிந்தனை அரசன் அருணாச்சலம் தனது மந்திரியை அழைத்து, "மந்திரியாரே, நான் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தின் அரசனாக இருக்கிறேன். எனக்கு இல்லை என்று சொல்ல எதுவும் இல்லை. இருந்தும், மனநிம்மதி இல்லை. மனக் குழப்பம் என்னை வாட்டி வதைக்கிறது. சலிப்பும், வெறுப்பும் என்னை பின்தொடர்கிறது. ஆனால்,
எதுவும் இல்லாத என் சேவகன் என்னை விட மனமகிழ்ச்சியுடன் இருப்பதை பார்க்கிறேன். ஆனந்தத்தில் அவன் மிதக்கிறான். பார்க்கப் பொறாமையாக இருக்கிறது" என்று ஆதங்கப் பட்டான். உடனே அந்த மந்திரி, அரசே! அந்த சேவகனிடம் 99 ஆட்டத்தை பரீட்சித்துப் பாருங்கள் என்றான். அதற்கு அரசன் அருணாச்சலம், "அது
என்ன 99 ஆட்டம்? புதுமையாக இருக்கிறதே!" என்றான். அதற்கு மந்திரி, "99 ஆட்டம் என்பது 99 பொற்காசுகளை எடுத்து ஒரு பையில் போட்டு சேவகனின் வீட்டு வாசலில் வைத்துவிடுங்கள். 100 பொற்காசுள் உங்களுக்கான அன்புப் பரிசு" என்று அதிலே எழுதி வைத்துவிட்டு வந்து விடுங்கள். பின்பு என்ன நடக்கிறது என்ற
#மகாபெரியவா திருவையாறு க்ஷேத்ரத்தில் காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு என்ற ஐந்து நதிகள் பாய்வதால், திருவையாறு என்று பெயர் பெற்றது. 1942 ல் நடுக்காவேரியில் வசித்து வந்தது சின்னஸ்வாமி ஐயரின் குடும்பம். இறை பக்தி, ஆசார அனுஷ்டானங்கள், எல்லாவற்றுக்கும் மேலே பெரியவாளிடம்
அப்படி ஒரு ஆத்மார்த்தமான பக்தி!
திருவையாறு வரும்போதெல்லாம் பெரியவா இவருடைய க்ருஹத்துக்கு கட்டாயம் வருவார். சின்னஸ்வாமி ஐயர் தினம் வீட்டில் சிவபூஜை செய்து உள்ளூரில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று பரமேஸ்வரனை மனமுருகி வழிபடுவார். சாயங்கால வேளைகளில் இராமாயண உபன்யாசம் செய்வார்.
இவருடைய பிள்ளை நாட்டுப்பெண் பெயர் பொருத்தம் வெகு அழகாக ராமச்சந்திரன், ஸீதாலக்ஷ்மி என்று அமைந்தது. மனமொத்த குடும்பமாக இருந்தாலும், கல்யாணமாகி 13 வர்ஷங்கள் ஆகியும் ஸந்தானப்ராப்தி
இல்லையே என்ற குறை எல்லார் மனத்தையும் அரித்துக் கொண்டு இருந்தது. முதலில் பிறந்த குழந்தை தங்கவில்லை.