#அனகாபுத்தூர்_அகத்தீஸ்வரர்_கோவில்
மூலவர்: அகத்தீஸ்வரர்
அம்பாள்: ஆனந்தவல்லி
1000 வருடங்களுக்கு மேல் பழமையான கோவில் இது. காஞ்சி மாநகருக்கு கீழ் திசையில் அமைந்துள்ள குன்றத்தூரை அடுத்து அமைத்துள்ளது அனகாபுத்தூர் என்னும் திருநகரமாகும். இதன் தென்னாம பெயர் ஆனைகாபுத்தூர் ஆகும். அதாவது
யானைகளை பராமரித்து பாதுகாத்து வந்த இடமாகும். பல்லவன் காலத்தில் இவ்விடம் யானைகள் பாதுகாக்கப்பட்டு வந்ததாகவும், இவ்வூர் அருகே அடையாறும், அதனை சார்ந்த மடுவும் யானைகளை பாதுகாக்கப்பட்டு உகந்ததாய் இருந்துள்ளது. இறைவன், பார்வதியை திருமணம் செய்த காலத்தில் தென் கோடியாகிய தென்னாடு
உயர்ந்தது. வடகோடியாகிய இமயம் தாழ்ந்ததாம். அதனை சமன் செய்ய இறைவன், அகத்திய மாமுனியை தென்னாடு அனுப்பினார். சிவனை ஆராதிக்கும் வழக்கமுடைய அகத்தியர் தொன்னாடு அடைந்த போது, பல இடங்களிலும் தங்கி சிவ பூஜை செய்துள்ளார். அதன்படி இவ்வூரிலும் அகத்தியர் பூஜை செய்துள்ளார். அதனாலேயே இவ்வூர்
இறைவனுக்கு அகத்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. எனவே இது அகத்திய முனிவர் பூஜித்த தலமாகும். மேலும், பாண்டவர்கள் வனவாசத்தின் போதும், தீர்த்த யாத்திரை செய்த போதும், தென்னாட்டில் பல இடங்களில் தங்கி இறைவனை பூஜித்துள்ளனர். அவ்வாறு அவர்கள் பூஜித்த தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். இவ்வூரில்
பாதுகாக்கப்பட்டு வந்த சில யானைகள் அருகிலுள்ள மடுவின் நீரை முகந்து அபிஷேவித்தும், மடுவின் கரையில் அமைந்த நந்தவனமான மலர்களை தூவியும் அர்ச்சித்து பெயர் பெற்றதாக தலபுராணம் கூறுகிறது. எனவே, யானை பூஜித்த தலைவன் இறைவன் உறையும் இவ்வூர் ஆனைகாபுத்தூர் என்று அழைக்கப்பட்டு, தற்காலத்து
அனகாபுத்தூர் என்று மருவி வழங்கப்பட்டு வருகிறது.இத்தல ஆவுடையார் வட்டவடிவில் அமைந்திருப்பது இத்தலத்தின் தனி சிறப்பு. ஆலய திருச்சுற்றில் விநாயகர், வள்ளி, தெய்வானை உடனாகிய முருக பெருமாள் மேற்பால் அருளாட்சி செய்கின்றனர். ஈசான பாகத்தில் நவ கோலங்களும். பைரவரும் அமைந்திருக்கின்றனர்.
தனியாக சனீஸ்வரர் சன்னதியும் அமைந்துள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக கருவறை சுற்றில் தென்பால் விநாயகரும், தென்முக கடவுளாம் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் மகாவிஷ்ணுவும், வடக்கில் பிரம்மாவும், துர்க்கையும் அமைந்து இருக்கின்றனர். இங்கு தண்டேஸ்வரர் சன்னதி உள்ளது. புதிதாக ராஜகோபுரம் மூன்று
நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுர உள்புறம் தென்பால் தனி விநாயகர் சன்னதி உள்ளது. தீராத நோய்கள் தீர, தொழில் அபிவிருத்தி, சந்தான பாக்கியம் பெற இங்கு ஒரு மண்டலம் வழிபட்டால் நல்ல பலன் கிடைப்பது இத்தலத்தின் பெரும் சிறப்பாகும். சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது
வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். காமிக, காரண ஆகமங்களின்படி இக்கோவில் அமையப் பெற்றுள்ளது. கருவறை அந்தராளம், அர்த்த மண்டபம், முக மண்டபம் போன்ற மண்டப அமைப்புக்கள் அமைந்துள்ளன. இங்குள்ள சிவன் சன்னதி கிழக்குப் பார்த்த நிலையில் அமைந்துள்ளது. மூலவர் லிங்கத் திருமேனியராக
அருள்பாலிக்கிறார். வட்ட வடிவ ஆவுடையார் கொண்டது. இறைவடன் ஆனந்தத்தை அள்ளி வழங்கும் தாயார் ஆனந்தவள்ளி அம்பாள் தெற்கு நோக்கி அருளுகின்றாள். அம்பாள் கருவறையில் பாச அங்குசம், மேற் கைகளில் ஏந்தி மற்ற திருக்கரங்களால் அபய வரதம் காட்டிய தாய் அழைப்பது போன்று பக்தர்களை அழைக்கும் வடிவழகோடு
நின்ற திருகோலத்தில் அருள் பாலிக்கிறாள். இக்கோயிலை சுற்றிலும் சப்தகன்னியர்க்கு கோயில் அமைந்துள்ளது. இத்தலத்துடன் இணைந்து ஆலவட்டம்மன், அடஞ்சியம்மன் என்று அழைக்கப்படும் கெங்கையம்மன், பச்சையம்மன் திருக்கோயில்கள் உள்ளன.
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
திறந்திருக்கும்.
அமைவிடம்
சென்னை பல்லாவரம் - குன்றத்தூர் - மாங்காடு செல்லும் வழியில் பிரதான ஜி.எஸ்.டி; சாலையில் இருந்து சுமார் 7 கி.மீ.,தூரத்தில் உள்ளது அனகாபுத்தூர்.
திருச்சிற்றம்பலம்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#இராமனை_நம்பினோர்_கைவிடப்படார் ஸ்ரீராமர் சீதையை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன் வானரப் படையை திரட்டினார். வானரங்களில் உயரமான குட்டையான என்று பல வகை இருந்தன. அதில் சிங்கலிகா என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை இருந்தது. இதில் ஆயிரம் வானரங்கள்
இருந்தன. இந்த வானரங்கள் கூட்டமாக சென்று எதிரியின் படை வீரர்கள் மேல் விழுந்து பற்களால் கடித்துக் குதறியும் நகங்களால் பிராண்டியும் போரிடும். போருக்குப் புறப்படும் வீரர்களை வழியனுப்பும் போது அவர்கள் குடும்பத்தார்களின் கண்களில் கண்ணீர். அவர்கள் உயிருடன் பத்திரமாக திரும்பி வர வேண்டுமே
என்ற கவலையில் இருந்தார்கள். அதைக் கவனித்த ராமர் அவர்களிடம் கூறினார் யாரும் கவலைப்பட வேண்டாம். என் படை வீரர்களை பத்திரமாக திருப்பிக் கொண்டு வந்து சேர்ப்பது என் பொறுப்பு என்றார். ராமருக்கும் ராவணனுக்கும் போர் ஆரம்பித்து, கடும் போர் நடந்து கொண்டிருந்தது. ராவணனின் படையில் பல முக்கிய
#காஞ்சிகாமாட்சி காமாட்சி அம்பாள் இங்கே நான்கு கரங்களோடு பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருக்கிறாள். முன் இருகைகளில் கரும்பு வில்லினையும், மலர்க் கணைகளையும், மேல் இருகைகளில் பாசம் மற்றும் அங்குசத்தை ஏந்தி இருக்கிறாள். தந்திர சூடாமணியின்படி இது 51 சக்தி பீடங்களில் தேவியின் நாபி
விழுந்த சக்தி பீடமாகும். காமாட்சி எனும் திருநாமத்தில் கா என்பது சரஸ்வதியையும், மா என்பது லட்சுமியையும் குறிக்கும். அட்சி என்பது கண்ணாக உடையவள் என்று பொருள்படும். அதாவது கலைமகளையும், திருமகளையும் தன் இரு கண்களாகக் கொண்டவள் காமாட்சி என்பதையே அவளது திருப்பெயர் உணர்த்துகிறது.
காமாட்சி இங்கு "பரப்ரஹ்ம ஸ்வரூபினி" என்று வணங்கப்படுகிறார். ஆரம்பத்தில் மிகவும் உக்கிரமாக இருந்ததால், 'உக்ர ஸ்வரூபினி' என அழைக்கப்பட்டார். ஆதி சங்கரரால், பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டில், இக்கோயிலில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மிகவும் உக்கிரமாக இருந்த காளியன்னையை, சௌம்யமான
#MahaPeriyava
Narrated by R.Krishnan, I D.A.S.(Retd.)
From kamakoti.org
On 10.10.57, I was to leave for Pune to join duty in Defence Accounts Department as an Upper Division Clerk. It was by chance I came to know that Paramacharya was camping at Ramakrishnapuram in
west Mambalam. I was dressed in pant and shirt. I just took a chance and on 9.10.57 I went for darshan. I removed my shirt and did 'Pranam'. I proceeded to Pune with His blessings. Now I have retired as a Class I Officer. During 1968 my sister was in a very serious condition and
had been admitted in the Tanjore Medical Hospital. On my way back from Tanjore to Pune I went to have the darshan of Paramacharya who was observing silence. Through His assistants I handed over some fruits as homage and told Him about my sister's plight. Paramacharya took one
#நற்சிந்தனை
ஒரு சமயம் கௌரவருக்கும் பாண்டவருக்குமிடையே அறிவுத் தேர்வு நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது. இருபாலருக்கும் ஒரே அளவு பணத்தைக் கொடுத்து, அதைக் கொண்டு ஒரு அறை நிறைய பொருட்களை நிரப்பி வைக்க வேண்டுமென்று துரோணர் கூறினார். துரியோதனன் அறை முழுக்க வைக்கோலை வாங்கி அடைத்து
வைத்திருந்தான். பீஷ்மர், விதுரர், கிருபர் போன்றோர் வந்து அறையைத் திறந்ததும் தும்மல் தான் வந்தது. பஞ்ச பாண்டவர்களின் அறையைத் திறந்ததும் அறை முழுவதும் கோலங்கள், அதில் நேர்த்தியாக விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. மலர்த் தோரணங்கள், பழங்கள், பால், சந்தனம் எல்லாம் தயாராக இருந்தன. அகில்
வாசனை மனதை நிறைத்தது. பாண்டவர்களின் மதி நுட்பத்தை எண்ணி அனை வரும் வியந்தனர். தாங்கள் தோற்றதை எண்ணிக் கோபமுற்ற துரியோதனன், ஒரே தேர்வில் யார் புத்திசாலிகள் என்பதை முடிவு செயலாகாது என வாதிட்டான். துரோணரும் அதற்கிசைந்து நூற்றைந்து பேரையும் அழைத்து, இன்று முதல் பத்து நாட்களுக்குள்
#செட்டிப்புண்ணியம்_வரதராஜர்_ஆலயம்
மூலவர்: வரதரஜப் பெருமாள்
உற்சவர்: தேவநாத சுவாமி
500 வருடப் பழமையான இக்கோவில் ஹயக்க்ரீவர் கோவில் என்று பிரபலமாக அறியப்படுகிறது. யோக ஹயக்ரீவருக்கு அமைந்துள்ள முக்கிய கோயில்களில் இதுவும் ஒன்று. ஒருமுறை உலகம் அழிய இருந்த சமயத்தில் இந்த பிரபஞ்சத்தை,
மக்களை தன்னுள்ளே அடக்கி, ஆலிலை மேல் குழந்தை வடிவத்தில் சயனித்தார் மகாவிஷ்ணு. பிறகு புதிய உலகைப் படைப்பதற்காக தன் நாபிக்கமலத்திலிருந்து பிரம்மனை படைத்து நான்கு வேதங்களையும் அவருக்கு உபதேசித்தார். பிரம்மனும் படைப்புத் தொழிலை ஆரம்பித்தார். இதன் பின், மது, கைடபன் என்ற அசுரர்கள்
பெருமாளின் உடலில் இருந்த தண்ணீர் திவலைகளில் இருந்து பிறந்தனர். விஷ்ணுவின் பிள்ளைகள் என்ற தைரியத்தில், பிரம்மாவிடம்இருந்த வேதங்களை அபகரித்தனர். தங்களுக்கும் படைப்புத்தொழில் செய்ய உரிமை உண்டு என வாதிட்டனர். பின், குதிரை முகம் கொண்டு பாதாளத்திற்கு சென்று வேதங்களை ஒளித்து வைத்தனர்.
#திருமலை_ஏழுமலையானுக்கான_நைவேத்தியங்கள் திருப்பதி தேவஸ்தான பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதர் எழுதிய The Sacred Foods of God என்ற ஆங்கில புத்தகத்தில் இந்த அரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஏழுமலையானுக்கு என்னென்ன நைவேத்யங்கள் எப்பொழுது படைக்க வேண்டும், அதை யார் தயாரிக்க வேண்டும்
என்பது உள்ளிட்ட விவரங்கள் ஆகம சாஸ்திரங்களில் தெளிவாக எடுத்து உரைக்கப் பட்டுள்ளது. அதன்படியே திருமலையில் பிரசாதங்கள் தயாரிக்கப் பட்டு ஏழுமலையானுக்கு நைவேத்யமாக அளிக்கப்படுகிறது. அடுப்பில் கட்டைகளை எரித்தே சுவாமிக்கு நைவேத்யம் தயாரிக்கப் படுகிறது. அந்தக் கட்டைகள் பால் வடியும்
மரத்தில் இருந்து எடுத்து வந்திருக்கக் கூடாது. நைவேத்யம் சமைப்பவர்கள், அதன் வாசனையை நுகரக் கூடாது. மூக்கு வாய் போன்ற அங்கங்களை துணியால் கட்டிக் கொள்ள வேண்டும்.
ஆகம விதிப்படியே சுவாமிக்கு நைவேத்யம் கண்டருளப் பண்ணப் படுகிறது. நைவேத்யம் கண்டருளும் முன் #காயத்ரிமந்திரம் உச்சரித்தவாறே