#நற்சிந்தனை
ஒரு சமயம் கௌரவருக்கும் பாண்டவருக்குமிடையே அறிவுத் தேர்வு நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது. இருபாலருக்கும் ஒரே அளவு பணத்தைக் கொடுத்து, அதைக் கொண்டு ஒரு அறை நிறைய பொருட்களை நிரப்பி வைக்க வேண்டுமென்று துரோணர் கூறினார். துரியோதனன் அறை முழுக்க வைக்கோலை வாங்கி அடைத்து
வைத்திருந்தான். பீஷ்மர், விதுரர், கிருபர் போன்றோர் வந்து அறையைத் திறந்ததும் தும்மல் தான் வந்தது. பஞ்ச பாண்டவர்களின் அறையைத் திறந்ததும் அறை முழுவதும் கோலங்கள், அதில் நேர்த்தியாக விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. மலர்த் தோரணங்கள், பழங்கள், பால், சந்தனம் எல்லாம் தயாராக இருந்தன. அகில்
வாசனை மனதை நிறைத்தது. பாண்டவர்களின் மதி நுட்பத்தை எண்ணி அனை வரும் வியந்தனர். தாங்கள் தோற்றதை எண்ணிக் கோபமுற்ற துரியோதனன், ஒரே தேர்வில் யார் புத்திசாலிகள் என்பதை முடிவு செயலாகாது என வாதிட்டான். துரோணரும் அதற்கிசைந்து நூற்றைந்து பேரையும் அழைத்து, இன்று முதல் பத்து நாட்களுக்குள்
கௌரவர்கள் 8 குடங்களிலும், பாண்டவர்கள் 8 குடங்களிலும் பனி நீரை நிரப்ப வேண்டும். பத்தாம் நாள் காலை சூரியன் தோன்றுவதற்கு முன் நாங்கள் வந்து பார்ப்போம் என்றார். சரி என இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப் பட்டது.
கௌரவர்களுக்கு இதை எப்படிச் செய்வது என்று விளங்காது போகவே, மாமன் சகுனியின்
உதவியை நாடினர். இதற்கிடையில், 9 நாட்கள் கடந்துவிட்டன. பத்தாம் நாள் காலை சூரிய உதயத்திற்குள் 8 குடங்களில் பனி நீரை நிரப்ப வேண்டும். அப்படி செய்யாவிட்டால், தோற்று அவமானப்பட வேண்டும் என்பதை எண்ணி அஞ்சினர் கௌரவர்கள். நடு நிசியில் பனி பெய்து கொண்டிருந்த போது, கௌரவர்கள் அனைவரும் தங்கள்
மாமன் சகுனியின் அரண்மனைத் தோட்டத்திற்குள் சென்றனர்.
செடியின் இலைகளில் தேங்கிக் கிடந்த பனிநீரைத் தனித்தனியாக எடுத்து குடத்தில் விட்டனர். இப்படியே காலை சூரிய உதயம் வரை செய்தனர். அவர்கள் சேகரித்த பனிநீர் ஒரு குடம் மட்டுமே இருந்தது. மற்ற குடங்களில் எப்படி நிரப்புவது? சகுனியின் யோசனை
படி மற்ற குடங்களில் நீரை நிரப்பி குடங்களைப் போட்டி நடக்கும் இடத்திற்கு எடுத்துச் சென்றனர். பாண்டவர்களும், 8 குடங்களுடன் போட்டி நடைபெறும் இடத்திற்கு குறித்த நேரத்தில் வந்து சேர்ந்தனர். போட்டியைக் காண பலர் கூடி விட்டனர். இரு சாரரும் பனி நீர் நிரம்பிய தங்களுடைய எட்டுக் குடங்களையும்
குருவின் முன்வைத்தனர். மன்னர் திருதராஷ்டிரர் தன் மக்கள் 8 குடங்களில் பனிநீரை நிரப்பிவிட்டனர் என்ற மகிழ்ச்சியில், துரோணரே! என் புதல்வர்கள் அறிவு படைத்தவர்கள் இல்லையா? என்று கேட்டார். மன்னவா! சோதனை இன்னும் முடியவில்லை. சற்று நேரத்தில் சூரிய பகவான் வந்து தீர்ப்பு கூறுவார் என்று குரு
பதிலளித்தார். சூரிய பகவான் வருவதா? தீர்ப்பு கூறுவதா? அது என்ன என்று புரியாமல் அனைவரும் விழித்தனர். துரோணரே பாண்டவர்களிடம் தங்களுடைய 8 குடம் பனிநீரை சூரிய வெயில் படும்படி வைக்குமாறு தெரிவித்தார். அப்படியே அவர்களும் செய்தனர். சூரியஒளி பட்டதும், 8 குடங்களிலிருந்த நீர் மெல்ல ஆவியாக
மறைந்து விட்டது. பின்னர் கவுரவர்களை தங்களுடைய 8 குடம் பனிநீரை சூரிய வெயில் படும்படி வைக்குமாறு கூறினார். 8 குடங்களும் சூரிய வெயிலில் வைக்கப்பட்டன. ஒரு குடத்திலிருந்த நீர் மட்டும் ஆவியாக மாறி மறைந்தது. மற்ற 7 குடங்களிலிருந்த நீர் அப்படியே இருந்ததே தவிர ஆவியாக மாறவில்லை. மன்னவா!
தங்கள் மைந்தர்கள் ஒரு குடத்தில் மட்டும் பனிநீரையும், மற்ற குடங்களில் தண்ணீரையும் நிரப்பி விட்டனர். போட்டியில் யார் வெற்றி பெற்றனர் என்பதை நீங்களே தெரிவிக்கலாம், என்று கூறியதும், மன்னர் பதில் கூறாது தலை குனிந்தார். பாண்டவர்கள் எப்படி 8 குடங்களில் பனி நீரை நிரப்பினர் என தருமனிடம்
துரோணர் கேட்டார். போட்டி முடிவுறும் பத்தாம் நாள், முன் இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்னர் தோட்டத்தில் உள்ள செடி, கொடிகளின் மீதெல்லாம் துணிகளை விரித்து வைத்தோம். இரவு முழுதும் பெய்த பனி அத்துணிகளின் மீது விழுந்து நனைந்திருந்தன. காலையில் அத்துணிகளை எடுத்து குடத்தில் பிழிந்து 8
குடங்களில் பனி நீரை நிரப்பி விட்டோம் என்று தருமன் பதிலளித்தான். பாண்டவர்கள் உண்மையிலேயே புத்திசாலிகள் என்று மக்கள் போற்றினர். கௌரவர்கள் அவமானத்தில் தலை குனிந்தவாறு வெளிஏறினர்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#இராமனை_நம்பினோர்_கைவிடப்படார் ஸ்ரீராமர் சீதையை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன் வானரப் படையை திரட்டினார். வானரங்களில் உயரமான குட்டையான என்று பல வகை இருந்தன. அதில் சிங்கலிகா என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை இருந்தது. இதில் ஆயிரம் வானரங்கள்
இருந்தன. இந்த வானரங்கள் கூட்டமாக சென்று எதிரியின் படை வீரர்கள் மேல் விழுந்து பற்களால் கடித்துக் குதறியும் நகங்களால் பிராண்டியும் போரிடும். போருக்குப் புறப்படும் வீரர்களை வழியனுப்பும் போது அவர்கள் குடும்பத்தார்களின் கண்களில் கண்ணீர். அவர்கள் உயிருடன் பத்திரமாக திரும்பி வர வேண்டுமே
என்ற கவலையில் இருந்தார்கள். அதைக் கவனித்த ராமர் அவர்களிடம் கூறினார் யாரும் கவலைப்பட வேண்டாம். என் படை வீரர்களை பத்திரமாக திருப்பிக் கொண்டு வந்து சேர்ப்பது என் பொறுப்பு என்றார். ராமருக்கும் ராவணனுக்கும் போர் ஆரம்பித்து, கடும் போர் நடந்து கொண்டிருந்தது. ராவணனின் படையில் பல முக்கிய
#காஞ்சிகாமாட்சி காமாட்சி அம்பாள் இங்கே நான்கு கரங்களோடு பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருக்கிறாள். முன் இருகைகளில் கரும்பு வில்லினையும், மலர்க் கணைகளையும், மேல் இருகைகளில் பாசம் மற்றும் அங்குசத்தை ஏந்தி இருக்கிறாள். தந்திர சூடாமணியின்படி இது 51 சக்தி பீடங்களில் தேவியின் நாபி
விழுந்த சக்தி பீடமாகும். காமாட்சி எனும் திருநாமத்தில் கா என்பது சரஸ்வதியையும், மா என்பது லட்சுமியையும் குறிக்கும். அட்சி என்பது கண்ணாக உடையவள் என்று பொருள்படும். அதாவது கலைமகளையும், திருமகளையும் தன் இரு கண்களாகக் கொண்டவள் காமாட்சி என்பதையே அவளது திருப்பெயர் உணர்த்துகிறது.
காமாட்சி இங்கு "பரப்ரஹ்ம ஸ்வரூபினி" என்று வணங்கப்படுகிறார். ஆரம்பத்தில் மிகவும் உக்கிரமாக இருந்ததால், 'உக்ர ஸ்வரூபினி' என அழைக்கப்பட்டார். ஆதி சங்கரரால், பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டில், இக்கோயிலில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மிகவும் உக்கிரமாக இருந்த காளியன்னையை, சௌம்யமான
#MahaPeriyava
Narrated by R.Krishnan, I D.A.S.(Retd.)
From kamakoti.org
On 10.10.57, I was to leave for Pune to join duty in Defence Accounts Department as an Upper Division Clerk. It was by chance I came to know that Paramacharya was camping at Ramakrishnapuram in
west Mambalam. I was dressed in pant and shirt. I just took a chance and on 9.10.57 I went for darshan. I removed my shirt and did 'Pranam'. I proceeded to Pune with His blessings. Now I have retired as a Class I Officer. During 1968 my sister was in a very serious condition and
had been admitted in the Tanjore Medical Hospital. On my way back from Tanjore to Pune I went to have the darshan of Paramacharya who was observing silence. Through His assistants I handed over some fruits as homage and told Him about my sister's plight. Paramacharya took one
#செட்டிப்புண்ணியம்_வரதராஜர்_ஆலயம்
மூலவர்: வரதரஜப் பெருமாள்
உற்சவர்: தேவநாத சுவாமி
500 வருடப் பழமையான இக்கோவில் ஹயக்க்ரீவர் கோவில் என்று பிரபலமாக அறியப்படுகிறது. யோக ஹயக்ரீவருக்கு அமைந்துள்ள முக்கிய கோயில்களில் இதுவும் ஒன்று. ஒருமுறை உலகம் அழிய இருந்த சமயத்தில் இந்த பிரபஞ்சத்தை,
மக்களை தன்னுள்ளே அடக்கி, ஆலிலை மேல் குழந்தை வடிவத்தில் சயனித்தார் மகாவிஷ்ணு. பிறகு புதிய உலகைப் படைப்பதற்காக தன் நாபிக்கமலத்திலிருந்து பிரம்மனை படைத்து நான்கு வேதங்களையும் அவருக்கு உபதேசித்தார். பிரம்மனும் படைப்புத் தொழிலை ஆரம்பித்தார். இதன் பின், மது, கைடபன் என்ற அசுரர்கள்
பெருமாளின் உடலில் இருந்த தண்ணீர் திவலைகளில் இருந்து பிறந்தனர். விஷ்ணுவின் பிள்ளைகள் என்ற தைரியத்தில், பிரம்மாவிடம்இருந்த வேதங்களை அபகரித்தனர். தங்களுக்கும் படைப்புத்தொழில் செய்ய உரிமை உண்டு என வாதிட்டனர். பின், குதிரை முகம் கொண்டு பாதாளத்திற்கு சென்று வேதங்களை ஒளித்து வைத்தனர்.
#அனகாபுத்தூர்_அகத்தீஸ்வரர்_கோவில்
மூலவர்: அகத்தீஸ்வரர்
அம்பாள்: ஆனந்தவல்லி
1000 வருடங்களுக்கு மேல் பழமையான கோவில் இது. காஞ்சி மாநகருக்கு கீழ் திசையில் அமைந்துள்ள குன்றத்தூரை அடுத்து அமைத்துள்ளது அனகாபுத்தூர் என்னும் திருநகரமாகும். இதன் தென்னாம பெயர் ஆனைகாபுத்தூர் ஆகும். அதாவது
யானைகளை பராமரித்து பாதுகாத்து வந்த இடமாகும். பல்லவன் காலத்தில் இவ்விடம் யானைகள் பாதுகாக்கப்பட்டு வந்ததாகவும், இவ்வூர் அருகே அடையாறும், அதனை சார்ந்த மடுவும் யானைகளை பாதுகாக்கப்பட்டு உகந்ததாய் இருந்துள்ளது. இறைவன், பார்வதியை திருமணம் செய்த காலத்தில் தென் கோடியாகிய தென்னாடு
உயர்ந்தது. வடகோடியாகிய இமயம் தாழ்ந்ததாம். அதனை சமன் செய்ய இறைவன், அகத்திய மாமுனியை தென்னாடு அனுப்பினார். சிவனை ஆராதிக்கும் வழக்கமுடைய அகத்தியர் தொன்னாடு அடைந்த போது, பல இடங்களிலும் தங்கி சிவ பூஜை செய்துள்ளார். அதன்படி இவ்வூரிலும் அகத்தியர் பூஜை செய்துள்ளார். அதனாலேயே இவ்வூர்
#திருமலை_ஏழுமலையானுக்கான_நைவேத்தியங்கள் திருப்பதி தேவஸ்தான பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதர் எழுதிய The Sacred Foods of God என்ற ஆங்கில புத்தகத்தில் இந்த அரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஏழுமலையானுக்கு என்னென்ன நைவேத்யங்கள் எப்பொழுது படைக்க வேண்டும், அதை யார் தயாரிக்க வேண்டும்
என்பது உள்ளிட்ட விவரங்கள் ஆகம சாஸ்திரங்களில் தெளிவாக எடுத்து உரைக்கப் பட்டுள்ளது. அதன்படியே திருமலையில் பிரசாதங்கள் தயாரிக்கப் பட்டு ஏழுமலையானுக்கு நைவேத்யமாக அளிக்கப்படுகிறது. அடுப்பில் கட்டைகளை எரித்தே சுவாமிக்கு நைவேத்யம் தயாரிக்கப் படுகிறது. அந்தக் கட்டைகள் பால் வடியும்
மரத்தில் இருந்து எடுத்து வந்திருக்கக் கூடாது. நைவேத்யம் சமைப்பவர்கள், அதன் வாசனையை நுகரக் கூடாது. மூக்கு வாய் போன்ற அங்கங்களை துணியால் கட்டிக் கொள்ள வேண்டும்.
ஆகம விதிப்படியே சுவாமிக்கு நைவேத்யம் கண்டருளப் பண்ணப் படுகிறது. நைவேத்யம் கண்டருளும் முன் #காயத்ரிமந்திரம் உச்சரித்தவாறே