#இராமனை_நம்பினோர்_கைவிடப்படார் ஸ்ரீராமர் சீதையை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன் வானரப் படையை திரட்டினார். வானரங்களில் உயரமான குட்டையான என்று பல வகை இருந்தன. அதில் சிங்கலிகா என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை இருந்தது. இதில் ஆயிரம் வானரங்கள்
இருந்தன. இந்த வானரங்கள் கூட்டமாக சென்று எதிரியின் படை வீரர்கள் மேல் விழுந்து பற்களால் கடித்துக் குதறியும் நகங்களால் பிராண்டியும் போரிடும். போருக்குப் புறப்படும் வீரர்களை வழியனுப்பும் போது அவர்கள் குடும்பத்தார்களின் கண்களில் கண்ணீர். அவர்கள் உயிருடன் பத்திரமாக திரும்பி வர வேண்டுமே
என்ற கவலையில் இருந்தார்கள். அதைக் கவனித்த ராமர் அவர்களிடம் கூறினார் யாரும் கவலைப்பட வேண்டாம். என் படை வீரர்களை பத்திரமாக திருப்பிக் கொண்டு வந்து சேர்ப்பது என் பொறுப்பு என்றார். ராமருக்கும் ராவணனுக்கும் போர் ஆரம்பித்து, கடும் போர் நடந்து கொண்டிருந்தது. ராவணனின் படையில் பல முக்கிய
வீரர்களும் படைத் தலைவர்களும் மடிந்தார்கள். தூங்கிக் கொண்டிருந்த தன் தம்பி கும்பகர்ணனை எழுப்பி போரிடச் சொன்னான் ராவணன். ராட்சசனைப் போல் இருந்தாலும் கும்பகர்ணன் மிகவும் நல்லவன். வேறு வழியின்றி அண்ணனின் ஆணைப்படி போருக்குப் புறப்பட்டான் கும்பகர்ணன். கும்பகர்ணனின் ராட்சத உருவத்திற்கு
ஏற்றாற் போல் அவனது தேரும் மிகப் பெரியதாக இருந்தது. தேரின் முன்புறம் பெரிய பெரிய மணிகள் தொங்கிக் கொண்டிருந்தன. போர் தொடங்கி சிறிது நேரத்தில் ராம பாணத்திற்கு பலியானான் கும்பகர்ணன். தேரிலிருந்து சாயும் போது கும்பகர்ணனின் கை பட்டு ஒரு மணி கழன்று கீழே விழந்தது. கீழே விழுந்த மிகவும்
பெரிய பாரமான மணி போரிட ஒன்றாக ஓடிக் கொண்டிருந்த ஆயிரம் வானரங்கள் மேல் விழுந்து அவர்களை மூடி விட்டது. திடீரென்று தங்கள் மேல் எதையோ வைத்து மூடிவிட்டதைப் போன்று உணர்ந்த வானரங்கள் பயந்து விட்டன. ஒரே இருட்டு. நல்ல வேளை மணி விழுந்த இடம் கரடு முரடாக இருந்ததால் சுவாசிக்க காற்று வந்தது.
சில மணி நேரங்கள் ஆன பிறகும் அவர்களைக் காப்பாற்ற யாரும் வரவில்லை. ஒரு வானரம் சொன்னது இந்த சுக்ரீவனை நம்பி வீணாகப் போய் விட்டோம். நாம் எல்லோரும் சாகப்போவது உறுதி என்றது. சுக்ரீவனும் அனுமனும் ஒன்றும் செய்யப் போவதில்லை நம்மைக் காப்பாற்ற நம் தலைவிதி இப்படியே கிடந்து சாக வேண்டியது தான்
சொன்னது இன்னொரு வானரம். ராமன் சொன்னாரே போருக்கு புறப்பட்டவர்களை எல்லாம் பத்திரமாக உயிரோடு திரும்ப கொண்டு வந்து சேர்ப்பது அவர் பொறுப்பு என்றாரே அவர் என்ன செய்தார் இன்னொரு வானரம் சொன்னது. இதைக் கேட்ட மற்ற வானரங்களும் ஆமாம் ஆமாம் என்றன. இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அவர்களில் ஒரு
மூத்த வானரம் எல்லோரையும் அதட்டியது. முதலில் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதை நிறுத்துங்கள். நான் சொன்னதை மட்டும் செய்யுங்கள். எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு ராமனை மனதில் நினைத்துக் கொண்டு ராம் ராம் ராம் என்று ஜெபம் செய்யுங்கள். ராமன் நம் எல்லோரையும் நிச்சயம் காப்பாற்றுவார் என்று
சொன்னது. எல்லா வானரங்களும் அப்படியே செய்தன. ராமரால் ராவணனும் கொல்லப் பட்டு போர் முடிந்தது. சீதையை மீட்டதும் அயோத்திக்கு திரும்ப ஆயுத்தமானார்கள். அப்போது ராமர் சுக்ரீவனிடம் நம் படையில் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்களா? பார்த்து எண்ணிக் கொண்டு வா என்றார். அதற்கு சுக்ரிவன், எண்ணி
விட்டேன். ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை என்றான். அதற்கு ராமர் மற்றும் ஒரு முறை சரியாக எண்ணி வா என்றார் ராமர். ராமனின் ஆணைப்படி மற்றொருமுறை எண்ணிவிட்டு வந்த சுக்ரீவன் சொன்னான். தங்கள் ஆணைப்படி இன்னொரு முறை எண்ணினேன். ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை என்றார். உடனே
ராமர் அனுமா நீயும் என்னுடன் வா. நாம் அந்த ஆயிரம் வானரங்களை தேடுவோம் என்றார் ராமர். அனுமனும் ராமரும் வானர்களைத் தேடி போர்க்களத்தில் நடந்தார்கள். பல இடங்களில் மடிந்து கிடந்த படை வீரர்கள் உடைந்து கிடந்த தேரின் பாகங்கள் அம்புகள் கேடயங்கள் என்று எல்லாவற்றையும் கிளறிப் பார்த்தார் அனுமன
சிங்கலிகர்கள் தென்படவில்லை. திடீரென்று ராமர் ஒரு இடத்தில் நின்றார். அனுமா அங்கே பார். ஒரு பெரிய மணி தெரிகிறது என்றார். ராமர் சொன்னது புரிந்து விட்டது அனுமனுக்கு. இருவரும் அந்த இடத்திற்கு விரைந்தார்கள். சஞ்சீவி பர்வதத்தையே தன் ஒரு கையால் தூக்கிக் கொண்டு பறந்த அனுமன் தன் வாலின்
நுனியை அந்த மணியின் வளையத்தில் நுழைத்து தூக்கினான். அனுமன் மணியைத் தாக்கியதும் அதன் கீழ் ஆயிரம் சிங்கலிகர்கள் கண்களை மூடிக்கொண்டு கைகூப்பியபடி ராமநாமம் ஜபித்துக் கொண்டிருந்தன. பல மணி நேரத்திற்குப் பின் வெளிச்சமும் காற்றும் பட்டதும் கண்களைத் திறந்தன வானரங்கள். எதிரே ஸ்ரீராமனும்
அனுமனும் நின்றிருந்தார்கள். வரிசையாக கை கூப்பியவாறு நின்று கொண்டிருந்த வானரங்கள் கண்ணீருடன் ராமரிடம் பிரபுவே என்ன நடந்தது என்று தெரியாமல் இருட்டில் பயந்து அடைந்து கிடந்த நாங்கள் ஏதேதோ தவறாகப் பேசி விட்டோம். உங்கள் மேலேயே சந்தேகப்பட்டு விட்டோம். எங்களை மன்னித்து அருள வேண்டும் என்ற
சொல்லி ஆயிரம் வானரங்களும் ராமனின் பாதங்களில் விழுந்து வணங்கின. அதைக்கேட்டு புன் முறுவல் செய்த ராமர் எல்லா வானரங்களையும் தன் கையால் தடவிக்கொடுத்தார். ராமர் அனுமனைப் பார்த்து சொன்னார் அனுமா வாலில் பளபளக்கும் மணியுடன் நீ இப்படி நிற்கும் காட்சி எவ்வளவு சுந்தரமாக இருக்கிறது தெரியுமா?
இந்தக் கோலத்தில் உன்னை தரிசிப்பவர்களுக்கு பக்தி, ஞானம், வைராக்கியம், எதிலும் வெற்றியும், கிட்டும் என்று வாழ்த்தினார். கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு இந்த மூன்று மாநிலங்களிலும் பல ஊர்களில் #வியாசராஜர் பிரதிஷ்டை செய்த 732 அனுமன் விக்கிரகங்களிலும் வாலில் மணி தொங்கி கொண்டிருக்கும்
ஸ்ரீராமஜெய ராம ஜெய ஜெய ராமா

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Feb 9
#ஸ்ரீமத்ராமாயணம் இந்துமத இதிகாசங்களில் பிரதானமான ஶ்ரீமத் இராமாயணத்தில் இடம்பெற்றுள்ள‍ சில முக்கியமானவர்களை (வால்மீகி, கம்பன் உட்பட) 69 பேரை பற்றிய சிறு விளக்கம்.
1. #அகல்யை
இராமாயண காலத்துக்கு முன் கௌதம முனிவரின் மனைவி இந்திரனால் அதிகாலை வேளையில் ஏமாற்றி வஞ்சிக்கபட்டு தன் நிலையை Image
இழந்ததால் கணவரான கௌதம முனிவர் கல்லாக போகுமாறு சாபம் இடப்பட்ட பின்னர், மிதிலாபுரி செல்லும் வழியில் ஶ்ரீராமரின் பாததுளி அருளால் கல்லான சாபம் நீங்கப் பெற்றவர். இதிகாசம் கூறும் பஞ்ச பதிவிரதைகளில் முதன்மையானவர்.
2. #அகத்தியர்
குள்ளமான முனிவர் சகல வேத அஸ்திர சாஸ்திரங்கள் அறிந்தவர்.
இவர் ஸ்ரீராமனுக்கு இராம இராவண யுத்த போர்க்களத்தில் #ஆதித்யஹ்ருதயம் உபதேசித்த மாமுனிவர்
3. #அகம்பனன்
இராவணனிடம் இராமனைப் பற்றி தவறாக கோள் சொன்னவன். அதை நம்பியே இராவணன் இராமரை குறைத்து மதிப்பிட்டு அரக்க வம்சமே அழிய காரணமானான். கோள் சொன்ன காரணம் ராமனின் அம்புக்கு முன்பு ஒருமுறை
Read 74 tweets
Feb 9
#மகாபெரியவா
கட்டுரையாளர்-வெ,ஸ்ரீராம்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் லைஃப்

விசேஷ நாள் ஒன்றில் ஸ்ரீமடத்திற்கு மகானை தரிசிக்க பெரும் கூட்டம் வந்திருந்தது. அப்போது அவர் சந்திரமௌலீஸ்வர பூஜை செய்து கொண்டிருந்ததால், வந்திருந்த பக்தர்கள் அனைவரும் அமைதியாக நின்றும் Image
அமர்ந்தும் ஜயஜய சங்கர கோஷத்தை மென்மையாக சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அப்போது, வந்திருந்த பக்தர் ஒருவர் பக்தர் கூட்டத்துக்கு இடையே புகுந்து, முன்னேறுவதற்காக முண்டியடித்துக் கொண்டிருந்தார். வழி விட மறுத்தவர்களுக்கும் அவருக்கும் இடையேலான பேச்சுதான் ரகளையாகிக் கொண்டிருந்தது.
மடத்துத் தொண்டர்கள் அவசரமாகச் சென்று அந்த நபரைத் தடுத்து, மகான் பூஜை செய்வதையும், அதன் பிறகு அவர் தரிசனம் தர அமரும்போது, வரிசையில்தான் செல்ல வேண்டும் என்று உறுதியாகச் சொன்னார்கள். வேறு வழியில்லாமல் முணுமுணுத்த படியே நின்று கொண்டிருந்தார், அந்த நபர். நேரம் நகர்ந்தது. பூஜையை
Read 13 tweets
Feb 9
#MahaPeriyava

Author: A Kanchi SriMatham attendant
Source: Maha Periyaval - Darisana Anubhavangal - Vol 3

That was the day of the transit of the planet Guru. A devotee came to Sri Maha Periyava. "According to my horoscope, Guru has arrived at the house of astronomical nativity Image
It seems that Shri Rama went to the forest because Guru came to his house of nativity in his horoscope at that time. So it is said that I will undergo heavy hardship. The astrologer says that I should do some shanti-pariharam (appeasement to get relief from planetary afflictions)
said the devotee.
Periyava replied, "There is indeed a view that Shri Rama was exiled to the forest when Guru reached his house of nativity. However, that is not right. Shri Rama was comfortable in the forest, doing tapas (penance), doing sambhashanam (conversing) with the
Read 6 tweets
Feb 8
#India_TheLeader New Zealand Prime Minister resigned from the post in tears. Reason, no money, no job, economy is like a boat with no direction. Australia is also in the same situation. Reserves are kept, somehow it is managed. Prime Minister of Britain resigned within a month of
taking charge. USA is in fear of the biggest economic recession. China is still reeling because of Corona. The whole European countries are scattered due to Russia Ukraine crisis. Most of our neighboring countries are bankrupt, Pakistan, Bangladesh, Afghanistan, Sri Lanka are all
completely bankrupt and are struggling to keep afloat. Inspite of all this, only India is getting stronger day by day without shaking. Dozens of missile tests, modernization of the army, fast trains, huge projects that will shake the world, many expressways, highways that are
Read 6 tweets
Feb 8
#ஶ்ரீவிஷ்ணுசஹஸ்ரநாமம் #அதன்பெருமை
‘சஹஸ்ரநாமம்' என்று சொன்னாலே அது விஷ்ணு சகஸ்ரநாமத்தைத் தான் குறிக்கும் என்னும் அளவிற்கு அது பெருமை உடையது. #ஆதிசங்கர_பகவத்பாதாள் காஷ்மீரில் யாத்திரை செய்து கொண்டு இருந்த போது, தம் சிஷ்யரை அழைத்து, புஸ்தக பாண்டாகாரத்திலிருந்து லலிதா சஹஸ்ரநாமத்தை Image
எடுத்து வரும்படி ஆக்ஞாபித்தார். அதற்கு பாஷ்யம் பண்ண வேண்டும் என்று அவருக்குத் திருவுள்ளம். அங்கே இருந்து போனார் சிஷ்யர். அவர் எடுத்து வந்து கொடுத்ததைப் பார்த்தால் அது விஷ்ணு சஹஸ்ரநாமம்.
“நான் இதைக் கேட்கலையே, நான் கேட்டது லலிதா சஹஸ்ரநாமம் அல்லவா. நீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கொண்டு
வந்திருக்கியே” என்று சிஷ்யரைத் திரும்பவும் அனுப்பினார். திரும்பவும் சிஷ்யர் எடுத்து வந்தது விஷ்ணு சஹஸ்ரநாமமாகவே இருந்தது! அப்போது ஆதிசங்கரர் சிஷ்யரைக் கேட்கிட்டார். “நான் சொல்வது என்ன, நீ செய்வது என்ன?”
“சுவாமி! நான் என்ன செய்வேன்? அங்கே போய் லலிதா ஸஹஸ்ரநாமத்தை எடுக்கணும்னு
Read 15 tweets
Feb 8
#ஐஸ்வர்யகணபதி_திருக்கோவில் அவஞ்சா, தெலுங்கானா.
ஐஸ்வர்ய கணபதி என்று பிரபலமாக அழைக்கப்படும் ஒரு பெரிய கிரானைட் கற்பாறை மீது செதுக்கப்பட்ட பாரதத்தின் மிக உயரமான ஒற்றைக்கல் விநாயக மூர்த்தி சிலை தெலுங்கானா மாநிலம் அவஞ்சாவில் அமைந்துள்ளது. இந்த கணநாதரின் உயரம் 30 அடி. இந்த Image
அரிய ஒற்றைக்கல் சிலை 11வது நூற்றாண்டினது என்று வரலாறு கூறுகிறது. குல்பர்காவினைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மேலை சாளுக்கிய மன்னர் தைலாம்பு என்பவரால் இந்த சிலை நிறுவப் பட்டது. அவஞ்சா கிராமத்தில் அமைந்திருந்த ஒற்றைப்பாறையை விநாயகரின் அழகிய சிலையாக மாற்ற சிறப்பு சிற்பி ஒருவர்
நியமிக்கப்பட்டு வேலை நடந்து கொண்டிருந்தபோது, அவருக்கு கல்லின் உள்ளிருந்து விநாயகர், நானே சுயம்புவாக வெளிப்படுவேன், இந்த கல்லை செதுக்க வேண்டாம் என்று உத்தரவு வந்துள்ளது. இதை அடுத்து அந்த சிற்பி வேலையை நிறுத்திவிட்டு மன்னரிடம் நடந்ததை கூறிவிட்டு தனது ஊருக்கு தனது குழுவினருடன்
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(