#வேதம்_விட்ட_கண்ணீர்
#ஶ்ரீ_ஞானானந்த_கிரி_மஹாஸ்வாமிகள் 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் அவதரித்து 20ஆம் நூற்றாண்டின் எழுபதுகள் வரை(சுமார் 120+ஆண்டுகள்) ஸ்தூலமாயும் தற்போது சூட்ஷுமமாயும் அருள்பாலிக்கும் மஹாபுருஷர். #நாமசங்கீர்த்தன ஸம்ப்ரதாயத்தை அனுஸரித்து. தம்மை பற்றி ஒருமுறை
குறிப்பிடுகையில், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி #ஸ்ரீ_பகவந்_நாம_போதேந்ர_ஸரஸ்வதி ஸ்வாமிகளை மூல குருவாகக் கொண்ட என்று அருளியவர். திருக்கோவிலூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் #ஊஞ்சலூர் என்னும் க்ஷேத்திரத்தில் வசித்து, தற்போது பிருந்தாவனராய் அருளுபவர.
இந்த கட்டுரை ஸ்ரீ ரமணி
அண்ணாவால், அவரது சொந்த அனுபவமாக எழுதப்பட்டு, சக்தி விகடனில் வெளி வந்தது. எழுத்தும் அவருடையதே.

பல வருடங்களுக்கு முனபு ஒரு ஞாயிற்றுக்கிழமை, திருவண்ணாமலையில் ஸ்ரீ அருணாசலேஸ்வரரைத் தரிசித்து விட்டு, திருக்கோயிலூர் ஸ்ரீ ஞானானந்த தபோவனத்திற்குச் சென்றேன். தபோவனத்தை அடைந்தபோது, காலை
10.30மணி. அன்று ஏகக் கூட்டம். சுமார் 100 கார்களுக்குக் குறையாமல் சாலை ஓரம் நின்றிருந்தன. தியான மண்டபத்தில், சாக்ஷாத் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி போன்று வீற்றிருந்தார் ஸ்ரீ ஞானானந்த குரு. ஒவ்வொருவராகத் தரிசித்து, ப்ரஸாதம் பெற்றுச் சென்று கொண்டிருந்தனர். பக்தர்களின் கேள்விகளுக்கு
சளைக்காமல் பதில் சொல்லி அனுப்பிக் கொண்டிருந்தது அந்த கருணைக்கடல். நான் ஒரு தூண் ஓரத்தில் பயபக்தியுடன் கைகூப்பி நின்றிருந்தேன். அருகில், பரம தேஜஸ்வியான நடுத்ததர வயது வைதீகர் ஒருவர் நின்றிருந்தார். அவரது திருவாக்கினின்று வெளிவந்த ஸ்ரீருத்ரம், கணீரென்று மண்டபம் முழுவதும்
வ்யாபித்ததது. அவரை உற்று நோக்கினேன். முகத்தில் வாட்டம்; கண்கள் பனித்திருந்தன. இதற்குள், எங்கள் இருவரையும் பார்த்துவிட்ட ஸ்வாமிகள், வைதீகரை மட்டும் சைகை காட்டி அழைத்தார். அருகில் சென்ற வைதீகர் சாஷ்டாங்கமாக ஸ்வாமிகளை
நமஸ்கரித்து, கைகட்டி நின்றார். அவரைக் கனிவுடன் ஏறிட்ட குருநாதர்,
"வேதம் எப்பவுமே கண்ணீர் விடப்படாது. தேசத்துக்கு சுபிக்ஷம் குறைஞ்சுடும். என்ன, புரியறதா?" என்றார். பிறகு, நம்ம வாக்குலேருந்து வந்த ஸ்ரீருத்ரம் தேவாமிர்தமா, ஸ்வர சுத்தமா இருந்தது. நாம ஒரு காரியம் பண்ணுவோமே. அங்கே, ஆஞ்சநேய ஸ்வாமி சந்நதியில் ஒக்காந்துண்டு ஸ்ரீருத்ரம், சமகம்,
புருஷஸூக்தம் எல்லாத்தையும் ஆத்மார்த்தமா சொல்லிட்டு வரலாமே?" என்றார் ஸ்வாமிகள்.
(ஸ்ரீ ஞானந்தகிரி மஹாகுரு, எப்போதுமே பிறரை விளிக்கும் போது, "நீ, நீங்கள், உனக்கு.....சொல், செய், பண்ணு " என்று கூறாது "நாம, நமக்கு, சொல்வோம், செய்வோம், பண்ணுவோம்"என்று தன்னிலைப் படுத்தியே கூறுவார்.)
"பரம பாக்கியம் ஸ்வாமி! அப்படியே பண்றேன்! என்ற வைதீகர், அனுமன் சன்னிதியை நோக்கி நகர்ந்தார். அடுத்து அடியேனை அழைத்த குருநாதர் "நாம எப்ப வந்தோம்?" அந்த வேதத்தோடு வந்திருக்கமா!?" என்று கேட்டார்.
"இல்லே குருதேவா! தனியாகத்தான்" என்று அடியேன் சொன்னதும் ஸ்வாமிகள் சிரித்தபடி. “சரி...சரி..
நாமளும் ஸ்ரீருத்ரம் தெரிஞ்சா சன்னதியில் சொல்லிட்டு வரலாமே ரொம்ப புண்ணியம்" என்றார்.
"உத்தரவுபடியே செய்கிறேன்!" என்று கூறி நகர்ந்தேன்."
மதியம் 2.00 மணி. தனது பிட்சையை (மதிய எளிய உணவு) பூர்த்தி செய்த பிறகு, மீண்டும் மண்டபத்தில் வந்து அமர்ந்தார் ஸ்ரீ குருநாதர். போஜனத்தை முடித்து
விட்டு அடியேனும் அந்த வைதீகரும் அங்கே வந்தோம். கூட்டம் அதிகமில்லை. வைதீகரை தனக்கு முன் அமரச் சொன்னார் ஸ்ரீ ஸ்வாமிகள். நானும் ஓரமாக நின்றேன். சிறிது நேரம் வைதீகரையே பார்த்துக்கொண்டிருந்த ஸ்வாமிகள், வயறார சாப்பிட்டமா? பதார்த்தமெல்லாம் ருசியாக இருந்ததா?" எனக்கேட்டார்.
வைதீகர்,
"ரொம்ப நன்னா இருந்தது ஸ்வாமி!" என்றதும் குருநாதர் முகத்தில் த்ருப்தி. பின், கனிவுடன் விசாரித்தார்: "நாம எந்தூர்லேந்து வர்ரோம்? பூர்வீகம் என்னவோ?"
"பூர்வீகம் உத்தரகோசமங்கை. எங்க கொள்ளுதாத்தா காலத்துலேயே தஞ்சாவூருக்கு வந்து செட்டில் ஆயிட்டதா சொல்லுவா" என்றார் வைதீகர்.
"நம்ம
நாமதேயம்?" - ஸ்வாமிகள் கேட்டார்.

"அடியேன் சீதாராம கனபாடிகள். தகப்பனார் சங்கர ராம கனபாடிகள். தாத்தா ஆத்மநாத ச்ரௌதிகள். இப்போ யாரும் இல்லே. அம்மாவும் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி போய்ட்டா என்றார் வைதீகர்.

"வேதத்தில் நம்ம என்ன சாகை(பிரிவு)?"

"யாஜூஷம் (யஜூர் வேதம்) ஸ்வாமி"
"கனாந்தம் (வேதத்தில் 'கனம்' முடிய) அத்யயனம் ஆகியிருக்காக்கும்?"

"ஆமாம் குருநாதா"

"நமக்கு என்ன வயசு?"

"நாற்பத்தி நாலாகிறது ஸ்வாமி!"

"சந்ததி...?"

"இருபது வயசுல விவாஹத்துக்கு ஒரு பொண்ணு இருக்கா! ஆனா விவாஹம் பண்ண முடியல..."

"ஏன்"

“கையில பணம்-காசு இல்லே குருநாதா. அந்த கஷ்டம்
தான் என்ன ரொம்பவே வாட்டறது"
என்ற சீதாராம கனபாடிகள் கேவிக் கேவி அழுதார். உடனே குருநாதர், "அடடா நாம எதுக்கும் கவலைப்பட வேண்டாம். எல்லாத்தையும் அந்தப் பாண்டுரங்கன் பார்த்துப்பான், என்ன?" என்று ஆறுதல்படுத்தினார்.
பிறகு, "ஆமாம், நம்ம குடும்பத்துக்குன்னு நெலபுலம் எதுவும் கிடையாதோ?"
ஸ்வாமிகள் கேட்டார்.
"எனக்குத் தெரிஞ்சு அப்படியெல்லாம் இருந்ததாத் தெரியல குருநாதா. ஆனா தாத்தா காலத்துல திருக்காட்டுப்பள்ளிலேந்து வண்டி வண்டியா நெல் வந்துண்டிருந்ததுன்னுஅம்மா சொல்லுவா" என்றார் சீதாராம கனபாடிகள்.

"நாம் எங்கே வேதாத்யயனம் பண்ணினோம்?"

"காசி க்ஷேத்ரத்தில் ஒரு யஜூர்
வேத பாடசாலைல குருநாதா. அப்பவே எனக்கு வைராக்யமா ஒண்ணு தோணித்து. பூரணமா அத்யயனம் பண்ணி முடிஞ்சதும், பூர்வம், அபரம்னு (சுப, அசுப காரியங்கள்) பண்ணி வைக்கப் போகாமல், நாம கத்துண்ட வேதத்தை நெறய பேருக்கு சொல்லித் தரணும்னு தீர்மானிச்சேன். காசியை விட்டுக் கிளம்பினதும் இந்த வைராக்யம்
மாறிடுத்துன்னா என்ன பண்றதுன்னு யோசிச்சு, கங்கையிலேயே பூர்வாபரம் பண்ணிவைக்கப் போக மாட்டேன்னு சத்ய சங்கல்பம் பண்ணிண்டு ஸ்நானம் பண்ணிட்டேன். ஊருக்கு வந்ததும் இதைக் கேட்டு எல்லோரும் என்னைக் கோவிச்சுண்டா. நான் கவலைப் படலே! ஆர்வத்தோடு வந்த பசங்களுக்கு சொல்லிக் கொடுத்தேன். ஊர் ஊராப்
பாராயணத்துக்குப் போவேன். அப்புறமா விவாஹமாகிப் பொண்ணும் போறந்துட்டா. ரொம்ப கஷ்ட ஜீவனம். பல நாள் நீராகாரத்த மட்டும் குடிச்சுட்டு, குடும்பம் பட்டினி கெடந்திருக்கு! கங்கையில பண்ணிண்ட சத்ய சங்கல்பத்தை மீறிடமால்னு கூட சில நேரங்கள்ல தோணும்! உடனேயே, 'சேச்சே கங்கைல பண்ணிண்ட சத்ய சங்கல்பம்
சாக்ஷாத் பார்வதி பரமேஸ்வராள்கிட்ட பண்ணிண்டதுன்னா, அதை மீறலாமோன்னு மனசை சமானப் படுத்திப்பேன். வைராக்கியமா இத்தனை வருஷம் ஒட்டிட்டேன். இப்போ பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணியாகணும்! எப்படின்னு தெரியலே"-கண் கலங்கினார் கனபாடிகள்.
ஸ்வாமிகள் நெகிழ்ந்து போனார். சிறிது நேரம் கனபாடிகளையே
பார்த்துககொண்டிருந்தர், "கனபாடிகளே! கவலையே வேண்டாம். எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்" என ஆசீர்வதித்துவிட்டு, அது சரி தபோவனத்துக்கு போய்ட்டு வரும் படியா யார் சொல்லி அனுப்பினா?" என சிரித்தபடி கேட்டார்.

"தஞ்சாவூர்ல வேங்கடசுப்பையர்னு ஸ்கூல் வாத்தியார் ஒருத்தர் அவர்தான், 'ஞானானந்த
தபோவனம் போய் சத்குருநாதனைப் பாருங்கோ. நிச்சயம் வழி பொறக்கும்னார். குருநாதனே சரணாகதின்னு வந்துட்டேன். காப்பாத்தணும்" என்று சாஷ்டாங்கமாகக் ஸ்வாமிகளின் பாதங்களில் விழுந்தார் கனபாடிகள்.

அர்த்த புஷ்டியோடு சிரித்த ஸ்வாமிகள் "நாம இன்னிக்கு தபோவனத்துல தங்கிட்டு, நாளைக்கு ஸ்வாமி உத்தரவு
கொடுத்ததும் புறப்படலாம்" என்றார். பிறகு அடியேனிடம், "நமக்கு மெட்ராஸ்ல ஒண்ணும் அவசர ஜோலி இல்லியே! நாமும் நாளைக்கு போகலாம்" என்று கூறி விட்டு எழுந்து உள்ளே சென்றார்.
மறுநாள் காலை 11.00மணி. தியான மண்டபத்துக்குள் பிரவேசித்தார் குருநாதர். அப்போது கூட்டமில்லை. அனுஷ்டானங்களை பூர்த்தி
செய்துவிட்டு, சீதாராம கனபாடிகளும் அங்கு வந்துசேர்ந்தார். அனைவரும் குருநாதரை நமஸ்கரித்து எழுந்தோம்.

அந்த நேரத்தில், வாசலில் இரண்டு பெரிய கார்கள் வந்து நின்றன. அவற்றிலிருந்து இறங்கிய நான்கைந்து பேர் உள்ளே வந்து. ஸ்வாமிகளை நமஸ்கரித்தனர். புன்முறுவல் பூத்தார் குருநாதர்.
அவர்களில் ஒருவர், உடன் வந்தவர்களிடம் ஏதோ ஜாடை காட்டினார். அவ்வளவுதான்! ஆறு பெரிய சாக்கு மூட்டைகள் கார்களிலிருந்து இறக்கப்பட்டு, ஸ்வாமிகள் முன் வைக்கப்பட்டன. அவற்றை உற்று நோக்கிய ஸ்வாமிகள் "இதெல்லாம் என்ன?" என்றுகேட்டார்.

வந்தவர்களில் ஒருவர், "அரிசி ஸ்வாமி நல்ல கிச்சிடி சம்பா
பச்சரிசி!" என்றார்.

"இதெல்லாம் எங்கே வெளஞ்சது? என்று கேட்டார் குருநாதர்.

"என்னோட வயல்லதான் ஸ்வாமி" என்று பெருமிதம் பொங்க கூறினார் அந்த ஆசாமி!

நம்மள இதுக்கு முன்னாடி பார்த்தது இல்லையே! நம்மமோட நாமதேயம்?" -கேட்டார் ஸ்வாமிகள்.

"கிருஷ்ணமூர்த்தி! ஆச்ரமத்தில் தினமும் அன்னதானம்
நடக்கறதுன்னு கேள்விப்பட்டேன். அதுக்கு கைங்கர்யமா இருக்கட்டுமேன்னுதான்”அவர் முடிப்பதற்குள் ஸ்வாமிகள் இடைமறித்தார்.

"அதிருக்கட்டும். எல்லா மூட்டையும் ஈர அரிசியா இருக்கும் போலிருக்கே?"

"இல்லையே ஸ்வாமி! நாலு நாள் நன்னா காய வெச்சு சுத்தம் பண்ணி எடுத்து வந்திருக்கேன்" என்று
பதட்டத்துடன் கூறினார் கிருஷ்ணமூர்த்தி. இதைக் கேட்டு சிரித்த ஸ்வாமிகள் "அப்படியா! மூட்டைகளை பிரிச்சுதான் பார்ப்போமே" என்று உத்தரவு கொடுத்தார்.

மூட்டைகள் பிரிக்கப்பட்டன. தன் தங்க கையால் ஒரு பிடி அரிசியை அள்ளினார் குருநாதர். அவர் சொன்னபடியே அதில் ஈரம் கசிந்தது. எல்லா மூட்டைகளும்
அவ்வாறே இருந்தன! குருநாதர் மிகவும் சாந்தமாக, "கிருஷ்ணமூர்த்தி! இந்த ஈரக் கசிவை சாதாரண ஜலம்னு நெனச்சுட வேண்டாம். இது வேதம் விட்ட கண்ணீர்" என்றார். பிறகு "நமக்குப் பூர்வீகம் திருக்காட்டுப்பள்ளிதானே?" என்று கேட்டார்.

கிருஷ்ணமூர்த்திக்கு வியப்பு! "ஆமாம் குருநாதா? என்றார்
ஆச்சரியத்துடன்.

அவரிடம் கனபாடிகளை சுட்டி காட்டிய ஸ்வாமிகள், "இதோ உட்கார்ந்திருக்காரே சீதாராம கனபாடிகள், இவரோட தாத்தாதான் உங்க க்ருஹத்துக்குப் பரம்ரை சாஸ்திரிகளா இருந்திருக்கார். வருஷா வருஷம் பத்து வண்டி நெல், வேத மான்யமா இவா குடும்பத்துக்குப் போயிண்டிருந்தது, உங்க தாத்தா
காலத்துல சாஸ்திரத்துக்குப் புறம்பான ஒரு விவாஹம் நடைபெற வேண்டிய நிர்பந்தம் உங்க குடும்பத்துக்கு! அதை நடத்திவைக்கும் படி இவரோட தாத்தாவை உங்க தாத்தா கேட்க, அவர் மறுத்துட்டார். 'மான்யத்தை நிறுத்திடுவேன்'னு சொல்லி இருக்கார் உங்க தாத்தா. 'எனக்கு மானம்தான் முக்கியம். மான்யமில்லே'னு
வந்துட்டார் இவரோட தாத்தா! அன்னிலேருந்து உபாத்யாயம் நின்னுடுத்து, மான்யமும் நின்னுடுத்து! அந்த வேதம் விட்டட கண்ணீர், சூட்சுமமா இன்னும் அந்த குறிப்பிட்ட வயல்ல விளையிற அரிசியில இருக்குங்கறது இப்ப புரியறதா?" என்றார்.

அனைவரும் பிரமிப்புடன் அமர்ந்திருந்தோம்! ஸ்வாமிகள் தொடர்ந்து
கேட்டார்: "சரி அந்த நெலத்துக்கு ஏதாவது பேர் உண்டா?"

"வேத விருத்தி" என்றார் கிருஷ்ணமூர்த்தி.

உடனே, "இப்ப புரியறதா? அது, வேதத்தை தொழிலா வெச்சிண்டு இருக்கறவாளுக்கு மான்யமா விடப்பட்ட நெலம்கிற விஷயம்.” என்று சிரித்தார் ஸ்வாமிகள்.

கிருஷ்ணமூர்த்தி எழுந்தார். ஸ்வாமிகளை சாஷ்டாங்கமாக
நமஸ்கரித்தவர், "குருதேவாஇந்த மான்ய நில விஷயம் சத்தியமா எனக்குதெரியாது. நீங்க என் கண்ணைத் திறந்துட்டேள். பணத்துக்கு கஷ்டம் இல்லை. திருச்சியில் ஜவுளி பிசினஸ் நன்னா நடக்கறது. மான்யமா விட்டுவிட்ட அந்த நிலத்தில் வெளஞ்ச அரிசியை, இதுவரைக்கும் என் பரம்பரை தான் சாப்பிட்டிருக்கு. இதுக்கு
பிராயச்சித்தமா இந்த சீதாராம கனபாடிகளுக்கு ஒரு காரியம் பண்ணப்போறேன்" என்றபடியே, தன் கைப்பையைத் திறந்து செக் புத்தகத்தை எடுத்தார். சீதாராம கனபாடிகளின் இன்ஷியலைக் கேட்டுஅதைப் பூர்த்தி செய்து, குருநாதரின் திருவடிகளில் சமர்ப்பித்தார். அதை ஏறிட்டுப் பார்க்காமலேயே ஸ்வாமிகள் சொன்னார்
"ஒண்ணரை வட்ச ருபாய்".

ஆனந்த கண்ணீர் உகுத்தார் சீதாராம கனபாடிகள்! அந்த ஆறு அரிசி மூட்டைகளையும் சீதாராம கனபாடிகள் இல்லத்திலேயே சேர்க்கும்படி கிருஷ்ணமூர்த்தியை பணித்துவிட்டு, அனைவரையும் ஆசீர்வதித்தபடி உள்ளே சென்றார் அந்த 'ப்ரத்யக்ஷ பாண்டுரங்கன்.'

ஸ்ரீ குருப்யோ நமஹ
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Feb 11
#ஆழ்வார்_அருளிச்செய்தது #நாலாயிர_திவ்யபிரபந்தம் #ஸ்ரீவைஷ்ணவம் #ஸ்ரீராமானுஜர்

#திருமங்கையாழ்வார் காலத்திற்குப் பின் பல காரணங்களால் ஆழ்வார்கள் பாசுரங்களை பாராயணம் செய்வதை மக்கள் கைவிட்டுவிட்டனர். சிதம்பரம் அருகிலுள்ள காட்டுமன்னார்கோயில்/காட்டுமன்னார்குடியில் #ஸ்ரீநாதமுனிகள் Image
என்னும் வைணவர் அவதரித்தார். அவர் அப்பதியின் ராஜகோபாலன் மீது ஆழ்ந்த பக்தி கொண்டு அப்பெருமாள் கோயில் கைங்கர்யங்களை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்து வந்தார். அவர் ஓரு நாள் திருக்குடந்தை என்னும் கும்பகோணம் சாரங்கபாணிப்பெருமாள் கோவில் சென்று மூலவர் ஆராவமுதப்பெருமாளை சேவித்துக் கொண்டிருந்த Image
பொழுது, தென் தமிழ்நாட்டிலிருந்து யாத்திரை வந்திருந்த சில வைணவர்கள்
ஆராவமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராயலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீரார்செந்நெல் கவரிவீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார்கோலம் திகழக்கிடந்தாய் கண்டேன் எம்மானே.
எனத்துவங்கி நம்மாழ்வார் திருக்குடந்தை Image
Read 38 tweets
Feb 11
#MahaPeriyava
The value of annadhanam
Author: Sri S. Ramani Anna (in Tamil)
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

It was the time when Maha Swamigal was staying in Kalavai, many years ago. It was a Sunday. A large crowd had gathered for darshan. Image
One by one the devotees prostrated to the sage, received His blessings and moved away. A middle-aged couple prostrated to Acharyal and stood up with folded palms. Keenly looking at them, Swamigal said, "Adede, who (is this) Palur Gopalan! You had come a year back. That time you
spoke about some problems. Are you fine now?" and laughed.
Palur Gopalan replied, "We are very fine Periyava. As directed by you, from the time we started feeding an athithi at noon time every day, only good things are happening, Periyava! Good harvest in (my) fields. The cows
Read 37 tweets
Feb 10
#ஸ்ரீதிரிநேத்ர_தசபுஜ_வீர_ஆஞ்சநேயர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அனந்த மங்கலம் கிராமத்தில ராஜகோபால சாமி கோவில் என அழைக்கப்படும் திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வடக்கு நோக்கிய சன்னதியில் நாற்கரங்களும் நெற்றிக்கண்ணும் உடைய திரிநேத்ர தசபுஜ வீர Image
ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். இந்த ஆஞ்சநேயர் சன்னதிக்கு முன்பு திருக்குளம் உள்ளது. ராஜகோபால சுவாமி கோவிலின் நுழைவு வாயிலில் மொட்டை கோபுரமே உள்ளது. நுழைவு வாயிலை அடுத்து பலிபீடம், கொடிமரம், கருடாழ்வார் சன்னதி ஆகியவை உள்ளன. தென்கிழக்கு மூலையில் அக்னி திசையில் திருமடப்பள்ளி உள்ளது. Image
தெற்கு பிரகாரத்தில் தாயார் சன்னதி உள்ளது. கருவறையில் செங்கமலவல்லித் தாயார் எழுந்தருளி உள்ளார். கருடாழ்வாரை தரிசித்து மூலவர் பெருமாள் சன்னதிக்கு சென்ற பின் மகா மண்டபத்தில் உள்ள திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயரை வணங்க வேண்டும். வடக்கு பிரகாரத்தில் அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் Image
Read 16 tweets
Feb 10
#கண்ணா #கிருஷ்ணா #முகுந்தா #கோவிந்தா
துவாபர யுகத்தில் திரும்பும் இடமெல்லாம் அதர்மம் தலைவிரித்தாடி கொண்டிருந்தது. நதி, மண், ஆகாயம் என திரும்பும் இடமெல்லாம் அக்கிரமம். மிதமிஞ்சி ஆடிய கம்சன் நரகாசுரனில் தொடங்கி துரியோதன கூட்டம் வரை ஆடி தீர்த்தார்கள். சொந்த மருமகனை கொல்ல துணிந்த ImageImageImageImage
கம்சன், பங்காளிகளை ஒழிக்க தேடிய துரியன், பெரும் அதர்மவாதிகள் சிசுபாலன், ஜராசந்தன் என கணக்கில் அடங்கா கெட்டவர்கள் மண்டி கிடந்தனர். இது போக அரக்க கூட்டம், பாம்பு கூட்டம் இன்னும் மானிடரை அறவழி வாழவே விடாத பெரும் அராஜக கும்பல்கள் ஆட்டம் போட்ட காலமாய் இருந்திருக்கின்றது.
யாருக்கும்
தெரியாமல் ஆனால் தெரிய வேண்டியோருக்கு தெரிந்தபடி சவால்விட்டு பிறந்தான் கண்ணன், பிறந்த நொடியில் இருந்து அவனுக்கும் அதர்மத்துக்குமான போர் தொடங்கியது. அவன் வாழ்வினை படித்தால், அந்த குழந்தையினை கொஞ்ச தோன்றும். அந்த வாலிபனை ரசிக்க தோன்றும், அவன் வீரத்தில் உடல் சிலிர்க்கும், அவன்
Read 20 tweets
Feb 10
#MahaPeriyava
Narrated by Balaji
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

During the period when Kanchi Mahan Paramacharya was on his tour of Maharashtra, a Jamindar (a rich landlord) was providing all the necessities and was looking after the Image
conveniences of Paramacharya’s stay there. The landlord had appointed a servant of his to be near the Paramacharya always to attend to His needs so that there were no problems with any of the arrangements. The young lad’s name was Pawar. The boy provided flawless service and
Periyava was very pleased with him. When the camp was nearing its end and Periyava was about to leave the place, He asked the landlord, “Can I take this boy with me?” The landlord was overjoyed! What a big honour it was that a servant of his was going to serve the Mahan! He
Read 26 tweets
Feb 9
#ஸ்ரீமத்ராமாயணம் இந்துமத இதிகாசங்களில் பிரதானமான ஶ்ரீமத் இராமாயணத்தில் இடம்பெற்றுள்ள‍ சில முக்கியமானவர்களை (வால்மீகி, கம்பன் உட்பட) 69 பேரை பற்றிய சிறு விளக்கம்.
1. #அகல்யை
இராமாயண காலத்துக்கு முன் கௌதம முனிவரின் மனைவி இந்திரனால் அதிகாலை வேளையில் ஏமாற்றி வஞ்சிக்கபட்டு தன் நிலையை
இழந்ததால் கணவரான கௌதம முனிவர் கல்லாக போகுமாறு சாபம் இடப்பட்ட பின்னர், மிதிலாபுரி செல்லும் வழியில் ஶ்ரீராமரின் பாததுளி அருளால் கல்லான சாபம் நீங்கப் பெற்றவர். இதிகாசம் கூறும் பஞ்ச பதிவிரதைகளில் முதன்மையானவர்.
2. #அகத்தியர்
குள்ளமான முனிவர் சகல வேத அஸ்திர சாஸ்திரங்கள் அறிந்தவர்.
இவர் ஸ்ரீராமனுக்கு இராம இராவண யுத்த போர்க்களத்தில் #ஆதித்யஹ்ருதயம் உபதேசித்த மாமுனிவர்
3. #அகம்பனன்
இராவணனிடம் இராமனைப் பற்றி தவறாக கோள் சொன்னவன். அதை நம்பியே இராவணன் இராமரை குறைத்து மதிப்பிட்டு அரக்க வம்சமே அழிய காரணமானான். கோள் சொன்ன காரணம் ராமனின் அம்புக்கு முன்பு ஒருமுறை
Read 75 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(