இவ்வளவு ஆணவத்துடன் நடந்துகொள்ளும் பார்ப்பனர்களின் உயர்சாதி எண்ணத்தை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
~பெரியார் (1/1)
சேரன்மாதேவியில், வ.வே.சு ஐயர் என்கிற தேச பக்தர், காந்திய நெறிமுறைப்படி குருகுலம் ஒன்றை நடத்தி வந்தார். இதற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ரூ.10,000 நிதி அளித்திருந்தது. பொதுமக்கள் சார்பிலும் நிதியுதவி அளிக்கப்பட்டது. பல்வேறு காங்கிரஸ் தலைவர்களின் பிள்ளைகள்,(1/2)
இந்தக் குருகுலத்தில் தங்கிப் படித்து வந்தனர். அவர்களில், முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் மகனும் ஒருவர்.இந்த குருகுலத்தில் பிராமண மாணவர்களுக்கு அறுசுவை உணவும், பிரமணரல்லாத மாணவர்களுக்கு சாதாரண உணவும் வழங்கப்பட்டது.(1/3)
தண்ணீர்ப் பானையும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒருநாள், ஓமந்தூராரின் மகன் பிராமணர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த பானையில் தண்ணீர் அருந்தியதைக் கண்ட வ.வே.சு ஐயர், அவனை ஓங்கி அறைந்துவிட்டார். இதை அவன் ஓமந்தூராரிடம் கூற, அவர் அவனை ஈரோட்டில் சென்று முறையிடச் சொன்னார்.(1/4)
தீண்டாமை கண்டு கடும் கோபமுற்ற ஈ.வெ.ரா, இது குறித்து விசாரிக்க 1925-ம் ஆண்டு ஜனவரி 17-ம் நாள், காங்கிரஸ் செயற்குழுவைக் கூட்டினார். குருகுலத்தில் அனைவருக்கும் சமமான உணவு வழங்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்துவிட்ட வ.வே.சு ஐயர்,(1/5)
“இங்கு இப்படித்தான் நடக்கும்” என்று சாதி ஆணவத்துடன் பதிலளித்தார். தகவல் காந்தியடிகள்வரை கொண்டு செல்லப்பட்டது. அவர், வழவழ கொழகொழ என்று சப்பைக் கட்டு கட்டினார். “குருகுலத்தை உருவாக்குவது கடினம். அதன் நிர்வாகத்தில் நாம் தலையிடக்கூடாது” என்றார் இராஜாஜி.
( 1/6)
இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, ஈ.வெ.ரா அணி வெற்றிபெற்றது. சமபந்தி கோரிக்கை ஏற்கப்படாததால், நிதியுதவி நிறுத்தப்பட்டது. இதன் பிறகு ஒருநாள், மகளை அழைத்துக்கொண்டு பாபநாசம் சென்ற வ.வே.சு ஐயர், அருவியில் தவறி விழுந்த மகளை காப்பாற்ற முயன்று, இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.(1/7)
குருகுலம் மூடப்பட்டது. சேரன்மாதேவியில் நடைபெற்ற நிகழ்வு ஈ.வெ.ரா.வின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வளவு ஆணவத்துடன் நடந்துகொள்ளும் பார்ப்பனர்களின் உயர்சாதி எண்ணத்தை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
அறிஞர் அண்ணாவை அரசியல் களத்தில் முழுக்க முழுக்க இழுத்துவிட்ட பெருமை இராஜாஜி அவர்களையே சாரும். சென்னை மாகாண முதலமைச்சராக பதவியேற்றிருந்த இராஜாஜி, 1937-ம் ஆண்டு தமிழ்நாட்டில் கட்டாய இந்தித் திணிப்பை நடைமுறைப்படுத்தியதுதான் இதற்குக் காரணம்.(1/1)
இந்தித் திணிப்பை எதிர்த்து, பெரியாரின் சுயமரியாதை இயக்கம் சார்பில் காஞ்சி மாநகரில் மாநாடு கூட்டப்பட்டது. பெரியார் பெரும்படையின் தளபதியாய் விளங்கிய அண்ணா தலைமையில், எண்ணற்ற இளைஞர்கள் பொழிப்போரில் இறங்கினர்.(1/2)
பெரியாருடன் பிணக்குற்று சிறிது காலம் விலகியிருந்த நீதிக்கட்சியும் மொழிப் போரில் ஈடுபட்டது. பெரியாரை, தங்கள் கட்சியின் தலைவராகவும் நியமித்தது. இப்போராட்டத்தில், பெரியார், அண்ணா உட்பட 1,200 பேர் கைது செய்யப்பட்டனர்.சிறைக்குச் செல்வது குறித்து,(1/3)
ஆண்டாளின் பக்தியை சிலாகித்து, ஜெ.பார்த்தசாரதி என்பவர் ‘திரிவேணி’ ஜூன் இதழில், ‘ஆண்டாளின் காதல் கதை’ (The Romance of(The Romance ofAndal) என்ற தலைப்பில் எழுதிய ஒரு கட்டுரைக்கு மறுப்பாக, இராஜ கோபாலாச்சாரியார் அதே பத்திரிகைக்கு இந்த மறுப்பை எழுதியிருக் கிறார்.(1/1)
இராஜகோபாலாச்சாரியார் அனுமதியோடு இது வெளியிடப்படு கிறது என்கின்ற முன்னுரையுடன் ‘திருவேணி’ இதழ் அந்தக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. இராஜ கோபாலாச்சாரியின் ஆங்கிலக் கட்டுரையையும் அதன் தமிழாக்கத்தையும் ‘நிமிர்வோம்’ பதிவு செய்கிறது.
(1/2)
“ஆண்டாள் உண்மையான பெண் அல்ல; அவள், பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளும் அல்ல. அது பெரியாழ்வாரின் கவித்துவ சிந்தனையில் உருவாக்கப்பட்ட கற்பனைப் பாத்திரம். தனது கற்பனையில் உருவான கவிதைகளை ஆண்டாளே பேசுகிறாள் என்று கற்பனையில் எழுதியிருக்கிறார்.(1/3)
ஶ்ரீ இராஜகோபாலாச்சாரியார் என்கிற ஓர் அய்யங்கார் பார்ப்பனர், தமிழ்நாடு முழுவதும் பெரிய சீர்திருத்தக்காரர் என்று பெயர் வாங்கியவர். தமிழ் மக்களையெல்லாம் அடியோடு ஏய்த்தவர். தனக்கு சாதி வித்தியாசம் இல்லை என்பதாகச் சொல்லிக் கொண்டும், 1/1
தன்னிடம் பார்ப்பனத்தன்மை இல்லை என்று சொல்லிக் கொண்டும், பார்ப்பனீயத்தை விட்டு வெகுகாலமாகிற்று என்று சொல்லிக் கொண்டும், சில பார்ப்பனரல்லாத வாலிபர்களை ஏமாற்றிக் கொண்டும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை ஒழித்து, பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதில்
1/2
இந்தியாவில் உள்ள பார்ப்பனரெல்லோரையும் விட அதிகமான கவலையும், அதற்கேற்ற சூழ்ச்சியும் கொண்டவர்." (குடியரசு 25.3.1928)
சென்ற வியாழக்கிழமை முதல் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் பற்றி எழுதி வருகிறேன்.
உண்மையை சொல்வதென்றால் எனக்கு இது ஒரு வெப் சீரிஸ் பார்ப்பது போல படு சுவாரசியமாக இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் இந்த நிகழ்வின் வழியாக படிக்க படிக்க நிறைய கற்றுக் கொள்கிறேன். 1/1
பங்குச்சந்தையை பற்றி தியரியாக படித்த பல விஷயங்கள் எனக்கு பிராக்டிக்கலாக நடந்து புரிய வைத்துக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு வாய்ப்பு நமக்கு அவ்வளவு எளிதில் கிடைக்காது.
இதற்கு முன்பு 1990களில் ஹர்ஷத் மேத்தா ஊழல் நடந்த போது நான் சிறுவன்.1/2
தினசரி செய்தித்தாள்களில் வந்து கொண்டிருந்தது.
அந்த நிகழ்வு தான் பங்குச்சந்தை என்றால் என்ன என்று எனக்கு முதன் முதலில் கற்றுக் கொடுத்தது.
2020களில் இருந்து அதானி நிறுவன பங்குகளை கூர்மையாக பார்த்து வருகிறேன்.
சீமானுக்கு திமுகவின் வரலாறு தெரியுமா? - கொதிக்கும் திமுக தொண்டர்
சென்னை மெரினா கடற்கரையில் வங்கக்கடலில் கலைஞரின் நினைவாக பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. கடற்கரை ஓரம் அமைக்கப்படுவதால் இந்திய ஒன்றிய அரசின் கடற்கரை ஓர பாதுகாப்பு அமைப்பு,
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் ஜனவரி 31 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதில் பலதரப்பினரும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு, பேனா சின்னத்தை வைத்தால் நானே உடைப்பேன் என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. சீமான் இந்த பேச்சு திமுகவினரிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.