கடன் நோய் வழக்குகள் தீர பயன்படுத்த வேண்டிய கிழமை ஓரை
கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்பது போல நமக்கு தீராத கடன் இருந்தால்,
அதை தீர்க்க செவ்வாய்கிழமை மிகவும் அற்புதகமாக உதவி செய்கிறது.
குடும்ப சூழ்நிலையின் பலர் பெரும்பாலும் சிறிய தொகையோ அல்லது பெரிய தொகையையோ கடன் வாங்கி இருந்தால், அதை அடைக்க முடியவில்லை என புலம்பித் தள்ளுவார்கள்.
இதற்கு, ஒரு எளிய பரிகாரம்.
கடன் அடைக்க தான் நாள் நட்சத்திரம், நேரம் உள்ளது.
நாள்பட்ட , கடன், நோய் மற்றும் வழக்கு இவற்றை அடைக்கவும்,
இவற்றிலிருந்து விடுபடவும் செவ்வாய்கிழமையில் செவ்வாய் ஓரையில் கடனை செலுத்துவது சிறப்பு ஆகும்.
இவ்வாறு செய்தால், கடன் விரைவில் தீரும்.
அதே போல, நோய் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை,
செவ்வாய் ஓரையில் வைத்தியம் பார்த்தால் விரைவில் நோய் குணமாகும்.
வழக்கு உள்ளவர்களும், இதேபோல, செவ்வாய்கிழமை, செவ்வாய் ஓரையில் அதற்கு தீர்வு காண முயன்றால் நமக்கு ஜெயம் உண்டாகும்.
மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்
ஹஸ்தம் நட்சத்திரத்தில் கடன் வாங்கினால் மேன் மேலும் கடன் பெருகி, பெரும் தொல்லையே உண்டாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
செவ்வாய், கிழமை முருக கடவுளுக்கு உகந்தது.
செவ்வாய் அன்று செவ்வாய் ஓரையான காலை 6 மணி முதல் 7 மணி வரை முருகனை மனம் உருகி வழிபடுவதும் சிறப்பு தரும்.
ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த இராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது.
அப்போது இராமர் இலட்சுமணனை பார்த்து இலட்சுமணா இராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன்.
நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும். நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா என்று கூறி அனுப்பினார்.
இலட்சுமணன் பவ்யமாக இராவணனின் காலடியில் நின்று இலங்கேஸ்வரா உன்னுடைய ஞானம் உன்னோடு அழிந்துவிடக்கூடாது.
நீ எனக்கு உபதேசிப்பதன் மூலம் அதை இந்த உலகம் அறிந்து பயன் பெறும் எனவே எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான்.
வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழி தோண்டும் போது சிவலிங்கம் ஒன்றைக் கண்டெடுத்தான்.
அதை அரசனிடம் எடுத்துச் சென்ற போது
”சுடுகாட்டில் கிடைத்ததை நீயே வைத்துக் கொள்..
சுடுகாட்டுச் சாம்பலை வைத்து அபிஷேகம் செய்”
என்று ஏளனமாக அரசன் கூறி விட்டான்.
இறை வழிபாடு என்றால் என்ன என்று தெரியாத வெட்டியானும் அரசனது வார்த்தைகள் ஏளனமானவை என்பதை அறியாமல், பிணம் எரித்த சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து தான் உண்ணும் பழைய உணவை படைத்து வழிபட்டான்.
ஒரு நாள் திடீரெனப் பெய்த மழையினால், சுடுகாட்டில் இருந்த சாம்பல் முழுவதும் கரைந்து விட்டது.
" சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யச் சாம்பல் இல்லையே " என வருந்திய அவனும் வறட்டிகளை அடுக்கித் தீயை மூட்டி விட்டுத் தனது மனைவியிடம் ” நான் இந்தத் தீயில் விழுகிறேன்.