#அனுமர்_தாகம்_தீர்த்த_அருள்குமரன்
கோயம்புத்தூர் அருகே அமைந்துள்ளது, #அனுவாவி மலை. இதன் அடிவாரத்தில் முருகப் பெருமானுக்கு திருத்தலம் ஒன்று அமைந்துள்ளது. வடக்கே குருவிருட்ச மலை, தெற்கே அனுவாவி மலை, மேற்கே கடலரசி மலை என்று மூன்று பக்கம் மலைகளால் சூழப்பட்ட திருக்கோவில் இது. மூர்த்தி,
தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளைக் கொண்டதாக இந்த ஆலயம் விளங்குகிறது. ராமாயண காலத்திலேயே முருகப்பெருமான் வழிபாடு இருந்ததை, இந்த ஆலயத்தின் தல புராணம் நமக்கு எடுத்துரைக்கிறது. இலங்கையை அரசாண்ட ராவணன், சீதையைக் கடத்திக் கொண்டு போய் சிறை வைத்திருந்தான். தனது மனைவியை மீட்பதற்காக,
ராவணனுடன் போர் புரிந்தார் ராமபிரான்.அவருக்கு பக்கபலமாக வானரப் படைகள் இருந்தன. ராவணப் படையோடு போரிட்ட வேளையில், ராவணனின் மகனால் விடப்பட நாகாஸ்திரம் தாக்கி லட்சுமணன் மூர்ச்சையாகிப் போனான். அவனைக் காப்பாற்ற வேண்டும் என்றால், சஞ்சீவி மலையில் உள்ள அரிய மூலிகைகள் தேவைப்பட்டது. அதைக்
கொண்டு வருவதற்காக, ஜாம்பவானால் அனுப்பி வைக்கப்பட்டார் அனுமன்.
மூலிகையை பறிக்க நேரம் ஆகும் என்பதால், மலையையே பெயர்த்து எடுத்துக் கொண்டு பறந்து வந்தார் அனுமன். வழியில் அவருக்கு தாகம் ஏற்பட்டது. அப்போது இங்கே அனுமன் இளைப்பாற, அவருக்கு இத்தல இறைவனான #முருகப்பெருமான் தன் வேல் கொண்டு
ஒரு சுனையை உண்டாக்கி, அனுமனின் தாகம் தீர்த்ததாக தலவரலாறு சொல்கிறது. அனுமன் தாகம் தீர்க்கப்பட்ட தீர்த்தம் என்பதால் இது #அனுமக்குமரர_தீர்த்தம் என்றும், இந்த இடத்திற்கு #அனுமார்வாவி என்றும் பெயர் வந்தது. அனுமார்வாவி என்பது தான், நாளடைவில் மருவி ‘அனுவாவி’ என்றானதாக சொல்கிறார்கள்.
அந்தக் காலத்தில் இம்மலை அடி வாரத்தில் இருந்த தாமரைத் தடாகம் என்ற ஊரில் இருந்த ஜமீன்தார் ஒருவர், மலைப்பாதை அமைத்து இந்தக் கோவிலுக்கு உற்சவ மூர்த்திகளை செய்து கொடுத்தார். இத்தலத்துக்கு கிழக்கேயுள்ள வடமதுரை என்னும் ஊரில் அமைந்த விருத்தேஸ்வரர் குளத்தை அடுத்து, ஒரு மரத்தின் வேர் இரு
கிளைகளாகப் பிரிந்து காணப்பட்டதாம். ஒரு பிரிவிலிருந்து வெண்ணிறப் பாலும், மற்றொன்றில் இருந்து சென்னிறப் பாலும் வடிவதைக் கண்டார் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அந்த வேரானது, அனுவாவியில் இருக்கும் தல விருட்சமான மாமரத்தின் மீது கொடியாகப் படர்ந்திருந்த தாவரத்தின் வேர் என்பதையும் கண்டறிந்தார்
#விண்ணாவரங்கொடி #விண்ணாடும்கொடி என்று பெயர் பெற்ற அக்கொடி, அனுவாவி தல விருட்சமான மாமரத்தில் படர்ந்து இருப்பதை இன்றும் பார்க்க முடியும். 1957-ம் ஆண்டு மழை வெள்ளத்தால் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தில், இங்கு சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்த இறைவனும், சில மரங்களும் காணாமல் போயின.
வெள்ளத்தின் உக்கிரத்தை வென்று நின்றது, தற்போதைய தலவிருட்சமான மாமரம் மட்டுமே. பின்னர் இறைவன் திருவருளால், தெய்வ உருவங்கள் கண்டு எடுக்கப்பட்டன.அதன் பின் புதிய கோவில் அமைக்கப்பட்டு 1969-ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்தக் கோவிலை அடைய 500 படிகளை ஏறிச் செல்ல வேண்டும். மலை
அடிவாரத்தில் இருந்து ஒரு கி.மீ.தூரம் மலை ஏறினால் முருகன் அருள் பாலிக்கும் ஆலயத்தை அடையலாம். மலைக்கோவிலுக்கு முன்பாக இடும்பன் சன்னிதி உள்ளது. கருவறையில் வள்ளி-தெய்வானையுடன் முருகப் பெருமான் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். முன் மண்டபத்தில் விநாயகரும், முருகனின் படைத்தளபதி
வீரபாகுவும் வீற்றிருக்கின்றனர்.
ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். நவக்கிரக சன்னிதியும் உள்ளது. அருணாசலேஸ்வரர் என்ற திருநாமத்துடன் சிவபெருமானும் அருள் புரிகிறார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் 5 செவ்வாய்க் கிழமைகள் தொடர்ந்து வந்து இந்த ஆலயத்தில் உள்ள முருகனை
வழிபடுகிறார்கள். இங்குள்ள தீர்த்தத்தில் சூரிய உதயத்திற்கு முன்பாக வந்து தொடர்ந்து சில நாட்கள் குளித்து வந்தால், மன நோய், தோல் நோய் அகலும் என்பது நம்பிக்கை. திருமணத் தடை உள்ளவர்கள் சுவாமிக்கு தாலி, வஸ்திரம் காணிக்கை செலுத்தி கல்யாண உற்சவம் நடத்துகின்றனர்.
அமைவிடம்:
கோயம்புத்தூர்
அருகே உள்ள உக்கடத்திற்கு அடுத்ததாக அனுவாவி கோவில் இருக்கிறது. அனுவாவி மலையில் இருந்து சுமார் 10 கி.மீ.தூரம் சென்றால் மருதமலை முருகன் கோவிலை அடையலாம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Feb 16
கிரேஸி மோகன் சகோதரர் மாது பாலாஜி அவரின் குழுவினர் பலரும் #சபரிமலை சென்ற அனுபவத்தை பதிவிட்டுள்ளார் மாது பாலாஜி.

“சபரிமலைக்கு 88ம் ஆண்டு சென்றேன். அதுதான் நான் முதன் முதலாகச் சென்றது. ஐயப்பனின் அருள் இல்லாமல் மலையேற முடியாது. எங்களுக்கு குரு சாமியாக இருந்தவர் என்னை விட இளம் வயது. Image
அவருக்கு அப்போது 25 வயது. எனக்கு 30 வயது. சபரிமலையில் படிபூஜை செய்வதற்கு ஐயாயிரம் ரூபாய் பணம் கட்டினோம். 89ம் ஆண்டு, படிபூஜை செய்வதற்கு எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. எங்கள் சித்தப்பாவுடன் கிரேஸி மோகன் சபரிமலைக்குச் சென்று கொண்டு இருந்தான். அந்த வருடம் எங்களுடன் வந்தான். படி பூஜை
என்பதும் அதற்கு பணம் கட்டியதும் பக்தியாகப் பார்க்கத் தெரியவில்லை. மாறாக அதனால் ஒரு மமதை வந்தது எங்களுக்கு. படி பூஜையோ நெய் அபிஷேகமோ தரிசனமோ எதுவாக இருந்தாலும் ஐயப்பன் நினைத்தால் தான் எதுவுமே நடக்கும். நாங்கள் விபூதி, சூடம் எல்லாம் எடுத்துச் செல்வோம். கோயிலில் சேர்ப்பித்து
Read 13 tweets
Feb 16
#MahaPeriyava
Source: Maha Periyavalh Virundhu by Raa. Ganapathi

Even during the 1920’s Paramacharya hosted a dinner for the Muslims, whose sense of unity and patriotism ran high in those days. Two hundred Muslim youths from an Islamic Youth Forum performed an exemplary service Image
in the Mahamaham festival of 1921 in Kumbakonam. Paramacharya, who was camping at Patteeswaram nearby, heard about it and sent some Matham officials to bring the Muslim youths to Him. The youths were very happy that Shankaracharya had called them to His presence. They stood
before Him showing utmost reverence. Maha Periyava praised their seva and heard the details about their Forum. He inquired their personal details such as native place, education, occupation and family of all the two hundred youths individually and made everyone of them immensely
Read 11 tweets
Feb 16
#குளிகை நாம் பஞ்சாங்கத்திலும் தினசரி காலண்டரிலும் குளிகை என்று குறிப்பிட்டு அன்னன்னிக்கான நேரம் சொல்லப்பட்டிருக்கும். குளிகை என்றால் என்ன?
இராவணனின் மனைவி மண்டோதரி, கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். எப்போது வேண்டும் ஆனாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் இராவணன் தன் Image
குல குருவான சுக்கிராச்சார்யாரைச் சந்தித்தான். யாராலும் வெல்ல முடியாத வீரமும், மிகுந்த அழகும், நிறைந்த அறிவும் கொண்ட மகனே தனக்குப் பிறக்க வேண்டும் என்று குலகுருவிடம் கேட்டுக் கொண்ட இராவணன், அதற்கு வழிமுறைகள் என்ன என்றும் அவரிடம் கேட்டான்.
அதற்குப் பதில் அளித்த சுக்கிராச்சாரியார்,
“கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் உனக்குப் பிள்ளை பிறந்தால், அந்தக் குழந்தை நீ விரும்பிய எல்லாச் சிறப்புகளும் கொண்டதாக இருக்கும்”என்று யோசனை கூறினார். உடனடியாக, நவக்கிரகங்கள் அனைத்தையும் சிறைப் பிடித்து, ஒரே அறைக்குள் அடைத்துவிட்டான் இராவணன். ஒரே அறையில்
Read 16 tweets
Feb 15
nationalreview.com/news/whered-yo… Elon Musk, exposed how Dr. Martin Kulldorff, a Harvard-educated epidemiologist, once tweeted, "COVID vaccines are important for high-risk people and their caretakers. Those with prior natural infection do not need it nor children."
The Twitter Files showed
that his tweet was deemed false information because it ran contrary to the CDC.
"Where did you go to medical school?" Mace asked Gadde, the former chief legal officer of Twitter.
Gadde and three other former Twitter executives testified before the hearing on Twitter’s censorship
of the New York Post's reporting on President Joe Biden's family’s business dealings ahead of the 2020 election, based on information obtained from the abandoned laptop of Biden's son, Hunter Biden.
"I did not go to medical school," Gadde said.
"I’m sorry?" Mace asked. Gadde
Read 4 tweets
Feb 15
#மகாபெரியவா
ரமணி அண்ணா அவர்களின் சொந்த அனுபவம்.
சென்னை நங்கநல்லூரில் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி விக்கிரகம் ஸ்தாபிக்கப்பட்டு, நிர்மாணப் பணிகள் நடைபெற்று வந்த சமயம். 1993-ம் வருட ஆரம்பம்.
தரிசனத்துக்காக தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சென்றனர். அப்போது ஒரு நாள் காஞ்சி மகா ஸ்வாமிகளைத்
தரிசித்து ஆசி பெறச் சென்றிருந்தேன். ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தேன். ஸ்வாமிகளுக்கு என்னையும் ஆஞ்சநேயர் ஆலய நிர்மாண விஷயமும் நன்றாகவே
தெரியும், ஆதலால், "க்ஷேமமா இரு. இப்பவே நெறய கூட்டம் வரதா இங்கே வரவாள்ளாம் சொல்லிண்டிருக்கா. பெரிய ஆஞ்சநேயரோன்னோ அதான் அப்படி ஒரு
ஆகர்ஷண சக்தி
அத்தனை இருக்கு!" என்று ஆசீர்வத்த்துவிட்டு
"பெரிய ஸ்வாமி ஆச்சே, அவர் சாப்பிடறதுக்கு தினமும் நெறய நிவேதனம் பண்ணணுமே?" என்று கவலையுடன் கேட்டார்.
உடனே நான், "தினமும் ஒரு மூட்டை அரிசி வடிச்சு நிவேதிக்கிறோம்" என்றேன்.
"சுத்த அன்னமாகவா?"
"இல்லே பெரியவா சித்ரான்னங்களா [கலந்த சாத வகைகள்]
Read 14 tweets
Feb 14
#MahaPeriyava Source: Sri Maha Periyava Mahimai Newsletter-Aug 10 2008
This experience of Sri Jagadeesha Bhat signifies that Sri Sri Sri Mahaperiyava is omnipresent and blessing all His devotees even today. Sri Maha Periyava had showered His blessings towards a Nataraja temple in
Satara, named as Uttara Chidambaram. Sri Maha Periyava also ordered Sri Jagadeesha Bhat to take care of the temple activities when the temple was about to be built completely. Sri Jagadeesha Bhat also went to Satara and took care of the temple activities with utmost sincerity as
per Sri Periyava’s orders. But he faced lot of difficulties there. When he could not manage, he returned to Kanchipuram. When Sri Maha Periyava enquired, he mentioned all the difficulties to Sri Periyava. But Sri Periyava, a karunamoorthy, after hearing all his problems, gave His
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(