இன்று #சிவராதிரி 18.02.23
சிவராத்திரியன்று இரவு இதை படித்தால் எல்லா வளமும் கிடைக்கும் என்று சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

ராமபிரான் வனவாசம் செய்த தண்டகாரண்யம் காட்டுக்குப் பக்கத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் கமாலபுரம் என்று ஓர் ஊர் இருந்தது. அங்கு இருந்த பொய்கையின் பெயர் கலசரஸ்.
அந்த குளத்தின் கரையில் நிறைய முனிவர்கள் ஆசிரமம் அமைத்து இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்களில் ஒருவர் வித்வஜிஹ்மர். அவரைப் பார்க்க கௌஸ்திமதி ரிஷி வந்தார். வித்வஜிஹ்மர் அவரை மனம் மகிழ வரவேற்று உபசரித்தார். “இந்தச் சின்ன வயதில் நீங்கள் துறவியாக இருப்பது கொஞ்சம் கூட சரியில்ல. குழந்தை
பாக்கியம் இல்லாதவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்காது என்பது உங்களுக்குத் தெரியாதா! முன்னோர்களோட சாபமும் வந்து சேரும். அதனால் தானே அகஸ்தியர் லோபமுத்திரையை உருவாக்கி மணந்து கொண்டார். அதனால் நீங்கள் என் மகள் வசுமதியை மணந்து கொள்ளுங்கள்” என்று வித்வஜிஹ்மர் இடம் சொன்னார்.
“சம்சாரங்கர பந்தத்துல அகப்பட்டு என்னோட வாழ்வை வீணாக்க நான் விரும்பலை. வீணாக ஏன் கவலைகளையும் துன்பங்களையும் நாமே வரவழைத்து அனுபவிக்க வேண்டும். குடும்பம் குழந்தை என்று கஷ்டப்படுவதை விரும்பாமல் தானே நானே என் அப்பாவான மரீச முனிவரை விட்டு விலகி வந்து தவம் செய்கிறேன். ஆனாலும் என் கர்மா
விடமாட்டேன் என்கிறது.” என்றார் வித்வஜிஹ்மர்.
“நமக்குத் தந்தை என்கிற அந்தஸ்தை ஒரு மகனால்தான் தர முடியும்! நம்மைப் படைத்து காத்துக் கொண்டிருக்கிற மும்மூர்த்திகளும் திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். உங்க பாட்டனார் பரத்வாஜ முனிவர் மணம் செய்யாமல் இருந்தால் நீங்கள் பிறந்திருக்க
முடியுமா? அதோட என் மகள் வசுமதியும் சாதாரண பெண் கிடையாது. கௌதம முனிவரின் பேரன் நான். சதாநந்த முனிவரின் பேத்தி வசுமதி. பதிவிரதைகளான பாஞ்சாலி, சீதை, அருந்ததி, அனுசுயாவுக்கு இணையானவள் என் மகள் வசுமதி.
அதனால் நீங்கள் என் மகளை மறுப்பு எதுவும் சொல்லாமல் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றார்.
அதற்கு, “மார்க்கண்டேயர், துர்வாசர், சனத்குமாரர்கள், கண்வ மகரிஷி, நாரதர், சுகர் ஆகியோர் திருமணம் செய்யாமல் வாழவில்லையா? அவர்கள் ஏன் திருமணம் செய்யாமல் வாழ்ந்தனர்? அதற்கான சரியான காரணத்தை நீங்கள் சொன்னால் நான் உங்கள் மகள் வசுமதியைக் திருமணம் செய்து கொள்கிறேன் என்றார் வித்வஜிஹ்மர்.
கௌஸ்திமதி முனிவர் தன் தவ வலிமையப் பயன்படுத்தி வைகுண்டத்துக்குப் போய் ஶ்ரீமன்நாராயணைப் பார்த்து ஜிஹ்மரின் கேள்வியைக் கேட்டார்.
அதற்கு நாராயணன் “நாரதனும் ஒருசமயம் என் மாயையினால் பல குழந்தைகளைப் பெற்றிருக்கிறான். தமயந்தி என்ற பெண்ணுடன் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்கான். ஸ்ரீமதியோட
சுயம்வரத்தில் ஆசையில்லாமலா கலந்து கொண்டான். அதே போல சனத்குமாரர்கள் வம்சத்தை விருத்தி செய்யாத காரணத்தால் பிரம்மனோட சாபத்தை பெற்றிருக்கிறார்கள். காத்யாயனர் காத்யாயினியையும், கணவர் சகுந்தலையையும் வளர்த்தார்கள். பெண் குழந்தைகளை வளர்ப்பது கஷ்டம் என்று அவர்கள் ஒருநாளும் நினைக்கவில்லை!
மார்க்கண்டேயரும் பூமாதேவியை வளர்த்து எனக்காகக் கொடுத்தார்.
துர்வாசரும் குந்திக்குக் குழந்தை பாக்கியத்துக்கான ஐந்து மந்திரங்களைத் தந்தாரே! அவர் என்ன பாவம் என்று நினைத்தாரா? மகாலட்சுமியோட கலைகள் பதினாறையும் பெண் வடிவமாக்கி இந்த முனிவர்களுக்குத் தரலாம் என்று பிரம்மா நினைத்தார்.
லட்சுமி இதை விரும்பாத காரணத்துனால நான் தான் அதைத் தடுத்துவிட்டேன். அதனால் பிரம்மா அவர்களுக்கு, ஞானத்தைப் போதித்து முனிவர்களாக்கி விட்டார் என்று போய் ஜிஹ்மரிடம் சொல். அவர் வசுமதியைக் திருமணம் செய்யச் சம்மதிப்பார் என்று சொல்லி அனுப்பினார். பூலோகத்துக்குத் திரும்பிய கௌஸ்திமதி,
அப்படியே சொல்லி ஜிஹ்மரிடம் அனுமதி வாங்கினார். வசுமதி திருமணம் சிறப்பாக நடந்தது. கௌஸ்திமதி ரிஷி, மகளை விட்டுப் பிரியும் போது பல்வேறு புத்திமதிகளைக் கூறினார். சீடர்களிடம் அன்னையாய் நடக்க வேண்டும். முனி பத்தினிகளிடம் தோழியாய்ப் பழக வேண்டும் என்று நிறைய புத்திமதிகளைக் கூறினார்.
வித்வஜிஹ்மரும் வசுமதியும் நன்றாக வாழ்ந்தார்கள். அந்த வசுமதி சிவராத்திரி விரதம் இருந்து சிவனை நேருக்கு நேராகப் பாத்திருக்கிறார்.
சிவராத்திரியன்று இரவு இந்த கதையை படித்தால் எல்லா வளமும் கிடைக்கும் என்று சிவபுராணத்தில் கூறப்பட்டு உள்ளது.
ஓம் நமசிவாய
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Feb 19
#சப்த_சிரஞ்ஜீவி மந்திரத்தைச் சொன்னால் தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம். நமக்கு நோய் என்றாலும் நம்மைச் சார்ந்தோருக்கு நோய் என்றாலும் அவர்களுக்காகவும், இந்த மந்திரத்தைச் சொல்லி வரலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். ஆன்மிகத்தில் ஏழு என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ImageImageImageImage
#சப்த என்றால் ஏழு என்று அர்த்தம். சப்த ரிஷிகள் என்று வணங்குகிறோம். சப்த கன்னியரை வணங்குகிறோம். சப்த சாகரம் என்று ஏழு கடல்களைச் சொல்லுகிறோம். திருமணச் சடங்கு வைபவத்தில் கூட, சப்தபதி எனும் சடங்கு நிகழ்த்தப்படுகிறது. சப்த ஸ்வரங்கள் என்கிறோம். அதே போல சப்த சிரஞ்ஜீவிகள் என்றும் சொல்ல ImageImageImage
பட்டிருக்கிறது. ஸ்ரீஅனுமன், விபீஷணர், மார்க்கண்டேயர், மகாபலி சக்கரவர்த்தி, வேத வியாசர், பரசுராமர், அஸ்வத்தாமன் எனும் ஏழு பேரையும் சப்த சிரஞ்ஜீவிகள் எனப் புராணம் விவரிக்கிறது. #சிரஞ்ஜீவிகள் என்றால் எப்போதும் இருப்பவர்கள், முடிவே இல்லாதவர்கள்,எல்லாக் காலத்திலும் இருப்பவர்கள் என்று
Read 9 tweets
Feb 19
#Unshakable_Faith_in_Almighty
This is a true story, incident that happened on 12th June, 2020 is being shared here. A local resident noticed a aged couple looking distressed, walking on the highway at noon on a hot summer day near Kopargaon, a small town in Maharashtra, Image
Ahmednagar district. As a matter of courtesy, he asked them for food which they politely declined. He, then offered them some money. This offer was also refused. Then, he inquired as to why they were walking like this at noon. The man, then started narrating their story. He said
that they had walked almost 2200 Km. till that day and were returning to their native place Dwarka in Gujarat. He further said that about a year back, he had become nearly blind. The expert doctors had given up all hopes and had refused to do any surgery. However, his mother had
Read 10 tweets
Feb 19
#MahaPeriyava
Source: Maha Periyaval Darisana Anubhavangal
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

Sri Maha Periyava was talking to the devotees on general topics. He said, "Our ancestors left behind capital in the form of land, money, orchards and Image
houses so that their descendants can continue to do many good deeds. They did so wishing us well and with the concern that their children should lead a blessed life. They desired that these good deeds be performed generation after generation from the profit accrued from the
capital. But, in many places, the charitable deeds that they wished to have performed or stated in their will, do not take place. The money that ought to be spent in charity is spent for the family. This is adharma. Because this is wrong, many families that enjoy the property of
Read 6 tweets
Feb 18
திருச்சி அடுத்த #பிச்சாண்டார்கோவிலில் #உத்தமர்_கோயில் உள்ளது. முப்பெருந்தேவியருடன் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள ஒரே ஆலயம் இதுதான். வேறெந்தக் கோயில்களிலும் இல்லாத தனிச்சிறப்பாக சப்த குருக்கள் எனப்படும் ஏழு குரு பகவான்களும் ஒருங்கே அமைந்துள்ளனர். இங்கு குருப்பெயர்ச்சி மற்றும் ImageImage
லட்சார்ச்சனையில் பங்கு கொள்வது எண்ணிலடங்கா நற்பலன்களை நல்கும். பிச்சாண்டார்கோவில் என்றழைக்கப்படும் இவ்வூரும், உத்தமர் கோயிலும் சைவ, வைணவ ஒருமைப் பாட்டுக்குச் சான்றாக விளங்குகின்றன.
வைணவ புராணத்தின்படி பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டிருந்த சிவபெருமான், பிச்சைக்காரன் Image
வடிவத்தில் வந்து அவரது தோஷம் நீங்கப் பெற்றதால், பிச்சாண்டார் கோவில் என்ற காரணப்பெயரை இவ்வூர் பெற்றது. சிவபெருமானின் புராண வரலாற்றின் படி அவருக்குரிய 63 மூர்த்தங்களில் (வடிவங்களில்) ‘பிச்சாடனர்’ அதிமுக்கியமானது. உலகில் நன்னெறி போதிக்க வந்த முனிவர்களும் அவர்தம் மனைவியரும் ImageImage
Read 17 tweets
Feb 18
#சந்தோஷம்
ஒரு ஸ்ரீ கிருஷ்ண பக்தி சொற்பொழிவு கூட்டத்தில் ஒரு பெண்மணியை பார்த்து சொற்பொழிவாளர் கேட்டார். “உங்கள் கணவர் உங்களை சந்தோஷமாக பார்த்து கொள்கிறாரா?"
அருகிலிருந்த கணவர் நிமிர்ந்து, நம்பிக்கையுடன் அமர்ந்தார். காரணம், மனைவி அவரிடம் எந்த புகாரும் சொன்னதே இல்லை. அவர்
சந்தோஷமாகவே இருந்தார். ஆனால், அந்த மனைவி தெளிவாக "இல்லை, என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவில்லை" என்றார். கணவர் அதிர்ந்தார். ஆனால், மனைவி தொடர்ந்தார். “என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்திருக்கவில்லை. என்னை சந்தோஷப்படுத்தியதும் இல்லை. ஆனால், நான் ஸ்ரீ கிருஷ்ணன் அருளால்
மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். நான் சந்தோஷமாக இருப்பது என்பது என் கணவரை சார்ந்தது இல்லை. என்னையே சார்ந்தது. நான் சந்தோஷமாக இருக்கிறேனா என்பது நான் சம்பந்தப்பட்ட விஷயம். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சந்தோஷமாக இருப்பது என்பது என் முடிவு. அடுத்தவரால் நான் சந்தோஷமாக இருப்பேன்
Read 8 tweets
Feb 18
#மகாபெரியவா
மார்ச் 20,2020,தினமலர்-திருப்பூர் கிருஷ்ணன்.

காஞ்சி மகாசுவாமிகளை வேத பண்டிதர்கள் சிலர் தரிசிக்க வந்தனர்.
இளைஞன் ஒருவனும் அவர்களுடன் வந்திருந்தான். அவன் முகம் சற்று வாட்டமாக இருந்தது. அனைவரும் வேதங்களைப் பாராயணம் செய்ய சுவாமிகள் ஆர்வமுடன் கேட்டார். ஆளுக்கொரு ஆரஞ்சுப்
பழம், குங்குமப் பிரசாதமும் கொடுத்து ஆசியளித்தார். அவர்கள் விடைபெற்ற போது இளைஞனிடம் “நீ மட்டும் இங்கேயிரு. பிறகு போகலாம்!” என சொன்னார். சிறிது நேரத்தில் பக்தர் ஒருவர் சுவாமிகளை தரிசிக்க வந்தார். சாஷ்டாங்கமாக வணங்கி எழுந்த அவர், 'சுவாமி! காதுவலியால் நான் மிகவும் சிரமப்பட்டேன்.
அறுவைச் சிகிச்சை செய்ய நேரிடும் என மருத்துவர்கள் எச்சரித்தனர். மருந்திலேயே குணம் பெற வேண்டும் என்றும், விருப்பம் நிறைவேறினால் கடுக்கன்களை தங்களிடம் சமர்ப்பிப்பதாக வேண்டிக் கொண்டேன். அடுத்த முறை பரிசோதித்த போது மருந்திலேயே குணப்படுத்தலாம் என மருத்துவரும் தெரிவித்தார். அதன்படி
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(