M.SivaRajan Profile picture
Feb 18 13 tweets 3 min read
#பஞ்சமுக_அர்ச்சனை

சிவனின் முக்கண்கள், முக்குணங்கள் மற்றும் மும்முனை கொண்ட திரிசூலத்தினையும் குறிக்கும் சிவனுக்குகந்த பஞ்ச பத்திரங்கள் (இலைகள்).

1. வில்வம்

2. நொச்சி

3. முட்கிளுவை

4. விளா

5. மாவிலங்கை

(6) மஹாவில்வம்.
இவை அனைத்தும் சிவனின் முக்கண்கள், முக்குணங்கள் மற்றும் மும்முனை கொண்ட திரிசூலத்தினையும் குறிக்கும் பத்திரங்கள்(இலைகள்)

பொதுவாக " வில்வம் ' இருக்கும் இடத்தில் செல்வம்
செழிக்கும்.
ஒரே ஒரு வில்வத்தை
உள்ளன்புடன் சிவபெருமானுக்குச்
சமர்ப்பித்தால் மூன்று பிறவிகளில் செய்த பாவம் தீரும் என்கிறது வில்வாஷ்டகம்.

கூவிளம் என்று இலக்கியங்களில் குறிக்கப் பெறுவது வில்வம்.
இதனுடன் இன்னும்
நான்கு இலைகளையும் சேர்த்து ஐந்து இலைகளைப் பஞ்ச வில்வம் என்பர்.

கூவிளம் [வில்வம்], நொச்சி, கிளுவை, மாவிலங்கம்,
விளா என்பவை அவை.
பஞ்சமுக அர்ச்சனை:

சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள் உண்டு.

கிழக்கில் உள்ள முகம் தத்புருஷம்.

தெற்கில் உள்ளது அகோரம்,

மேற்கில் உள்ளது சத்யோஜாதம்,

வடக்கில் உள்ளது வாமதேவம்.

மேலே ஒரு முகம் உண்டு.
அது ஈசானம் எனப்படும்.
இந்த ஐந்து முகங்களில் இருந்து கூவிளம் [வில்வம்], நொச்சி, கிளுவை, மாவிலங்கம், விளா என்பவை தோன்றின.

அது பஞ்ச வில்வங்களாயின என்பது வில்வ மகாத்மியத்தில் சொல்லப்பட்டுள்ள
செய்தியாகும்.
சிவபெருமானுக்கு விசேஷ அர்ச்சனை
பஞ்சமுக அர்ச்சனையாகும்.

ஒரே சமயத்தில் 5
சிவாச்சாரியர் 5 வகையான பஞ்ச வில்வங்களைக் கொண்டு பூஜிப்பர்.

ஒரு முகத்துக்கு ஒரு இலை.
இறுதியில் ஐந்து வகையான பிரசாதங்களை நிவேதனமாக வைத்து ஐந்து சிவாச்சாரியர்களும்
ஒரே சமயத்தில் தீபாராதனை செய்வர்.

இது பஞ்சமுக அர்ச்சனை எனப்படும்.

இந்த பஞ்சமுக அர்ச்சனை நிகழ்வில் ஐந்தடுக்கு தீபத்தில் தீப ஆராதனை செய்வார்கள்.
சிவலிங்க மூர்த்தியில் முகம்
இல்லாவிட்டாலும்
சிவப்பரம்பொருளின் ஐந்து
முகங்களை பாவனையால்
நோக்கி இந்த அர்ச்சனை செய்யப்படுகிறது.

இதைப்போலவே பஞ்சமுக
விநாயக மூர்த்திக்கும்
பஞ்சமுக அர்ச்சனை
செய்யப்படுகிறது.
பெரும்பாலான சிவாலயங்களில் வில்வ விருட்சமே தலவிருட்சமாக அமைந்திருக்கிறது.

ஒரே ஒரு வில்வ இலையை எடுத்து பக்தி சிரத்தையுடன் உட்கொள்ள, பிறவியின் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகிவிடும்.
திரிதளஞ்ச; திரிகுணாகாரம்;
திரிநேத்ரஞ்ச; திரியாயுதம்;
திரிஜன்ம பாப சம்ஹாரம்
ஏக பில்வம் சிவார்ப்பணம்

என்கிறது வில்வாஷடகம்.

பஞ்ச வில்வங்கள் எனப்படும் வில்வம், விளா, நொச்சி, கிளுவை, மாவிலங்கம் இவைகளை கொண்டு திங்கள் கிழமைகளில் சிவ பெருமானை அர்ச்சனையும் அபிஷேகமும் செய்வதால்
மூன்று ஜென்ம பாபங்கள் விலகுவதுடன் அனைத்து இடர்களினின்றும்
நம்மை காப்பார் என்று கூறப்படுகிறது.

பஞ்ச வில்வங்கள் எனப்படும் வில்வம், விளா, நொச்சி, கிளுவை, மாவிலங்கம் ஆகியவை.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Feb 18
#ஓம்_நமசிவாய

சிவபெருமானால் உபதேசிக்கபட்ட இந்ந அதியத்புதமான எட்டு நாமக்களை சொல்வதால் சிவபெருமானின் 1008 திருநாமங்களை சொன்ன பலன் கிட்டும் :

அது என்ன எட்டு நாமக்கள்????

மந்திரம் :

ஷிவோ மகேஷ்வரச்சைவ

ருத்ரோ விஷ்ணு பிதாமஹா :|

ஸம்ஸாரவைத்ய ஸர்வேஷ

பரமாத்மா ஸதாசிவ ll
பொருள்:

(1)சிவ : அனைத்து வித மங்களங்களையும் அளிப்பவன்.

(2)மகேஷ்வர : முடிவில்லா மஹா அண்டத்தை உடையவன்.

(3)ருத்ர : ருத்ரன் (சிவபெருமானின் வடிவங்களிள் ஒன்று).

(4)விஷ்ணு : எங்கும் நிறைந்து இருப்பவர்.
(5)பிதாமஹா : ப்ரஹம்மனின் வடிவாக இருப்பவரர்.

(6)ஸம்ஸாரவைத்ய : ஸம்ஸாரம் எனும் கொடிய நிலையிலிருந்து காப்பாற்றும் ஒரே வைத்தியர்.

(7)ஸர்வேஷ பரமாத்மா : அனைத்து கடவுள்களினுள் இருக்கும் பரமாத்மா.

(8)ஸதாசிவ : தென்னகச் சிவநெறியின் பரம்பொருளாகப் போற்றப்படுகின்ற சிவனின் வடிவம்.
Read 4 tweets
Feb 17
#ராமநாத_சுவாமி

தசரத சக்ரவர்த்தி தன் நோய் தீர, இத்தலத்து புண்ணிய தீர்த்தத்தில் நீராடி சனிபகவானை வழிபட்டிருக்கிறார்.

ராமபிரான் ராவணனை வதம் செய்து அயோத்தி திரும்புகையில் தந்தை வழிபட்ட இத்தலத்திற்கு வந்து புண்ணிய நீராடி,

மண்ணால் லிங்கம் செய்து வழிபட்டிருக்கிறார்.
கூடவே இவ்வாலய சிறப்புணர்ந்து அனுமனும் சிவ வழிபாடு செய்திருக்கிறார்.

அதற்கு சான்றாக இவ்வாலயத்தின் பிரகாரத்தில் அமைந்திருக்கிறது அனுமந்த லிங்கம்.

இவையெல்லாம் இவ்வாலயம் குறித்த புராணகாலச் சிறப்புகள்.
ராமநாத சுவாமியாய் சிவபெருமானும், பர்வதவர்த்தினியார் அம்பாளும் அலங்கரிக்கும் திருநரையூர் ஆலயத்தில் முக்கிய சிறப்புடன் விளங்குகிறார் சனீஸ்வரர். 

சனீஸ்வரர் தனது இரு மனைவிகள் மந்தா தேவி, ஜேஷ்டாதேவி ஆகியோருடன் இவ்வாயலத்தில் அருள்பாலிக்கிறார்.
Read 4 tweets
Feb 17
#மூன்று_முக_லிங்கம்

மூன்று முகங்களோடு காட்சி தரும் சிவலிங்கம்

சிவன் கோவில்களில் இருக்கும் சிவலிங்கம் ‘அருவுருவ’ வடிவம் ஆகும்.

அது தவிர ஆலயத்தில் நடராஜர், பிட்சாடனர் என பல்வேறு தோற்றத்தில் இறைவன் உருவ வடிவமாக திகழ்வார்.
ஆனால் திருவக்கரையில் உள்ள சந்திரமௌலீஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கம், மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனியாக காட்சி தருகிறது.

இது எந்த தலத்திலும் இல்லாத அபூர்வமான அமைப்பாகும்.
இதில் கிழக்கு முகமாக இருப்பது தத்புருஷ முகமாகவும்,

வடக்கு முகமாக இருப்பது வாமதேவ முகம் என்றும்,

தெற்கு நோக்கி இருப்பதை அகோர மூர்த்தியாகவும் பக்தர்கள் வணங்குகின்றனர்.

இந்த ஆலயத்தில் மேலும் ஒரு சிறப்புமிக்க சன்னிதி உள்ளது.
Read 6 tweets
Feb 17
#மஹா_சிவராத்திரி_பூஜை_பொருட்கள்

*#மஹா_சிவராத்திரி* (18.02.2023) அன்று சிவபெருமானின் பூஜைக்கு தேவைப்படும் பொருட்கள்..

இவற்றில் உங்களால் முடிந்த ஏதாவதொரு பொருளை சிவன் கோவிலுக்கு வாங்கி கொடுத்து சிவபெருமானின் அருள் பெறுக..
1. திரவிய பொடி

2. மஞ்சள் தூள்

3. அரிசி மாவு

4. நெல்லிமுல்லை பொடி

5. வில்வ பொடி

6. சந்தனம்

7. சந்தன பொடி

8. பன்னீர்

9. தேன்

10. பால்

11. திருநீறு
12. பத்தி

13. சூடம்

14 பழச்சாறு 5 வகை

15. பஞ்சாமிர்தம்

16. தேங்காய்

17. வாழைப்பழம்

18. வெற்றிலை, பாக்கு

19. ஸ்வாமிக்கு வஸ்திரம்

20. ஸ்வாமிக்கு மாலை

21. உதிரி பூக்கள்

22. வில்வ இலை
Read 4 tweets
Feb 17
#மஹா_சிவராத்திரி_சிறப்பு

மஹா சிவராத்திரியன்று சிவபெருமானுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும்.

ஒவ்வொரு ஜாமத்தின் போதும் வெவ்வேறு விதமான அர்ச்சனைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்படும்.

அதைப் பற்றி இங்கு காண்போம்.
💥முதல் கால பூஜை🌺 (6pm-9pm) :

முதல் கால பூஜை பிரம்மன், சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும்.

இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் உடலில் இருந்த பிரச்சனைகள் பூரணமாக குணமாகும்.
இந்தக்கால பூஜையில் சிவபெருமானுக்கு பஞ்ச கவ்வியத்தால் (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, சந்தனம் பூசி, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும்,
Read 15 tweets
Feb 16
#இறைவனின்_கருணை

எது நடந்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும்....

ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார். பெருக்கிச் சுத்தம் செய்வது தான் அவரது பணி.

அதைக் குறைவின்றி சிறப்பாகச் செய்து வந்தார்.

கோவில், விட்டால் வீடு என்று தான் வாழ்ந்து வந்தார். Image
இதைத் தவிர அவருக்கு வேறொன்றும் தெரியாது.

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை தரிசனம் செய்த வண்ணமிருந்தனர்.

இறைவன் இப்படி எல்லா நேரமும் நின்றுகொண்டே இருக்கிறானே…
அவனுக்கு சோர்வாக இருக்காதா?’...

என்று எண்ணிய அவர் ஒரு நாள், இறைவனிடம்
“எல்லா நேரமும் இப்படி நின்று கொண்டேயிருக்கிறாயே… உனக்குப் பதிலாக நான் வேண்டுமானால் ஒரு நாள் நிற்கிறேன்.

நீ சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறாயா?” என்று கள்ளம் கபடமில்லாமல் கேட்டார்.

இறைவன், எனக்கு நிற்பதில் ஒன்றும் பிரச்னையில்லை.

எனக்குப் பதிலாக நாளை ஒரு நாள் நீ நில்.
Read 25 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(