சகல தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய சிறந்த பரிகாலத்தலம்.
தமிழகத்தின் சிறந்த பரிகாரத்தலங்களில் இதுவும் ஒன்று. இக்கோவில் அருகே பரிகார பூஜைகள் தினந்தோறும் நடந்தபடி இருப்பதைக் காணலாம்.
1
தென் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகின்ற இத்தலம் ஈரோடு மாவட்டம் பவானியில், நான்கு மலைகளுக்கு இடையில், பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான கூடுதுறையில் இத்தலம் உள்ளது.
2
காவிரி, பவானி நதிகள் கூடும் சங்கமத் துறையில் அமைந்துள்ளதால் சிவனுக்கு சங்கமேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது. முனிவர் விஸ்வாமித்திரரால் காயத்ரி மந்திரம் சொல்லி பிரதிஷ்டை செய்யப்பட்டதால் காயத்ரி லிங்கேஸ்வரர் என்றும் அழைக்கபடுகிறார்.தமிழகத்தின் சிறந்த பரிகாரத்தலங்களில் இதுவும் ஒன்று. 3
பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள அனைத்து தோஷங்களுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது. இக்கோவில் அருகே பரிகார பூஜைகள் தினந்தோறும் நடந்தபடி இருப்பதைக் காணலாம். இந்த ஊரில் எரிக்கப்படும் சடலங்களின் மண்டை ஓடு வெடித்து சிதறுவதில்லையாம்.
4
இத்தலத்து மண்ணிற்குள் ஏராளமான சிவலிங்கங்கள் இருப்பதால் இவ்வாறு நடப்பதாக கூறப்படுகிறது. மரணத்தருவாயில் உள்ள இளைய தலைமுறையினருக்காக இங்கு பிரார்த்தித்தால் அவரது தலைவிதி மாறும் என்ற நம்பிக்கை உண்டு.
5
இத்தலத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரியை வணங்கிட திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், சகல நோய்களும் நீங்கும், குடும்ப பிரச்சனைகள் தீரும், தொழில் விருத்தி அடையும், அகால மரண தோஷம் நீங்கும். இக்கோவிலில் உள்ள அமிர்தலிங்கேஸ்வரர் சந்நிதி சிறப்புடையதாகும்.
6
லிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.
ஒரு மரத்தடி பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான். எதிரில் ஒரு தட்டு. அதில் சில நாணயங்கள். அந்தப் பக்கம் வருவோர் போவோரெல்லாம் அவனுக்கு பொருள், உணவு ஆகியவற்றை கொடுப்பார்கள். அவனுக்கு பக்கத்தில் ஒரு பிச்சைக்காரன் அமர்ந்திருப்பான். இருவரும் நண்பர்கள்.
ஒரு நாள் அவன் பாடிக்கொண்டிருந்தான். அவ்வழியே அந்த நாட்டு அரசன் சென்று கொண்டிருந்தான். பாட்டு அரசனை கவர்ந்தது.
நீ அருமையாக பாடுகிறாய். உனக்கு ஏதாவது பரிசளிக்க விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்!; என்றான் அரசன்.
மகிழ்ந்து போனான் பார்வையற்றவன்.
அரசே! நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆசை. அரசராகிய நீங்கள் சாப்பிடும் மதிய உணவை ஒரு நாளாவது நான் சாப்பிட வேண்டும். இந்த ஆசையை நிறைவேற்றுவீர்களா? என்று கேட்டான்.
சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது.
அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது. தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால்
குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் இந்த தொப்புள்கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தனது குழந்தை தும்மிய போது, அக்குழந்தையின் தாயானவள், குழந்தை தும்மத் தும்ம, "நூறு, ஆயிரம்..." ('ஆண்டு நோயற்று வாழ்க') என்று சொல்லி வாழ்த்துவது போல எம்பெருமாள் மதுரை ஸ்ரீகூடலழகரை 'பல்லாண்டு' பாடி வாழ்த்தியவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்த பெரியாழ்வார்!
2
மதுரையையாண்ட வல்லப தேவ பாண்டியனுக்கு, 'பரம்பொருள் யாது?' என்பதில் ஐயப்பாடு எழுகிறது. தனது ஐயப்பாட்டைத் தீர்த்து வைக்கும் ஆன்மீக குருவிற்கு பொற்கிழி தர ஒரு அறிவிப்பு செய்கிறான். அதற்கென்று பொற்கிழியை வித்வத் சபையில் கட்டித் தொங்க விடுகிறான்.
பூமியில் வாழும் மனிதனுக்கு அவனின் ஒவ்வொரு கால வயதிலும் பிறரின் உதவியில்லாமல் வாழவே முடியாது...
ஆனால்!, விலங்குகளுக்கு அப்படி அல்ல. பால் கறப்பு முடிந்து அடுத்த கன்றுக்கு பசு தயாரானதும் பசு வேறு, கன்று வேறு என்றாகி விடும். அதன் பிறகு கன்றின் வாழ்க்கை அதன் கையிலோ அல்லது அது எவரிடம் இருக்கிறதோ அவரின் கையிலோ மாறி விடும். இதே போலத்தான் ஒவ்வொரு விலங்கினங்களும் வாழ்கின்றன...
ஆனால்!, மனிதனை எடுத்துக் கொண்டால் குழந்தையாய் இருக்கும் பொழுதில் இருந்தே அம்மாவின் உதவி தேவை. அம்மாவிற்கு அப்பாவின் உதவி தேவை. அப்பாவிற்கு பிறரின் உதவி தேவை என்று உதவி உதவி என்று பிறரிடமிருந்து பெறுவது வாழ் நாள் முழுதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்...
கடவுள் எங்கு உள்ளார், எப்படி உள்ளார், என்ன செய்கிறார்?
#1 கடவுள் எங்கே இருக்கிறார்?
#2 எப்படி இருக்கிறார்?
#3 என்ன செய்து கொண்டு இருக்கிறார்?
கிருஷ்ண தேவராயர் கேட்ட கேள்விக்கு யாராலேயும் பதில் சொல்ல முடியவில்லை.
அப்போ தெனாலி ராமன் முன் வந்து, அரசே இதுக்கு நான் விடையளிக்கிறேன்ன்னு சொல்லிட்டு,
ஒரு மெழுகு வர்த்தியை ஏத்தி, அரசே இந்த மெழுகு வர்த்தியின் தீபம் எந்த திசையைக் காட்டுகிறதுன்னு கேட்டான்..?
அவர் அது மேல் நோக்கி காட்டுகிறது. எந்த திசையையும் குறிப்பிட்டுக் காட்டவில்லைன்னு சொன்னார். சரின்னு சொல்லிட்டு மெழுகுவர்த்தியை திருப்பி திருப்பி மேலும் கீழும், குறுக்கும் நெடுக்குமாக வைத்தான். அப்போதும் தீபம் மேல் நோக்கியே நின்றது.