M.SivaRajan Profile picture
Feb 26 22 tweets 4 min read
#அஞ்சலி_வரத_ஆஞ்சநேயர்

*மார்பில் சிவலிங்கம் தாங்கிய 16 அடி உயர ஆஞ்சநேயர்- துன்பங்களை தீர்க்கும் அஞ்சலி வரத ஆஞ்சநேயர்*

சனி ராகு போன்ற கிரகங்களால் வரும் துன்பங்களைத் தீர்த்து பணி உயர்வு திருமண வாய்ப்பு குழந்தைப்பேறு வழக்குகளில் வெற்றி போன்ற பல்வேறு நற் பயன்களை அருளுகிறார்.
*திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகிலுள்ள மேட்டுப்பட்டியில் கோவில் கொண்டிருக்கும் அஞ்சலிவரத ஆஞ்சநேயர்.*

அரசனான தசரதன் குழந்தைப்பேறு வேண்டிச் செய்த யாகத்தின் பிரசாதமான பாயாசத்தை ஒரு கருடன் கொத்திக் கொண்டு போனது.
அந்தப் பிரசாதம் அஞ்சனையின் கையில் போய் விழுந்தது.

அதைச் சாப்பிட்ட கேசரி அஞ்சனை தம்பதியினருக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திர நாளில் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

அவர்கள் அக்குழந்தைக்குச் சுந்தரன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
அந்தக் குழந்தைக்கு ஒருநாள் பசி எடுத்தபோது வானத்தில் தெரிந்த சூரியனைப் ‘பழம்’ என நினைத்து அதைச் சாப்பிட வானிற்குச் சென்றது.

வானம் நோக்கி வந்த குழந்தையை இந்திரன் தன்னிடமிருந்த ஆயுதத்தால் தடுத்து நிறுத்தினார்.
இதில் அந்தக் குழந்தையின் தாடை சற்று வளைந்ததால் ‘அனுமன்’ என்று அழைக்கப்பட்டான்.

அனுமன் என்பதற்கு ‘வளைந்த தாடையை உடையவன்’ என்று பொருள்.

வளர்ந்து பெரியவனான அனுமன் சீதையைத் தேடி வந்த ராமனிடம் அன்பு கொண்டான்.

அந்த அன்பு பக்தியாக மாறியது.
அனுமன் ராமனையே இறைவனாக வழிபடத் தொடங்கினான். இறைவன் மேலான பக்தியை மூன்று வகைகளாகக் குறிப்பிடுகின்றனர்.

இறைவன் நம் கண்களுக்கும் புலன்களுக்கும் எட்டாத நிலையில் எங்கோ இருந்து நம்மைக் காத்து அருள்கிறார்
என்கிற எண்ணத்துடன் இறைவனை நினைத்து வழிபடுவது முதல் வகை.

உலகிலுள்ள அனைத்து உயிரினங்களிலும் இறைவன் இருப்பதாக நினைத்து அவைகளிடம் அன்பு செலுத்தி இறைவனை வழிபடுவது இரண்டாவது வகை.
இறைவன் தன்னுள்ளேயே இருக்கிறார் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு தன்னுள்ளே வாழும் இறைவனிடம் சரணாகதி அடைந்து சேவை செய்வது மூன்றாவது வகை.

இதில் அனுமன் ராமனிடம் கொண்ட பக்தியும் வழிபாடும் மூன்றாவது வகையைச் சேர்ந்தது.
அனுமன் சீதையை மீட்பதற்காக முதலில் ராமனின் தூதுவனாகச் சென்றார்.

பின்னர் ராவணனை அழிப்பதற்கான போரில் ராமனுக்குத் துணையாகச் சென்றார்.

அனுமன் தனது ராம பக்தியினாலும் தன்னலமற்ற சேவையினாலும் ராமாயண இதிகாசத்தில் ராமன் சீதைக்கு அடுத்த நிலையில் உயர்ந்து நின்றார்.
தன்னலமற்ற சேவையினால் உயர்ந்து நின்ற அனுமனுக்கு சுசீந்திரம் நாமக்கல் நங்கநல்லூர் தெய்வச்செயல்புரம் குலசேகரன்கோட்டை பஞ்சவடி என்று பல ஊர்களில் மிக உயரமான சிலைகள் அமைக்கப்பட்டும் பல ஊர்களில் தனிக்கோவில்கள் அமைக்கப்பட்டும் வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இப்படி அமைக்கப்பட்ட கோவில்களில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டிக்கு அருகிலுள்ள மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோவிலும் ஒன்றாக இருக்கிறது.

பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அனுமன் இந்த இடத்தில் தான் தியான கோலத்தில் இருப்பதாகவும்
இங்கு தனக்குக் கோவில் ஒன்று அமைக்கும்படியும் கூறினார்.

இதைத் தொடர்ந்து அந்த பக்தரின் முயற்சியினால் அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டிருக்கிறது.

கோவிலில் மூலவரான ஆஞ்சநேயர் ‘வணங்கிய நிலையில் 16 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார்.
அவரது மார்பில் சிவலிங்கம் உள்ளது.

கால்களில் காலணி அணிந்து இடுப்பில் கத்தி சொருகியபடி கதாயுதத்துடன் போர்க்கோலத்தில் இருப்பது போன்று அவரது உருவம் வடிக்கப்பட்டிருக்கிறது.

நைமிசாரண்யத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய சாளக்கிராமத்தினால் செய்யப்பட்டது இந்தச் சிலை.
அனுமனின் வலது கண் சூரியன்; இடது கண் சந்திரன்.

இவரது கேசம் ஒளிவட்டம் போன்றும் வடிக்கப்பட்டுள்ளது.

சிவனைப் போன்று ஜடாமுடியுடன் காட்சியளிக்கும் இவரை வணங்கினால் கல்வி செல்வம் ஆகியவற்றுடன் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
அனுமனின் வால் காலை நோக்கிக் கீழாக அமைந்திருக்கிறது.

மேலும் இத்தல அனுமனை வழிபட்டால் சனி ராகு போன்ற கிரகங்களின் தோஷங்கள் நீங்கி நற்பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்தக் கோவிலின் விமானத்தில் சுந்தர காண்டத்தின் 64 காட்சிகள் சிற்பங்களாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஆஞ்சநேயர் போர்க் கோலத்தில் இருப்பதால் கோவிலின் மகாமண்டபத்தில் அவரது துணைவர்களான
நளன், நீலன், அங்கதன், குமுதன், சுக்கிரீவன், ஜாம்பவான், ஜிதன், ஜூவிதன் என எட்டு பேர்களின் உருவச்சிலைகளும் இடம் பெற்றிருக்கின்றன.

கோவில் வளாகத்தில் ராமர் சீதை லட்சுமணர் சிலைகளும் கோவிலின் சுற்றுப்பகுதியில் லட்சுமி சரஸ்வதி சிலைகளும் இருக்கின்றன.
ராமாயண காலத்தில் அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துச் செல்லும் போது இங்கு அவருடைய கால் பதிந்ததாகவும் சஞ்சீவி மலையிலிருந்து விழுந்த சிறுபகுதியே கோவிலின் எதிரில் உள்ள சிறு மலை என்றும் கூறுகின்றனர்.
ஆஞ்சநேயர் பிறந்த நட்சத்திரமான மூலம் நட்சத்திர நாட்களிலும் சனிக்கிழமைகளிலும் இங்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
தை மாதம் முதல் நாளில் 5008 கரும்புகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் சித்திரை மாதம் முதல் நாளில் பத்தாயிரம் கனிகளைக் கொண்டு அலங்காரம் ஆடி அமாவாசை அன்று தங்கக்காப்பு அலங்காரம்
புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் முதலாவது சனிக்கிழமை ராஜ அலங்காரம்,

இரண்டாவது சனிக்கிழமையில் செந்தூர அலங்காரம்,

மூன்றாவது சனிக்கிழமை பச்சை அலங்காரம்,

நான்காவது சனிக் கிழமை சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் அலங்காரம்,
ஐந்தாவது சனிக்கிழமை பத்மாசனத்தில் தியான அலங்காரம் என்று பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.

#அஞ்சலி_வரத_ஆஞ்சநேயர்

#சிவலிங்கம்_தாங்கிய_ஆஞ்சநேயர்

#ஜெய்_ஸ்ரீராம்

#ஜெய்_சீதாராம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Feb 28
#அர்ச்சனை

*அர்ச்சனையில் வெற்றிலை, தேங்காய், வாழைப்பழம் கண்டிப்பாக பயன்படுத்துவது ஏன்?*

கோவிலுக்கு கொண்டு செல்லும் பூஜை பொருட்களில் நமது வசதிக்கு ஏற்றபடி எத்தனையோ பொருட்களை எடுத்துச் செல்கிறோம். Image
இவற்றில் தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை - பாக்கிற்கு முக்கியமாக இடம் பெற்றிருக்கும்.

சுவாமிக்கு நைவேத்தியம் செய்வதற்கு எதுமே இல்லை என்றாலும் ஒரே ஒரு வாழைப்பழத்தை வைத்து பூஜையை நிறைவு செய்து விடலாம்.
அப்படி இந்த 3 பொருட்களுக்கு என்ன சிறப்பு உள்ளது, எதற்காக இந்த 3 பொருட்கள் கண்டிப்பாக அர்ச்சனைக்கு கொண்டு செல்கிறோம், இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
Read 15 tweets
Feb 27
கருட பட்சிகள் மோட்சம் பெற்ற நாச்சியார் கோவில் ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயம்:

கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோயிலில் ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. Image
இத்தலத்தில் உறைந்துள்ள ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் சமேத நறையூர் நம்பியான ஸ்ரீனிவாச பெருமாளையும் கஷ்டங்கள் தீர்க்கும், கவலைகள் போக்கும் கல் பகவானையும் சரணடைவோர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம்.

இந்த கோவிலில் மஹாவிஷ்ணு ஸ்ரீநிவாச பெருமாளாகவும், மஹாலஷ்மி நாச்சியாராகவும் கோயில் கொண்டுள்ளனர்.
Read 25 tweets
Feb 27
#ஜென்ம_நட்சத்திர_வழிபாடு

ஜெயம் தரும் ஜென்ம நட்சத்திர வழிபாடு :

ஒருவரது ஜென்ம  நட்சத்திர தினத்தன்று  திருமணம், சீமந்தம், காது குத்துதல், முடி இறக்குதல்,  எண்ணை குளியல்,  மருந்து சாப்பிடுவது,  அறுவை சிகிச்சை  செய்தல், தாம்பத்திய  உறவு போன்றவற்றை  வைத்துக் கொள்ளக் கூடாது.
அதற்கு பதில் இதர சுப  காரியங்கள் செய்ய வேண்டும்.

அதாவது குல தெய்வ வழிபாடு,இஷ்ட தெய்வ வழிபாடு,  அன்னதானம், தான தர்மம் செய்தல், பதவி  ஏற்பு, சொத்துக்கள் வாங்குதல் போன்றவற்றை 
செய்யலாம்.

குறிப்பாக ஆலய வழிபாட்டுக்குமிக உகந்த தினமாக 
ஜென்ம நட்சத்திர தினம்  குறிப்பிடப்பட்டுள்ளது.
வினை காரணமாக சிவபெருமானிடம் இருந்து 
பிரிந்து மாங்காட்டில் தவம் 
இருந்த பார்வதி தேவி, 

இறுதியில் தனது ஜென்ம  நட்சத்திர தினத்தன்று மணலால் சிவலிங்கம்  செய்து வழிபட்ட பிறகே  கணவருடன் சேர்ந்து  வாழும் நிலை உண்டானது.
Read 15 tweets
Feb 26
ராமனை காப்பாற்ற வேண்டிய ராமனை 14 ஆண்டு வனவாசம் அனுப்பிய கைகேயி.

தன் மகன் பரதன் உள்பட அனைவராலும் வெறுத்தொதுக்கப்பட்டு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பதினான்கு வருடங்கள் மனத்துயரை அனுபவித்தவள் கைகேயி.
இறுதியில் அனுமன் வாயிலாக அவளின் தியாக உள்ளம் வெளிப்படுகிறது.

இராவண வதம் முடிந்து சீதை, லக்ஷ்மணர், வானர, ராக்ஷசப் படைகளுடனும் அவர்களின் குடும்பத்தினருடனும் ஸ்ரீஇராமர் புஷ்பக விமானத்தில் அயோத்திக்குத் திரும்பும் வழியில்
பரத்வாஜ மஹாமுனியின் அழைப்பை ஏற்று அவருக்கு ஏற்கெனவே வாக்களித்தபடி இரவு அங்கு தங்கினார்.

விடிந்தால் பதினான்கு வருடங்கள் முடிந்த நிலையில் பரதனும், சத்ருக்னனும் அக்னிப்பிரவேசம் செய்யக்கூடும் என்பதால் அவர்களைத் தடுத்து நிறுத்தி,
Read 21 tweets
Feb 25
வேலையின்மைக்கு தீர்வு தரும் பரிகாரம் !!!

வேலையில்லாமல் அவதிப்படுபவர்கள் சூரிய பகவானை தினமும் துதித்து வந்தால் விரைவில் நல்ல பலனை அடையலாம்.

#பரிகாரம் :

ஒரு வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை சூரியோதய வேளையில் ஒரு கிண்ணம் அல்லது அகன்ற பாத்திரத்தில் சுத்தமான நீர் எடுத்துக் கொண்டு
சூரிய வெளிச்சம் தன் மேல் படும்படிக் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ளவும்.

அந்தப் பாத்திரத்தில் தெரியும் தன் முகத்தைப் பார்த்தபடியே "#ஓம்_ஹ்ரீம்_சூர்யாய_நமஹ" என்று 108 தடவை ஜெபிக்கவும்.

ஜபத்திற்கு எந்த மாலையையும் பயன்படுத்தலாம்.
அதன் பின்னர் வாழ்வில் எல்லா நிலைகளிலும் உயர அருள் செய்யுமாறு சூரிய பகவானை வேண்டிய பின் அந்த நீரை ஏதேனும் மரம் அல்லது செடியின் வேர் பாகத்தில் ஊற்றி விடவும். (அரச மர வேரில் ஊற்றினால் மிகவும் சிறப்பு).
Read 4 tweets
Feb 25
#அர்ச்சனை

இறைவனுக்கு செய்யப்படும் பதினாறு வகை உபசாரங்களுள், அர்ச்சனையே முக்கியத்துவம் பெறுகிறது.

அர்ச்சனை என்பது பக்தர்கள் அவர்களின் வேண்டுதலை கடவுளிடம் எடுத்துரைப்பது ஆகும்.
பொதுவாக கோயிலிற்கு செல்லும் பலர் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயரையும் கூறி அர்ச்சனை செய்வர்.

இன்னும் சிலர் கடவுளின் பெயரில் அர்ச்சனை செய்வர்.

கடவுளை மகிழ்விக்க மந்திரங்களை ஓதி அந்த சமயத்தில் நாம் அவரை மனதில் நிலை நிறுத்தி நம்முடைய குறைகளை அவரிடம் கூறுவதும்,
அவர் செய்த அனைத்திற்கும் நன்றி தெரிவிப்பதும் தான் அர்ச்சனை செய்வதன் தாத்பரியம்.

நாம் சில வேண்டுதல்களோடு கோயிலிற்கு செல்லும் சமயங்களில் நமது பெயரில் அர்ச்சனை செய்து அவரிடம் மன்றாடி வேண்டிக்கொள்வது தான் முறை.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(