கருட பட்சிகள் மோட்சம் பெற்ற நாச்சியார் கோவில் ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயம்:
கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோயிலில் ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயில் உள்ளது.
இத்தலத்தில் உறைந்துள்ள ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் சமேத நறையூர் நம்பியான ஸ்ரீனிவாச பெருமாளையும் கஷ்டங்கள் தீர்க்கும், கவலைகள் போக்கும் கல் பகவானையும் சரணடைவோர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம்.
இந்த கோவிலில் மஹாவிஷ்ணு ஸ்ரீநிவாச பெருமாளாகவும், மஹாலஷ்மி நாச்சியாராகவும் கோயில் கொண்டுள்ளனர்.
பழங்கால சிறப்பங்கள் மற்றும் கோவில்களை நினைவு கூறும் வகையில் உள்ளது நாச்சியார் கோவில் ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயம்.
கோவிலின் வரலாறு:
கோச் செங்கணான் என்ற சோழ மன்னன் சிவனுக்கு எழுபது கோயில்கள் கட்டினான் என்றும் விஷ்ணுவுக்காகக் கட்டியது
திருநறையூரில் உள்ள திருநறையூர் நம்பி திருக்கோவில் மட்டுமே என்றும் அறியப்படுகிறது.
சோழ மன்னன் கோச் செங்கணான் கட்டிய திருக்கோயில் என்பதைத் தன் பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார் திருமங்கையாழ்வார்.
கோவில் கோபுரம்:
இத்திருக்கோயில் கோபுரம் ஐந்து அடுக்கு கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
இத்திருக்கோவில் ஸ்தலபுராணம் பெண்ணுக்கு முன்னுரிமை தந்த பெருமாளின் பெருமையைக் குறிக்கிறது.
மஹாலஷ்மி தாயார் திருநறையூரில் வகுளா தேவி நாச்சியாராக வளர்ந்துவந்ததால், மகரிஷி மேதவி விருப்பத்திற் கிணங்க நாச்சியார் கோயிலாக இவ்வூரின் பெயர் மாறியது என்பது புராண கதை.
மகரிஷி கையில் கிடைத்த சிலைகள்:
மேதாவி மகரிஷி முக்காலத்தில் இவ்விடத்தில் தவமியற்றி வந்தார்.
வழக்கம் போல் ஓர் நாள் நதியில் புண்ணிய நீராடினார்.
அப்பொழுது, ஒருபுறம் சக்கரத்தாழ்வாரும் மறுபுறம் யோக நரசிம்மருமான சிலாரூபம் அவர் கைகளில் சிக்கியது.
அந்தக் கணம் ஓர் அசரீரி இவ்விக்கிரத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்து வருமாறு கூற அவ்வண்ணமே அவரும் செய்து வந்தார்.
மகரிஷியிடம் வளர்ந்த மகாலட்சுமி:
இவ்விடத்தில் வந்து தங்கி வளர அன்னை மஹாலஷ்சுமி விரும்பினார்.
எனவே வகுள மரத்தடியில் அமர்ந்து தவமியற்றிக் கொண்டிருந்த இம்மகரிஷி முன் சிறுமியாகத் தோன்றித் தன்னை அவர் பொறுப்பில் வளர்த்து வருமாறு வேண்டினாள்.
உள்ளம் மகிழ்ந்த மகரிஷியும் அவ்வாறே வகுளா தேவி நாச்சியார் எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தார்.
தாயாரும் இந்நிலவுலக வழக்கப்படி திருமணப் பருவ வயதை அடைந்தார்.
பெருமாளின் விருப்பம்:
அந்த நேரத்தில் கருடன் மீதேறி தாயாரைத் தேடி வந்தார் பெருமாள்.
தனக்கு தாயாரை மணமுடித்துத் தருமாறு மகரிஷியிடம் வேண்டினார்.
அதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதித்த மகரிஷியோ, மணமுடித்து தாயாரும் பெருமாளுமாக இங்கேயே தங்கி விட வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்தார்.
மகாலட்சுமியின் திருமணம்:
அவை வகுளா தேவியின் சொல் கேட்டு நடக்க வேண்டும், அவளுக்கே அனைத்திலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மேலும் பல நிபந்தனைகளை விதித்தார் முனிவர்.
அவற்றை ஏற்றார் மகாவிஷ்ணு.
தாயார் பெயரிலேயே இத்தலம் நாச்சியார் கோயில் எனப் பெயர் பெற்றது.
பெண் பெருமை போற்றும் நாச்சியார் கோவில்:
பெருமாள் தலங்கள் அனைத்திலும் பெருமாளுக்கே முன்னுரிமையும், முக்கியத்துவமும் அளிக்கபடுகிறது.
ஆனால் இங்கு பெண் தெய்வமான தாயாருக்கே முன்னுரிமை என்பதைக் காட்டும் வண்ணம் இப்பெயர் அமைந்துள்ளது.
அது மட்டுமின்றி இங்கு தாயார் முன்னே செல்ல பெருமாள் தாயார் பின்னே சென்று எழுந்தருளுவது, பெண்ணுக்கு முன்னுரிமை தருவதைக் குறிப்பிட்டு உணர்த்துகிறது.
கல் கருடன் ஊர்வலம்:
கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளியதை அடுத்து விசேஷ கல் கருடன் மூலவராகவும், உற்சவராகவும் இங்கு காட்சி அளிக்கிறார்.
இந்த திருத்தலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது கல் கருட சேவை.
மார்கழி மற்றும் பங்குனிகளில் மிகவும் சிறப்பாக இருக்கும்.
கல் கருடன் மொத்தம் நான்கு டன் எடையுடன் இருக்கும். நான்கு டன் எடையுள்ள கருடரை வருடாவருடம் தூக்கி சிறப்பிப்பது இந்த விழா ஆகும்.
நாகதோஷம், சகல தோஷம், எல்லா விதமான மன நோய்களும் விலக நாச்சியார் கோவிலில் உள்ள கல் கருடன், சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டு வரலாம்.
தோஷம் நீக்கும் கல்கருடன்:
நாச்சியார் கோவிலில் உள்ள கல்கருடன் உடலில் ஒன்பது இடங்களில் நாகர் உருவம் அமைந்துள்ளது.
இவருக்கு பூஜை செய்தால் நாகதோஷம் நீங்கும்.
இந்த கருடனுக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புணுகுசட்டம், முதலியவற்றை வாழைச்சாற்றில் கலந்து
இவரது திருமேனியில் சாற்றுவோர் எல்லா இஷ்ட சித்திகளையும் பெறுவர்.
சுமங்கலி பாக்கியம்:
ஆடி மாதத்தில் வரும் சுக்ல பஞ்சமி திதியில் வணங்குபவர்களுக்கு குழந்தை பாக்கியமும், கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவனும் கிடைப்பார்.
திருமணமான பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.
கருடனின் திரு நட்சத்திரமான சுவாதி அன்று, இங்குள்ள கல் கருடனுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
சிரவண தினத்தில் மோட்சம்:
இக்கோவில் நந்தவனத்தில் இரண்டு கருட பட்சிகள் வசித்து வந்தன.
தினமும் கோவில் பூஜை நேரத்தில் இக்கருட பட்சிகள் பெருமாள், தாயார், கருடன் பூஜை முடியும் வரை கோவிலிலேயே பிரகாரத்தின் சுவர்கள் மீது அமர்ந்திருந்து பூஜை முடிந்தவுடன் சென்றுவிடும்.
1999 ஜனவரி 18ஆம் தேதி காலை பூஜைக்கு இவ்விரு பட்சிகள் வரவில்லை. பதைத்துப்போன அர்ச்சகர்கள், பக்தர்கள் கருட பட்சிகளை தேடிச் சென்ற பொழுது கோவில் தல விருட்சமான மகிழ மரத்திற்கு கீழே இவ்விரு கருட பட்சிகளும் ஒன்றை அணைத்தவாறு
பகவானுக்கு உகந்த தினமான சிரவண தினத்தன்று மோட்சம் அடைந்தன.
இதனை சிறப்பிக்க தனி சன்னதி வைத்து வழிபட்டு வருகின்றனர்.
எங்கு எப்படி செல்வது:
கும்பகோணத்தில் இருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.
கும்பகோணத்தில் இருந்து நிறைய பேருந்துகள் உள்ளது.
கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் நாச்சியார்கோவில் உள்ளது.
பெருமாளை தரிசிக்கும் நேரம்:
இந்த திருக்கோவில் காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் எட்டு மணி வரையிலும் உண்டு.
விஷேச தினங்களில் தரிசனம் செய்யும் நேரம் மாறுதலுக்கு உட்பட்டது.
அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும்.
முதன் முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 27 முறை பாராயணம் செய்யவும்.
*அர்ச்சனையில் வெற்றிலை, தேங்காய், வாழைப்பழம் கண்டிப்பாக பயன்படுத்துவது ஏன்?*
கோவிலுக்கு கொண்டு செல்லும் பூஜை பொருட்களில் நமது வசதிக்கு ஏற்றபடி எத்தனையோ பொருட்களை எடுத்துச் செல்கிறோம்.
இவற்றில் தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை - பாக்கிற்கு முக்கியமாக இடம் பெற்றிருக்கும்.
சுவாமிக்கு நைவேத்தியம் செய்வதற்கு எதுமே இல்லை என்றாலும் ஒரே ஒரு வாழைப்பழத்தை வைத்து பூஜையை நிறைவு செய்து விடலாம்.
அப்படி இந்த 3 பொருட்களுக்கு என்ன சிறப்பு உள்ளது, எதற்காக இந்த 3 பொருட்கள் கண்டிப்பாக அர்ச்சனைக்கு கொண்டு செல்கிறோம், இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
ஒருவரது ஜென்ம நட்சத்திர தினத்தன்று திருமணம், சீமந்தம், காது குத்துதல், முடி இறக்குதல், எண்ணை குளியல், மருந்து சாப்பிடுவது, அறுவை சிகிச்சை செய்தல், தாம்பத்திய உறவு போன்றவற்றை வைத்துக் கொள்ளக் கூடாது.
அதற்கு பதில் இதர சுப காரியங்கள் செய்ய வேண்டும்.
அதாவது குல தெய்வ வழிபாடு,இஷ்ட தெய்வ வழிபாடு, அன்னதானம், தான தர்மம் செய்தல், பதவி ஏற்பு, சொத்துக்கள் வாங்குதல் போன்றவற்றை
செய்யலாம்.
குறிப்பாக ஆலய வழிபாட்டுக்குமிக உகந்த தினமாக
ஜென்ம நட்சத்திர தினம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வினை காரணமாக சிவபெருமானிடம் இருந்து
பிரிந்து மாங்காட்டில் தவம்
இருந்த பார்வதி தேவி,
இறுதியில் தனது ஜென்ம நட்சத்திர தினத்தன்று மணலால் சிவலிங்கம் செய்து வழிபட்ட பிறகே கணவருடன் சேர்ந்து வாழும் நிலை உண்டானது.
*மார்பில் சிவலிங்கம் தாங்கிய 16 அடி உயர ஆஞ்சநேயர்- துன்பங்களை தீர்க்கும் அஞ்சலி வரத ஆஞ்சநேயர்*
சனி ராகு போன்ற கிரகங்களால் வரும் துன்பங்களைத் தீர்த்து பணி உயர்வு திருமண வாய்ப்பு குழந்தைப்பேறு வழக்குகளில் வெற்றி போன்ற பல்வேறு நற் பயன்களை அருளுகிறார்.
*திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகிலுள்ள மேட்டுப்பட்டியில் கோவில் கொண்டிருக்கும் அஞ்சலிவரத ஆஞ்சநேயர்.*
அரசனான தசரதன் குழந்தைப்பேறு வேண்டிச் செய்த யாகத்தின் பிரசாதமான பாயாசத்தை ஒரு கருடன் கொத்திக் கொண்டு போனது.
அந்தப் பிரசாதம் அஞ்சனையின் கையில் போய் விழுந்தது.
அதைச் சாப்பிட்ட கேசரி அஞ்சனை தம்பதியினருக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திர நாளில் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
அவர்கள் அக்குழந்தைக்குச் சுந்தரன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
ராமனை காப்பாற்ற வேண்டிய ராமனை 14 ஆண்டு வனவாசம் அனுப்பிய கைகேயி.
தன் மகன் பரதன் உள்பட அனைவராலும் வெறுத்தொதுக்கப்பட்டு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பதினான்கு வருடங்கள் மனத்துயரை அனுபவித்தவள் கைகேயி.
இறுதியில் அனுமன் வாயிலாக அவளின் தியாக உள்ளம் வெளிப்படுகிறது.
இராவண வதம் முடிந்து சீதை, லக்ஷ்மணர், வானர, ராக்ஷசப் படைகளுடனும் அவர்களின் குடும்பத்தினருடனும் ஸ்ரீஇராமர் புஷ்பக விமானத்தில் அயோத்திக்குத் திரும்பும் வழியில்
பரத்வாஜ மஹாமுனியின் அழைப்பை ஏற்று அவருக்கு ஏற்கெனவே வாக்களித்தபடி இரவு அங்கு தங்கினார்.
விடிந்தால் பதினான்கு வருடங்கள் முடிந்த நிலையில் பரதனும், சத்ருக்னனும் அக்னிப்பிரவேசம் செய்யக்கூடும் என்பதால் அவர்களைத் தடுத்து நிறுத்தி,
ஒரு வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை சூரியோதய வேளையில் ஒரு கிண்ணம் அல்லது அகன்ற பாத்திரத்தில் சுத்தமான நீர் எடுத்துக் கொண்டு
சூரிய வெளிச்சம் தன் மேல் படும்படிக் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ளவும்.
அந்தப் பாத்திரத்தில் தெரியும் தன் முகத்தைப் பார்த்தபடியே "#ஓம்_ஹ்ரீம்_சூர்யாய_நமஹ" என்று 108 தடவை ஜெபிக்கவும்.
ஜபத்திற்கு எந்த மாலையையும் பயன்படுத்தலாம்.
அதன் பின்னர் வாழ்வில் எல்லா நிலைகளிலும் உயர அருள் செய்யுமாறு சூரிய பகவானை வேண்டிய பின் அந்த நீரை ஏதேனும் மரம் அல்லது செடியின் வேர் பாகத்தில் ஊற்றி விடவும். (அரச மர வேரில் ஊற்றினால் மிகவும் சிறப்பு).