சிந்துப்பட்டி பெருமாள் கோவில்:

பெருமாள் கோயில் என்றால், துளசியும் தீர்த்தமும்தானே பிரசாதமாகப் பெறுவோம். கூடவே, விபூதியும் தருகிறார்கள் என்றால்... பெறுகின்ற நமக்கு வியப்பாகத்தானே இருக்கும். அது எந்தக் கோயில்? விபூதி தருவதற்கு என்ன காரணம்?

1
அதற்கு நாம் சிந்துப்பட்டி செல்ல வேண்டும். மதுரை மாவட்டம்- திருமங்கலம்- உசிலம்பட்டி சாலையில், சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது சிந்துப்பட்டி. இங்குள்ள பழைமையான வேங்கடேச பெருமாள் கோயிலில்தான் இந்த விசித்திரம். கோயிலின் வரலாற்றைத் தெரிந்துகொண்டால், இதற்கான விளக்கம் கிடைக்கும்.

2
கி.பி. 12, 13-ஆம் நூற்றாண்டுகளில், தக்காண பீடபூமி மற்றும் தென்பகுதியில் சுல்தான்களின் ஆதிக்கம் இருந்தது. அவர்கள் ஆளுகைக்கு எதிராகத்தான், விஜயநகர சாம்ராஜ்ஜியம் தோன்றியது. நலிவுற்றிருந்த ஆலயங்கள் பல அதன் பிறகு புத்துயிர் பெற்றன.

3
திருப்பதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சந்திரகிரிக் கோட்டை பகுதி, விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரின் ஆளு கையில் இருந்தது. கி.பி.1530-களில், கிருஷ்ணதேவராயரின் மறைவுக்குப் பிறகு, சுல்தான்கள் படையெடுத்து, சந்திரகிரிக் கோட்டையை தாக்கி சின்னாபின்னப் படுத்தினர்.

4
சந்திரகிரிக்கோட்டை பகுதியில், கஞ்சி தேசத்தைச் சேர்ந்த மக்கள் வசித்தனர். அவர்களில் சிலர் விஜயநகர வம்சாவளியினர். சுல்தான்களால், அவர்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்தனர். அவர்களுடைய இனத்துப் பெண்களை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து, அந்தப்புரத்தில் தள்ளினராம்.

5
ஒருமுறை... தாங்கள் கௌரவமாகக் கருதும் ஒரு பெண்ணை திருமணம் செய்து தருமாறு சுல்தான் கட்டளையிட, அதற்கு கால அவகாசம் கேட்டுள்ளனர் அந்தக் குடும்பத்தார்.
ஆனால் தங்கள் இனத்துப் பெண்கள், சுல்தான்களின் அந்தப்புரத்தில் அவதியுறு வதை விரும்பாத சில குடும்பங்கள்,

6
இரவோடு இரவாக நாட்டை விட்டுக் கிளம்பி தெற்கு நோக்கிச் சென்றன. அப்போது, தாங்கள் பூஜித்து வந்த வேங்கடாசலபதி பெருமான், ஸ்ரீதேவி- பூதேவி விக்கிரகங்களையும் தங்களுடன் எடுத்துச் சென்றனர். 

7
வைகை ஆற்றையும் தாண்டி தொலைவுக்குச் சென்றுவிட வேண்டும் என்பது அவர்கள் எண்ணம். வழியில், ஒரு கிராமத்தில் அன்று இரவு தங்க நேர்ந்தது. தாங்கள் கொண்டு வந்திருந்த பொருட்களை ஓர் இடத்தில் வைத்தனர்.

8
தங்களுடன் எடுத்து வந்த பூஜைப் பொருட்களைக் கொண்டு, உற்ஸவ விக்கிரகங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பத்திரப்படுத்தி வைத்தனர்.
பொழுது விடிந்தது.

9
தொடர்ந்து பயணிக்க வேண்டுமே என்று எண்ணி, பூஜைப் பொருள்கள் வைத்திருந்த பெட்டிகளுடன், பெருமாள் உற்ஸவ விக்கிரகங்களை வைத்திருந்த பெட்டிகளையும் தூக்க முயன்றனர். ஆனால், ஆச்சரியம்... அந்தப் பெட்டிகளை கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை! அப்படி ஒரு கனம்.

10
வேறு வழியில்லாமல், பெட்டிகளை அங்கேயே வைத்துவிட்டு அங்கேயே தங்கினர்.
அன்று இரவு... அந்தக் குழுவிலிருந்த பெரியவர் ஒருவரின் கனவில் பெருமாள் காட்சி தந்தார். ''நீங்கள் யாரும் பயம் கொள்ள வேண்டாம்... இந்தப் பகுதி மக்கள் உங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள்.

11
அவர்களால் உங்களுக்கு எந்தத் தீங்கும் நேராது. அப்படி ஏதும் நடக்காமல் நான் உங்களைக் காப்பேன். நாளை காலை... பெட்டியிலிருந்து ஓர் அங்கவஸ்திரத்தை கருடன் தூக்கிச் சென்று கண்மாய்க்குக் கீழ்ப்புறத்தில் உள்ள ஒரு புளிய மரத்தில் போட்டுவிட்டு, மூன்று முறை குரல் எழுப்பிச் செல்லும்.

12
அந்த இடத்தில் என் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்புங்கள்...'' என்று சொல்லி மறைந்தார். கண்விழித்த பெரியவர், தனது கனவு பற்றி அருகில் இருந்தவர்களிடம் சொல்ல, எல்லோரும் பெருமாளின் திருவருளை வியந்து போற்றி விடியலுக்காகக் காத்திருந்தனர்.

13
மறுநாள் காலையில், கனவில் பெருமாள் சொன்னது போல், வானத்தில் வட்ட மிட்ட கருடன், பெட்டியில் இருந்த அங்கவஸ்திரத்தைத் தூக்கிச் சென்று, சற்று தொலைவில் இருந்த புளிய மரத்தில் போட்டது.

14
அந்த இடத்திலேயே விக்கிரகத்தை வைத்து, தேவியர் சகிதராக பெருமாள் மூலவரையும் பிரதிஷ்டை செய்து, கோயிலும் எழுப்பினர்.

15
புளியம்பழத்தை தெலுங்கில் சித்தப்பண்டு என்பர். புளிய மரத்தின் அருகே கோயில் அமைந்ததாலும், அங்கவஸ்திரம் புளியமரத்தில் விழுந்து இடத்தைக் காட்டிக் கொடுத்ததாலும், அந்த இடத்தை சித்தப்பண்டூர் என்றார்களாம். அதுவே பின்னாளில் சிந்துப்பட்டி ஆனதாம்.

16
மேலும், இங்குள்ளோர் பெருமாள் மீது சிந்துப் பாடல்கள் நிறைய பாடியிருக் கிறார்களாம். அதனாலும் சிந்துப்பட்டி என்று பெயர் வந்திருக்கலாம் என்கிறார்கள்.
இந்தக் கோயிலில் மூலவர் ஸ்ரீவேங்கடாசலபதி. தாயார் அலர்மேல் மங்கையாக அருள்கிறாள்.

17
திருப்பதியில் உள்ளது போன்ற அமைப்புதான். ஆனால் பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவி என உபயநாச்சிமாரோடு காட்சி தருகிறார்.
கொடிமரமும் விபூதி பிரசாதமும்
கோயிலின் கொடிமரம் வித்தியாசமாக அமைந்துள்ளது.

18
பொதுவாக கருடக் கொடியுடனும், கொடி மர உச்சியில் கூப்பிய கரங்களுடன் கருடன் இருப்பதுபோலும்தான் கொடிமரம் இருக்கும். பிரம்மோற்ஸவம் போன்ற உற்ஸவக் காலங்களில்தான் கொடிமரத்துக்கு விசேஷ பூஜைகள் நடக்கும்.

19
ஆனால் இங்கே... கொடிமரத்தில் கருப்பண்ணசாமி ஆவாஹனம் செய்யப்பட்டுள்ளார். அதனால், இந்தக் கொடிமரத்தின் கீழே விபூதி பிரசாதம்தான் கொடுக்கப்படுகிறது. பக்தர்கள் இந்தக் கொடிமரத்துக்கு திருமஞ்சனம் செய்விப்பதாக வேண்டிக் கொண்டு, தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறப் பெறுகிறார்கள்.

20
இதற்கு 'கம்பம் கழுவுதல்' என்று பெயர். விளக்கெண்ணெய் மற்றும் தயிர் கலந்து, கொடிமரத்தின் மேல் உச்சியில் இருந்து தடவி, அதற்கு திருமஞ்சனம் நடக்கிறது. பிறகு, கொடி மரத்துக்கு மிகப் பெரிய வஸ்திரம் சார்த்தி, விபூதி அர்ச்சனை செய்யப்படுகிறது. அதுவே பிரசாதமாக வழங்கப்படுகிறது.

21
ஊருக்குள் நுழையும்போது, கருப்பர் சந்நிதி ஒன்றைக் காண்கிறோம். அவருக்கு முதலில் பூஜை செய்துவிட்டு, இங்கு வருவார்களாம். அவரே இவர்களுக்கு காவல் தெய்வமாம். இந்தக் கொடிமரத்துக்கும் அந்தக் கருப்பண்ணசாமிக்கும் தொடர்பு உண்டாம்!

22
கோயில் சந்நிதிகள்...
கொடிமரத்துக்குப் பின், கருடாழ்வார் சந்நிதி. எதிரே, ஸ்ரீதேவி- பூதேவி உடன் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள். முன்மண்டபத்தின் வெளிப்புறம்... அலர்மேல்மங்கை தாயாருக்கு தனி சந்நிதி.

23
அழகான ஊஞ்சல் மண்டபம்- உற்ஸவ மண்டபம்! பிராகாரத்தில் அண்மையில் புதிதாக சக்கரத்தாழ்வாருக்கு சந்நிதி அமைத்திருக்கின்றனர். திருத்தமான விக்கிரகம்- சக்கரத்தாழ்வாரும் யோக நரசிம்மரும் அருள்புரிகின்றனர்.

24
பிராகாரம் சுற்றி வரும்போது, வாகன மண்டபத்தைக் காண்கிறோம். ஒவ்வொரு சமூகத்தவரும் ஒவ்வொரு வாகன உற்ஸவத்தை நிகழ்த்துகிறார்கள்.

25
இந்தக் கோயிலில், வைகாசி பிரம்மோற்ஸவம், ஆடிப் பெருந்திருவிழா, ஆவணி மாத கிருஷ்ணன் பிறப்பு, புரட்டாசி சனிக்கிழமைகள், கார்த்திகை தீபத் திருவிழா, மார்கழி மாத சிறப்பு வழிபாடுகள், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு, தைமாதப் பிறப்பு (பொங்கல் சிறப்பு விழா) ஆகியவை முக்கியமான உற்ஸவங்கள்.26
வைணவக் கோயிலான இங்கே மகிஷாசுரவதம் நிகழ்ச்சி, வித்தியாசமானது. இங்கே நடைபெறும் கோமாதா சிறப்பு வழிபாடு, கிராமத்துடன் இயைந்த வாழ்க்கையைக் காட்டுகிறது.
சுமார் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயில். பன்னிரண்டு பட்டி கம்பளத்தார் நாயக்கர்களும் வழிபட்டு, நிர்வாகம் செய்துள்ளனர்.

27
இந்தக் கோயில் தற்போது, தமிழக அரசின் அறநிலையத் துறையின் மேற்பார்வையில் உள்ளது. அரசு நியமனம் செய்த அறங்காவலர் குழு கோயில் நிர்வாகத்தை கவனித்து வருகிறது.

28
திருப்பதி வேங்கடாசலபதிக்கு நேர்ச்சை செய்வதாக வேண்டிக் கொள்பவர்கள், ஏதாவது அசௌகரியத்தால் திருப்பதி செல்ல முடியாமல் போனால், அதை இங்கே நிறைவேற்றிக் கொள்ளலாம். பெருமாளும் திருப்பதி பகுதியில் இருந்து வந்தவர் என்பதால், இந்தத் தலம் தென்திருப்பதி என்றே போற்றப்படுகிறது.

29
இந்தக் கோயிலை, வானமாமலை ஜீயர் போற்றி, வணங்கி அபிமானித்துள்ளார்.
பெருமாளை அங்கப் பிரதட்சிணம் செய்து, இந்திரன் சாப விமோசனம் பெற்றதால், இங்கே அங்கப்பிரதட்சிணம் செய்து, தங்கள் பாவங்கள் நீங்க பிரார்த்திக்கிறார்கள் பக்தர்கள்.

30
கம்பத்துக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால், குழந்தைப் பேறு உண்டாகும்; தடைபெற்ற திருமணம் நடந்தேறும்; தொலைந்துபோன பொருள்கள் உடனே கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு.
கோமாதா வழிபாடு செய்து வழக்கில் வெற்றி, சந்தான பாக்கியம் ஆகியவற்றைப் பெறுகிறார்கள் பக்தர்கள்.

31
இந்தக் கோயிலில் மற்றொரு சிறப்பம்சம்... புதுமணத் தம்பதியர், அந்த வருடத்தில் வரும் விஜயதசமித் திருநாளில் இங்கே வந்து, நோன்பு எடுத்து, அர்ச்சனை செய்து, பெருமாள், தாயார் அருள்பெற்றுச் செல்வதுதான்! இதை மகர்நோன்பு என்கிறார்கள்.

32
இந்தப் பழக்கம் இப்போதும் பரம்பரையாக இந்தப் பகுதிகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.

33
மதுரைக்கு அருகிலுள்ள திருமங்கலத்தில் இருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது. திருமங்கலம்-உசிலம்பட்டி பேருந்துகள் சிந்துப்பட்டியின் வழியே செல்கின்றன.🙏

#வாழ்க_பாரதம்
#வளர்க_பாரதம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Mar 8
சுந்தர காண்டம்!

ராமாயணத்தில், எந்தக் காண்டத்துக்கும், ராமனின் பெயரோ, சீதையின் பெயரோ வைக்கவில்லை! ஆனால் அனுமன் பெயர் கொண்டு ஒரு காண்டமே உள்ளது! Image
அது, சுந்தர காண்டம்! இது தான் தொண்டருக்குக் கிட்டிய பெருமை! அனுமனுக்குச் சுந்தரன் என்ற பெயர் உண்டு! அவன் பெயர் தான் இங்கு வைக்கப்பட்டுள்ளது!
அனுமனை விரும்பாதார் தான் யார்? வடை மாலை, வெற்றிலை மாலை, ராமஜெயம் எழுதப்பட்ட மாலை – இப்படி மாலை மரியாதைகள் தான் என்ன?
சிறிய திருவடி, மாருதி, ஆஞ்சனேயன், ராம தூதன், சொல்லின் செல்வன், சமய சஞ்சீவி என்ற எத்தனை பட்டப் பெயர்கள் இவனுக்கு? மனத்துக்கினியான் ராமனுக்குக் கூட இவ்வளவு சிறப்புகள் கொடுத்திருக்கிறார்களா?
Read 12 tweets
Mar 8
தன் பக்தனின் ஆயுளை நீட்டிப்பதற்காக பெருமாளே வடக்கு நோக்கித் தலை வைத்து படுத்த அற்புத திவ்யதேசம்.

அப்பேற்பட்ட பரந்தாமனின், வைகுண்டவாசனின் திவ்யதேச தரிசனம்!!!

அருள்மிகு வைகுண்டப் பெருமாள் திருக்கோவில்
திருப்பரமேச்சுர விண்ணகரம்.

1 Image
மூலவர்: வைகுந்தநாதன், பரமபதநாதன்

தாயார்: வைகுந்தவல்லி

உற்சவர்: வைகுந்தநாதன்

கோலம்: இருந்த, கிடந்த நின்ற திருக்கோலம்

விமானம்: முகுந்த விமானம்

தீர்த்தம்: ஐரம்மத தீர்த்தம்

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்

2
திருப்பரமேச்சுர விண்ணகரம்:-

வைகுந்த வாசனான இறைவன் நாராயணா வைகுண்டத்தில் உள்ளவாறே நின்ற, இருந்த, கிடந்த திருக்கோலத்தில் மூன்று நிலைகளையும், மூன்று அடுக்குகளாக அமைந்த இத்திருக்கோவிலில் சேவை சாதிக்கிறார்.

3
Read 20 tweets
Mar 7
*ஒரு ஊர்ல ஒரு அறிவாளி ஆள் இருந்தார் . அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம். அடிக்கடி கோவிலுக்கு போவார்.*

*கடவுளை வேண்டிக்குவார் .அதுக்கப்புறம் காட்டுக்கு போவார்* 

*விறகு வெட்டுவார் .அதை கொண்டு போய் விற்பனை செய்வார்.*
*ஓரளவுக்கு வருமானம் வந்தது.* 

*அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தார்.*

*ஒரு நாள் அது மாதிரி அவர் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார்.*

*அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை.*

*எதோ விபத்துல இழந்துட்டது போல இருக்கு.. !*
*அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு .. அதை இவர் பார்த்தார் ..*

*அப்போ இவர் மனசுல ஒரு சந்தேகம்.* 

*"இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ..?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சார்.*
Read 13 tweets
Mar 6
*ஹோலி பண்டிகை 🌈*

மனிதனின் பருவக்கால மாற்றத்தை விழாக்கள் எடுத்து கொண்டாடுவது இயல்பு. ஆனால், இயற்கையோட பருவக்கால மாற்றத்தை வரவேற்கும் விதமான ஒரு கொண்டாட்டம்தான் ஹோலி பண்டிகை என்கிற அரங்கபஞ்சமி.
இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளில் குறிப்பிட்ட இனத்தவரால் இப்பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுது.குஜராத் போன்ற சில மாநிலங்களில் இப்பண்டிகையை 5 நாட்கள் கொண்டாடுகின்றனர்.
மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும்   நிலைநாட்டுவதே  ஹோலி பண்டிகையின் முக்கிய குறிக்கோளாகும்.
Read 27 tweets
Mar 5
*குபேர வாழ்வருளும் கும்பேஸ்வரர்*

அகிலத்தையே சுருட்டி ஆதி சக்திக்குள் லயமடையச் செய்யும் மகாப் பிரளயம் பெருக்கெடுத்து வரும் காலம் அருகே வந்தது. ஆழிப் பேரலைகள் அண்ட சராசரத்தையும் முறுக்கி அணைத்து ஆரத் தழுவி தமக்குள் கரைத்துக் கொள்ளும் ஊழிக்காலம் உந்தி வருவதை அறிந்தார், பிரம்மா.

1
மும்மூர்த்திகளுமே யோக நித்திரையில் ஆழ மகாகாளி மட்டும் தாண்டவமாடிக் களிக்கும் பிரளயம் நெருங்கியது பார்த்து அதிர்ந்தார் நான்முகனான பிரம்மா. பீஜங்கள் எனப்படும் பிரபஞ்ச படைப்பாற்றலின் விதைகளாக திகழும் பிரபஞ்ச மூல அணுக்கள் அழிந்துவிடுமோ என அஞ்சினார்.

2
படைப்பின் ஆதாரமாக விளங்கும் வேதங்கள் கூட பிரளயப் பேரழிவில் ஆதி சக்தியில் சென்று ஒடுங்கி விடுமோ என கவலை அவரை வாட்டியது. அகிலத்தை படைத்து எண் திக்கும் பரவச் செய்து சகல ஜீவராசிகளையும் செழிக்க வைக்க வேண்டுமென்ற பேரவா அவரை நிலைகொள்ளாமல் தவிக்கச் செய்தது.

3
Read 58 tweets
Mar 5
மாசி மக மகத்துவங்களும்... பாவங்கள் போக்கும் 20 தீர்த்தங்களும்...

மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் தெரிந்தும் தெரியாமலும் பாவம் செய்வது இயல்பு. பாவம் செய்துவிட்டு பாவத்துக்குப் பரிகாரமாக புண்ணியம் தேடி ஒவ்வொருவரும் பல்வேறு ஆலயங்களுக்குச் செல்கிறோம்.
இதனால் ஏற்படும் தோஷத்தை போக்கிக்கொள்வதற்காக ஜபம் – தபம் போன்ற பல்வேறு பரிகாரங்களைச் செய்கிறோம்.  மாதங்களில் மகத்தான மாதம் என்று அழைக்கப்படுவது மாசி.

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும் மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுவது மாசி மாதம்.
இந்த மாதம் முழுவதும் கடலாடும் மாதம்’ என்றும், தீர்த்தமாடும் மாதம்’ என்றும் சொல்வார்கள்.
Read 29 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(