ஆதி மனிதன் முதன் முதலில் பயன்படுத்திய சக்தி, சூரிய வெளிச்சம் தான். அதன் பின்னரே சிக்கிமுக்கிக் கல்லால் தீ மூட்டும் அறிவு பெற்று நெருப்பு, நீர் எனத் தொடர்ந்து பல்வேறு சக்திகளை கண்டறிந்து பயன்படுத்தத் தொடங்கினான்..🔆
பிறகு நீர்நிலைகளிருந்து பெறப்படும் நீர் மின்சாரம், நிலக்கரியை எரித்து அதிலிருந்து அனல் மின்சாரம், அணுவைப் பிளந்து, அணு உலை வழியாக மின்சாரம் என முன்னேற்றமடைந்து கொண்டே இருந்தான். 🔆
அதேவேளையில் சுற்றுப்புறச் சூழலும் கெட்டுக்கொண்டே வந்தது. நிலக்கரியை எரிக்கும் போது அதிலிருந்து வரும் வெப்பம், சாம்பல், புகை ஆகியன சுற்றுப்புறச்சுழலைக் கெடுக்கும் வண்ணம் உள்ளது என்று உலக ஆய்வுகள் சொல்கின்றன.🔆
அணுக்கழிவுகளைப் பாதுகாப்பதில் நடைமுறை சிக்கல் பல இருப்பதால் உலகில் பல நாடுகள் அணுஉலை மின்சார உற்பத்தியைக் கைவிடும் சூழலுக்குப் போய் விட்டனர். இந்தச் சூழலில் உலகில் மின்சாரத்தின் தேவைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது .🔆
அப்போது தான் மாற்று எரிசக்தி அதுவும் சுற்றுபுறச்சூழலை பாதிக்காத வண்ணம் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் கண்டுபிடிக்க முற்படுகிற போது, சுற்றுச்சூழலை மாசு அடையாமல் காத்து நம் சந்ததிகளும் இந்த பூவுலகில் எந்த பாதிப்பும் இன்றி வாழ வழிவகுப்பதே சூரிய சக்தி. இதை தற்போது சாமானியர்களும்… twitter.com/i/web/status/1…
புதுப்பிக்கத்தக்க மின்சாரம் ( Renewable electricity ) என்கிற வகையில் காற்று மின்சாரம், அனல் மின்சாரம், நீர் மின்சாரம் மற்றும் சூரியசக்தி மின்சாரம் ஆகியவை அடங்கும்..🔆
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு காற்றாலை மூலம் மின்சாரம் எடுக்கும் முறை புழக்கத்தில் வந்தது. அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. மேடான பகுதிகள்.. காற்றின் வேகம்.. இதெல்லாம் கணக்கில் கொண்டு மின்சார உற்பத்தி தொடங்கியது.
ஆரம்ப காலங்களில் ஒரு மெகாவாட் திறன் உள்ள காற்றாலை நிறுவுவதற்கு… twitter.com/i/web/status/1…
இதை நிறுவுவதற்கு அப்போதைய ஒன்றிய அரசின் மானியம் கிடைத்தது. இதில் முக்கியமான பிரச்சனையே வருடத்தில் சில மாதங்கள் மட்டுமே காற்று இருக்கும். அந்த நேரத்தில் உற்பத்தி அதிகமாக இருக்கும். மற்ற மாதங்களில் குறைவான மின் உற்பத்தியே இருக்கும்..🔆
புனல் மின்சாரம் எனப்படுகிற நீர்நிலைகளின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிற மின்சாரத்தின் அளவு மிகவும் குறைவு. அனல் மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி தடைபடும் நேரங்களில் காற்றாலை மின்சாரம் கை கொடுத்துக் கொண்டிருந்தது. கடந்த 20 ஆண்டுகளில் அன்றாட மின்சாரத் தேவைகள் அதிகரிக்கத்… twitter.com/i/web/status/1…
அதன் பராமரிப்பு செலவும் அதிகமானது. ஆகவே காற்றாலை மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தின் விலையும் அதிகமானது. அதேவேளையில் பெரிய நிறுவனங்கள், தங்கள் தேவைகளுக்காகப் பல காற்றாலைகளை நிறுவி கிரிட் (EB) வழியாக கொடுத்து தங்கள் நிறுவனத்தில் உபயோகிக்கும் மின்சாரத்திற்கு மாற்றாக ஒரு விலையில்… twitter.com/i/web/status/1…
மற்ற நிறுவனங்களுக்கும் விற்றார்கள். இப்போது அரசும் கடற்கரை ஓரங்களில் காற்றாலை மின் உற்பத்தியில் இறங்குவதற்கான வேலைகளைத் தொடங்கி உள்ளது.🔆
அடுத்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்றால் நமக்கு சூரியனிடமிருந்து கிடைக்கும் சக்தி தான். உலகம் விஞ்ஞானிகள் பலர், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக
ஆய்வு செய்து, என்றென்றைக்கும் கிடைக்கும் நிலையான சூரிய சக்தியை, சுற்றுச்சூழலுக்கும் எந்த பாதிப்பையும் அளிக்காத எரிசக்தி ஆக மாற்றினர்.🔆… twitter.com/i/web/status/1…
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்புவரை சோலார் பேனல் வழியாக உற்பத்தியாகும் மின்சாரம் என்பது மிகுந்த செலவு பிடிக்கும் விஷயமாக கருதப்பட்டது. வசதிபடைத்தவர்கள் மட்டுமே அணுக முடியும் என்ற சூழல் இருந்தது.🔆
ஆனால் இப்போதோ ஒரு நடுத்தர குடும்பத்தினர் தம் வீடு மற்றும் விவசாய பயன்பாட்டுக்கு, மலைவாழ் மக்களுக்கு,சிறுதொழிற்சாலைகளுக்கும் சிறப்பாக பயன்படுத்தலாம் என்னும் நிலை உருவாகி உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், சோலார் செல் தயாரிப்பில் ஏற்பட்ட முன்னேற்றமே ஆகும். இப்போது அதிக திறன் கொண்ட… twitter.com/i/web/status/1…
சில வருடங்களுக்கு முன்பு வீட்டு உபயோகத்திற்கு என சூரிய எரிசக்தியை நிறுவ வேண்டுமெனில், 3kw அளவில் பொருத்த 6×3 அளவில் (250W) தலா 12 பேனல்கள், அதற்கான ஸ்ரெட்ச்சர், இன்வெர்ட்டர் இவெகள் அதிக விலையில் இருந்தது. முக்கியமாக அதை நிறுவதற்கான இடம் அதிகமாக தேவைப்பட்டது. 🔆
இப்போது நிலமை அப்படியே தலைகீழ். சோலார் பேனல் 7 × 4 அளவில் (545W) தலா 6 பேனல்கள், அதற்கான ஸ்ரெட்ச்சர், ஹைபிரீட் இன்வெர்ட்டர் என குறைந்த விலையிலும், குறைந்த இடத்திலும் அமைக்கலாம். 🔆
நீங்கள் 3kw அளவுள்ள சோலார் பேனலை உங்கள் வீட்டில் பொருத்தினால் ஒரு நாளைக்கு சுமார் 12 யூனிட் அளவு மின்சாரம் உற்பத்தி செய்யலாம். அந்த மின்சாரத்தை நீங்கள் அரசுக்கு (EB) கொடுக்கும் எண்ணம் இருந்தால் கொடுக்கலாம்.🔆
இல்லையென்றால் பகல் நேரத்தில் உங்கள் வீட்டின் பயன்பாடு அதிகம் இருந்தால் கிரிட்டுக்கு (EB) கொடுக்காமல் நீங்களே பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு நாளைக்கு 12 யூனிட் என்றால் மாதம் 360 யூனிட் வரை தடையில்லா பசுமை மின்சாரத்தைப் பயன்படுத்தலாம்…🔆
இதில் இன்வெர்ட்டர் குறைந்தபட்சம் 5 முதல் 10 வருட உத்தரவாதம், பேனல்கள் சுமார் 10 முதல் 25 வருட உத்தரவாதம் என்று இருக்கும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், பேனல் 10 வருட உத்தரவாதம் என்றால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பேனல் செயல் இழந்து விடும் என்று அர்த்தமல்ல.… twitter.com/i/web/status/1…
அடுத்து இதே அமைப்பில் 5kW லித்தியம் பேட்டரியை பொருத்தினால், பகலில் சோலார் பேனலில் இருந்து வரும் சப்ளையை ஒரு குறிப்பிட்ட விழுக்காடு (%) மின்சாரத்தை இந்த பேட்டரியில் செலுத்தி சேமித்து வைத்துக்கொள்ள முடியும். சேமித்த மின்சாரத்தை இரவு நேரங்களில் ஹைபிரிட் இன்வெட்டர் வழியாக நாம்… twitter.com/i/web/status/1…
மின்சாரமே இல்லாமல் இருக்கும் மக்கள் 2kwக்கு 545W இல் நான்கு சோலார் பேனல் அமைத்து அதற்கான ஸ்ரெட்ச்சர், ஆஃப் கிரீட் இன்வெர்ட்டர், லித்தியம் பேட்டரி ஆகியவற்றைப் பொருத்தி இரண்டு மின்விளக்குகள், ஒரு மின்விசிறி, ஒரு தொலைக்காட்சி என பயன்படுத்தலாம்.🔆
அடுத்து சிறு /குறு தொழில் முனைவோர்களை எடுத்துக்கொண்டால் 10 HP அறவுக்குள் மின்சாரம் செலவழிக்கும், பகல் நேரங்களில் மட்டும் மின்தேவை உள்ள சின்னச் சின்ன விசைத்தறிக்கூடங்கள், காயர் (கயிறு திரிக்கும் தொழிற்சாலைகள்), ஒர்க்ஷாப் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம்.🔆
10 HP அளவுக்கான சோலார் பிளான்ட் அமைக்க 30×30 அடி இடம் இருந்தால் போதுமானது. நாம் தேர்ந்தெடுக்கும் முறையைப் பொருத்து இதற்கான விலை இருக்கும். நீங்கள் உற்பத்த செய்யும் மின்சாரத்தை அரசு மின் கழகத்திற்கு (EB) கொடுப்பதாக இருந்தால் ஆன் கிரிட் இன்வெர்ட்டர் பயன்படுத்த வேண்டும்..🔆
அரசுக்கு (EB) கொடுக்காமல் நாம் உற்பத்தி செய்த மின்சாரத்தே நாமே முழுவதும் பயன்படுத்த வேண்டுமெனில் ஆஃப் கிரிட் இன்வெர்ட்டரை தேர்வு செய்ய வேண்டும். ஆக இதில் இன்வெட்டர் விலை மட்டுமே வித்தியாசம். மற்றபடி எந்த மாற்றமும் இருக்காது. இந்த அமைப்பில் மாதம் சுமார் 1,200 யூனிட் வரை உற்பத்தி… twitter.com/i/web/status/1…
மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், தனியார் அலுவலகங்கள் போன்ற நிறுவனங்கள் சோலார் பவரை கிரிட்க்கு (EB) ஏற்றுமதி செய்வதன் மூலம் தங்களின் மின் கட்டணத்தை கணிசமான அளவு குறைக்க முடியும். இதற்கான முதலீட்டை 5 ஆண்டுகளுக்குள்ளாகவே முன்னரே மின் கட்டண சேமிப்பில் சரிகட்டிவிட விட முடியும்..🔆
நம் கிரிட்க்கு (EB) ஏற்றுமதி செய்யும் முறையில் மிக முக்கியமானதாக கருதப்படுவது நெட் மீட்டரிங் முறையாகும். இதில் நாம் உற்பத்தி செய்யும் சோலார் மின்சாரம் நாம் பயன்படுத்தும் கிரிட் (EB) மின்சாரத்துடன் ஒன்றுக்கு ஒன்றாக நேரடியாக கழிக்கப்படுகிறது. உதாரணமாக நாம் சோலார் பேனல் மூலமாக… twitter.com/i/web/status/1…
இதனால் நெட் மீட்டரிங் முறையில் கிரிட்டுக்கு (EB) ஏற்றுமதி செய்யும்போது நமக்கு கணிசமான அளவு லாபம் கிடைக்கிறது. இப்பொழுது புதிய மின்சார கட்டண அமைப்பின்படி 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் மின் கட்டணம் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது..🔆
இவர்கள் நெட் மீட்டரிங் முறைப்படி சோலார் பேனல் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை கிரிட்டிக்கு (EB) ஏற்றுமதி செய்வதன் மூலம் தங்கள் பழைய கட்டண அமைப்பிலேயே இருக்க முடியும். அதே சமயம் அவர்களின் மாதாந்திர மின் கட்டணத்தை கணிசமான அளவு குறைக்கவும் முடியும்..🔆
நம்முடைய நாட்டின் எரிசக்தித் துறை பல்வேறு காரணங்களால் குறிப்பிடத்தகுந்த அளவு மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்தியாவில் எரிசக்தி துறையை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நம்முடைய நாடு தற்போது சுமார் இரண்டு மில்லியன் மெகாவாட் (2000 GW) மின்சாரத்தை உற்பத்தி செய்து… twitter.com/i/web/status/1…
மேலும் விரைவான தொழில்மயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடு அதிக மின்தேவையை எதிர்கொண்டு வருகிறது. 🔆
2022 வருட முடிவில் 175 GW அளவு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அடைய இந்தியா இலக்கை நிர்ணயித்தது. மேலும் 2030 டிசம்பருக்குள் 450GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அடைய இந்திய எரிசக்திதுறை இலக்கு நிர்ணயித்துள்ளது.🔆
சூரிய ஆற்றல், காற்றாலை ஆற்றல் மற்றும் நீர்நிலை ஆற்றலை வளர்ப்பதில் நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம்.
இதில் சசூரிய மின்சக்தி என்பது இந்தியாவின் மிக முக்கியமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் ஒன்றாகும்.🔆
இந்திய அளவில் தமிழ்நாடு சூரிய மின்சக்தி உற்பத்தியில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகும். சோலார் பவர் உற்பத்தி செய்வோருக்கு மானியம் வழங்குவது உட்பட மக்களை சூரிய மின்சக்தி உற்பத்தியில் ஈடுபட ஊக்குவிக்க தமிழக அரசு பல நல்ல நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது..🔆
சூரிய ஆற்றல், காற்றாலை ஆற்றல் மற்றும் நீர் நிலை ஆற்றல் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் தமிழ்நாடு தனது எரிசக்தித் துறையை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. .🔆
2023 ஆம் ஆண்டிற்குள் காற்றாலை மின்சாரம் 13k MW (13GW) உற்பத்தியும், சூரிய சக்தி மின்சாரம் 9k MW (9GW) உற்பத்தியும், நீர்நிலை மின்சாரம் 2,5k MW (2.5GW) உற்பத்தியும் அடைய தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.🔆
இந்த இலக்கை எட்ட நாமும் அரசுடன் சேர்ந்து பயணித்தல் என்பது மிக அவசியமானது.
ஆக நாமும் சுற்றுபுறச்சுழல் காப்போம் பசுமை மின்சாரத்தை நோக்கி பயணிப்போம். வரும் தலைமுறைக்கு பசுமையான எரிசக்தியை கொடையாக கொடுப்போம்…😍
உலகின் தலைசிறந்த 9+1 #சோலார்#இன்வெர்ட்டர் & சோலார் பேனல் உற்பத்தியாளர்கள். பற்றி பாத்தோம்னா முதல் இடத்துல இருக்கர்து #LG தென் கொரிய நிறுவனமாகும், 1958ல எலக்ட்ரானிக் சாதனங்களின் உற்பத்தியாளராக ஆரம்பிக்கப்பட்டது..⚡️
#சோலார் பற்றிய பெரிய லெவல்ல R&D க்கு பிறகு, #LG தனது முதல் #சோலார்#பேனலை 2009ல தயாரித்தது. #சோலார் உற்பத்தியாளராக தன்னை அறிமுகப்படுத்திய சிறிது காலத்திலேயே, #LG அதன் 14MV #சோலார் Farmயை தென் கொரியாவில் கட்டத் தொடங்கியது.⚡️
அப்போதிருந்து, #LG#சோலார் பவர் சிஸ்டத்திற்கான #சோலார் பேனல்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நிறுவனமாக மாறியுள்ளது, மேலும் இது உலகளவில் சிறந்த #சோலார்#இன்வெர்ட்டர் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும்..⚡️
இந்தியாவோட #Renewable_Energy துறைல என்ன மாதிரீ முன்னேற்றம் 2021 டிசம்பர் வரைக்கும் அடைஞ்சிருக்கு இந்தியாவோடசோலார் பவர் & விண்டு மில் பவர் உற்பத்திலயும் உலக லெவல்ல நான்காவது இடத்தை தக்கவச்சிருக்கோம் அதோட புள்ளி விவரத்த இந்த #திரட்ல பாக்கலாம்..⚡️
#Renewable_Energy ஜென்ரேசன்எபிசென்சி கடந்த சில ஆண்டுகள்ல அதிகரித்துள்ளதுனு #CAGR டேட்டால இருக்கு இதுவே 17.33% ஒன்றிய அரசாங்கத்தின் ஆதரவுடன், அதிகரித்த பொருளாதாரம், பல முதலீட்டாளர்களின. வரவும் முன்னோக்கியே இருக்கு..⚡️
பாரிஸ் ஒப்பந்தத்தின் படி 175 GW , 2030ல 523 GW (ஹைட்ரோவிலிருந்து 73 GW உட்பட) #Renewable_energy efficiency நிறுவ நம்ம ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. 2021 அக்டோபர் சந்தை அளவு, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் 1.49 GW அதே..⚡️
#சோலார்_பேனல் மாட்டி பவர் உற்பத்தி செய்யலாம்னு முடிவு செஞ்சுட்டீங்னா முக்கியமாக நம்ம என்ன மாதிரி பேனல், எந்த கம்பெனிய வாங்க போறோம்னு தேர்வு செய்யனும் ஏன்னா பேனல் எபிசென்சி கம்பெனிக்கு கம்பெனி மாறுபடும் இப்ப கரண்ட்ல இருக்க சோலார் பேனலோட #எபிசென்சி பற்றிய இந்த #திரட்ல பாக்கலாம்.🙏
சோலார் பேனல் எபிசென்சி மேல்படும் சன்லைட்ட எத்தனை % மாக மின்சாரமாக மாற்றப்படுகிறது என்பதற்கான மெசர்மெண்ட் ஆகும். இப்ப பயன்படுத்தப்படும் சோலார் பேனல்க தேசிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆய்வகத்தின் (NREL) படி, 16% டூ 22% வரை எபிசென்சி கொண்டவை. சராசரி எபிசென்சி 19.2% ஆகும்..⚡️
20% க்கும் மேல எபிசென்சி இருக்க சோலார் பேனல்கள் பிரீமியம் எபிசென்சி பேனல்களாகவும் விலையும் அதிகமாக வருகிறது, மேலும் #Sun_power , #LG_Solur , #REC இந்த கம்பெனிக பிரீமியம் எபிசென்சி பேனல்க தர்றாங்க. இதுல நம்ம முக்கியமாக கவனிக்க வேண்டியது..⚡️
#EV_கார்ல இருக்க பேட்டரியோட லைப் டைம் என்ன? அதோட சார்ஜிங் டைம் என்ன? சார்ஜிங் கட்டணம் என்ன? நம்ம #EV பேட்டரிய என்ன மாதிரி பராமரிப் செய்யனும்னு #EV_கார் கம்பெனிக சொல்றாங்க அதில் அதில் பொதுவாக இருக்கர்த பற்றி இந்த #திரட்ல பாப்போம்..🙏
⚡️
#EV_கார் பயன்பாடு வருச வருசம் அதிகமாகிட்டே வருதாலும் பலருக்கு #WV பேட்டரியோட லைப் மற்றும் பேட்டரி மாற்றத்துடன் தொடர்புடைய செலவுகள் குறித்து சந்தேகங்கள பதிவு செய்யறாங்கனு #காக்ஸ்_ஆட்டோமோட்டிவ் நடத்திய கணக்கெடுப்பின்படி சொல்றாங்க..⚡️
கடந்த பத்து வருசத்துல #லித்தியம்_அயன் பேட்டரிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. பேட்டரியோட லைப் டைம், பாதுகாப்பை அதிகரித்தது, பேட்டரியோட வெயிட், விலையை குறைத்ததுனு.⚡️
ரூப்டாப் #சோலார்_பேனல் மாட்டலாம்னு இருந்தீங்கனா அதில் உள்ள பல்வேறு சாதக பாதகங்களை நீங்கள் அறிந்து புரிந்துகொண்டு ரூப்டாப் #சோலார்_பேனல் மாட்ட முடிவு செய்ய உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கட்டும்னு இந்த #திரட்ல எனக்கு தெரிஞ்சத எழுதியிருக்கு.!
👇👇👇
முதல்ல நம்ம கவனிக்க வேண்டியது நம்ம ரூப் (சிமெண்ட் சீட்) லைப் சிமெண்ட் சீட்டோட லைப்னு எடுத்துட்டா 20ல இருந்து 25 வருசத்துக்குள்ள தான் நல்லமுறைல இருக்கும், அதற்கு மேல் அதோட எபிசென்சி குறைந்து விடும், 👇
நம்ம புதிதாக மாட்ட இருக்கும் #சோலார்_பேனல்கள அந்த கண்டிசன்ல இருக்க ரூப் மேல லோடு பண்ண முடியாது, ஏன்னா சோலார்_பேனல்க ஒரு டைம் எரக்சன் பண்ணிட்டா 20 வருசத்துக்கு எடுக்க வேண்டியிருக்காது.👇
உலகில் பல நாட்டுகள்ல பல அறிஞர்களோட நவீன தொழில்நுட்ப அறிவுல பல மாடல்கள்ல காற்றின் ஆற்றலைப் பயன்படுத்தி #விண்ட்மில் வழியாக மின் உற்பத்தி செய்வதற்கு வெவ்வேறு வித்தியாசமான டர்பைன்க கண்டுபிடிச்சுயிருக்காங்க அந்த சில டர்பைன் பற்றி இந்த #திரட்ல பதிவு செஞ்சிருக்கு..😍👇
நம்ம இப்ப அதிகமாக பார்த்தது இந்த விண்டுமில் டர்பைன் தான் அது ஒரு பெரிய மூன்று~பிளேடு விசிறி போல் இருக்கும். காற்று வீசும்போது பிளேடு சுழலும் போது விண்டுமில் டர்பைன் வழியாக மின் உற்பத்தியாகி கிரிட்டுக்கு அனுப்ப படுகிறது..👇
இது காற்றிலிருந்து ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான மிகவும் பொதுவான வழியாகும், ஆனால் இந்த தொழில்நுட்பம் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையானது. இது உண்மையில் விண்டுமில் எனர்ஜியை உருவாக்குவதற்கான மிகச் சிறந்த வழியானு பாத்தா..? பல உலக அறிஞர்க இல்லைனு சொல்றாங்க..👇