#SVB Silicon Valley Bank பிரச்சனை - பயந்து ஓடலாமா? துணிந்து இறங்கலாமா? ஒரு சிறப்புப் பார்வை.
மார்ச் 8, 2023 அன்று அந்த வங்கி, தனது balance ஷீட் அட்ஜஸ்ட்மென்ட் க்காக $2.25 பில்லியன் கடன் வாங்கப் போவதாக சொன்னது. இந்த அறிவிப்பு சந்தை மற்றும் வங்கி வட்டாரங்களில் தீயைப் போல பரவியது.
2008 வீழ்ச்சி போல் இது ஆகி விடுமோ என்கிற பயத்தில் பீதியடைந்த முதலீட்டாளர்கள், அடுத்த 48 மணி நேரத்தில் $42 பில்லியன் தொகையை withdraw செய்தனர்.
SVB, அமெரிக்காவின் 16 ஆவது பெரிய வங்கி. 40 வருட பாரம்பரியம் கொண்டது. $175 பில்லியன் அளவுக்கு வாடிக்கையாளர்களின் டெபாசிட்ஸ் வைத்திருந்தது
இந்த வங்கியில் பெரும்பாலும் Startup நிறுவன முதலீட்டாளர்களே அதிகம்.
என்ன நடந்தது?
கடந்த 2020 வருடம், அதன் Balance ஷீட் ல் இருந்த தொகை, மொத்தம் $55 பில்லியன். வெறும் இரண்டு வருடங்களில், அந்த தொகை $186 பில்லியன் ஆனது.
எப்படி?
2020-22 வருடங்களில் வெளியான IPO வில் பெரும்பான்மையான
பணம், இந்த வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. இந்த இரண்டு வருடங்களில் தொடங்கப்பட்ட startup நிறுவனங்களில் சுமார் 50% நிறுவனங்கள் இந்த வங்கியில் தான் தங்களது IPO முதலீடுகளை சேமித்து வைத்தன.
இந்த இரண்டு வருடங்களில் பங்குச்சந்தை அதிகமாக வளர்ச்சி அடைந்ததால், கடன் வாங்கும்
வாடிக்கையாளர்கள் வெகுவாக குறைந்தனர். இதனால், SVB, தங்களது unused cash ஐ Govt Treasury bond களில் முதலீடு செய்ய முடிவெடுத்து, $131 பில்லியனுக்கு Govt Treasury Bond களில் முதலீடும் செய்தது. அந்த முதலீடுகளை, அதிக வட்டிக்காக, 10 வருட bond களில் முதலீடு செய்தது.
இங்கதான் வச்சான் ட்விஸ்ட்...
2022 க்கு அப்புறம், பங்குச்சந்தை லாபங்களில் மக்கள் பொருட்களை வாங்கி குவிக்க, அதனால் பணவீக்கம் உயர, பணவீக்கம் உயர்ந்ததால் Federal Reserve வட்டியினை வெகுவாக உயர்த்த, 10 வருட bond களின் yield மடமடவென சரிந்தது. Yield குறைந்ததால், அவர்கள் வைத்திருந்த
bond களின் மதிப்பும் மளமளவென குறைந்தது.
வட்டி அதிகரிப்பால்,மக்கள் தங்களது டெபொசிட்டுகளை close செய்துவிட்டு பணத்தை எடுத்துவிடுவார்கள் என்று அந்த வங்கி முன்னமே கணித்தது. ஆனால் எவ்வளவு எடுப்பார்கள் என்பதை மட்டும் வெகு குறைவாக கணித்துவிட்டது. அதுதான் சிக்கலின் ஆரம்பம்.
பங்குச்சந்தை வீழ்ச்சியில் இருப்பதும், இந்த நேரங்களில் அதிகமாக IPO க்கள் வராமல் போனதும், அந்த வங்கி, தனது வாடிக்கையாளர்கள் கேட்ட தொகையினை கொடுக்க முடியாமல் போனதற்கு ஒரு முக்கிய காரணம்.
இரண்டாவது காரணம் - ரிஸ்க் மேனேஜ்மென்ட் சரியாக நிர்வகிக்கப் படவில்லை.
இதயெல்லாம் கணிக்க/கவனிக்க அவர்கள் ரிஸ்க் officer ஐ 8 மாதங்களாக appoint செய்யவில்லை.
மக்கள் கூட்டம் கூட்டமாக பணத்தை எடுக்க குவிய, அவர்களிடம் போதிய பணம் இல்லாததால் (எல்லாமும் 1.80% வட்டி தரும் நீண்ட கால அரசு பாத்திரங்களில் லாக் ஆகி விட்டது)
இதனை manage செய்ய, கொஞ்சம் bond களை நஷ்டத்தில் விற்பதாக அறிவித்தது. அந்த நஷ்டத்தை ஈடு செய்ய, $2.2 பில்லியனுக்கு புதிய பங்குகளை சந்தையில் விற்கப் போவதாக அறிவித்தது.
$21 பில்லியன் பெறுமானமுள்ள பாண்ட் விற்பனையில் நஷ்டம் - $1.8 பில்லியன்
புதிய பங்குகள் விநியோகம் - $2.2 பில்லியன்
இந்த செய்திகள், சந்தையிலும், மக்கள் மத்தியிலும் பெரும் பீதியை கிளப்ப, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் விதமாக, Venture Capitalist ஆன Peter Thiel, அவரது முழு முதலீடுகளையும் எடுக்க, தங்களது முதலீட்டாளர்களையும் அதேபோல் செய்ய அறிவுறுத்த, காட்டுத்தீ வேகமாக பரவியது.
இந்த withdrawal களால், வங்கியில் பணமில்லாமல் போக, அவர்கள் சந்தையில் புதிய பங்குகளை விற்பனை செய்ய போக, அதற்கு அவர்கள் எதிர்ப்பார்த்த விலை கிடைக்காமல் போக (எப்படி கிடைக்கும்? இந்தவொரு பீதியில் யார் அந்த நிறுவன பங்குகளை வாங்குவார்கள்?),
பிரச்சனை பெரிதாவதை கண்ட
Federal Deposit Insurance Corporation (FDIC), உடனே தலையிட்டு, ஒவ்வொரு முதலீடுக்கும் $250,000 வரை guarantee அளிப்பதாக உறுதியளித்தவுடன் தான் காட்டுத்தீ சற்றே தணிந்தது. இதே போல் பிற வங்கிகளிலும் பிரச்சனை நடந்திருக்கலாம் என்கிற பயம் முதலீட்டாளர்கள் மத்தியில் இன்னும் உள்ளது.
தென்னை மரத்தில் தேள் கொட்டியவுடன் பனை மரத்தில் நெறி கட்டியது. உலகப் பங்குச்சந்தைகள், குறிப்பாக வங்கிப் பங்குகள் வெகுவாக வீழ்ச்சியடைந்தன.
அந்த வங்கி செய்த தவறுகள் என்ன? 1. நீண்ட கால பாத்திரங்களில் முதலீடு செய்தது. 2. வாடிக்கையாளர்கள் எவ்வளவு பணம் எடுப்பார்கள் என்று குறைத்து
மதிப்பிட்டது. 3. ரிஸ்க் மேனேஜ்மென்ட் முறையாக செய்யப்படாதது.
இது வெறும் சிறிய issue மட்டுமே. இதனால், இந்தியாவின் வங்கிகளுக்கு பாதிப்பு வருமென்று யாரும் பயப்படவோ, பீதியடையவோ வேண்டாம். இந்தியாவின் வங்கிகள் ரிசர்வ் வங்கியால் வெகுவாக கண்காணிக்கப் படுவதால், இந்த சிக்கல் நமக்கில்லை.
ஆகையால், இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, குறைந்திருக்கும் வங்கிப் பங்குகளை (financially strong) வாங்கி உங்கள் portfolio வில் சேர்த்துக் கொள்ளவும்.
பங்குச்சந்தை முதலீட்டுக்கான தாரக மந்திரம்.
Enter when everyone exits.
Exit when everyone enters.
Type of Accounts:
Tier I : Retirement A/c. Mandatory. Cannot withdraw until retirement. Initial Contr - ₹500
Tier II : No restrictions. Anytime withdrawal. Tier II can be opened only if you have a Tier I account. Initial Contr - ₹1000
Annual Min Contr : I - ₹1000, II - ₹250
Market linked returns. Invests in 3 diff funds with a mix of the following asset classes.
Equity (E): Stocks
Corporate Debt (C): PSU Bonds, PFIs, Infra comp and Money Market
Government Securities (G)
Alternative Investment Funds (A): CMBS, REITS, AIFs, etc
செப்டம்பர் 1, 2014 தேதியன்று நீங்கள் சம்பளம் பெறும் ஊழியராக இருந்திருந்தால், ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் அதிக ஓய்வூதியம் (ஓய்வு பெற்ற பிறகு) பெறுவதற்கு உங்கள் நிறுவனம் உங்களுக்கு அதற்கான தெரிவை தெரிவிக்க சொல்லியிருப்பார்கள்.
மாதா மாதம் உங்களுக்கு PF தொகை (நிறுவனத்தின் contribution - 12% of Basic) உங்கள் நிறுவனம் செலுத்தும் அல்லவா? நிறுவனம் செலுத்தும் தொகையை நீங்கள் கவனித்து இருந்தீர்களானால், அது உங்களின் contribution ஐ விட சற்றே குறைவாக இருக்கும்
ஏனென்றால், நிறுவனம் செலுத்தும் தொகை இரண்டு பிரிவாக செலுத்தப்படும்.
EPF - Employee Provident Fund
EPS - Employee Pension Scheme
இதில் EPS க்கு செலுத்தும் தொகை எப்பொழுதுமே ஒரே தொகையாக இருக்கும் (8.33% of ₹15,000 = ₹1,250). ஏனென்றால், இதுவரை, இதன் சம்பள உச்சவரம்பு ₹15,000 ஆக
வங்கிகளுக்குத் தான் அது asset. ஏனென்றால், அவர்கள் கொடுத்த கடனுக்கு வட்டி வருமானம் ஈட்டிக் கொடுப்பதினால்.
₹50 லட்சம் வீட்டுக் கடன் எடுத்து ஒருவர் வீடு வாங்கியிருக்கிறேன் என்று சொன்னால் அது சரியல்ல.
அவர் வீடு வாங்கவில்லை. கடன் வாங்கியிருக்கிறார். அவ்வளவே.
அதுவே, ஒரு வீட்டை கடனில் ஒருவர் வாங்கி, அது அவருக்கு மாதா மாதம் காட்டுகிற EMI + சொத்துவரி + Maintenance இவற்றைவிட அதிகமாக வாடகை வருமானம் ஈட்டித் தந்தால், அப்பொழுது அது Asset வகையில் சேரும்.
ஆனால் வாடகை வருமானம் எப்பொழுதுமே நாம் கட்டும் EMI யில் 1/3 தான் இருக்கும். அதுதான் உண்மை.
1. கடனை வேறொரு வங்கிக்கு மாற்றுதல்.
கூடவே கூடாது... ஏன்?
உதாரணமாக, ஒருவர், ₹40 லட்சம் கடனுக்காக ஒரு வங்கியிடம் ₹40,000 EMI செலுத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம். முதல் ஐந்து வருடங்களில் அவர் செலுத்திய EMI எதில் போய் சேர்ந்திருக்கும்?
வட்டி: ₹21,36,000 (89%)
அசல்: ₹2,64,000
வட்டி விகிதம் அதிகரிக்கின்றது. உடனே அவர் தனது வீட்டுக்கடனை 1% வட்டி குறைப்பிற்காக வேறொரு வங்கிக்கு மாற்றுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் எவ்வளவு கடனை மாற்றுவார்?
பயன்பெறுபவை: 1. Battery electric vehicles (BEV), 2. Plug-in electric vehicles (PEV), 3. Plug-in hybrid electric vehicles (PHEV), 4. Strong hybrid electric vehicles (SHEV)
யாருக்காக: 1. OEM நிறுவனங்கள் - FAME II வழிமுறைப்படி, வாகனம் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்பவர்கள்.
2. உபயோகித்த பாட்டரிகளை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்கள். 3. சார்ஜிங் நிலையங்கள் - Public, Private, Fast & Slow charging stations. 4. பாட்டரி மாற்று நிலையங்கள் - Battery Swapping Stations. 5. மின்சார வாகன நிறுவனங்கள்/நிலையங்களின் அசையாச் சொத்துக்கள்.
1. வருமானம் வேணும்ன்னு GST வரியை ஏத்துறாங்க. 2. Input costs கூடிப்போச்சுன்னு விலையை ஏத்துறான். 3. என்ன விலை ஏறினாலும் வாங்கியே ஆகனும்ங்கிற நிலைமைக்கு மிடில் கிளாஸ் மக்கள் தள்ளப் படுகிறார்கள். 4. விலைவாசி ஏறினா பணவீக்கம் ஏறிடும். 5. பணவீக்கம் ஏறுதுன்னு வட்டியை ஏத்துறானுங்க.
6. வட்டி ஏறிட்டா, எல்லா வங்கிகளும் கடன் வட்டியை உடனே ஏத்துறாங்க. 7. கடன் வட்டி ஏறிட்டா EMI ஏறிடுது. 8. EMI ஏறுற அளவுக்கு மிடில் கிளாஸ்சுக்கு சம்பளம் எற மாட்டேங்கிது. 9. சம்பளம் பத்தலைன்னு மேலும் கடன் வாங்க நேறிடுது.