#அஹோபிலம்
#நரசிம்மரின்_அவதார_ஸ்தலம்_அஹோபிலம்
சென்னையிலிருந்து 400கிமீ தொலைவில் உள்ள திவ்யதேசம் கர்னூல் மாவட்டத்தில், ஆந்திர மாநிலத்தில் உள்ளது. திருப்பதியிலிருந்து சுமார் 300கிமீ. பகவான் ஸ்ரீ நரசிம்மர் ப்ரஹ்லாதனுக்காக தூணைப் பிளந்துகொண்டு வந்த இடம் இதுவே. ப்ரஹ்லாதன் பிற
வளர்ந்து, படித்த இடம்.
பகவான் ஸ்ரீ நரசிம்மர் இங்கே #10கோயில்களில் தரிசனம் தருகிறார்.
1. #திருமலைஸ்ரீநிவாசன் ப்ரதிஷ்டை செய்த #ப்ரஹ்லாதவரதவரதன் ஊருக்குள் கோயில் கொண்டுள்ளார்.

2. #அஹோபிலநரசிம்மர்
அஹோபில குகைக்குள் ப்ரஹ்லாதனோடும் ஸ்ரீசெஞ்சுலக்ஷ்மிதாயாருடன்.

3. #க்ரோடநரசிம்மர்
ப்ரஹ்மாவின் கையிலிருந்து விழுந்த வேதத்தை மீட்க #வராஹ ரூபமாய் மாறிய நரசிம்மர்.

4. #ஜ்வாலாநரசிம்மர்
தூணைப் பிளந்து கொண்டு வந்து, ஹிரணியகசிபுவை தன் மடியில் போட்டு கிழித்த இடம் இதுவே.

5. #மாலோலநரசிம்மர்
லக்ஷ்மியை தன்னோடு வைத்துக்கொண்டு அருளும் அழகான நரசிம்மர். இவரின் உற்சவர் தான்
அஹோபிலமட ஆசார்யர்கள் அழகிய சிங்கரோடு யாத்திரை செல்பவர்.

6. #காரஞ்சநரசிம்மர்
காரஞ்ச வனத்திற்குள் ஆஞ்சநேயருக்கு ராமனாய் வில்லேந்தி காட்சி தந்த நரசிம்மர்.

7. #பார்கவநரசிம்மர்
பார்கவர் எனப்படும் பரசுராமருக்காய் காட்சி தந்த நரசிம்மர்.

8. #பாவனநரசிம்மர்
பாவன நதி தீரத்தில் இருந்து
அருள் பாலிக்கும் நரசிம்மர்.

9. #யோகானந்தநரசிம்மர்
பகவான் நரசிம்மர் ப்ரஹ்லாதனுக்கு யோகம் சொல்லிக்கொடுத்த இடம். தன் உக்ரத்தை விட்டு யோகானந்தமாய் நரசிம்மர் இங்கே காட்சி தருகிறார்.

10. #சத்ரவடநரசிம்மர்
ஆனந்தமாய் சங்கீதம் ரசித்துக் கொண்டு, ஆலமரமே குடையாய் இருக்க ஆனந்தமான நரசிம்மர்
இந்த 10நரசிம்மர் இல்லாமல், நரசிம்மர் அவதரித்த #உக்ரஸ்தம்பம், ப்ரஹ்லாதன் படித்த பள்ளிக்கூட இடம், நரசிம்மர் இரணியனை வதம் செய்துவிட்டு கையை அலம்பிய #ரக்தகுண்டம் இவையெல்லாம் அஹோபிலத்தில் காணவேண்டிய அற்புத இடங்கள்.
#அஹோபிலம் என்றால் ஆச்சரியம் மிக்க பிலம்; சிங்க-குகை. ‘அஹோ’ என்றால்
சிங்க, ‘பிலம்’ என்றால் ‘குகை‘. இரண்யனை சம்ஹாரம் செய்த போது, நரசிம்மரைப் பணிந்து நின்ற தேவர்கள் எல்லாரும் அகோ பலம்! ஆச்சரியம் மிக்க பலம்கொண்டவர் என்று சொல்லி வணங்கினர். திருமாலின் நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்புவதாக கருடன் கேட்க, பகவான் அகோபிலத்தில் 9 நரசிம்ம வடிவங்களில்
#கருடனுக்குக்_காட்சிகொடுத்தார். கருட பகவான், அந்த நரசிம்ம மூர்த்தங்களைப் பூஜித்து வழிபட்டார். கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள #கருப்புமலையிலுள்ள அஹோபிலத்தில் நவ கிரகங்களின் அம்சமாக ஒன்பது நரசிம்ம மூர்த்தியாக சேவை சாதிக்கின்றார் பெருமாள். இது நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த தலம்.
இங்கு பிரகலாதனுக்கு காட்சி கொடுத்ததால் மூலவர் பிரகலாத வரதன் எனப்படுகிறார். மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட #உக்கிரஸ்தம்பம் உள்ளது. இரண்டு நிலைகளாக அமைந்துள்ளது அஹோபில ஷேத்திரம். கீழ் அஹோபிலத்தில் பிரகலாத வரதர் ஆலயமும், மேல் அஹோபிலத்தில் அகோர ந்ருஸிமஹர் ஆலயமும்
அமைந்துள்ளன. மலையடிவாரம் கீழ் அஹோபிலம் என்றும் அடிவாரத்தில் இருந்து 8 கி.மீ உயரத்தில் உள்ள மலைப்பகுதி மேல் அஹோபிலம் என்றும் அழைப் படுகிறது. நவ நரசிம்மர் ஆலயங்கள் மேலும் சுற்றிலும் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளன. மலையேற்றம் அவசியம் என்பதால் அந்த எம்பெருமானின் அருளும் உடல் உறுதியும்
இருந்தால் மட்டுமே நவநரசிம்மர்களை சேவிக்க முடியும் என திருமங்கை ஆழ்வார் தமது பாசுரத்தில் பாடியுள்ளார்.

எவ்வம்வெவ்வேல்பொன்பெயரோன் ஏதலினின்னுயிரை
வவ்வி ஆகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதிடம்,
கவ்வுநாயும்கழுகும் உச்சிபோதொடுகால்சுழன்று,
தெய்வமல்லால் செல்லவொண்ணாச் சிங்கவேள் குன்றமே
(பெரியதிருமொழி:1.7.4; 1011) நரசிம்ம அவதாரம் பிரகலாதன் என்கிற மாபெரும் பக்தனின் நம்பிக்கைக்கு உயிர் கொடுத்தது. பக்தனின் பரிபூரண நம்பிக்கைக்கு அவனுடைய சரணாகதி தத்துவத்திற்கு இலக்கணமாய் அமைந்தவர் நரசிம்மர். எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்த இங்கு இல்லையால் என்று இரணியன் தூண்
புடைப்ப, அங்கு அப்பொழுதே தோன்றியவர் நரசிம்ம ஸ்வாமி. அசுர குலம் தழைக்க வேண்டும் என்று
இரணியகசிபு போர்க்குரல் கொடுத்து, மாபெரும் துன்பங்களை துயரங்களை பிரகலாதனுக்கு கொடுக்க நாராயணனே நமக்கே பறை தருவான் என்கிற திடபக்தியில் பிரகலாதன் நிற்க நெஞ்சு பொறுக்குதில்லையே என்று துடிதுடித்துப்
போனான் இரணியகசிபு. எங்கே உன் இறைவன்? அந்த மாயக் கண்ணன்? இந்த தூணில் இருக்கிறானா என்று மமதையில் ஆணவத் திமிரில் தூணை பிளந்தபோது இதோ பார் என்று இரணியகசிபு மூலமாக உலகிற்கே நிரூபித்துக் காட்டியவர் நரசிம்மஸ்வாமி. நரசிம்மம் பிளந்து கொண்டு வந்த தூண், ஹிரண்யனின் அரண்மனை மண்டபம் இன்றளவும்
திகழ்கின்றன. இரண்டாகப் பிளந்து நிற்கும் மலைதான் அந்தத் தூண், ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் மலைப் பிஞ்சுகள், நரசிம்மம் வெளிப்பட்ட போது உண்டான பூகம்ப அதிர்ச்சியின் அடையாளங்கள். நரசிம்மத்தின் ஒன்பது தத்துவங்களையும் விளக்கும் வகையில்  ஒன்பது அர்ச்சாவதார மூர்த்திகளாகக் காட்சியளிக்கிறார்
திருமங்கையாழ்வார் பத்துப் பாசுரங்களால் இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்து மகிழ்ந்து இருக்கிறார். கீழ் அஹோபிலம், மேல் அஹோபிலம் சேர்த்து ஒரே திவ்ய தேசமாக வழி படுகிறோம். மகா பெரிய அசுரன் ஒருவனை எந்த ஆயுதமும் கைக் கொள்ளாமல், விரல் நகங்களாலேயே வதம் செய்த பராக்கிரமத்தைக் கண்ட தேவர்கள்
‘ஆஹா, பரந்தாமனுக்குதான் என்ன பலம்!’ என்று வியக்க, அந்த ஆச்சரியமே ‘அஹோப(பி)லம்’ என்ற பெயரை இத்தலத்திற்கு அளித்ததாகவும் சொல்வார்கள். லக்ஷ்மி நரசிம்மர்-பிரகலாத வரதன் (லஷ்மி நரசிம்மர்-அம்ருதவல்லி, செஞ்சுலஷ்மி) இவர்களை திருப்பதி சீனிவாசப் பெருமாள் தனது திருக்கல்யாணம் முடிந்து வணங்கிய
பெருமாள்-சீனிவாசப் பெருமாள் சன்னிதியும் உண்டு.
#10தகவல்கள்
1. நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்த இடம்
அஹோபிலம் (சிங்கவேள்குன்றம்)
2. நரசிம்மவழிபாட்டிற்கு மிக உகந்தவேளை பிரதோஷ வேளை (மாலை 4.30-6))
3. இரணியனை சம்ஹரித்த நாள்
சதுர்த்தசி திதி
4. நரசிம்ம வழிபாட்டிற்குரிய நட்சத்திரம் சுவாதி
(நரசிம்மரின் ஜென்ம நட்சத்திரம்)
5. பக்தன் என்ற அடைமொழியோடு அழைக்கப் படும் பக்தன். பக்த பிரகலாதன்
6. அஹோபிலத்தில் நரசிம்மருக்கு எத்தனை கோயில்கள் உள்ளன?
ஒன்பது (நவநரசிம்மர் கோயில்)
7. நரசிம்மருக்குரிய நிவேதனம் பானகம், தயிர் சாதம்
8. பிரகலாதனுக்கு ஹரி மந்திரத்தை உபதேசித்தவர் நாரதர்
9. நரசிம்மரின் பெயரைக் கொண்ட தமிழ்ப்புலவர்கம்பர் (தூணில் அவதரித்தவர் என்பதால் நரசிம்மருக்கு கம்பர் என்று பெயர்)

10. நரசிம்மரின் பெருமையை எப்படி குறிப்பிடுவர்?
நாளை என்பது இல்லை நரசிம்மனிடத்தில்

ஶ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹர்ப்பணமஸ்து
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Mar 18
#உதாரணம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி முதல் பெண் மருத்துவர் அடையார் புற்றுநோய் மையத்தின் நிறுவனர்.
டாக்டர் சாந்தா தன் வாழ் நாளை மொத்தமும் புற்றுநோய் சிகிச்ஷைக்கு அர்பணித்து அடையார் மையத்தை கட்டியெழுப்பியவர்
டாக்டர் G.வெங்கடசாமி அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர் ஆயிரக் ImageImage
கணக்காருக்கு கண்ணொளி தந்தவர். இன்னும் இதுபோல் நூறு நல்ல மருத்துவர்களை இந்த நிலம் கொடுத்துள்ளது!
ஆனால் #திமுகஅரசு ஒரு அடிப்படை தேர்வை மீண்டும் எதிர்கொள்ள தைரியமில்லாமல் தற்கொலை செய்துகொண்ட ஒரு சிறுமியின் பெயரை தங்கள் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தியதோடு நில்லாமல் இன்று ஒரு
கட்டிடத்திற்குப் பெயர் வைக்கும் நிலைக்கு தரம் தாழ்ந்துள்ளது. இப்படி பெயர் வைப்பதால் சமூகத்துக்கு இந்த அரசு என்ன சொல்லல வருகிறது? மிக ஆபத்தான கருத்தை உதாரணம் ஆக்குகிறது. தமிழக மக்கள் எவ்வளவு பெரிய முட்டாள்கள், எப்படி இவர்களை இமொஷனல் பிளாக் மெயில் செய்யலாம் என்பதை புரிந்து கொண்டு
Read 4 tweets
Mar 18
#நற்சிந்தனை ஒரு குருகுலத்தில் பாடம் நடந்துக் கொண்டிருந்தது. அப்போது ஒரு மாணவன், "குருவே, அனைத்தும் அறிந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் நம்மைச் சோதிப்பது ஏன்? கஷ்டங்களைச் சந்திக்காமல் அவன் அருளைப் பெறவே முடியாதா?" என்றுக் கேட்டான்.
"நல்ல கேள்வி. உனக்கு நான் நாளை பதில் அளிக்கிறேன்." Image
என்றுக் கூறினார் குரு. மறுநாள் மாணவர்கள் ஆவலுடன் வகுப்புக்கு வந்தனர். மாணவர்களுக்கு முன்னால் மண்ணால் செய்யப்பட்ட இரண்டு ஜாடிகள் இருந்தன. இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருந்தன.
"இங்கே இருப்பது என்ன? இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?" மாணவர்களைக் கேட்டார் குரு.
"இரண்டு ஜாடிகளும் அத
ஒரே இடத்தில் தயார் செய்யப்பட்டவை தான். ஒரே கொள்ளளவு கொண்டவை தான். இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?”மாணவர்களைப் பார்த்துக் கேட்டார். அவர்கள் தெரியவில்லை என்றனர்.
"ஆனால் இரண்டிற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது." என்றபடியே மாணவர்களுக்கு எதிரே முதல் ஜாடியைத் தள்ளி கவிழ்த்தார்.
Read 9 tweets
Mar 18
#மதுரை_மீனாக்ஷி_அம்மன்_திருக்கோவில் #சிறுகுறிப்பு முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தைக் கண்டறிந்து, முதலில் இந்தக் கோவிலையும், பின் மதுரை நகரத்தையும், குலசேகரப் பாண்டிய மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு. கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து, அழகிய நகரமாக்கும்படி, பாண்டிய ImageImage
நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகரப் பாண்டியனின் கனவில், மதுரை சொக்கன் தோன்றிக் கூறியதால், அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி, புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. Image
2500 வருடங்கள் பழமையான மதுரை நகரானது, தமிழ் இலக்கிய வரலாற்றிலும், இந்து சமய வரலாற்றிலும் முக்கியம் வாய்ந்தது. மதுரை நகர், திருவாலவாய், சிவராச தானி, பூலோக கயிலாயம், கடம்ப வனம், நான்மாடக் கூடல், சிவ நகரம், துவாதசாந்தத் தலம், சமட்டி வித்தியாபுரம், கன்னியாபுரம் ஆகிய பெயர்களில் Image
Read 8 tweets
Mar 17
#நற்சிந்தனை
ஒருமுறை ஶ்ரீ ஆதிசங்கரர் ஒரு கிராமத்தின் வழியே போய்க் கொண்டிருந்த போது, அவரைக் கண்ட விவசாயி ஒருவன் சாமியாவது, பூதமாவது, நடக்குறது தானே நடக்கும் என்ற கேள்வியை அவரிடம் கேட்டான்.
ஆதிசங்கரர் அவனிடம், மகனே, இங்கிருக்கும் ஓடையைக் கடந்துப் போக உதவி செய். நான் உனக்கு பதில்
அளிக்கிறேன் என்றார். அவன் அந்த ஓடையின் குறுக்கே போடப்பட்டிருந்த ஒற்றை பனைமரத்துண்டு பாலத்தின் மீது ஏறி பக்கத்திலிருந்த ஒரு மூங்கில் கழியை பிடித்தபடி நடந்தான். சங்கரரும் அந்தக் குச்சியைப் பிடித்தபடி பாலத்தைக் கடந்தார். அக்கரையில் இறங்கியதும் நன்றி தெரிவித்தார். அதற்கு அவன்,
எனக்கு எதுக்கு நன்றி? நீங்கள் ஓடையைக் கடந்ததற்கு இந்த மர பாலத்துக்கல்லவா நன்றி சொல்லனு என்றான்.
ஓகோ! அக்கரையிலிருந்து இக்கரைக்குக் கொண்டு வந்துவிட்டது இந்தப் பாலம் தானா? அப்படி என்றால் அந்த மூங்கில் குச்சியை எதற்காக பக்கத்தில் கட்டி வச்சிருக்காங்க என ஆதி சங்கரர் கேட்டார்.
Read 6 tweets
Mar 17
We have heard the terms #Shruti and #Smriti in Vedic literature. What are they?
The ancient Vedic literature is largely divided into two sections, one called “Shruti” and the other “Smriti”. Shruti is often considered the original knowledge of self or brahman, making it the
ultimate authority in Hinduism, whereas Smriti is the interpretation given to Shruti by great sages of the time.
#Shruti
In Sanskrit, the word ‘Shruti’ means ‘what is heard’. Sru means to hear. Iti mean thus. Sruti means thus heard. Srutam is the object of hearing. Srotha means
the audience, or those who hear a speech. In a religious or spiritual sense, Shruti means the knowledge which was heard by revelation. The Vedas are considered Shruti because they were originally heard from God by the Vedic seers who then transmitted it to to their successors and
Read 16 tweets
Mar 16
#இந்தியாவில்_உள்ள_பழமையான_நவக்கிரக_கோவில்கள்

1. தமிழ்நாடு
கும்பகோணத்திற்கு அருகில் உள்ளன மிகப் பழமையான நவக்கிரக கோவில்கள். இவை சோழ வம்சத்தைச் சேர்ந்த நவக்கிரக கோயில்களின் தொகுப்பாகும். இவை 7 முதல் 9 ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்டவை.
சூரிய நவகிரஹஸ்தலம் - சூரியனார் கோவில் ImageImage
சந்திர நவகிரஹஸ்தலம் - கைலாசநாதர் கோவில், திங்களூர்
அங்காரகன் நவகிரஹஸ்தலம் -  வைத்தீஸ்வரன் கோவில்
புத்த நவகிரஹஸ்தலம் -  திருவெண்காடு
குரு நவகிரஹஸ்தலம் -  ஆலங்குடி
சுக்ர நவகிரஹஸ்தலம் - அக்னீஸ்வரர் கோவில், கஞ்சனூர்
சனி நவகிரஹஸ்தலம் -  திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில்
ராகு நவகிரஹஸ்தலம் - Image
ஸ்ரீ நாகநாதசுவாமி கோவில், திருநாகேஸ்வரம்
கேது நவகிரஹஸ்தலம் - கீழ்பெரும்பள்ளம் கோவில்

2. கேரளா
கிளிமரத்துகாவு குளத்துபுளா அருகே திருவனந்தபுரம் அருகே உள்ள அந்த ஊரில் நவக்கிரகக் கோயில் விண்மீன் மண்டலத்தைப் போலவே நீள்வட்ட அமைப்பில் உள்ளது.

3.அஸ்ஸாம்
கௌஹாத்தி நகரில் உள்ள சித்ரசல் Image
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(