K. RAJESH Profile picture
Mar 22 15 tweets 3 min read
வங்கிகள் எப்படியெல்லாம் வாடிக்கையாளர்களை ஏமாற்றுகின்றன?

ஒரு சிறிய இழை. படித்து, பயன்பெறவும்.

1. லோன் எடுக்கையில் இன்சூரன்ஸ் "கட்டாயம்" என்று சொல்லுவது.

வாகன இன்சூரன்ஸ் தவிர, மற்ற எந்த இன்சூரன்சுமே இந்தியாவில் கட்டாயம் கிடையாது.

மேலும் விபரங்களுக்கு: bit.ly/skymanwp
Insurance is a subject matter of solicitation.
இன்சூரன்ஸ் எடுப்பது தனிநபர் விருப்பத்தை பொறுத்தது. வங்கிகள், பெரும்பாலும், லோன் எடுப்பவர்களைத்தான் குறி வைக்கின்றன. அவர்களுடைய ரிஸ்க்கை குறைக்க, மற்றும் upselling மூலம் தங்களுக்கு அதிக லாபம் தரக்கூடிய பொருட்களை விற்க, இந்த வழியை
பயன்படுத்துகின்றன.

பர்சனல் லோனுக்கு இன்சூரன்ஸ் தேவையில்லை. ஏனென்றால், அதனுடைய ரிஸ்க் அதிகமாதலால், வட்டியும் அதிகம். நீங்கள் எடுக்க வேண்டுமென்பது கட்டாயம் இல்லை. அந்த ரிஸ்க்கை அவர்கள் தான் எடுக்க வேண்டும். நாம் அல்ல.

வீட்டு லோன் மற்றும் நகைக்கடன் - இவை இரண்டுமே, loan against
collateral.

வங்கிகளுக்கு இந்த இரண்டு கடன்களிலுமே ரிஸ்க் என்பது 0%. ஏனென்றால், உங்களுடைய சொத்தின் அடிப்படையில் இந்த கடன் கொடுக்கப் படுகிறது. இதற்கும் இன்சூரன்ஸ் கட்டாயம் என்று கூறி, அவர்களுடைய products ஐ நம் தலையில் கட்டி விடுகிறார்கள்.

இதை வாடிக்கையாளர்கள் மறுக்க வேண்டும்.
இதை எடுத்தால் தான் உங்களுக்கு லோன் கிடைக்குமென்று சொன்னால், அது its against the insurance rules. நீங்கள் தாராளமாக மறுக்கலாம்.

2. ULIP - வங்கிகளுக்கு பெரும் லாபம். உங்களுக்கு நஷ்டம். இதை ஏமாற்றி விற்பது.

பெரும்பாலான வங்கிகள் இதனை இப்பொழுது ULIP என்று அழைப்பதில்லை.
"Investment product with Insurance" என்று ஏமாற்றி தலையில் கட்டி விடுவார்கள். உங்களுடைய முதல் ப்ரீமியத்தில் சுமார் 25% வரை சார்ஜ் பிடிப்பார்கள். கேட்டால், "இது ஒன்னுமில்லை சார்/மேடம். எல்லாருக்கும் பிடிப்பதுதான்" என்று சமாளிப்பார்கள்.

எந்தவொரு முதலீட்டுக்கு இந்த அளவுக்கு
கட்டணம் கிடையாது. முதலீடுகளில் அதிகப்படியான கட்டணமே 2.25% தான் (Mutual Funds). அதுவும் வருடத்திற்கு.

வங்கிகள் ஏதாவது முதலீட்டு வாய்ப்புகளை உங்களுக்கு விற்க முனைந்தால், அதற்கு இரண்டே காரணங்கள் தான்.
1. அவர்கள் அதிக லாபம் சம்பாதிக்க.
2. டார்கெட்டை அடைய.
நீங்கள் சுதாரிப்பது எப்படி?
அவர்கள் சொல்லும் முதலீட்டு வாய்ப்பின் வழங்குப் பத்திரம் (prospectus) வாங்கி முழுவதுமாக படிக்கவும். உங்களுக்கு புரியாத விஷயங்களாக இருந்தால், நல்ல முதலீட்டு ஆலோசகரை தொடர்பு கொள்ளவும்.

அந்த product உங்களுடைய financial goals க்கு எந்த விதத்திலும்
உதவி செய்யவில்லையென்றால், அதனை அறவே தவிர்த்துவிடவும். "நான் வீட்டுக்கு போய், கலந்து பேசிட்டு சொல்றேன்" ன்னு சொல்லிட்டு, பின்னங்கால் பிடரியில் படுமளவுக்கு வீட்டை நோக்கி ஓடிவிடவும். அதுதான் உங்கள் பணத்திற்கு நல்லது.

ஒன்றை மட்டும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
வங்கிகள், எந்நாளும் தங்கள் வாடிக்கையாளர்களின் நலனுக்கான பொருட்களை விற்பனை செய்வதில்லை. இதுதான் நிஜம். They don't run a bank. They run a business. They don't want your well being. They just want your money. That's all.
3. Processing Fees மற்றும் இதர கட்டணங்கள்.
ஒரு கடன் கொடுப்பதற்கான அனைத்து செலவினங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டே, வங்கிகள் கடனுக்கான வட்டியை நிர்ணயிக்கின்றன. அதற்கும் மேலே, 0.50% முதல் 2% வரை Processing Fees வசூலிக்கின்றன. இது போதாதென்று documentation charges மற்றும் இன்ன பிற.
இவைகளை முழுவதுமாக நம்மால் avoid பண்ண முடியாவிட்டாலும் கடன் எடுக்கும் முன்பு, Processing Fees மற்றும் இதர கட்டணங்களை குறைக்கச் சொல்லலாம். வட்டியை கூட நீங்கள் குறைக்கச் சொல்லலாம்.

இவையெல்லாம் எப்பொழுது நீங்கள் பேச வேண்டும் தெரியுமா?

லோன் approve ஆனா பின்பு, disbursal க்கு முன்பு.
Once லோன் approve ஆகிவிட்டால், அவர்கள் அதை disburse செய்தே ஆகவேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் negotiate செய்யும் மனநிலையில் இருப்பார்கள்.

ஆகையால் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். negotiate செய்து, வட்டியை மற்றும் Processing Fees இரண்டையும் குறைக்க முயற்சி செய்யுங்கள்.
ஒன்றே ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு தேவையென்றால் மட்டுமே முதலீட்டு products வாங்கவும். இல்லையென்றால், தேவையில்லை.

உங்களுக்கான, நம்பிக்கையான ஒரு முதலீட்டு ஆலோசகரை (நண்பர், சொந்தம், Advisor) தேர்வு செய்து கொள்ளவும்.
உங்கள் நம்பிக்கையானவர்களிடம் கலந்தாலோசித்து, உங்களுடைய financial goals க்கு அந்த முதலீடு உதவுமென்றால் மட்டுமே அதில் இறங்கவும். இல்லையென்றால் தேவையில்லை.

முதலீட்டு instruments விற்கும் நண்பர்கள்/சொந்தங்களிடமும் இதே வழியை பின்பற்றவும்.

பணம் பத்திரம். #வாழ்கபணமுடன். 🙏🙏🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with K. RAJESH

K. RAJESH Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @rajeshkmoorthy

Mar 20
#TNBudget2023#PTRPalanivelThiagarajan சொல்லுறது ஒண்ணே ஒன்னுதான்...

படிங்கப்பா, படிங்கம்மா. பள்ளிக்கூடத்துக்கு வாங்க பிள்ளைகளா. மத்ததை எல்லாம் நாங்க பார்த்துக்குறோம்.

Fiscal Deficit ஐ 50% குறைச்சதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயமில்லை. அது நிதியமைச்சரோட goals ல ஒன்னு.

ஆனா...
கல்விக்கான ஒதுக்கீடுகள் தான் இந்த பட்ஜெட் ல கவனிக்க வேண்டிய விஷயம். மேம்போக்கா நிதி ஒதுக்கீட்டு போகாம, அடிப்படை கல்விக்கான challenges என்னென்ன என்பதை நன்றாக ஆராய்ந்து, அதற்கேற்றவாறு பட்ஜெட் allocation கல்வி, மற்றும் கல்வி நிலையங்களின் மேம்பாட்டிற்காக செய்யப் பட்டுள்ளது.
கல்விக்கான ஒதுக்கீடு (உயர்கல்வி உட்பட), கல்வி கற்று வரும் மாணாக்கருக்கு வேலை வாய்ப்பு தருவதற்கான தொழிற்துறை முன்னேற்றத்திற்கான ஏற்பாடுகள், மகளிர் சுய உதவிக் குழு மூலம் சொந்த தொழில் தொடங்க கடனுதவி, SIPCOT மூலம் வேலைவாய்ப்பு என்று ஒரு better நீண்ட கால forward-looking budget இது.
Read 6 tweets
Mar 15
#SVB Silicon Valley Bank பிரச்சனை - பயந்து ஓடலாமா? துணிந்து இறங்கலாமா? ஒரு சிறப்புப் பார்வை.

மார்ச் 8, 2023 அன்று அந்த வங்கி, தனது balance ஷீட் அட்ஜஸ்ட்மென்ட் க்காக $2.25 பில்லியன் கடன் வாங்கப் போவதாக சொன்னது. இந்த அறிவிப்பு சந்தை மற்றும் வங்கி வட்டாரங்களில் தீயைப் போல பரவியது.
2008 வீழ்ச்சி போல் இது ஆகி விடுமோ என்கிற பயத்தில் பீதியடைந்த முதலீட்டாளர்கள், அடுத்த 48 மணி நேரத்தில் $42 பில்லியன் தொகையை withdraw செய்தனர்.

SVB, அமெரிக்காவின் 16 ஆவது பெரிய வங்கி. 40 வருட பாரம்பரியம் கொண்டது. $175 பில்லியன் அளவுக்கு வாடிக்கையாளர்களின் டெபாசிட்ஸ் வைத்திருந்தது
இந்த வங்கியில் பெரும்பாலும் Startup நிறுவன முதலீட்டாளர்களே அதிகம்.

என்ன நடந்தது?

கடந்த 2020 வருடம், அதன் Balance ஷீட் ல் இருந்த தொகை, மொத்தம் $55 பில்லியன். வெறும் இரண்டு வருடங்களில், அந்த தொகை $186 பில்லியன் ஆனது.

எப்படி?
2020-22 வருடங்களில் வெளியான IPO வில் பெரும்பான்மையான
Read 16 tweets
Mar 13
#NPS - #NationalPensionSystem

Voluntary #retirement scheme.
Managed by #PFRDA (Pension Fund Regulatory and Development Authority).
Anyone from 18 to 65 yrs of age can invest.

For New NPS Registration: dynm.in/F2147
For NPS Contribution: dynm.in/93AC2
Type of Accounts:
Tier I : Retirement A/c. Mandatory. Cannot withdraw until retirement. Initial Contr - ₹500
Tier II : No restrictions. Anytime withdrawal. Tier II can be opened only if you have a Tier I account. Initial Contr - ₹1000

Annual Min Contr : I - ₹1000, II - ₹250
Market linked returns. Invests in 3 diff funds with a mix of the following asset classes.
Equity (E): Stocks
Corporate Debt (C): PSU Bonds, PFIs, Infra comp and Money Market
Government Securities (G)
Alternative Investment Funds (A): CMBS, REITS, AIFs, etc
Read 9 tweets
Feb 28
EPF - அதிக பென்ஷன் பெரும் தேர்வு.

செப்டம்பர் 1, 2014 தேதியன்று நீங்கள் சம்பளம் பெறும் ஊழியராக இருந்திருந்தால், ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் அதிக ஓய்வூதியம் (ஓய்வு பெற்ற பிறகு) பெறுவதற்கு உங்கள் நிறுவனம் உங்களுக்கு அதற்கான தெரிவை தெரிவிக்க சொல்லியிருப்பார்கள்.
சரி. அப்படீன்னா என்னன்னு குழப்பமா இருக்கா? சொல்றேன்.

மாதா மாதம் உங்களுக்கு PF தொகை (நிறுவனத்தின் contribution - 12% of Basic) உங்கள் நிறுவனம் செலுத்தும் அல்லவா? நிறுவனம் செலுத்தும் தொகையை நீங்கள் கவனித்து இருந்தீர்களானால், அது உங்களின் contribution ஐ விட சற்றே குறைவாக இருக்கும்
ஏனென்றால், நிறுவனம் செலுத்தும் தொகை இரண்டு பிரிவாக செலுத்தப்படும்.
EPF - Employee Provident Fund
EPS - Employee Pension Scheme

இதில் EPS க்கு செலுத்தும் தொகை எப்பொழுதுமே ஒரே தொகையாக இருக்கும் (8.33% of ₹15,000 = ₹1,250). ஏனென்றால், இதுவரை, இதன் சம்பள உச்சவரம்பு ₹15,000 ஆக
Read 12 tweets
Feb 24
Asset க்கும் Liability க்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

எந்தவொரு பொருள் உங்களின் முதலீட்டிற்கு பணமீட்டித் தருகிறதோ, அதுதான் Asset.

நீங்கள் கடனில் வாங்கிய வீடு (தற்பொழுது குடியிருப்பது), Asset அல்ல. கடனில் வாங்கும் எதுவும் Asset கிடையாது.
வங்கிகளுக்குத் தான் அது asset. ஏனென்றால், அவர்கள் கொடுத்த கடனுக்கு வட்டி வருமானம் ஈட்டிக் கொடுப்பதினால்.

₹50 லட்சம் வீட்டுக் கடன் எடுத்து ஒருவர் வீடு வாங்கியிருக்கிறேன் என்று சொன்னால் அது சரியல்ல.

அவர் வீடு வாங்கவில்லை. கடன் வாங்கியிருக்கிறார். அவ்வளவே.
அதுவே, ஒரு வீட்டை கடனில் ஒருவர் வாங்கி, அது அவருக்கு மாதா மாதம் காட்டுகிற EMI + சொத்துவரி + Maintenance இவற்றைவிட அதிகமாக வாடகை வருமானம் ஈட்டித் தந்தால், அப்பொழுது அது Asset வகையில் சேரும்.

ஆனால் வாடகை வருமானம் எப்பொழுதுமே நாம் கட்டும் EMI யில் 1/3 தான் இருக்கும். அதுதான் உண்மை.
Read 6 tweets
Feb 23
வீட்டுக்கடன் வட்டி அதிகரிப்பு - என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

தற்போதுள்ள 6.5% ரெபோ வட்டி விகிதத்தால், அனைத்து வீட்டுக் கடன்களின் வட்டிகளையும் வங்கிகள் அதிகரித்து விட்டன. அதன் பெருஞ்சுமை மக்களை வாட்டி வதைக்கிறது.

இந்த நேரத்தில் என்ன செய்யக் கூடாது?

bit.ly/skymanwp
1. கடனை வேறொரு வங்கிக்கு மாற்றுதல்.
கூடவே கூடாது... ஏன்?

உதாரணமாக, ஒருவர், ₹40 லட்சம் கடனுக்காக ஒரு வங்கியிடம் ₹40,000 EMI செலுத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம். முதல் ஐந்து வருடங்களில் அவர் செலுத்திய EMI எதில் போய் சேர்ந்திருக்கும்?

வட்டி: ₹21,36,000 (89%)
அசல்: ₹2,64,000
வட்டி விகிதம் அதிகரிக்கின்றது. உடனே அவர் தனது வீட்டுக்கடனை 1% வட்டி குறைப்பிற்காக வேறொரு வங்கிக்கு மாற்றுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் எவ்வளவு கடனை மாற்றுவார்?

₹37,36,000 (₹40 லட்சம் - அசல் கட்டியது ₹2,64,000)

பிரச்சனை என்னவன்றால், இந்த புதிய வங்கி, இந்த கடனை
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(