*தஞ்சை மாவட்டம், பாபநாசத்தை அடுத்த திருப்பாலைத்துறையில் *தவளவெண்ணகையாள் சமேத பாலைவனநாதர் சுவாமி கோயில்* உள்ளது.
இக்கோயில் தேவாரம் பாடல் பெற்ற, சோழ நாடு காவிரி தென்கரை தலம் சிவன் கோயிலாகும்.
1
இக்கோயிலின் இடப்புறத்தில், தஞ்சைநாயக்கமன்னர்கள் காலத்தில் அமைக்கப்பெற்ற 12 ஆயிரம் கலம் நெல்லை சேமிக்கும் அளவு கொண்ட மிகப்பெரிய நெற்களஞ்சியம் உள்ளது.
2
களஞ்சியத்தின் உள்பகுதி மற்றும் வெளிபகுதி பூசப்படவில்லை என்பது இந்த களஞ்சியத்திற்கு மேலும் சிறப்பை சேர்க்கிறது. இந்த அதிசய குதிர் 36 அடி உயரம் உள்ளது. இதன் சுற்றளவு 80 அடியாகும். களிமண் மூலம் செய்யப்பட்ட 5 செ.மீ. உயரம் கொண்ட செங்கற்களை சுட்டு சுற்றுச்சுவரை கட்டி உள்ளனர்.
3
வட்ட அமைப்பில் கூம்பு வடிவக்கூரையுடன் ஏறத்தாழ 60 அடி உயரத்துடன் செங்கற்களால் இக்களஞ்சியம் கட்டப்பெற்றுள்ளது.
திருப்பாலைத்துறை கோயில் கோபுரம், திருப்பாலைத்துறை நெற்சேமிப்புக்கிடங்கு தீட்சிதரின் முயற்சியில் கட்டப்பட்டவையாகும்.
4
தமிழகத்தின் நெற்களஞ்சியம் என போற்றப்படும் தஞ்சை தரணியில் மன்னர் காலத்தில் அமைக்கப்பட்ட மாபெரும் குதிர் ஒன்று இன்றைக்கும் நிமிர்ந்து நிற்கிறது.
5
நாட்டில் வறட்சி நிலவிய காலத்திலும், கொடும் பஞ்சம் தலைவிரித்தாடிய கால கட்டத்திலும் நெல்லை வாரி வழங்கி மக்களின் பஞ்சத்தை போக்கிய சிறப்பு இந்த நெற்குதிருக்கு உண்டு.
6
இந்த அபூர்வ நெற்களஞ்சியம் (நெற்குதிர்) தஞ்சையை ஆட்சி செய்த அச்சுதப்ப நாயக்கர், ரெகுநாத நாயக்கர் போன்ற நாயக்க மன்னர்களின் ஆட்சியின் போது அமைச்சராக திகழ்ந்த கோவிந்த தீட்சிதர் என்பவரால் உருவாக்கப்பட்டது.
7
பலத்த மழை பெய்தாலும் உள்ளே வெள்ள நீர் புகாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இந்த களஞ்சியம் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
8
நெற்களஞ்சியத்தின் அடிப்பகுதி, மேற்பகுதி, நடுப்பகுதி என மொத்தம் 3 பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வாயில் என 3 வாயில்கள் உள்ளன.
9
முதலில் அடிப்பகுதியில் உள்ள வாயில் வழியாக நெல்லை கொட்டுவார்கள். அந்த வாயில் பகுதி வரை நெல் நிரம்பியவுடன், அதை அடைத்துவிட்டு, 2-வது வாயில் வழியாக நெல்லை கொட்டுவார்கள். அந்த வாயில் பகுதியும் நிரம்பியவுடன் 3-வது வாயில் வழியாக நெல்லை கொட்டுவார்கள்.
10
3 வாயில்களும் நிரம்பினால் நெற்குதிர் நிரம்பிவிடும். சுமார் 3 ஆயிரம் டன் வரையிலான நெல்லை இந்த குதிரில் சேமிக்கலாம்.
11
ரெகுநாதநாயக்க மன்னர் கோவிலில் திருப்பணிகளை மேற்கொண்டார். அப்போது கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் விளைந்த நெல்லை சேமிக்க நெற்குதிர் ஒன்றை அமைக்க வேண்டும் என விரும்பி இருக்கிறார். மன்னரின் விருப்பத்தை அவரது அமைச்சராக இருந்த ..
கோவிந்ததீட்சிதர் நிறைவேற்றி உள்ளார்.
12
பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பாலைவனநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் விளைந்த நெல்லை இந்த நெற்குதிரில் சேமித்து வைத்தனர்.
13
நாட்டில் பஞ்சம் ஏற்படும் போது இந்த நெற்குதிரை திறந்து அதிலுள்ள நெல்லை மக்களுக்கு வாரி வழங்கி மக்களின் பசிப் பிணியை போக்கினார், மன்னர்.
இதில் சேமிக்கப்படும் நெல் 5 வருடம் வரை கெட்டுப்போகாது.
14
1966-ம் ஆண்டு தொல்பொருள் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்படும் இந்த அபூர்வ நெற்களஞ்சியம். இதேபோல தமிழகத்தில் உள்ள பெரும்லான கோவில்களில் நெற்களஞ்சியங்கள் மன்னர் காலத்தில் அமைக்கப்பட்டன. காலப்போக்கில் அந்த நெற்களஞ்சியங்கள்அழிந்து விட்டன.
15
ஆனால் 500 ஆண்டுகளை கடந்தும் இன்னும் கொஞ்சம் கூட பழமை மாறாமல் நம் மன்னர்களின் கட்டிடக்கலையை பறைசாற்றிக் கொண்டு இருக்கிறது இந்த நெற்களஞ்சியம்
நம் முன்னோர் 500 ஆண்டுகளுக்கும் முன்பே 5 ஆண்டுகள் வரை ஒரு நெல் கூட கெட்டுப்போகாதவாரு பாதுகாத்து பயன்படுத்தி உள்ளனர்
16
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் பாபநாசத்தில் மெயின் ரோட்டிலேயே இக்கோவில் உள்ளது.பஸ்ஸில் பயணிக்கும் போதே இந்த கோவிலையும் இந்த நெற்களஞ்சியத்தையும் காணமுடியும்.
மைக்கேல் ஜாக்சன் 150 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று நினைத்தார்...
அதற்காக வீட்டில் 12 டாக்டர்களை வேலைக்கு அமர்த்தினார். தினமும் உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை அவர்கள் ஜாக்சனைப் பரிசோதிப்பார்கள்...
கண்டிப்பாக பரிசோதனைக் கூடத்தில் பரிசோதிக்கப்பட்ட பின்னரே அவருக்கான உணவு வழங்கப்படும்...
தினமும் அவர் செய்யும் உடற்பயிற்சிகளைக் கண்காணிக்க இன்னொரு 15 நபர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள்...
ஆக்சிஜன் லெவலை சமன்படுத்திக் கூடிய டெக்னாலஜி அவர் படுக்கையில் இருந்தது...
ஒரு ஆச்சரியமான விஷயம் என்னன்னா... தேவைப்பட்டால் உடனடியாக உறுப்புகளை மாற்ற வேண்டும் என்பதற்காக ஆர்கன் டோனர்ஸ் தயாராக வைக்கப்பட்டிருந்தார்கள். அந்த டோனர்களுக்கான தினப்படி செலவுத் தொகையை ஜாக்சனே வழங்கி வந்தார்...
சென்னை-வேளச்சேரி பகுதியில், மூன்று கோயில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஒன்று, தண்டீஸ்வரம் கோயில், இங்கு சிவன் அருள்பாலிக்கிறார். மற்றொன்று, யோக நரசிம்மர் கோயில், மூன்றாவது, பிடாரி செல்லியம்மன் கோயில்.
1
இந்த கோயிலை பற்றி இந்த
பதிவு..
இந்த மூன்று கோயில்களுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன.
பல்லவ காலத்தில் கட்டப்பட்ட கோயில்களாகும்.
மூன்று கோயில்களும் அருகருகே இருப்பதும், ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட கோயில்களாகவும் காணப்படுகின்றன.
2
வேளச்சேரி, தண்டீஸ்வரம் சிவன் கோயில் எதிரே அழகிய கட்டிட வேலைப் பாடுகளுடன், ``அருள் மிகு பிடாரி செல்லியம்மன்’’ திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், சாமுண்டேஸ்வரி, பிரம்மி, வாராஹி, வைஷ்ணவி, மகேஸ்வரி, கௌமாரி, இந்திராணி ஆகிய சப்தமாதர்கள் அருள்பாலிக்கிறார்கள்.
சாஸ்திரத்தின் படி, கன்று குடித்த பின்னர், அதன் வாய் எச்சில் பசுவின் மடியில் (காயாமல்) இருக்கும் முன்னரே கறக்கப்படும் பால் புனிதமானது. இறைவனின் திருமஞ்சனத்திற்கு இந்த பால் உகந்தது. எனவே, "கன்றின்" எச்சில் புனிதமானது.
வாந்தி பரிசுத்தம் (தேன்):
தேன் என்பது தேனீ உண்ட உணவு, பாதி செரித்த பிறகு அது உமிழும் மீதம் (அதாவது வாந்தி). இதுவும் பூஜைக்கு உகந்ததே.
தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலை குளிர்ச்சியாக்க முடியும்.
கோடை காலத்தையும், கோடை கால நோய்களைத் தவிர்க்கவும், தினமும் 3 லிட்டர் முதல் 5 லிட்டர் வரை சுகாதாரமான தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். உடல் சூட்டை தணிக்க இளநீர், ஜூஸ், மோர், எலுமிச்சை ஜூஸ்கள் அதிகமாக குடிக்கலாம்.
கோடையை சமாளிக்கவே இயற்கை அளித்த வரம் வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி. வெள்ளரி தாகத்தை தணிப்பதுடன் கோடைகாலத்தில் பல நோய்களுக்கும் மருந்தாகிறது. இதில் 93 சதவீதம் நீர்சத்து உள்ளதால் அப்படியே பச்சையாக உண்பது தான் முழுமையான பலனைத்தரும்.
வாழைப்பழம் சளியைத் தருவதில்லை, உடலில் தேங்கியிருக்கும் சளியை வெளியே கொண்டு வரும் வேலையைத்தான் வாழைப்பழம் செய்கிறது. அன்றாட உணவில் ஒரு வேளை உணவாக வாழைப்பழத்தை உண்டு வந்தால்....
ஒரு வாழைப்பழத்தில் 75 % தண்ணீர் உள்ளது. அத்துடன் நார்ச்சத்து 16 %, வைட்டமின் C 15 % மற்றும் பொட்டாசியம் 11% உள்ளது.
இதில் நமது உடல் தானே தயாரிக்க இயலாத எட்டு வகையான அமினோ அமிலங்கள் இருக்கிறது.
இதன் தோலை மீறி எந்த ஒரு கிருமியும் உள்ளே செல்ல முடியாத பாதுகாப்பு நிறைந்த இயற்கையின் அற்புதப்படைப்பு.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவும், உப்பு குறைந்த அளவும் இருப்பதால் அது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
*பரிகாரம் ஏன்? எதற்கு? எப்படி?*
பரிகாரம் பலன் தருமா? என்ற சந்தேகம் உண்டு.
சந்தேகம் வருவதோ அல்லது சந்தேகப்படுவதோ தவறில்லை. ஏனெனில், அதற்கான அனுபவம் அவர்களிடம் இல்லை என்பதே சந்தேகத்தின் பொருள்.
ஆனால், அது உண்மையா? பொய்யா? என ஆராயாமல் அல்லது அனுபவப்படாமல் இருப்பது காலம் முழுக்க பரிகாரம் தவறு என்ற எண்ணத்தையே நமக்கு தரும். அந்த எண்ணம் கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்யை தேடி அலைந்த நிலைமையாக மாறும்.
தினந்தோறும் உங்களுக்கு நீங்களே பரிகாரம் செய்து கொள்கிறீர்கள் என சொன்னால் நம்புவீர்களா? ஆம், ஒவ்வொருவரும் தினந்தோறும் அவரவர்களுக்கே பரிகாரம் செய்து கொள்கிறோம்.