*கோட்டயம் மாவட்டம் கேரள மாநிலம் மள்ளியூர் அருள்மிகு மகா கணபதி ஆலயம்*
*மூலவர்:விநாயகர்*
*பழமை:500 வருடங்களுக்குள்*
மள்ளியூர்*
கோட்டயம்*
கேரளா*
*திருவிழா*
*விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி*
1
*தல சிறப்பு*
*கர்ப்பக்கிரகத்தில் முழு முதற்கடவுளான கணபதியின் மடியில், காக்கும்கடவுளான கிருஷ்ணன் அமர்ந்திருப்பது சிறப்பு.*
2
*பொது தகவல்*
*கோயில் சுற்றுப்பகுதியில் சாஸ்தா, மகாவிஷ்ணு, துர்க்கை, அந்தி மகா காவலன், யக்ஷி, நாகர் சன்னதிகள் உள்ளன. கேரள மாநிலம் அருகே வேறெங்கும் இல்லாத விசேஷம் இக்கோயிலில் உள்ளது.
3
இங்கு விநாயகரும் கண்ணனும் ஒன்றாக அருள்பாலிப்பதால் அனைத்து தரப்பட்ட பக்தர்களும் இங்கு பெரும் திரளாக வந்து தரிசனம் செய்கிறார்கள்.*
*பிரார்த்தனை*
*தோஷத்திலிருந்து விடுபடவும், நோயிலிருந்து விடுபடவும் மக்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.*
4
*நேர்த்திக்கடன்*
*திருமணத்தடை நீங்குவதற்காக செவ்வாய், வெள்ளி கிழமைகளில் செய்யப்படும் "பழமாலை' மிகவும் சக்தி வாய்ந்தது.குழந்தை பாக்கியத்திற்காக பால்பாயாசம் படைக்கப்படுகிறது.
5
பித்ரு கடன் செய்பவர்கள் இங்கு "சதுர்த்தியூட்டு' எனப்படும் வழிபாடு செய்கிறார்கள்.பிரார்த்தனை நிறைவேறியவர்கள், தாங்கள் விரும்பிய பொருட்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.*
6
*சங்கீத ஆராதனை*
*இசை நாயகன் கிருஷ்ணனை மகிழ்விக்கும் நிகழ்ச்சி இங்கு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் மகர விளக்கு காலங்களில் கோயில் முற்றத்தில் தனியாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில்,* *இந்தியாவின் பிரபல பாடகர்கள் பாடி, இசையை இறைவனுக்கு அர்ப்பணம் செய்கிறார்கள்.*
7
*புதிய பாடகர்களும், இசை கற்பவர்களும் இங்கு வந்து இந்த அரங்கத்தில் தங்களது இசை நிகழ்ச்சியை நடத்தி இறைவனின் அருளைப்பெறுகிறார்கள். இப்படி இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு முன்பதிவு செய்ய வேண்டும்.*
8
*"முக்குற்றி புஷ்பாஞ்சலி':*
*முக்குற்றி எனப்படும் செடிகளை வேரோடு (108) பறித்து,* தனியாக *தயாரிக்கப்பட்ட திரவியத்தில் மூழ்கவைத்து விடுவார்கள். பின் அதை எடுத்து விநாயகர் மந்திரம் ஓதி* *வழிபாடுசெய்யப்படுகிறது.
9
இப்படி செய்வதனால்எப்படிப்பட்ட தோஷத்திலிருந்தும் விடுபடலாம் என கூறப்படுகிறது. ஒரு நாளில் ஐந்து முறை மட்டும் இந்த வழிபாடு செய்யப்படுவதால் முன்பதிவு செய்ய வேண்டும்.*
*பக்தர்கள் நோயிலிருந்து விடுபட "தடி நைவேத்தியம்' செய்யப்படுகிறது.*
10
*தல வரலாறு*
*பல நூற்றாண்டுகளுக்கு முன்,
தற்போது கோயிலை நிர்வகித்து வரும் சங்கரன் நம்பூதிரியின் முன்னோர் ஒருவர் கணபதி விக்ரகம் ஒன்றை கொண்டு வந்து இத்தலத்தில் வைத்து பூஜை செய்துள்ளார்.*
11
பின்னர் ஆர்யபள்ளி மனை, வடக்கேடம் மனை ஆகிய இரு குடும்பங்களும் சேர்ந்து கணபதியை சுற்றி கட்டிடம் கட்டி, பராமரித்து வந்தார்கள்.
ஒரு முறை இவ்விரு குடும்பங்களும் மிகவும் கஷ்டநிலைக்கு வந்தது. இதனால் கோயில் பராமரிப்பும் பாதிப்புக்கு உள்ளாகியது.
12
மேற்கூரை இல்லாத நிலையில் அவர்கள் கணபதியை பக்தியோடு வழிபாடு செய்து வந்தனர்.
இவர்கள் வம்சாவழியில் வந்த சங்கரன் நம்பூதிரி குருவாயூரப்பன் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
13
அவர் தினமும் இந்த கணபதி கோயில் முன் அமர்ந்து, கிருஷ்ணனின் பெருமைகளை பற்றி வேதவியாசரால் அருளப்பட்ட பாகவதத்தை பாராயணம் செய்து வந்தார்.
14
இவரது பக்திக்கு மகிழ்ந்த கிருஷ்ண பகவான் கணபதியின் மடியில் இணைந்து கொண்டார். இவரை கணபதி தன் துதிக்கையால் அரவணைத்திருப்பதை பார்த்தால் மெய்சிலிர்க்கும்.*
15
*சிறப்பம்சம்*
*அதிசயத்தின் அடிப்படையில்
கர்ப்பக்கிரகத்தில் முழு முதற்கடவுளான கணபதியின் மடியில், காக்கும்கடவுளான கிருஷ்ணன் அமர்ந்திருப்பது சிறப்பு.*
16
*அமைவிடம்*
*கோட்டயம்-எர்ணாகுளம் செல்லும் பாதையில் கோட்டயத்திலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் குறுப்பந்தரை. அங்கிருந்து மேற்கு திசையில் 2 கி.மீ. தூரத்தில் மள்ளியூர் கணபதி கோயில் அமைந்துள்ளது.
"உலகம் யாவையும் தாமுள வாக்கலும்..."
ஒரு கிராமத்தில் மஹாபெரியவர் முகாம். கிராமத்தில் பல
வகையான தொழில் செய்பவர்களும் - விவசாயம், பெட்டிக்கடை, துணி வெளுத்தல், காய்கறிக் கடை, டெய்லர், பால்-தயிர் வியாபாரம், தோட்ட வேலை, கூலியாட்கள் என்றுள்ளவர்கள் - தரிசனம் செய்ய வந்தார்கள்.
பெரியவருக்குக் கள்ளங்கபடமறியாத கிராமத்து மக்களிடம் ரொம்பவும் பரிவு உண்டு. அதிகமான படிப்பு குறிப்பாக சமயக்கல்வி - இல்லாவிட்டாலும், அவர்களில் பெரும்பாலனவர்கள் தர்ம வழியில் நடக்கிறார்கள் என்ற நம்பிக்கை.. அதனால் அவர்களிடம் நெருங்கிப் பேசுவார்கள்.
வேளாள வம்சத்தில் வந்த நல்ல ஜோசியர் ஒருவர் பெரியவர் தரிசனத்துக்கு வந்தார்.
வழக்கம்போல் பெரியவர், பெயர் -தொழில் விசாரித்தார்கள்.
"சாமி! நான் ஜோசியம் சொல்லிப் பிழைக்கிறேனுங்க. பரம்பரைத் தொழில். அதனால விட முடியலே. நல்ல நாள் குறிப்பது, கல்யாணத் தேதின்னு சொல்லுவேன்.
* யுகங்களாக புராணப் பெருமை கொண்டது கும்பகோணம். அதில் ரத்னமாக ஒளிர்கிறது ராமஸ்வாமி திருக்கோயில்.
1
* புராணத்திற்கு இணையாக நானூறு ஆண்டுகட்கு முன்பு சரித்திரப் பின்னணியில் பெரும் போர்ச் சூழலின் இறுதியில் எழுப்பப்பட்டது. ராஜபக்தியில் விளைந்த ஞானப்பிரானின் கருணை கருவூலமே இந்த ராமஸ்வாமி திருக்கோயில்.
2
* கும்பகோண நகரத்தின் மையமாக அமைந்துள்ளது ஸ்ரீராமஸ்வாமி கோயில். ராஜகோபுரம் நெடிதுயர்ந்து ராமநாம முத்திரையுடன் வரவேற்கிறது.
* மகாமண்டபத்திற்குள் நுழைந்தவுடன் மாபெரும் சிற்பக்காடுகளுக்குள், எழில் சூழ் சிற்பச் சோலைகளுக்குள் நுழைகிறோம்.
ஓர் விசித்திர அனுபவம் பற்றி திருமலை திருப்பதியின் பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதர் சொல்வதை பார்ப்போம்
“சுவாமியை தரிசனம் செய்ய கருவறைக்குள் சென்றதும் நம் வேண்டுதல்கள் மறந்து போய்விடும், அடுத்து, சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்ததும்,
சுவாமியை நாம் தரிசனம் செய்தபோது இருந்து அலங்காரம், சுவாமியின் கோலம் எல்லாம் மறந்துபோகும் இது ஏன்..எல்லோருக்கும் இப்படி ஓர் விசித்திர அனுபவம் ஏற்படுவதுண்டு.
அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. இதற்கு காரணத்தை இன்று நாம் ஆராய்வோம்.