#கோட்டயம்_மள்ளியூர்_ஸ்ரீமகாகணபதி_ஆலயம்
மூலவர்: விநாயகர்
பழமை: 500 வருடங்களுக்குள்
ஊர்: மள்ளியூர்
மாவட்டம்: கோட்டயம்
மாநிலம்: கேரளா
திருவிழா: விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி
இக்கோவிலில் கர்ப்பக்கிரகத்தில் கணபதியின் மடியில், கிருஷ்ண பகவான் அமர்ந்திருப்பது சிறப்பு.
கோயில் சுற்றுப்
பகுதியில் சாஸ்தா, மகாவிஷ்ணு, துர்க்கை, அந்தி மகா காவலன், யக்ஷி, நாகர் சன்னதிகள் உள்ளன. தோஷத்திலிருந்து விடுபடவும், நோயிலிருந்து விடுபடவும் மக்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். திருமணத் தடை நீங்குவதற்காக செவ்வாய், வெள்ளி கிழமைகளில் செய்யப்படும் #பழமாலை மிகவும் சக்தி
வாய்ந்தது. குழந்தை பாக்கியத்திற்காக பால் பாயாசம் படைக்கப்படுகிறது. பித்ரு கடன் செய்பவர்கள் இங்கு #சதுர்த்தியூட்டு எனப்படும் வழிபாடு செய்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள், தாங்கள் விரும்பிய பொருட்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள். இசை நாயகன் கிருஷ்ணனை மகிழ்விக்கும் நிகழ்ச்சி
இங்கு திருவிழாவாக கொண்டாடப் படுகிறது. ஆண்டு தோறும் மகர விளக்கு காலங்களில் கோயில் முற்றத்தில் தனியாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில், இந்தியாவின் பிரபல பாடகர்கள் பாடி, இசையை இறைவனுக்கு அர்ப்பணம் செய்கிறார்கள். புதிய பாடகர்களும், இசை கற்பவர்களும் இங்கு வந்து இந்த அரங்கத்தில் தங்களது இசை
நிகழ்ச்சியை நடத்தி இறைவனின் அருளைப் பெறுகிறார்கள். இப்படி இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். #முக்குற்றி_புஷ்பாஞ்சலி முக்குற்றி எனப்படும் செடிகளை வேரோடு (108) பறித்து, தனியாக தயாரிக்கப்பட்ட திரவியத்தில் மூழ்கவைத்து விடுவார்கள். பின் அதை எடுத்து விநாயகர் மந்திரம்
ஓதி வழிபாடு செய்யப்படுகிறது. இப்படி செய்வதனால் எப்படிப்பட்ட தோஷத்தில் இருந்தும் விடுபடலாம் என கூறப்படுகிறது. ஒரு நாளில் ஐந்து முறை மட்டும் இந்த வழிபாடு செய்யப்படுவதால் முன்பதிவு செய்ய வேண்டும். பக்தர்கள் நோயிலிருந்து விடுபட #தடி_நைவேத்தியம் செய்யப் படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு
முன், தற்போது கோயிலை நிர்வகித்து வரும்
சங்கரன் நம்பூதிரியின் முன்னோர் ஒருவர் கணபதி விக்ரகம் ஒன்றை கொண்டு வந்து இத்தலத்தில் வைத்து பூஜை செய்துள்ளார்.
பின்னர் ஆர்யபள்ளி மனை, வடக்கேடம் மனை ஆகிய இரு குடும்பங்களும் சேர்ந்து கணபதியை சுற்றி கட்டிடம் கட்டி, பராமரித்து வந்தார்கள். ஒரு முற
இவ்விரு குடும்பங்களும் மிகவும் கஷ்டநிலைக்கு வந்தது. இதனால் கோயில் பராமரிப்பும் பாதிப்புக்கு உள்ளாகியது. மேற்கூரை இல்லாத நிலையில் அவர்கள் கணபதியை பக்தியோடு வழிபாடு செய்து வந்தனர். இவர்கள் வம்சாவழியில் வந்த சங்கரன் நம்பூதிரி குருவாயூரப்பன் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர் தினமும
இந்த கணபதி கோயில் முன் அமர்ந்து, கிருஷ்ணனின் பெருமைகளை பற்றி வேத வியாசரால் அருளப்பட்ட பாகவதத்தை பாராயணம் செய்து வந்தார். இவரது பக்திக்கு மகிழ்ந்த கிருஷ்ண பகவான் கணபதியின் மடியில் இணைந்து கொண்டார். இவரை கணபதி தன் துதிக்கையால் அரவணைத்திருப்பதை பார்த்தால் மெய்சிலிர்க்கும்.
அதிசயத்தின் அடிப்படையில் கர்ப்பக் கிரகத்தில் முழு முதற்கடவுளான கணபதியின் மடியில், காக்கும்கடவுளான கிருஷ்ணன் அமர்ந்திருப்பது மிகச் சிறப்பு.
காலை 5 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும்.
முகவரி: மள்ளியூர் மகா கணபதி கோயில் கோட்டயம் - 686001,
கோட்டயம் மாவட்டம், கேரளா மாநிலம்.
போன் +91- 4829 - 243 455, 243 319 , 94471 14345.
கோட்டயம்-எர்ணாகுளம் செல்லும் பாதையில் கோட்டயத்திலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் குறுப்பந்தரை. அங்கிருந்து மேற்கு திசையில் 2 கி.மீ. தூரத்தில் மள்ளியூர் கணபதி கோயில் அமைந்துள்ளது. கோட்டயத்தில்
இருந்தும், வைக்கத்திலிருந்தும் பஸ்வசதி உள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் கோட்டயம் அருகிலுள்ள விமான நிலையம் எர்ணாகுளம் தங்கும் வசதி கோட்டயம் மாவட்டத்தில் தங்கி கோயிலுக்கு சென்று வரலாம்.
ஓம் ஶ்ரீ மகாகணபதியே நமஹ
கிருஷ்ண கிருஷ்ண
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மனத்தாலும், கைகள், கால்களால் செய்த பாவங்களை அந்த உறுப்புக்களினாலும் மட்டுமே தீர்க்க முடியும்.
வெளியில் இருந்து வரும் பொருள்களில் தான் மகிழ்ச்சி இருப்பதாக எண்ணி அவற்றைச் சுற்றியே மனிதன் துரத்திக் கொண்டு ஓடுகிறான். வெளியில் இருப்பது எதுவும் நம் வசத்தில் இருப்பதல்ல. அது வந்தாலும்
#ஶ்ரீராமநவமி_ஸ்பெஷல்#வடுவூர்கோதண்டராமர்
ஶ்ரீராமநவமியை ஒட்டி இன்று தொடங்கி 10 நாட்கள் இங்கு பிரம்மோத்ஸவம் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. வடுவூர் #தெட்சிண_அயோத்தி என்னும் பெருமையை உடையது. முன்மண்டபத்தில் ருக்மணி சத்யபாமாவுடன் கோபாலன் தனி சன்னதியில் அருளுகிறார். ராமர் பிரதிஷ்டைக்கு
முன்பு இவரே மூலஸ்தானத்தில் இருந்தார். பிரகாரத்தில் ஹயக்ரீவர், விஷ்வக்ஷேனர், ஆண்டாள், ஆழ்வார்கள் உள்ளனர். சரயு தீர்த்தம் கோயிலுக்கு வெளியில் இருக்கிறது.
மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் #புஷ்பக_விமானம் எனப்படுகிறது. ராமரிடம் வேண்டிக் கொள்ள பெற்றோர் சொல் கேட்கும் குழந்தைகள்
பிறப்பார்கள், நியாய சிந்தனை உண்டாகும் என்பது நம்பிக்கை. இங்கு பக்தர்கள் சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். மூலஸ்தானத்தில் ராமபிரான், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயருடன் காட்சி தருகிறார். மார்பில் மகாலட்சுமி பதக்கம் மற்றும் சாளக்கிராம மாலை அணிந்து
#பக்தி#பாவம்_bhavam
ஒரு பாகவதர் தினமும் கிருஷ்ண பஜனை பாடியபடியே வீடு வீடாக சென்று அன்னம் யாசிப்பது அவரது வழக்கம். ஒரு நாள் அவருக்கு யாரும் அன்னமிடவில்லை. பசியோடு நடந்து கொண்டே கிருஷ்ண பஜனை பாடி கொண்டிருந்தார். அப்பொழுது அவரின் கையை ஓர் 8 வயது சிறுமி பிடித்து, ஸ்வாமி என்று
அழைத்தாள். அவர் நின்று அந்த சிறுமியை பார்த்தார். அவள் கிழிந்த உடையை அழகாக தைத்து உடுத்தி இருந்தாள். மலர்ந்த முகத்தோடு ஸ்வாமி என்று அழைத்தாள். அவர் அந்த சிறுமியிடம், யாரம்மா நீ என்ன வேண்டும் உனக்கு என்று கேட்டார். அதற்கு அந்த சிறுமி, ஸ்வாமி நான் அருகே உள்ள குடிசையில் இருந்து
தினமும் உங்கள் கண்ணன் பாடல்களை ரசித்து கேட்பேன். அதை கேட்டு கேட்டு பாடல்கள் முழுக்க எனக்கு மனப்பாடம் ஆயிற்று. அதனால் உங்களை என் குருநாதராக நினைத்து அழைக்கிறேன், என் வீட்டிற்கு உணவருந்த வருகிறீர்களா என்று அன்போடு அழைத்தாள். பசியோடு இருந்த பாகவதரும் அவளது அன்பான வார்த்தையில் மயங்கி
இராவணன் மகன் இந்திரஜித்கும் இலட்சுமணனுக்கும் இடையே நடந்த போரில், இந்திரஜித் ஏவிய அஸ்திரத்தால், இலட்சுமணன் மூர்ச்சையாகி வீழ்ந்தார். இலங்கை அரச மருத்துவர் சுசேனர், இலட்சுமணனை குணப்படுத்த இமயமலையில் வளரும் #சஞ்சீவினி
மூலிகை மருந்துச் செடிகளை பறித்து வர அறிவுறுத்தினார். சஞ்சீவினி மூலிகை மருந்தினை இமயமலையில் இருந்து கொண்டு வருவதற்காக பெரும் பலவானாகிய அனுமன் விரைந்து சென்றார். இதை அறிந்த இராவணன் அனுமனுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்த, அவற்றை எல்லாம் கடந்து அனுமன் சஞ்சீவினி மலையை அடைந்தார். அங்கு
அனுமனைக் கொல்ல காலநேமியை இந்திரஜித் அனுப்பி வைத்தான். காலநேமி என்னும் அசுரன் மாரீசனின் மகன். அனுமன் இமயமலையின் சஞ்சீவினி மூலிகை உள்ள பகுதியை அடைந்து, சஞ்சீவினிச் செடிகளை பறிக்க முற்படுகையில், அவ்விடத்தில் போலித் துறவி வேடத்தில் வந்த காலநேமி, அனுமனை வரவேற்று, அருகில் உள்ள ஏரியில்
அளவிலா தவமலையாகிய ஸ்ரீ மஹா பெரியவாள் நினைத்தால் நடக்காத காரியம் பதினான்கு உலகிலும் இல்லை. இப்படிப்பட்ட அநுக்ரஹம் யாருக்கு கிடைக்கும் என்றால் காதலாகி கசிந்து கண்ணீர்
மல்க பெரியவாளிடம் பக்தி செய்தால் கிடைக்கும். அப்படிப்பட்ட பக்தர்களில் ஒருவர் பெங்களூரில் வசிக்கும் பாலகிருஷ்ணன். அவரது தந்தை காலம் சென்ற கந்தஸ்வாமி அய்யர், பெரியவாளுக்கு ஆத்மார்த்தமாகபல கைங்கர்யங்கள் செய்தவர். மல்லேஸ்வரம் சங்கரமடம் கட்டியது. பொதுக்கிணறு எடுத்தது முதலிய பணிகளில்
ஈடுபட்டவர். கங்கா ஸ்நானம், துங்கா பானம் என்று சொல்லியிருக்கிறது. அதாவது கங்கா ஜலத்தில் குளிப்பதும், துங்கா ஜலத்தை குடிப்பதும் விசேஷம். பெரியவாளுக்கு தவறாமல் துங்கா ஜலம் சமர்ப்பித்த பக்தர் அவர். AG's Office ல் பாலகிருஷ்ணனுக்கு உத்தியோகம் கிடைத்தது. பதவி உயர்வு பெற்று மேலே முன்னேற