அன்பெழில் Profile picture
Apr 1 16 tweets 3 min read Twitter logo Read on Twitter
#தியாகராஜரும்_ஶ்ரீராமரும்
வீட்டு திண்ணையில் அமர்ந்தபடி, கண்களை மூடியவாறு ராம ஜபம் செய்து கொண்டிருந்த தியாகராஜர், குரல் கேட்டு சட்டென்று கண் விழித்தார். எதிரே ஒரு வயதான தம்பதி. அருகே, கூப்பிய கரங்களுடன் ஒரு இளைஞன். மெல்லிய குரலில் அந்த முதியவர் பேச ஆரம்பித்தார்.
''ஸ்வாமி,
நாங்கள் வடக்கே ரொம்ப தூரத்தில் இருந்து கால்நடையாய் ஷேத்ராடனம் பண்ணிட்டு வரோம். நாளை ராமேஸ்வரம் போகணும். இன்று ஒரு ராத்திரி மட்டும் உங்க இடத்துல தங்கிவிட்டு, காலை பொழுது விடிந்ததும் கிளம்பிடறோம்.
தயவு செய்து எங்களுக்கு உதவி செய்யணும்” மெல்லிய குரலில், பேசினார் அவர். வயதான
அந்த தம்பதியின் அழுக்கு படிந்த உடைகள், முகங்களில் தெரிந்த களைப்பு, வாட்டம் மற்றும், பேச்சில் தெரிந்த ஆயாசம் இவற்றை தாண்டி அம்மூவரின் முகலாவண்யமும் தெய்வீக அம்சமும் தியாகராஜரை என்னவோ செய்ய அவருக்கு ஒரு வித பக்தி மயக்கம் ஏற்பட்டது. ஒரு கணம் நிலை தடுமாறியவர் பின், மெலிதான
புன்னகையுடன், இரு கரங்களையும் கூப்பி அவர்களை வணங்கினார். ''அதற்கென்ன பேஷாய் தங்கலாம். இரவு போஜனம் பண்ணிட்டு நிம்மதியாய் தூங்குங்கோ."
அவர்களை உள்ளே அழைத்து சென்று அமர செய்தவர், அடுக்களையை நோக்கி, உரத் த குரலில்,
''கமலா, குடிக்க தீர்த்தம் கொண்டு வா”
என்றார். அடுத்த கணம் தீர்த்த
சொம்பு சகிதம் அங்கே வந்த கமலாம்பாளின் கண்கள், அங்கு அமர்ந்திருந்த புதியவர்களை கண்டு வியப்பில் விரிந்தன. யார் இவர்கள்?
''கமலா இவர்கள் நம் விருந்தாளிகள். இன்று நம் கிருஹத்தில் தங்க போகிறார்கள். இரவு உணவை இவர்களுக்கும் சேர்த்து தயார் செய்''
தீர்த்த சொம்பை அவளிடமிருந்து வாங்கியவாறே
இயல்பாய் பேசினார் அவர். அடடா, வீட்டில் இரண்டு பேர்களுக்கு போதுமான அரிசியே இல்லை. இப்போது ஐந்து பேர்களுக்கு உணவு தயாரிக்க வேண்டுமானால் அரிசிக்கு என்ன செய்வது? பக்கத்து வீட்டுக்கு சென்று அரிசி வாங்கி வர வேண்டியது தான், உள்ளுக்குள் எண்ணியவள், எதையும் வெளிக் காட்டாமல், புன்னகையுடன்
அவருக்கு தலையசைத்து விட்டு அடுக்களையை நோக்கி விரைந்தாள். போன வேகத்திலேயே, அங்கிருந்த பாத்திரங்களில் ஒன்றை கையில் எடுத்தவள் பின் அதை யார் கண்ணிலும் படாமலிருக்க புடவையால் மறைத்து அங்கிருந்து வெளியே வந்த அக்கணம் அந்த சிறிய கூடத்தில் அமர்ந்திருந்த அந்த முதியவரின் குரல் அவளை தடுத்து
நிறுத்தியது. “அடடா, எங்கே செல்கிறீர்கள் அம்மா? எங்களுக்காக சிரமப்பட வேண்டாம். எங்களிடம் வேண்டிய அளவு தேனும், தினைமாவும் இருக்கிறது. இரண்டையும் பிசைந்து ரொட்டி தட்டி, நாம் அனைவரும் சேர்ந்தே சாப்பிடலாம்.” அவளின் மனத்தை படம் பிடித்து காட்டியது போன்று பேசியவரை, வியப்புடனும் , தர்ம
சங்கடத்துடனும் அவள் பார்த்து கொண்டிருக்கும் போதே, அவள் சற்றும் எதிர்பாராது தேனும் தினை மாவும் அடங்கிய ஒரு சிறிய பையை அவளிடம் நீட்டினார் அந்த முதியவர்.
தயக்கத்துடனும், சங்கோஜத்துடனும் அதனை பெற்று கொண்ட அவள், உணவுத்தயாரிக்க அடுக்களையை நோக்கி விரைந்தாள். அன்று இரவு, அனைவரும் அந்த
ரொட்டியை சாப்பிட்டு பசியாற தியாகராஜர், அவர்களுடன் விடிய விடிய பேசிக் கொண்டிருந்து விட்டு, பின், ஒரு கட்டத்தில் உறங்கி போனார்.
பொழுது விடிந்தது, காலைக் கடன்களை முடித்து விட்டு, கூடத்தில் அமர்ந்து, வழக்கம் போல கண்களை மூடியவாறு, ராம நாமத்தை ஜபித்தவாறிருந்த தியாகராஜர், குரல்
கேட்டு கண்களை திறந்தார.
"ஸ்வாமி, எதிரே புன்னகையுடன் அந்த முதியவர். அருகே, அவரின் பார்யாளும், மற்றும் அந்த இளைஞனும். அந்த முதியவர் தொடர்ந்தார். “ரொம்ப சந்தோஷம், நாங்க காவேரியில் ஸ்நானம் பண்ணிட்டு அப்படியே கிளம்பறோம் இரவு தங்க இடம் கொடுத்து வாய்க்கு ருசியாய் ஆகாரமும் கொடுத்து
அன்பாய் உபசரித்ததற்கு மிக்க நன்றி”
கூப்பிய கரங்களுடன் அந்த முதியவர் பேச, அருகே அந்த மூதாட்டியும், இளைஞனும் அவரின் வார்த்தைகளை ஆமோதிப்பது போன்று தலையசைத்தவாறு நின்றிருந்தனர். சொல்லிவிட்டு மூவரும் அங்கிருந்து கிளம்ப, தியாகராஜரும் அவர்களை வழியனுப்பும் நிமித்தமாய் அவர்களுடன்
வாசலுக்கு வந்தார். அவர்கள் மூவரும் வாசலை கடந்து தெருவில் இறங்கி நடக்க ஆரம்பிக்க, அவர்கள் செல்வதை கண் இமைக்காமல் பார்த்தவாறு நின்றிருந்த தியாகராஜரின் கண்களில் சட்டென்று ஒரு தெய்வீக காட்சி! இப்போது அந்த வயோதிகர் ஸ்ரீ ராமனாகவும் அந்த மூதாட்டி, சீதையாகவும், அந்த இளைஞன் அனுமனாகவும்
தோற்றமளிக்க அவருக்குள் இனம் புரியாத ஒரு பதை பதைப்பு. கண்கள் பனிசோர நா தழுதழுக்க தன்னை மறந்து பக்தி பரவசத்தில் ஆனந்த கூத்தாடினார்.
''என் தெய்வமே, தசரதகுமாரா, ஜானகி மணாளா, நீயா என் இல்லத்துக்கு வந்தாய்? என்னே நாங்கள் செய்த பாக்கியம்! அடடா, வெகு தூரத்தில் இருந்து நடந்து வந்ததாய்
என்று சொன்னாயே, உன் காலை பிடித்து அமுக்கி, உன் கால்வலியை போக்குவதை விடுத்து, உன்னை தூங்க விடாமல் விடிய விடிய பேசிக் கொண்டே இருந்தேனே. மகாபாவி நான், என் வீட்டில் தரித்திரம் தாண்டவமாடறதுன்னு தெரிஞ்சு ஆகாரத்தையும் கொண்டு வந்ததுடன், ஒரு தாய் தகப்பனாயிருந்து எங்கள் பசியையும்
போக்கினாயே! உனக்கு அநேக கோடி நமஸ்காரம்''
நடு வீதி என்பதையும் மறந்து கண்ணீர் மல்க கதறி அழுதார் தியாகராஜர். அப்போது அவர் திருவாயினின்று, அனிச்சையாய ‘சீதம்ம மாயம்ம’
என்கிற கீர்த்தனை பிறந்தது.

ஸ்ரீ ராம் ஜெய ராம். ஜெய ஜெய சீதாராம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Apr 3
#மகாபெரியவா
1986ல் ஒரு ஏகாதசி ஞாயிற்றுக் கிழமை. காஞ்சி சங்கர மடத்தில் ஸ்ரீ மஹாபெரியவா பக்தர்களுக்கு தரிஸனம் தந்து கொண்டிருந்தார். ஓர் ஓரத்தில் சுமார் 5 வயது குழந்தையுடன் ஒரு பக்தர் அழுதபடியே நின்று கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீ மஹா பெரியவருடன், எப்போதும் கூடவே கைங்கர்யம் செய்து Image
கொண்டிருக்கும், சந்திரமெளலி என்பவரும் திருச்சி. ஸ்ரீ ஸ்ரீகண்டன் என்பவரும் இருந்தனர். ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீகண்டனை அழைத்து, “கையில் குழந்தையுடன் ஒருவர் அழுதுகொண்டிருக்கிறாரே! ஏன் அழுகிறார் என்று விசாரி” என்றார்கள்.
ஸ்ரீகண்டனும், அவரிடம் சென்று அவரது கவலைக்கான காரணத்தை, ஸ்ரீ மஹா
பெரியவா கேட்டு வரச்சொன்ன தகவலைத் தெரிவித்தார்.
“ஐயா, என் கையில் இருப்பது 5 வயது பெண் குழந்தை. உடல்நிலை சரியில்லை. டாக்டரிடம் காண்பித்தேன். குழந்தைக்கு இருதயத்தில் துவாரம் இருக்கிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும், இருப்பினும் கொஞ்சம் சிரமம் தான் என்றும் அவர் சொல்லி விட்டார். ஆபரேஷனுக்கு
Read 11 tweets
Apr 2
#MahaPeriyava
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
One of the steadfast devotees of Sri Matham is R.G.Venkatachalam of the Manjapara Brahmana Samuham of the Palakkad District. He held very high offices and is now settled in Chennai. However, he was Image
deeply attached to his native place. He collected donations of more than fifty lakh of rupees and renovated the Sri Guruvayurappan temple at Manjapara. Although he had innumerable experiences of grace with Maha Periyava, he recalls one particular incident repeatedly with deep
feeling. Every year, he would come to receive Periyaval’s darshan, offering bhikshavandanam. In 1988, the road transport had struck work and everyone felt that he would not be able to turn up in time. But he managed to reach Kanchipuram somehow. During Darshan, Sri Swamigal asked
Read 10 tweets
Apr 2
#மருதமலை_மாமணி கோயமுத்தூர் நகரில், மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மருதமரங்கள் மிகுதியாக காணப்படுவதன் காரணமாக இந்தப் பகுதி மருதமலை என அழைக்கப் படுகிறது. 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இத்திருக்கோயில் முருகப்பெருமானின் ஏழாம் படை Image
வீடு! பேரூர் புராணம், திருப்புகழ் மற்றும் காஞ்சிப் புராணங்களில் மருதமலை சிறப்பித்து கூறப்பட்டுள்ளது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி மருதாசலபதி, மருதப்பன், மருதமலையான், மருதமலை முருகன், மருதாசலமூர்த்தி என பல பெயர்களால் போற்றித் துதிக்கப் படுகிறார். முன்னொரு காலத்தில் முருக பக்தரான Image
சித்தர் ஒருவர் இப்பகுதிக்கு வருகை தந்தார். அவர் களைப்பாலும், தாகத்தாலும் சோர்வடைந்து அங்கிருந்த மருதமரம் ஒன்றின் கீழ் அமர்ந்து இளைப்பாறினார். அச்சமயத்தில் மருதமரத்தின் கீழ்ப்பகுதியில் ஊற்று நீர் பீறிட்டது. இதைக்கண்ட சித்தர் இது முருகப்பெருமானின் அருளே என்று வியந்து முருகப் Image
Read 18 tweets
Apr 2
#ஏழுமலையானின்_நித்யசேவையில்_சுவாமி_ஆபரணங்கள்
1. தங்க பத்ம பீடம் (திருவடியின் கீழ் இருக்கும்)
2. தங்கத்திலான திருப்பாதங்கள்
3. சிறு கஜ்ஜினுபுராலு - திருப்பாதங்கள் மேலே அணியும் ஆபரணம்
4. பாகடாலு - கால்களில் அணியும் ஆபரணம்.
5. காஞ்சி குணம் - அரைஞாண் கயிறு
6. நாகா வேஸ்பண உதரபந்தம் - Image
மத்தியாபரணம்
7. சிறுகண்டல தசாவதார ரசனா - தசாவதாரம், ஸ்ரீ பூ தேவி தாயார் , எம்பெருமான், 18 மூர்த்திகள் சேர்ந்த அரைஞாண் கயிறு.
8. சிறிய கழுத்து மாலை
9. பெரிய கழுத்து மாலை - எம்பெருமான் வக்ஷஸ் தலம் வரை அணிவிக்கப்படும் மாலை.
10. தங்க புலி நக மாலை- திருமார்பில் அணியப்படும்.
11. ஐந்து
வரிசை கோபு ஹாரம் - தொப்புள் கொடி பகுதியில் அணியப்படும்.
12. தங்க யக்னோ பவீதம்- ஆறு வரிசை கொண்ட வைரத்தினாலான பூ நூல்.
13. சாதாரண பூணூல்.
14. துளசி இதழ் மாலை- கடிஹஸ்த மாலை . 108 இலைகள் கொண்ட மாலை.
15. சதுர்புஜ லட்சுமி மாலை (108 லட்சுமி அச்சு கொண்ட மாலை)
16. 108 அஷ்டோத்தர சதநாம மாலை
Read 5 tweets
Apr 1
#மகாபெரியவா
பல வருஷங்களுக்கு முன்னே,காஞ்சி மஹா ஸ்வாமிகள், மயிலாடுதுறைக்கு அருகில் இருந்த ஆனந்ததாண்டவ புரத்தில் எழுந்தருளி இருந்தார். அப்போது ஆந்திராவைச் சேர்ந்த பண்டிதர் ஒருவர் மஹானை தரிசிப்பதற்காக அங்கே சென்றிருந்தார். அப்போது அங்கு வந்திருந்த சிறுவர்களிடம் நோட்டுப் புத்தகங்களை
கொடுத்து, அதில் ராம நாமம் எழுதிக் கொண்டு மாலையில் வரும்படி சொல்லியனுப்பினார் மஹான். அதே போல மாலையில் அந்தச் சிறுவர்கள் ராம நாமம் எழுதிக் கொண்டு வந்து மஹானிடம் தந்தனர். அங்கிருந்த சிறுவர்களில் ஒருவனைப் பார்த்து ராம நாமம் சொல்லுமாறு பணித்தார் மஹான். பக்கத்தில் இருந்தவர்கள்
தயங்கியவாறு, “அவனால் பேச முடியாது ஸ்வாமி” என்றனர். அவர்களைக் கையமர்த்தித் தடுத்த மஹான், மீண்டும் அந்தச் சிறுவனைப் பார்த்து, “ம்...நீ ராம நாமம் சொல்லு!" என்று பணித்தார். என்ன ஆச்சரியம்! வாய் பேச இயலாத அந்தச் சிறுவன் முதலில் சற்று திணறிவிட்டு பின்பு படிப்படியாக தெளிவான உச்சரிப்பில்
Read 5 tweets
Apr 1
#நம்மை_திருத்தும்_நவக்கிரகங்கள்
எவர் ஒருவர் தங்கள் சொந்த பந்தங்களை மதிக்காமல் அலட்சியமாக மரியாதை குறைவாக நடத்துகிறார்களோ, அவர்களுக்கு நவகிரகத்தின் ஆசீர்வாதமும், அனுக்கிரஹமும் கட்டாயம் கிடைக்கவே கிடைக்காது.
அப்பாவை மரியாதையாக நடத்தவில்லை என்றால், அப்பாவிற்கு கொடுக்க வேண்டிய
ஸ்தானத்தை அவருக்கு கொடுக்கவில்லை என்றால் திருமணம் தள்ளிப்போகும். வேலை வாய்ப்பில் பிரச்சனை ஏற்படும். சொந்த தொழில் முன்னேற்றம் ஏற்படாது. ஏனென்றால், அப்பா ஸ்தானத்தை குறிப்பது #சூரியன்
அம்மாவை மதிக்கவில்லை என்றால், அவர்களை மரியாதை குறைவாக நடத்தினால், அவர்களை அவமானப்படுத்தி பேசினால்
கட்டாயம் அவரின் அழகு குறைய ஆரம்பிக்கும். அறிவாற்றல் மங்கிப் போகும். குழப்பமான வாழ்க்கை வாழத் தொடங்குவர். மனநிம்மதியே இருக்காது. ஏனென்றால், அம்மா ஸ்தானத்தை குறிப்பது #சந்திரபகவான்
கணவனாக இருந்தால், வீட்டில் இருக்கும் மனைவியை மரியாதையோடு நடத்த வேண்டும். மனைவிக்கு மரியாதை இல்லை
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(