அன்பெழில் Profile picture
Apr 2 18 tweets 4 min read Twitter logo Read on Twitter
#மருதமலை_மாமணி கோயமுத்தூர் நகரில், மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மருதமரங்கள் மிகுதியாக காணப்படுவதன் காரணமாக இந்தப் பகுதி மருதமலை என அழைக்கப் படுகிறது. 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இத்திருக்கோயில் முருகப்பெருமானின் ஏழாம் படை
வீடு! பேரூர் புராணம், திருப்புகழ் மற்றும் காஞ்சிப் புராணங்களில் மருதமலை சிறப்பித்து கூறப்பட்டுள்ளது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி மருதாசலபதி, மருதப்பன், மருதமலையான், மருதமலை முருகன், மருதாசலமூர்த்தி என பல பெயர்களால் போற்றித் துதிக்கப் படுகிறார். முன்னொரு காலத்தில் முருக பக்தரான
சித்தர் ஒருவர் இப்பகுதிக்கு வருகை தந்தார். அவர் களைப்பாலும், தாகத்தாலும் சோர்வடைந்து அங்கிருந்த மருதமரம் ஒன்றின் கீழ் அமர்ந்து இளைப்பாறினார். அச்சமயத்தில் மருதமரத்தின் கீழ்ப்பகுதியில் ஊற்று நீர் பீறிட்டது. இதைக்கண்ட சித்தர் இது முருகப்பெருமானின் அருளே என்று வியந்து முருகப்
பெருமானை ‘மருதம் சலம் ஆகியவற்றின் தலைவா’ என்று வாழ்த்திப் பாடியதாகவும், அதுவே பின்னர் மருதாசலபதி என்று மருவி அழைக்கப்படுவதாகவும் செவிவழிச் செய்தி நிலவுகிறது. மலையடிவாரத்தின் படிக்கட்டுப் பாதை தொடக்கத்தில் தான்தோன்றி விநாயகர் சந்நதி அமைந்துள்ளது. இந்த விநாயகரின் அமைப்பு மிகவும்
மிகவும் வித்தியாசமானது, அழகானது. இது போன்ற விநாயகப் பெருமானை வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. தான்தோன்றி விநாயகரை வழிபட்டு மலையேறினால் 18 படிகளைக் கொண்ட ‘பதினெட்டு படி’ உள்ளது. சபரிமலைக்குச் சென்று அய்யப்பனை வழிபட இயலாதோர் இந்த பதினெட்டாம் படிக்கு வந்து வணங்குகின்றனர்.
மருதமலை முருகன் கோயிலுக்குப் படிக்கட்டுகளின் வழியாகச் செல்லும்போது இடும்பனுக்கென அமைந்துள்ள தனி சந்நதியைக் காணலாம். இந்த இடும்பனை வணங்கினால் குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஒரே பிராகாரத்துடன் அமைந்துள்ள இத்திருக்கோயிலில் மகாமண்டபம்,
அர்த்தமண்டபம், கருவறை என முறைப்படி அமைந்துள்ளன. கருவறையில் அழகே வடிவாக முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். கருவறைக்கு முன்னால் முருகப்பெருமானை நோக்கியவண்ணம் அவருடைய வாகனம் மயில் நின்றிருக்கிறது. அதற்குப் பின்னால் பலிபீடமும் கொடிமரமும் அமைந்துள்ளன. இதன் அருகே தனி
சந்நதியில் வலம்புரி விநாயகர் அருட்பாலிக்கிறார். மருதமலை கோயிலில் ஆதிமூலஸ்தானம் அமைந்துள்ளது. இங்கு வள்ளிதெய்வானையோடு அருள்புரியும் முருகனை முதலில் வழிபட்டு பின்னர் பஞ்சமுக விநாயகரை தரிசித்து அதன் பிறகு மூலவரை வணங்க வேண்டும்; பின்னர் பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, வரதராஜப் பெருமாள்,
நவகிரக சந்நதி என வழிபட வேண்டும்.
இதைத் தொடர்ந்து பாம்பாட்டி சித்தர் சந்நதிக்குச் சென்று அவரை வணங்கிவிட்டு பின்பு சப்தகன்னியரை வழிபட வேண்டும் என்பது மரபு. மருதமலைக் கோயிலின் தென்புறத்தில் அமைந்துள்ள படிக்கட்டுகள் வழியாக கீழே இறங்கி கிழக்கு திசை நோக்கிச் சென்றால் அப்பகுதியில்
பாம்பாட்டி சித்தர் சந்நதியைக் காணலாம். இத்திருக்கோயிலில் அமைந்துள்ள சப்தகன்னியர் சந்நதிக்குப் பின்புறம் வற்றாத ஊற்று ஒன்று அமைந்துள்ளது. எப்போதும் நீர் சுரந்து கொண்டேயிருக்கும் இந்த ஊற்றுத் தண்ணீரைக் கொண்டு தான் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மருதமலை முருகன்
கோயிலில் உள்ள விநாயகர் சந்நதியின் பின்புறத்தில் ஒன்றாக பின்னிப் பிணைந்தபடி பழமையான ஐந்து மரங்களைக் காணலாம். இதனை ‘பஞ்ச விருட்சம்’ என்றழைக்கிறார்கள். அதிசயமான இந்த மரத்தில் குழந்தை வரத்துக்காக வேண்டிக் கொள்ளும் பெண்கள் தொட்டில் கட்டுகின்றனர். இத்திருக்கோயிலில் பதினாறரை அடி உயரம்
கொண்ட தங்கத்தேர் உள்ளது. தினமும் மாலை ஆறு மணிக்கு கோயிலில் இந்தத் தங்கத்தேர் புறப்பாடு நடைபெறுகிறது.
இத்தலத்தின் தீர்த்தம் மருதத்தீர்த்தம், தலவிருட்சம் மருத மரம். நீண்டகாலமாக திருமணம் கைகூடாமல் இருப்பவர்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து சுவாமிக்கு பொட்டுத்தாலி, வஸ்திரம் போன்றவற்றை
சமர்ப்பித்து கல்யாண உற்சவத்தை நடத்தினால் விரைவில் முருகப்பெருமான் அருளால் திருமணம் கைகூடும். மேலும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் தம்பதி சமேதராய் இக்கோயிலுக்கு தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமைகள் வந்து வழிபாடு செய்தால் குழந்தைப் பேறு வாய்க்கும் என்பதும் பக்தர்களின் அனுபவ உண்மை.
இத்திருத்தலத்தில் தினசரி காலை ஐந்து மணிக்கு கோ பூஜை, பிறகு 5.30 மணிக்கு நடைத்திறப்பு. காலை 6.00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 8.30 முதல் 9.00 மணி வரை காலசந்தி பூஜை, 11.30 முதல் 12.00 மணி வரை உச்சிக்கால பூஜை, மாலை 4.30 முதல் 5.00 மணி வரை சாயரட்சை பூஜை, இரவு 8.00 மணி முதல் 8.30 மணி வர
இராக்கால பூஜை என நடைபெறுகின்றன.
ஆண்டு முழுவதும் முருகப்பெருமானுக்கு உரிய விழாக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. தமிழ் வருடப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை, ஆடி பதினெட்டு, விநாயக சதுர்த்தி, நவராத்திரி, கந்தசஷ்டி, சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் ஆகியவை
இங்கு விசேஷம். இத்திருக்கோயில் காலை ஐந்தரை மணிமுதல் இரவு ஒன்பது மணி வரை திறந்திருக்கும். நடுவில் 1 - 2 வரை நடை சாத்தப்படும். கிருத்திகை மற்றும் முக்கியமான விழா நாட்களில் கோயில் காலை முதல் இரவு வரை தொடர்ந்து திறந்திருக்கும். கோவையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் மருதமலை அமைந்து
உள்ளது. கோவை காந்திபுரம் பேருந்து நிலையம். உக்கடம், டவுன்ஹால், சிங்காநல்லூர், ஈச்சனாரி போன்ற பல பகுதியிலிருந்தும் மருதமலைக்கு நகரப் பேருந்துகளும், மலை அடிவாரத்திலிருந்து மேலே கோயிலை அடைய கோயில் நிர்வாகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. படிக்கட்டுகள் ஏறியும் மலைக்கோயிலை
அடையலாம். மலைப்பாதையில் ஏறிச் செல்லுவோர் இளைப்பாறுவதற்காக வழியில் மண்டபங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
சரவணா பவாய நமஹ
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Apr 3
#மகாபெரியவா
1986ல் ஒரு ஏகாதசி ஞாயிற்றுக் கிழமை. காஞ்சி சங்கர மடத்தில் ஸ்ரீ மஹாபெரியவா பக்தர்களுக்கு தரிஸனம் தந்து கொண்டிருந்தார். ஓர் ஓரத்தில் சுமார் 5 வயது குழந்தையுடன் ஒரு பக்தர் அழுதபடியே நின்று கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீ மஹா பெரியவருடன், எப்போதும் கூடவே கைங்கர்யம் செய்து Image
கொண்டிருக்கும், சந்திரமெளலி என்பவரும் திருச்சி. ஸ்ரீ ஸ்ரீகண்டன் என்பவரும் இருந்தனர். ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீகண்டனை அழைத்து, “கையில் குழந்தையுடன் ஒருவர் அழுதுகொண்டிருக்கிறாரே! ஏன் அழுகிறார் என்று விசாரி” என்றார்கள்.
ஸ்ரீகண்டனும், அவரிடம் சென்று அவரது கவலைக்கான காரணத்தை, ஸ்ரீ மஹா
பெரியவா கேட்டு வரச்சொன்ன தகவலைத் தெரிவித்தார்.
“ஐயா, என் கையில் இருப்பது 5 வயது பெண் குழந்தை. உடல்நிலை சரியில்லை. டாக்டரிடம் காண்பித்தேன். குழந்தைக்கு இருதயத்தில் துவாரம் இருக்கிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும், இருப்பினும் கொஞ்சம் சிரமம் தான் என்றும் அவர் சொல்லி விட்டார். ஆபரேஷனுக்கு
Read 11 tweets
Apr 2
#MahaPeriyava
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
One of the steadfast devotees of Sri Matham is R.G.Venkatachalam of the Manjapara Brahmana Samuham of the Palakkad District. He held very high offices and is now settled in Chennai. However, he was
deeply attached to his native place. He collected donations of more than fifty lakh of rupees and renovated the Sri Guruvayurappan temple at Manjapara. Although he had innumerable experiences of grace with Maha Periyava, he recalls one particular incident repeatedly with deep
feeling. Every year, he would come to receive Periyaval’s darshan, offering bhikshavandanam. In 1988, the road transport had struck work and everyone felt that he would not be able to turn up in time. But he managed to reach Kanchipuram somehow. During Darshan, Sri Swamigal asked
Read 10 tweets
Apr 2
#ஏழுமலையானின்_நித்யசேவையில்_சுவாமி_ஆபரணங்கள்
1. தங்க பத்ம பீடம் (திருவடியின் கீழ் இருக்கும்)
2. தங்கத்திலான திருப்பாதங்கள்
3. சிறு கஜ்ஜினுபுராலு - திருப்பாதங்கள் மேலே அணியும் ஆபரணம்
4. பாகடாலு - கால்களில் அணியும் ஆபரணம்.
5. காஞ்சி குணம் - அரைஞாண் கயிறு
6. நாகா வேஸ்பண உதரபந்தம் -
மத்தியாபரணம்
7. சிறுகண்டல தசாவதார ரசனா - தசாவதாரம், ஸ்ரீ பூ தேவி தாயார் , எம்பெருமான், 18 மூர்த்திகள் சேர்ந்த அரைஞாண் கயிறு.
8. சிறிய கழுத்து மாலை
9. பெரிய கழுத்து மாலை - எம்பெருமான் வக்ஷஸ் தலம் வரை அணிவிக்கப்படும் மாலை.
10. தங்க புலி நக மாலை- திருமார்பில் அணியப்படும்.
11. ஐந்து
வரிசை கோபு ஹாரம் - தொப்புள் கொடி பகுதியில் அணியப்படும்.
12. தங்க யக்னோ பவீதம்- ஆறு வரிசை கொண்ட வைரத்தினாலான பூ நூல்.
13. சாதாரண பூணூல்.
14. துளசி இதழ் மாலை- கடிஹஸ்த மாலை . 108 இலைகள் கொண்ட மாலை.
15. சதுர்புஜ லட்சுமி மாலை (108 லட்சுமி அச்சு கொண்ட மாலை)
16. 108 அஷ்டோத்தர சதநாம மாலை
Read 5 tweets
Apr 1
#மகாபெரியவா
பல வருஷங்களுக்கு முன்னே,காஞ்சி மஹா ஸ்வாமிகள், மயிலாடுதுறைக்கு அருகில் இருந்த ஆனந்ததாண்டவ புரத்தில் எழுந்தருளி இருந்தார். அப்போது ஆந்திராவைச் சேர்ந்த பண்டிதர் ஒருவர் மஹானை தரிசிப்பதற்காக அங்கே சென்றிருந்தார். அப்போது அங்கு வந்திருந்த சிறுவர்களிடம் நோட்டுப் புத்தகங்களை
கொடுத்து, அதில் ராம நாமம் எழுதிக் கொண்டு மாலையில் வரும்படி சொல்லியனுப்பினார் மஹான். அதே போல மாலையில் அந்தச் சிறுவர்கள் ராம நாமம் எழுதிக் கொண்டு வந்து மஹானிடம் தந்தனர். அங்கிருந்த சிறுவர்களில் ஒருவனைப் பார்த்து ராம நாமம் சொல்லுமாறு பணித்தார் மஹான். பக்கத்தில் இருந்தவர்கள்
தயங்கியவாறு, “அவனால் பேச முடியாது ஸ்வாமி” என்றனர். அவர்களைக் கையமர்த்தித் தடுத்த மஹான், மீண்டும் அந்தச் சிறுவனைப் பார்த்து, “ம்...நீ ராம நாமம் சொல்லு!" என்று பணித்தார். என்ன ஆச்சரியம்! வாய் பேச இயலாத அந்தச் சிறுவன் முதலில் சற்று திணறிவிட்டு பின்பு படிப்படியாக தெளிவான உச்சரிப்பில்
Read 5 tweets
Apr 1
#நம்மை_திருத்தும்_நவக்கிரகங்கள்
எவர் ஒருவர் தங்கள் சொந்த பந்தங்களை மதிக்காமல் அலட்சியமாக மரியாதை குறைவாக நடத்துகிறார்களோ, அவர்களுக்கு நவகிரகத்தின் ஆசீர்வாதமும், அனுக்கிரஹமும் கட்டாயம் கிடைக்கவே கிடைக்காது.
அப்பாவை மரியாதையாக நடத்தவில்லை என்றால், அப்பாவிற்கு கொடுக்க வேண்டிய
ஸ்தானத்தை அவருக்கு கொடுக்கவில்லை என்றால் திருமணம் தள்ளிப்போகும். வேலை வாய்ப்பில் பிரச்சனை ஏற்படும். சொந்த தொழில் முன்னேற்றம் ஏற்படாது. ஏனென்றால், அப்பா ஸ்தானத்தை குறிப்பது #சூரியன்
அம்மாவை மதிக்கவில்லை என்றால், அவர்களை மரியாதை குறைவாக நடத்தினால், அவர்களை அவமானப்படுத்தி பேசினால்
கட்டாயம் அவரின் அழகு குறைய ஆரம்பிக்கும். அறிவாற்றல் மங்கிப் போகும். குழப்பமான வாழ்க்கை வாழத் தொடங்குவர். மனநிம்மதியே இருக்காது. ஏனென்றால், அம்மா ஸ்தானத்தை குறிப்பது #சந்திரபகவான்
கணவனாக இருந்தால், வீட்டில் இருக்கும் மனைவியை மரியாதையோடு நடத்த வேண்டும். மனைவிக்கு மரியாதை இல்லை
Read 12 tweets
Apr 1
#தியாகராஜரும்_ஶ்ரீராமரும்
வீட்டு திண்ணையில் அமர்ந்தபடி, கண்களை மூடியவாறு ராம ஜபம் செய்து கொண்டிருந்த தியாகராஜர், குரல் கேட்டு சட்டென்று கண் விழித்தார். எதிரே ஒரு வயதான தம்பதி. அருகே, கூப்பிய கரங்களுடன் ஒரு இளைஞன். மெல்லிய குரலில் அந்த முதியவர் பேச ஆரம்பித்தார்.
''ஸ்வாமி,
நாங்கள் வடக்கே ரொம்ப தூரத்தில் இருந்து கால்நடையாய் ஷேத்ராடனம் பண்ணிட்டு வரோம். நாளை ராமேஸ்வரம் போகணும். இன்று ஒரு ராத்திரி மட்டும் உங்க இடத்துல தங்கிவிட்டு, காலை பொழுது விடிந்ததும் கிளம்பிடறோம்.
தயவு செய்து எங்களுக்கு உதவி செய்யணும்” மெல்லிய குரலில், பேசினார் அவர். வயதான
அந்த தம்பதியின் அழுக்கு படிந்த உடைகள், முகங்களில் தெரிந்த களைப்பு, வாட்டம் மற்றும், பேச்சில் தெரிந்த ஆயாசம் இவற்றை தாண்டி அம்மூவரின் முகலாவண்யமும் தெய்வீக அம்சமும் தியாகராஜரை என்னவோ செய்ய அவருக்கு ஒரு வித பக்தி மயக்கம் ஏற்பட்டது. ஒரு கணம் நிலை தடுமாறியவர் பின், மெலிதான
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(