*கார்கோடகனுக்கு ஈசன் முக்தி அருளிய கோடக நல்லூர் கோவில்*
ஒவ்வொரு மனிதனும் தனது வாழ் நாளில் செவ்வாய் திசையின் ஆட்சி நடக்கும் காலங்களில், தனக்கு நன்மைகள் மட்டுமே நடைபெற வேண்டும் என்று விரும்பினால், அவசியம் செல்ல வேண்டிய திருத்தலம் கோடக நல்லூர்.
1
நெல்லையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஊர். நெல்லை மாவட்டம் சேரன்மா தேவி - முக்கூடல் செல்லும் ரோட்டில் நடுக்கல்லூர் என்ற ஊரில் இருந்து, தெற்கே ஒரு கிலோமீட்டர் சென்றால் கோடகநல்லூர் கிராமத்தை அடையலாம்.
2
இந்த ஊர் பழங் காலத்தில் ‘கார் கோடக ஷேத்திரம்’ என்றும், ‘கோடகனூர்’ என்றும் அழைக்கப்பட்டுள்ளது.
ஆதிசங்கரர் இவ்வூரை தட்சிண சிருங்கேரி என்று புகழ்ந் துரைக்கிறார். இங்கு பாயும் தாமிரபரணி நதிக்கு தட்சிண கங்கை என்ற பெயரும் உண்டு.
3
மனோன் மணியத்தில் கூறப்படும் சுந்தர முனிவர் என்பது இவ்வூரில் அவதரித்த சுந்தர சுவாமிகளையே குறிக்கும்.
இந்த ஊரின் மேற்கில் உள்ள பெரியபிரான் திருக்கோவில் கல் வெட்டுகளில் ‘கோடனூர்’ என்ற ‘குலசேகர சதுர்வேதிமங்கலம்’ என்று இவ்வூரின் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது.
4
பல ஆண்டுகளுக்கு முன்பு முனிவர் ஒருவர் காட்டில் தவம் புரிந்து கொண்டு இருந்தார். முனிவர் யாகம் செய்வதற்கு தேவையான சமித்து (சுள்ளி) பொறுக்குவதற்காக, முனிவரின் மகன் சென்றிருந்தான்.
5
அப்போது காட்டிற்கு வேட்டையாட வந்த பரிஷத் மகாராஜாவின் மகன், முனிவர் அமர்ந்து இருந்து தியானம் செய்யும் இடத்திற்கு வந்தான்.
நீண்ட நேர வேட்டையாடலால் தாகம் ஏற்பட்டிருந்த ராஜ குமாரன், தண்ணீர் கேட்ப தற்காக முனிவரை அழைத்தான்.
6
ஆனால் ஆழ்ந்த தியானத்தில் இருந்த முனிவருக்கு அது காதில் விழவில்லை. தன்னுடைய அழைப்பிற்கு செவிசாய்க்காமல் இருக்கும் முனிவரின் மீது, ராஜ குமாரனுக்கு கோபம் ஏற்பட்டது.
7
அந்த ஆத்திரத்தில், முனிவரின் அருகே கிடந்த இறந்த பாம்பை எடுத்து முனிவரது கழுத்தில் போட்டு விட்டு, குதிரையில் ஏறி வந்த வழியே சென்று விட்டான். முனிவர் ஆழ் தியானத்தில் இருந்ததால், தனது கழுத்தில் இறந்த பாம்பு இருப்பதைக்கூட அவர் அறியவில்லை.
8
அப்போது முனிவரின் மகன், தனது தந்தைக்கு யாகம் செய் வதற் கான பொருட்களை சேகரித்துக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். தனது தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பு கிடப்பதைக் கண்டு திடுக் கிட்டான்.
9
தன்னுடைய யோகத் திறமையைக் கொண்டு, அங்கு நடந்தது என்ன என்பதை, முனிவரின் மகன் அறிந்துகொண்டான். இதையடுத்து அவனது கோபம், தன் தந்தையும், குருவு மானவரை அவமானப் படுத்திய ராஜ குமாரனின் மீது திரும்பியது.
10
‘எனது தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பைப் போட்டவனின், தந்தையை பாம்பு தீண்டட்டும்’ என்று சாபமிட்டான். இந்த சம்பவம் நடந்த சில நாட்கள் கழித்து பரிஷத் மகாராஜாவின் ஜாதகத்தை கணித்த ஜோதிடர் கள், அவருக்கு சர்ப்பதோஷம் இருப்பதாக மகாராஜாவிடம் தெரிவித்தனர்.
11
அதனைக் கேட்ட பரிஷத் மகாராஜா, தனது உயிரை சர்ப்பத்திடம் (பாம்பு) இருந்து காத்துக்கொள்ள, ஏழு மலை தாண்டி, ஏழுகடல் தாண்டி கப் பலில் மண்டபம் கட்டி வசிக்கத் தொடங்கினார்.
12
அப்போது கார் கோடகன் என்ற பாம்பானது மகாராஜா
சாப்பிடும் பழத்திற்குள் புழுவாக உருமாறி புகுந்து, பரிஷத் மகா ராஜாவை தீண்டியது. இதில் மகாராஜா இறந்து போனார்.
13
பின்னர் ஒருநாள் கார்கோடகன் பாம்பு, தான் வசித்த இடத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் மாட்டிக் கொண்டது. அப்போது அந்த வழியாக சூதாட்டத்தில் நாட்டையும், சொத்தையும் இழந்த நள மகாராஜா சோகத்தில் நடந்து வந்து கொண்டு இருந்தார்.
14
கார்கோடகன் பாம்பு தீயில் மாட்டிக் கொண்டதை பார்த்த நள மகாராஜா, அந்த கார் கோடகன் பாம்பை உயிருடன் மீட்டார்.
தன்னை காப்பாற்றியதற்கு பிராயச்சித்தமாக கார்கோடகன் பாம்பு, நளமகா ராஜாவை தீண்டி உருமாற்றியது.
15
இதனால் நளமகாராஜா நாட்டு மக்களின் கண்களுக்கு தெரியாதவராக உருமாறினார். நள மகாராஜா உருமாறியதால், அவரது மனைவி தமயந்திக்கு கூட நள மகாராஜாவின் உருவம் தெரியவில்லை.
16
இதனால் நளமகாராஜா, நாட்டை இழந்து விட்டு எங்கோ சென்றுவிட்டார் என்று கருதிய நளமகாராஜாவின் மாமா வீம ராஜா, தனது மகள் தமயந் திக்கு இரண்டாவது சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்தார்.
17
அந்த சமயத்தில், தேர் ஓட்டு வதில் மிகுந்த திறமை படைத்த நளமகாராஜா, வீமராஜாவிடம் தேரோட்டியாக வேலைக்கு சேர்ந்தார்.
18
நளன், வீமராஜா விற்கு தேர் ஓட்டு வதை பார்த்த தமயந்தி, உருவில் நளனை தெரியாவிட்டாலும் அவன் தேர் ஓட்டும் விதத்தை பார்த்து அவன் தான் (நளனை) தனது கணவன் என்று தெரிந்து கொண்டாள்.
19
பின்னர் நளனும், தமயந்தியும் ஒருவரை யொருவர் பார்த்து சம்பாஷனை செய்து கொண்டனர். இதையறிந்த வீமராஜா நளனுக்கும்,
தமயந்திக்கும் திருமணம் செய்துவைத்தார்.
20
நளன், ஏழரை ஆண்டு கள் கழித்து மீண்டும் ராஜாவாக பட்டம் சூட்டிக் கொண்ட பின்னர் கார்கோடகன் பாம்பு மீண்டும் நளனை தீண்டி பழைய உரு வத்திற்கு மாற்றியது.
21
பரிஷத் மகா ராஜாவையும், நளனையும் தீண்டிய செயலுக்காக கார் கோடகன் பாம்பு பாப விமோசனம் பெற மகா விஷ்ணுவை நோக்கி தியானம் செய்தது. அப்போது கார்கோடகனின் முன் மகாவிஷ்ணு தோன்றி, ‘கோடக நல்லூருக்கு சென்று வழிபட்டு வா. அங்கு உனக்கு முக்தி கிடைக்கும்’ என்று கூறினார்.
22
அதன்படி கார்கோடகன் பாம்பு கோடக நல்லூருக்கு வந்து அங் குள்ள ஈசனை வழி பட்டு தவம் செய்தது. இதையடுத்து கார்கோடகனுக்கு முக்தி கிடைத்தது. அன்று முதல் இந்த ஊர் கார் கோடகநல்லூர் என்றும், கார் கோடக ஷேத்திரம் என்றும் அழைக்கப்பட்டது.
23
தற்போது கார் கோடகநல்லூர் என்ற பெயர் திரிந்து கோடக நல்லூர் என்று அழைக்கப் படுகிறது.
இங்குள்ள கயிலாயநாதர் ஆலயம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. இத்தலம் நவ கயிலாயத்தில் மூன்றாவது இடத்தையும்,
24
நவக்கிரகங்களில் செவ்வாய் ஆட்சி செலுத்தும் ஆலயங் களில் ஐந்தாவது இடத்தையும் பெறுகிறது. இங்குள்ள இறைவன், செவ்வாய் பகவான் வடிவில் அருள்பாலிக்கிறார்.
25
வடக்கு முகமாக அமைந்துள்ள இந்த ஆலயத்தில் உள்ள நந்தியம் பெருமானுக்கு தினமும் திருக்கல்யாணம் நடைபெறுவது தனிச் சிறப்பாகும்.
26
இங்குள்ள கோவிலில் சுவாமி கயிலாச நாதராகவும், அம்பாள் சிவகாமி அம்மனாகவும் அருள்பாலிக்கின்றனர்.
கயிலாசநாதர் கிழக்கு நோக்கியும், சிவகாமி அம்மன் தெற்கு நோக்கியும் எழுந்தருளி உள்ளனர்.
27
இந்தக் கோவிலில் கொடிமரம், கோபுரம் ஆகியவை இல்லை. கோவிலின் உள்புறத்தில் வலது புறம் விநாயகரும், இடதுபுறம் முருகன், அம்பாள், சிறிய நந்தி, சுப்ரமணியர், வள்ளி, தெய் வானை ஆகியோரும்
அருள்பாலிக்கின்றனர். 🙏
சிவாலயங்களில் இரவு நேரத்தில் கோயில் நடை சாற்றப்படுவதற்கு முன் நடைபெறுகின்ற பூஜை பள்ளியறை பூஜை ஆகும்.
அதாவது சுவாமியையும் அம்பாளையும் பள்ளியறையில் ஊஞ்சலில் ஓரு சேர அமர வைத்து ஆராதனை செய்து தாலாட்டுப்பாடி பூஜிப்பது ஆகும்.
பள்ளியறை பூஜைக்கு பல்லக்கில் ஈசன் வலம் வரும் போது, சிவபுராணம், பதிகங்கள் பாடி வரவேண்டும். இதைத் தரிசித்தாலே வளமான வாழ்க்கையை நாம் அமைக்கின்றோம் என்று அர்த்தம்.
பள்ளியறை பூஜைக்கு பல்லக்கு தூக்கி ஈசனைச் சுமந்து வரும் பாக்கியம் எவருக்குக் கிட்டுகின்றதோ, அவர்கள் மறுபிறவியில் பொறியியல் வல்லுநர்களாகவும்,பல மாடிக் கட்டிடங்களுக்குச் சொந்தக்காரர்களாகவும், பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு அதிபதியாகவும் மாறுவார்கள் என்பது நம்பிகை.
*நம் பிள்ளைகளுக்கு இறைவனின் திருநாமத்தை சூட்டுவது ஏன்*.🙏💐.
*ஒரு மன்னன் பெருமாளிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தான். தினமும் பெருமாளை வணங்காமலும், அவரது திருநாமங்களை உச்சரிக்காமலும் அவனுக்கு எந்த வேலையையும் செய்ய முடியாது.
செய்யவும் பிடிக்காது.
ஆனாலும் அவன் முன் வினை அவனை தொடர்ந்தது. அதன் பலனாக பல நோய்களால் அவதிப்பட்டான்*.
தன்னால் சரிவர நாட்டை கவனிக்க முடியாது போகவே, தன் மூத்த மகனுக்கு பட்டம் சூட்டி விட்டு, படுத்த படுக்கையாக கிடந்தான். அந்த
நிலையிலும் அவனுக்கு திருமாலின் பெயர் மட்டும் மறக்கவில்லை.
அச்சுதா... அச்சுதா... கோவிந்தா...கோவிந்தா... என் வாழ்வை முடித்து விடு. உன்னோடு சேர்த்துக் கொள், என சதா நேரமும் புலம்பிக் கொண்டே இருந்தான்.*
நாள் முழுக்க யோகம் மட்டுமே செய்து வரும் ஒரு யோகிக்கு பல மாதங்களாக மனதில் ஒரு வெறுமை. இனம் புரியாத வேதனை. அதிகாலை முதல் இரவு வரை யோகம் என்ன, மூச்சையடக்கி பிராணாயாமம் என்ன, அடிவயிற்றிலிருந்து ஓம்கார ஒலி எழுப்புவது என்ன... ம்ஹும்.. எங்கயோ ஒன்று இடித்தது.
தட்சிணேஸ்வரத்தில் உள்ள காளி கோயிலின் எதிரே இருந்த ஆலமரத்தடியில் அமர்ந்து தியானம் செய்வார் ராமகிருஷ்ணர்.
காளியின் தரிசனம் வேண்டி தன் தூய பக்தியினால் காளியிடம் வேண்டினார். மன்றாடினார். பலவாறு முயற்சித்தும் காளி தரிசனம் கிடைக்கவில்லையே என மனம் நொந்து
அங்கிருந்த கத்தியால் தன்னை மாய்த்துக்கொள்ள முயன்றார்.அப்போது விக்கிரகத்தில் இருந்து வெளிப்பட்டு தன் சொரூபத்தை காட்டியருளினாள் தேவி. பின் நினைத்த போது எல்லாம் அவருக்கு காட்சியருளினாள் தாய் காளி. அவரோடு பேசினாள். அவர் தந்த உணவினை உண்டாள்.
*ஏழு அடுக்குகுகள் 400 டன் எடை நடமாடும் கோவில் திருவாரூர் ஆழி தேர்...!* 🙏
ஆரூரா தியாகேசா.....!
இந்திரனுக்குப் போரில் உதவச் சென்ற முசுகுந்தருக்கு சன்மானமாகக் கிடைத்தன ஏழு விடங்க மூர்த்தங்கள். அந்த மூர்த்தங்களைக் கொண்டு வர தேவலோக ஸ்தபதி மயனால் செய்யப்பட்டதே ஆழித்தேர்.
பாற்கடல் தந்த தேவதாருக்களைக் கொண்டு தேர் உருவானது இந்தத் தேர். அதனாலேயே இது ஆழித்தேர் அதாவது கடல் போன்ற தேர் என்று பேரானது.
* 10 தேர்க்கால்கள், 9 லட்சம் கிலோ எடைகொண்ட அந்த பிரமாண்டத் தேர் பிரம்மனால் ஸ்தாபிக்கப்பட்டது. திருமாலால் வணங்கப்பட்டது. அஷ்ட திக் பாலகர்களும் அந்த தேரின் குதிரைகளாக மாறினர். தேர்க்கால் அச்சாக தேவர்களும், தேரின் அடித்தட்டாக காலதேவனும் அமர்ந்தார்கள்.
சனீஸ்வர பகவான் மிகவும் கருணையானவர்.வாழ்வில் நமக்கு வேண்டும் என்று சொல்லக் கூடிய செல்வங்களை எல்லாம் வாரி வாரி வழங்கக் கூடியவர்.
இவர் வெறும் கெடுதல்களை மட்டுமே ஒரு மனிதருக்கு தருபவர் அல்ல.
1
அதனால் தான் நம்முடைய முன்னோர்கள் ஒரு வார்த்தையிலே அழகாகக் கூறுவார்,சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று.
மிக உயர்ந்த சோழவள நாட்டிலே மயிலாடுதுறை அற்புதமான திருத்தலம்.
2
இந்த மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் பேரளத்தின் மேற்கே 3 கி.மீ.தொலைவில் அமையப் பெற்றிருக்கிறது திருமீயச்சூர் என்கின்ற அற்புதமான திருத்தலம்.
இந்த தேகத்தை (சரீரத்தை) அடையாளம் காட்டினாளே, அவளுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்!’’ -பெரியவா
(பெரியவா பிறந்த சமயத்தில் தன் தாயாருக்கு பிரசவம் பார்த்த மூதாட்டிக்கு பெரியவா கொடுத்த ருத்திராட்ச மாலை- சம்பவம்)
சொன்னவர்-திரு முருக கிருபானந்த வாரியார்.
திரு முருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் 1965-ஆம் ஆண்டு சென்னை நகரில் ஒரு பள்ளி ஆண்டு விழாவின்போது முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டிகளில் வென்ற மாணவ- மாணவியருக்குப் பரிசுகள் வழங்கினார்.
பின்னர், ஆசி வழங்கிச் சிறப்புரை ஆற்றியபோது, மனிதன் மனிதனாக வாழ வேண்டிய முறைகளையும் குருவின் மேன்மையைப் பற்றியும் விளக்கினார். அதற்கு உதாரணமாக அவர் சொன்ன சம்பவம் இதுதான்: