அன்பெழில் Profile picture
Apr 4, 2023 24 tweets 7 min read Read on X
#நரநாராயணர் #பத்ரிகாஸ்ரமம்
தவத்தின் மகிமையை உலகுக்கு எடுத்துக்காட்ட மகாவிஷ்ணு எடுத்த இரட்டை அவதாரமே நர நாராயணர்கள். கடவுள் மனிதனாகவும், மனிதன் கடவுளாகவும் ஆகமுடியும் என்ற தத்துவத்தை விளக்குவது இத்திருவவதாரம். மகா விஷ்ணுவின் பல்வேறு திருநாமங்களுண்டு. முக்கியமான 245-வது நாமம்
'நாராயணா’ என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமம் கூறுகிறது. #நாராயணா என்றால், 'எல்லா ஜீவன்களும் உறையுமிடம்’ என்று பொருள். ஸ்ரீமந் நாராயணனிடம் இருந்து தான் சப்தரிஷிகளும், தேவர்களும், பஞ்சபூதங்களும், அனைத்து ஜீவராசிகளும் தோன்றி உள்ளன என்று விஷ்ணுபுராணம் கூறுகிறது.
'ஓம் நமோநாராயணாய’ என்ற மந்திரம்
பகவான் விஷ்ணுவைச் சரணடையவும், மோக்ஷத்தை அடையவும் வழிவகுக்கும் உன்னத மந்திரம் என்று புராணங்களும் சாஸ்திரங்களும் கூறுகின்றன. நர நாராயணர் என்பவர்கள் பகவான் விஷ்ணு எடுத்த இரட்டை அவதாரம்.
நரன் என்பது மனிதத் தன்மையையும், நாராயணா என்பது தெய்வத் தன்மையையும் விளக்குவது.
'நர நாராயணன்’
என்பது மனிதனும் தெய்வமும் இணைந்த சக்தியைக் குறிப்பிடுவதாகும். நாராயணன் என்கிற தெய்வத்திடம் இருந்து எந்நாளும் பிரிக்க முடியாத மனித சக்தியைக் குறிப்பதே நரநாராயண அவதாரம். தெய்வீக உணர்வோடு, இறைவனை அறிந்து பூரண ஞானம் பெற்ற மனிதன் தான் நரர்களில் நாராயணன். தன்னலம் இல்லாமல் மனித
நேயத்துடன் வாழ்ந்து தர்மத்தைக் காக்கின்றவனே நரநாராயணன். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் #பகவத்கீதையில், “சாதுக்களை ரக்ஷித்து, துஷ்டர்களை அழித்து, தர்மத்தை ஸ்தாபிக்க நான் எல்லா யுகங்களிலும் அவதரிப்பேன்”என்று கூறுகிறார். அதற்காக அவர் மச்ச, கூர்ம, வராஹ, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம,
கிருஷ்ண, கல்கி ஆகிய பத்து அவதாரங்கள் எடுத்துள்ளார். இந்த தசாவதாரத்தைத் தவிர, பகவான் விஷ்ணு எடுத்த அம்ஸாவதாரங்கள் பற்றியும் நமது புராணங்கள் குறிப்பிடுகின்றன. வேதங்களைக் காக்க குதிரை முகத்தோடு தோன்றிய ஹயக்ரீவ அவதாரம், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் வடிவிலே எடுத்த
தத்தாத்ரேய அவதாரம், உலகை நோயிலிருந்து காப்பாற்றி ஆரோக்கியத்தை அருளுவதற்காக எடுத்த தனவந்திரி அவதாரம்
ஆகியவற்றைத் தொடர்ந்து எடுத்த அம்ஸாவதாரம்தான் நர நாராயண அவதாரம். விஷ்ணு புராணத்திலும் சிவபுராணத்திலும், வாமன புராணத்திலும், ராமாயண- மகாபாரத காவியத்திலும் இந்த நரநாராயண அவதாரத்தின்
பெருமை விளக்கப்படுகிறது. சிருஷ்டி காலத்தில் பிரம்மதேவன் தனது மார்பிலிருந்து தர்ம தேவனை சிருஷ்டித்தான். தர்மங்களையும் நியாயங்களையும் காப்பாற்றும் பொறுப்பு அந்தத் தேவனுக்குத் தரப்பட்டது. தர்மதேவன் தட்சப்பிரஜாபதியின் 10 புத்திரிகளை மணந்து, அற்புதமான புதல்வர்களைப் பெற்றான். அவர்களில்
ஹரி, கிருஷ்ணா, நரன், நாராயணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஹரியும் கிருஷ்ணனும் பிரம்மஞானம் பெற்ற யோகிகளாகி, உலகம் உய்ய தவம் இயற்றலாயினர். நர நாராயணர்கள் முற்றும் துறந்த முனிவர்களாகி, இமயத்தில் அமைந்த பத்ரிகாஸ்ரமத்தில் தவம் மேற்கொண்டனர். பத்ரிகாஸ்ரம் என்பதே இன்றைய #பத்ரிநாத்
ஷேத்திரம். மனித இனத்துக்கு அமைதியும் சாந்தியும் ஏற்பட பன்னெடுங்காலம் நர நாராயணர்கள் இங்கே தவம் செய்தனர். அவர்களின் தவவலிமை எல்லா உலகங்களிலும் பிரதிபலித்தது. தேவர்களின் தலைவனான தேவேந்திரனை இது பாதித்தது. தனது இந்திர பதவியை அடைய யாரோ அசுரர்கள் கோர தவம் செய்வதாக அவன் எண்ணினான். தனது
பதவியையும் தேவலோகத்தையும் காப்பாற்ற நினைத்த தேவந்திரன், நர நாராயணர்களின் தவத்தைக் கலைக்க முயற்சி செய்தான். முதலில் தேவேந்திரன் காமதேவனை அனுப்பி, நர நாராயணர்கள் மனத்தில் ஆசையை உருவாக்க முயற்சித்தான்.
காமதேவனுக்குத் துணையாக சில அப்ஸர கன்னிகளையும் அனுப்பினான். ஆனால், நர நாராயணர்களை
எந்த விதத்திலும் அவர்களால் அணுக முடியவில்லை. ஒரு குறிப்பிட்ட தருணத்தில், தவத்திலிருந்த நாராயணர் தனது துடையைக் கையால் ஓங்கி அடித்தார். அதிலிருந்து சௌந்தர்யமும் தேஜஸும் மிக்க ஓர் அப்ஸரப் பெண் தேவதை தோன்றினாள். அவளது அழகிய தோற்றத்தைக் கண்டு இந்திரனும், காமனும், மற்ற தேவதேவியர்களும்
திகைத்து நின்றனர். துடையிலிருந்து தோன்றிய அந்தத் தேவதைக்கு 'ஊர்வசி’ என்று பெயரிட்டு அழைத்தார் நாராயணர். 'ஊரு’ என்றால் துடை என்று பொருள். தங்கள் தவத்தின் நோக்கத்தை நர நாராயணர்கள் தேவேந்திரனிடம் எடுத்துக்கூற, அவன் தன் தவறுக்கு வருந்தி, அவர்களின் ஆசி கோரினான். அப்போது கலைத் திறமை
அனைத்தும் கொண்ட ஊர்வசியை தேவேந்திரனிடம் ஒப்படைத்தார் நாராயணன். அவள் தேவலோகத்தின் இசை நடனக் கலைஞராகி, தேவர்களுக்குச் சேவை செய்ய ஆரம்பித்தாள். நர நாராயணர்களை வணங்கிய தேவேந்திரன், தேவ லோகத்திலிருந்த அமிர்த கலசத்தை அவர்களிடம் ஒப்படைத்து, பாதுகாப்பாக வைத்திருந்து, தேவர்களும்
தர்மவான்களும் அதனால் பயனடைய வழிசெய்யுமாறு வேண்டினான். அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டு, தேவர்களை ஆசீர்வதித்துத் தங்கள் தவத்தைத் தொடர்ந்தனர். பிறகு, மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. அது, நர நாராயணர்களை சிவபெருமானோடு இணைத்த சம்பவம். சிவபெருமானை ஒதுக்கி வைத்து விட்டு தட்சன் பெரும் யாகத்தை
தொடங்கினார். சிவபெருமானின் பத்தினியும், தட்சனின் மகளுமான தாட்சாயினி அந்த யாகத்துக்குச் சென்று, தன் தந்தை செய்யும் தவறைச் சுட்டிக்காட்டி வாதிட்டாள். கோபம் அடைந்த தட்சன், மகளென்றும் பாராமல் அவளை நிந்தித்தான்.
தாட்சாயினி 'தட்ச யாகம் அழியட்டும்’ என்று சாபமிட்டு, யாகசாலையில் பிராணத்
தியாகம் செய்தாள். இதனால் கோபமடைந்த சிவபெருமான், வீரபத்திரர் வடிவில் தோன்றி யாக சாலையை அழித்தார். அப்போது அவர் கையிலிருந்து புறப்பட்ட திரிசூலம் தீயைக் கக்கிக்கொண்டு விண்ணில் கிளம்பியது. நேராக அது பத்ரிகாஸ்ரமம் அடைந்து, அங்கே ஆழ்ந்த தவத்திலிருந்த நாராயணர் மார்பில் தாக்கியது. ஆனால்,
நர நாராயணர்களைச் சுற்றியிருந்த தவ மண்டலத்தின் சக்தியால் திரிசூலம் திசை திரும்பி சிவபெருமானையே தாக்கியது. அப்போது சிவபெருமான் தலை முடிக்கற்றை திரிசூலத்தின் வெப்பத்தால் கருகியது. அதனால், அது காய்ந்த வைக்கோல் போல ஆனது.
இதனால் சிவனுக்கு 'முஞ்சகேசன்’ என்ற பெயர்ஏற்பட்டது. 'முஞ்ச’
என்றால் காய்ந்த புல் என்று பொருள்.
தேவர்கள் அனைவரும் சிவபெருமானை அமைதியாக இருக்கும்படி வேண்டினர்.
அப்போது சிவபெருமான், ''நர நாராயணர்களின் தவவலிமையை உலகுக்கு எடுத்துக்காட்டவே நான் இந்தத் திருவிளையாடல் புரிந்தேன்.
நர நாராயணர்களின் தவம் என்னைச் சாந்தப் படுத்திவிட்டது. #பத்ரிகாஸ்ரமம்
அருகிலேயே நானும் அமர்ந்து, என் பக்தர்களுக்கு அருள்பாலிப்பேன். நான் அமர்ந்த இடம் #கேதார்நாத் என்று பெயர் பெறும். பத்ரிகாஸ்ரமத்தில் எனது திரிசூலம் விழுந்த இடத்தில் வெந்நீர் ஊற்றுகள் தோன்றி, காலம் காலமாக இங்கு வரும் பக்தர்களின் நோய் தீர்க்கும் தீர்த்தமாகச் செயல்படும். தேவர்களும்
மனிதர்களும் வழிபடும் விஷ்ணு- சிவ ஸ்தலங்களாக பத்ரிநாத்தும் கேதார்நாத்தும் திகழும்” என்று கூறி அருளினார். நர நாராயணர்களின் தவம் தொடர்ந்தது. இந்த நர நாராயணர்களே துவாபர யுகத்தில் அர்ஜுனனாகவும் கிருஷ்ணனாகவும் தோன்றினார்கள் என்கிற விவரம் மகாபாரதத்தில் உள்ளது. மகாபாரத காலத்தில், சிவ
பெருமான் கிராடன் என்ற வேடன் வடிவில் தோன்றி அர்ஜுனனின் பலத்தைப் பரீட்சை செய்வதற்காக அவனுடன் யுத்தம் செய்த வரலாறும், அதன்பின் அவனுக்குப் பாசுபதாஸ்திரம் தந்து அருளிய வரலாறும், நரனுக்கும் சிவனுக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறது. பிரிக்க முடியாத ஜீவாத்மா, பரமாத்மாவின் பிரதிபிம்பமே நர
நாராயணர்கள். தூய தவத்தாலும், தார்மிக நெறியாலும் மனிதன் தெய்வமாகலாம் என்பதே நர நாராயண தத்துவம்.

ஓம் நமோ நாராயணாய!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Nov 20, 2024
#MahaPeriyava
By His Holiness Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Mahaswamigal Sri Shankaracharya of Kanchi Kamakoti Peetham
(Bhavan's Journal was privileged to publish Paramacharya's article entitled 'What Life Has Taught Me' some years ago. Rarely do saints like ourImage
Paramacharya talk about themselves. But He did so and what He said was marked by 'vinaya' (humility) of which He is never tired of speaking. Says the Acharya: "God has created some souls to live for others only).
When this article appeared in the 'Bhavan's journal', Rajaji was
the first to congratulate us on securing an article of this kind from His Holiness.

"The first two experiences remembered as having occurred in the third or fourth year of my life, are dreadful to think, as they were interwoven with temptation, greed, avarice, deceit, groaning
Read 6 tweets
Nov 20, 2024
#ஸ்ரீபெரும்புதூர்_ஆதிகேசவப்_பெருமாளும்_ராமானுஜரும்
இத்தலத்தில் தான் ஸ்ரீ ராமானுஜர் அவதரித்தார். அவருக்கென இக்கோவிலில் தனி சந்நிதியொன்று உள்ளது. இங்குள்ள பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் அருள் புரிகிறார். ஒவ்வொரு கோவிலும் வைகுண்ட ஏகாதசிக்கு சொர்க்கலோக கதவை திறப்பார்கள். ஆனால் Image
இக்கோவிலே பூலோகத்தின் வைகுண்டமாக கருதப் படுவதால் வைகுண்ட ஏகாதசி அன்றைக்கு இக்கோவிலில் அடி எடுத்து வைத்தாலே சொர்க்க வாசலில் நுழைந்த முழு பலனைப் பெறலாம். இங்குள்ள தாயாரின் பெயர் யதிராஜவல்லி. தாயாருக்கென்று தனி சந்நிதியுள்ளது. அத்தோடு ஆண்டாளுக்கும் தனி சந்நிதி ஒன்று தனியாக உள்ளது. Image
ஆண்டாளின் அழகை வர்னிக்க நம் அகக்கண் பத்தாது. பிறகு இராமருக்கும், வேணு கோபாலருக்கும் தனித்தனி சந்ந்திகள் உள்ளன. இப்பெருமாளின் திருநட்சத்திரம் திருவோணம். ஸ்ரீராமானுஜரின் திருநட்சத்திரம் திருவாதிரை. ஆகவே ஒவ்வொரு மாதத்திலும் இந்த நட்சத்திரம் வரும் தினங்களில் திருவீதி உலா வரும் Image
Read 10 tweets
Nov 18, 2024
#Vasishtha_Kavyakantha_Ganapati_Muni (1878 1936)
He was a valiant soldier in the cause of Truth and Divinity. Even highly learned people of our time wonder at his indubitable versatile genius, keenness of perception and understanding of our modern problems, though he had never been to school all his life. His powers of intellect and intuition had solved and untied many mystic knots. His wide scholarship and studies in religious lore harmonized in him all religions and schools of philosophy. He was a master of metaphysics and his gift transported him into regions where he could see the entire manifestation. In fact, he belonged to the order of the Rig Vedic seers who were gods among men.
The Muni's life story is sweet and all absorbing and has been beautifully rendered in the famous biography #Vashistha_Vaibhavam by his foremost disciple, Sri Kapali Shastriar. Ganapati Muni was born in Kalavarayi near Bobbili in Andhra Pradesh on 17th November1878. He belonged to a family of Sri Vidya initiates (in vashishtha gotram), which had actually migrated from a village near Kumbakonam in Tamil Nadu in the late 16th or early 17th century (later the family was wellknown as the Ayyalasomayajulu family). His parents, Narasimha Sastry and Narasamamba, had 3 sons, Ganapati being the middle one. Nearly a year before his birth, on the holy day of rathasaptami, his mother had been to the famous Surya (Sun) temple at Arasavalli (near Srikakulam in Andhra Pradesh) to offer her prayers and worship. She stayed overnight in the temple after the traditional worship to the Lord. In the next early morning she had a dream in which a beautiful woman with golden divine radiance emerged from the corridors of the temple, approached her with a shining pot of fire and giving it in her hands vanished. To her utter astonishment, the moment the fire pitcher came into contact with her, it entered her womb and assumed the form of a child.

Soon after her return to home from Arasavalli, she showed signs of pregnancy. She believed that her child was a divine gift of God Agni (fire). While she was waiting to deliver the child, her husband, Narasimha Sastry, had gone to the holy city of Kashi (Benares in Uttar Pradesh) in November 1878, where he also had a unique experience. When he was performing tapas in the Dhundiganapati temple (near Visweswara Ghat) he had the vision of a little child emanating from the Deity and coming near him. After these wonderful experiences by both parents, Ganapati was born in the parental home of his mother on 17th November 1878.

The father appropriately named his second son Ganapati, rooted in his conviction that the child was an emanation of God Ganapati himself. It may be noted that the Vedic deity Agni (Fire) is none other than Ganapati described in the puranas and worshipped in the tantras. Ganapati himself was conscious of his divinity. He has expressed this in his most famous poem #Umasahasram and has said that he was born as an amsa (portion) of God Ganapati. He has also expressed his conviction about the identity between him and God Ganapati, the guiding spirit of his corporeal existence, in his work #Herambopasthanam (Glory of Ganapati).Image
Ganapati was educated entirely at home. His father, Narasimha Sastry, like his ancestors, was an expert and well versed in mantra shastra, astrology and ayurveda. With this traditional family background, proficiency in these subjects came naturally to Ganapati. When he was only 10 years old, he was able to prepare the pañchamgam (almanac). He finished studying the classical Sanskrit poems and then devoted himself to the study of grammar and poetics. At the same time he delved deep into the writings of Vyasa and Valmiki. Again and again he read the Mahabharata. His horizon widened and his intellect mellowed with an everdeepening perception. Like the ancient Rishis, Ganapati wanted to experience immense strength and power by the practice of tapasya through mantra japa and meditation. Although married at an early age to Srimati Vishalakshi, he started visiting one sacred place after another for his tapas when he was 18 years old.

He used to stay in one place for a few days or even months. In one such visit to Bhubaneswar (in Orissa, where the famous Lingaraj temple of Lord Siva is located), during his tapas, Ganapati had a vision, in which Goddess Lalitambika (bhuvaneshwari) appeared before him, offering divine nectar. As Ganapati tasted this heavenly nectar, the Goddess watched him with a sweet smile, full of grace. From then onwards, the sweetness of the nectar became an integral part of him. After this incident, Ganapati's intellect developed a rare sharpness and he attained complete mastery over poetry. Indeed, the literary work composed after this incident is endowed with a distinct sweetness and grace.

When Ganapati was staying in Kashi, he came to know that an assembly of scholars (harisabha) would be held in the famous city of Navadwipa in Bengal. On the advice of his friends he got a letter of introduction and went to Navadwipa. There he excelled in all the difficult tests that he was put to with an effortless ease that stunned his examiners, who unanimously conferred the title #kavyakantha (one who has poetry in his throat voice of poetry) on him forthwith. He was only 22 years old then (details are in Volume 11).
Ganapati repaired to the south of the country in his 25th year. From Kanchipuram he came toArunachala (Thiruvannamalai) in 1903 to perform tapas. He visited twice #SriBrahmanaSwamy (who was later named as Bhagavan Sri Ramana Maharshi by Kavyakantha himself) before he accepted a teacher's job at Vellore in 1904. Later in 1907, he resigned his job at Vellore and returned to Arunachala. It was at this stage that he sought and gained the grace of Sri Brahmana Swamy (Bhagavan Sri Ramana Maharshi). An intellectual and spiritual giant who had high achievements to his credit and a host of followers as well, Kavyakantha still felt that his life's purpose was not fulfilled. He remembered Brahmana Swamy whom he had met earlier and approached him for his grace and gain inner realization, peace and true import of tapas that he still lacked. On 18.11.1907 Kavyakantha approached Brahmana Swamy, who was staying in the Virupaksha cave, and prostrating himself at his feet said in a trembling voice: “All that has to be read I have read, even Vedanta Sastra I have fully understood. I have performed japa and puja to my heart's content. Yet I have not up to this time understood what tapas is. Hence have I sought refuge at thy feet, pray enlighten me about the nature of tapas.” For quite some time Brahmana Swamy gazed silently at Kavyakantha. He broke his 11 years of long silence and spoke gently, “If one watches where his notion of `I' springs, the mind will be absorbed into that. That is tapas. If a mantra is repeated and attention is directed to the source where the mantra sound is produced, the mind will be absorbed in that. That is tapas.”Image
The scholar poet was filled with joy to have found his guru, and announced that the upadesha (teaching) was original, and that Brahmana Swamy was indeed a maharshi and should be called so thereafter. He gave the full name #BhagavanSriRamanaMaharshi to Brahmana Swamy, whose original name was Venkataraman. Thus, the meeting was of profound significance not only for Kavyakantha but also for the world at large, which could learn from such a high authority about the real stature of Bhagavan Sri Ramana Maharshi, the Silent Sage of Arunachala. Following this momentous meeting, Ganapati composed his great devotional poem, #Umasahasram, a thousand verses in praise of Uma, the Divine Mother, as a part of his tapas in gratitude to the great Goddess for having given him the Maharshi as his Guru (Master). This work is the magnum opus of Sri Vasishta Ganapati Muni.

The Muni had the unique experience of kapalabheda. In the summer of 1922 at the Mango cave of the Arunachala hills, the Muni had several yogic experiences, arising from deeper parts of his being and invading his physical consciousness (resulting in great physical pain). During this, he visited his Master and told him of his inner and physical experience. His most compassionate Master, Sri Maharshi, comforted him by placing his lotus hands on his head. On the very night, he had the experience of the culmination of kundalini sadhana, resulting in the most unique experience of kapalabheda. His cranium was broken into two parts; a distinct sound caused by the breaking arose from the passage, which joins the two holes of the ears. A line of smoke going out of the head was perceived there. The Muni later spoke to his disciples about this yogic experience and that this has been mentioned in the sixth chapter of the Taittrriyopanishad, quoting vyapohya shirshakapale bhurityagnau prati tishati (“having separated the two parts of the cranium, he stands established in Fire as Bhuh, the earth element”) and mentioned several great effects of the power of yoga experienced at this time with their secrets. It is usually believed that the physical effects of this great experience are such that the body cannot sustain long following this event. However, in his case, with the strength of his own tapasya and the Grace of his most compassionate Master, he lived for 14 long years (although he had to observe certain physical restrictions, such as that he could not shave his head nor could put his bare feet on the ground) after this experience. This event speaks volumes on the extraordinary nature of his tapasya and the fact that he was perhaps the greatest Master of tantra born on this earth. In fact, the final revision of his magnum opus Umasahasram after this experience, remains, testimony not only to his supreme mastery over the tantras but also his ability to find the reconciliation and concordance between the Vedic, Upanishadic and the Tantric schools of thoughts. The kapalabheda experience also reconfirms the conviction that he was the direct aWsha (portion) of the Vedic deity agni (who resides as the power of kuKoalinn in the muladhara of human beings).

The poet seer Kavyakantha Ganapati Muni met #Sri_Aurobindo on 15th August 1928. He stayed at the Sri Aurobindo Ashram for about a fortnight. During this stay at the Ashram, the Muni meditated with The Mother a few times. After one such meditation, The Mother expressed that the Muni was a real yogi who could plunge into great depths the moment he started meditation and that she had not so far found any person abiding in Her spiritual consciousness as Ganapati Muni did.Image
Read 7 tweets
Nov 18, 2024
#அழகியசிங்கபெருமாள் #திருவேளுக்கை திவ்ய தேசம் - 46
மூலவர்: முகுந்த நாயகன், அழகிய சிங்கர்
தாயார்: வேளுக்கை வல்லி
தீர்த்தம்: கனக சரஸ், ஹேமசரஸ்
பழமை: 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்: திருவேளுக்கை, வேளுக்கை
ஊர்: காஞ்சிபுரம்
மாநிலம்: தமிழ்நாடு
மங்களாசாசனம் : பேயாழ்வார் Image
புராண வரலாற்றின் படி பிருகு முனிவருக்கு கனக விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக் கோலத்தில் காட்சி கொடுத்ததாக ஐதீகம். பேயாழ்வார் இத்தலத்தினை, உப்பிலியப்பன் கோயில், கும்பகோணம், திருப்பதி போன்ற தலங்களுக்கு இணையாகப் பாடியுள்ளார். இதிலிருந்து இத்தலத்தின் சிறப்பை அறியலாம். Image
ஆழ்வார்களைத் தவிர சுவாமி தேசிகனும் இப்பெருமாளை #காமாஸீகாஷ்டகம் என்ற ஸ்லோகத்தால் போற்றியுள்ளார். இதை தினமும் பாராயணம் செய்தால் நரசிம்மரின் பரிபூரண அருள் கிடைக்கும். இதனை ‘காமாஷிகா நரசிம்ம சன்னதி' என்றும் அழைப்பார்கள்.
திருமாலின் அவதாரங்களில் மிகவும் போற்றப்படுகிற அவதாரம் நரசிம்ம Image
Read 10 tweets
Nov 17, 2024
#பஞ்ச_நரசிம்ம_க்ஷேத்ரம்
தமிழ்நாட்டின் சீர்காழியில் 5 நரசிம்ம ஆலயங்கள் தோன்றக் காரணமே திருமங்கை ஆழ்வார். அந்த 5 உத்தமமான நரசிம்மத் பெருமாள் ஆலயங்களை ஒரே நாளில் சென்று வழிபட்டால் கடன் தொல்லை குறையும், எதிரிகள் தொல்லை விலகும், தடைப்பட்ட திருமணம் நடைபெறும், மன அமைதி கிடைக்கும்Image
என்பது ஐதீகம். ஓரிரு கிலோமீட்டர் தள்ளித் தள்ளி ஒரே இடத்தில் அமைந்துள்ள இந்த 5 ஆலயங்களும் திவ்ய தேச ஆலயங்கள் ஆகும். திருமங்கை ஆழ்வார் கள்ளர் பிரிவில் பிறந்தவர். சீர்காழி நகரின் அருகில் உள்ள மங்கை மடம் எனும் ஊரில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள திருக்கறையலூரில் பிறந்தவர். சோழ Image
மன்னர்கள் ஆட்சியில் இருந்தபோது மங்கை மடம் எனும் பகுதிக்கு குறுநில மன்னராக திருமங்கை மன்னன் இருந்தார். திருமங்கை மன்னன் பகவான் விஷ்ணுவின் வில்லின் அம்சம். அவருக்காகப் பிறந்தவர் குமுதவல்லி நாச்சியார். பல நிகழ்ச்சிகள் நடந்தேற அதன் இறுதியில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து
Read 20 tweets
Nov 17, 2024
#Thiruthanka #Thoopul #SriDeepaPrakasar_Temple Kanchipuram Divya Desam - 45
This is the Avathara Sthalam of Sri Vedantha Desikar.
The Moolavar of this sthalam is Sri Deepa Prakasar. He is also called as #Vilakkoli_Perumal, #DivyaPirakasar Moolavar is in Standing position facing Image
West Direction. Prathyaksham for Lord Saraswathi.
Thaayar : Maragathavalli Thayaar
Sannadhis: Separate sannadhi for Vedantha Desikar, where he is found with Gnana Muthirai, was built by his son, Nayina Varadachariyar and separate sannadhi for Lakshmi Hayagreevar.
Mangalasasanam: Image
Image
ThiruMangai Azhwar – 2 Paasurams.
Pushkarani: Saraswathi Theertham.
Vimanam: Srikara Vimanam.
This is a big temple with a huge Vaagana Mandapam.

As per puranas, once there was an argument between Saraswathi, the consort of Brahma and Lakshmi on superiority. They went to Indra, Image
Read 19 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(