April 6th, 2023: @Twitter has been randomly shutting down API access for many apps and sadly we were affected today too. Hopefully we will be restored soon! We appreciate your patience until then.
#MahaPeriyava
It was on May 1, 1969 when MahaSwamigal had darshan of Lord Balaji in Tirupati. He stepped out of the Sanctum Sanctorum after receiving the temple honours and prasadam. There was not a trace of tiredness in Him despite having waved the Chamaram (fan) for Lord
Venkateshwara during the entire Sahasranama Archana for the Lord in the Sanctum Sanctorum. Swamigal came out of the Sanctum Sanctorum in all His radiant Tejas! He then stood in a spot and raised His Hand. And then there was pin drop silence amongst the devotees who had assembled
there. Said He,
"I am going to bestow a spiritual instruction to you all, please listen. After waking up in the morning one must say 'Sri Venkateshaya Namaha' and in the night just before sleeping one must say 'Sri Venkateshaya Mangalam'!"
#மகாபெரியவா
குஜராத்தில் எங்கோ ஒரு கிராமத்தில் ஒரு சிறிய அழகான வீடு. கணவன்-மனைவி மட்டுமே! பெரியவாளைப் பற்றி எதுவுமே தெரியாத குஜராத்தி குடும்பம். ஒரு நாள் விடிகாலை. தூங்கியெழுந்து பல் துலக்கிவிட்டு, சூடான தேநீருக்காக காத்துக் கொண்டு இருக்கும் கணவரிடம் வந்தாள் அந்த அம்மா.
“நான் டீ போடுவதற்குள், முனையில் உள்ள கடையிலிருந்து இன்றைய ந்யூஸ் பேப்பரை கொஞ்சம் வாங்கிக் கொண்டு வந்து விடுங்களேன்”கடைக்குப் போய் பேப்பரை வாங்கிக் கொண்டுவந்து மனைவியிடம் தந்தார்.
மடமடவென்று குஜராத்தி மொழியில் இருந்த பேப்பரைப் பிரித்து, அங்கே இங்கே கண்களை ஓடவிட்டாள்.
கடைசி
பக்கத்தில் முழுப் பக்கத்துக்கு ஒரு விளம்பரம்! ராமேஶ்வரத்தில் ஸமுத்ர ஸ்நானம் பண்ணும் இடத்தில், ஸமுத்ரத்தை பார்த்தபடி ஸ்ரீ ஶங்கர பகவத்பாதாள் நான்கு ஶிஷ்யர்களோடு கூடிய அழகான பெரிய பளிங்கு மூர்த்தங்கள், பெரியவாளுடைய திவ்ய ஹஸ்தங்களால் ப்ரதிஷ்டை செய்யப் படப் போகும் வைபவத்தையும், அந்த
கிரஹண புண்ணிய காலங்களில் வேதாத்யயன ஸம்பத்து உள்ள பெரியோர்களுக்கு தானம் செய்ய வேண்டும்.
யாசித்தாலும் தன் சக்திக்குத் தகுந்தபடி ஸ்ரத்தையுடன் கொடுக்க வேண்டும்.
ஜலம் தானம் கொடுப்பவன் திருப்தியையும்,
அன்னம் கொடுப்பவன்
குறைவில்லா சுகத்தையும்,
எள்ளு கொடுப்பவன் நல்ல சந்ததியையும்,
தீபம் கொடுப்பவன் நல்ல கண்ணையும்,
பூமியைக் கொடுப்பவன் பூமியையும்,
தங்கம் கொடுப்பவன் தீர்க்கமான ஆயுஸ்ஸையும்,
வீடு கொடுப்பவன் உயர்ந்த வீடுகளையும்,
வெள்ளி கொடுப்பவன் உயர்ந்த ரூபத்தையும்,
வேஷ்டி கொடுப்பவன் சந்திர லோகத்தையும்
#ராமாயணம்_சொல்லும்_பாடம்#Hanumath_Jayanhi
மாருதி எனும் வாயுபுத்திரன் ராம ஸேவை ஒன்றையே லட்சியமாகக் கொண்டு, ராம நாமத்தையே யுகம் யுகமாக ஜபித்துக் கொண்டு இருப்பவன். அப்பேர்பட்ட ஹனுமனுக்கும் ஸ்ரீராமருக்கும் யுத்தம் நடந்துள்ளது. எப்படி? அப்படியொரு
சம்பவம் நம் புராணங்களில் சொல்லப்
பட்டிருக்கிறது. பட்டாபிஷேகத்துக்குப் பிறகு நீதி தவறாது ராமராஜ்ஜியம் நடத்தி வந்த ஸ்ரீராமர், மக்களின் நலன் கருதி, நாட்டின் வளமைக்காக, வசிஷ்டர், விஸ்வாமித்திரர், அத்ரி முதலான மகரிஷிகளைக் கொண்டு யாகம் ஒன்றை நடத்தினார், அயோத்தியை அடுத்த அழகிய வனத்தில், பெரிய யாக குண்டங்கள் அமைத்து,
முனிவர்கள் யாகத்தை நடத்திக் கொண்டு இருந்தனர். சக்கரவர்த்தி ஸ்ரீராமரின் ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட ஒரு சிறிய நாட்டின் மன்னன் சகுந்தன். அவன் ஒருநாள், வேட்டையாடிவிட்டு வரும்போது, யாகசாலைக்கு அருகில் வந்தான். தான் வேட்டையாடிவிட்டுத் திரும்பியிருந்தபடியால், யாக சாலைக்குள் நுழைவது சரியல்ல
இன்று #பங்குனி_உத்திரம்
பங்குனி உத்திரம் என்பது பௌர்ணமியும் உத்திரம் நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளாகும். மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமியைக் காட்டிலும் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இணையும் போது தோன்றும் பௌர்ணமி நிலவு மிகப் பெரியதாகவும்
மிகப் பிரகாசமாகவும் தோன்றும். மற்றொரு சிறப்பு என்னவென்றால், தமிழ் மாதங்களில் பனிரெண்டாவது மாதம் பங்குனி, அதே போல் நட்சத்திர வரிசையில் பனிரெண்டாவது நட்சத்திரம் உத்திரம். பங்குனி உத்திர நாளில் தான் தெய்வீக திருமணங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. ஸ்ரீராமபிரான்-சீதா
தேவி, லட்சுமணன்-ஊர்மிளை, பரதன்-மாண்டவி, சத்ருக்கணன்-ச்ருத கீர்த்தி என ஸ்ரீராம சகோதரர்களின் திருமணம் இன்று நடந்தது. பங்குனி உத்திரத் திருவிழாவின் நாயகனான முருகப் பெருமான்-தெய்வானையை திருமணம் செய்து கொண்டதும் இந்த நன்னாளில் தான். அதோடு ஸ்ரீவள்ளிக்குறத்தி அவதரித்த நாளும் இந்த நாள்
#எட்டுக்குடி_முருகன்_திருக்கோயில்
நாகப்பட்டினம் அருகிலுள்ள பொருள்வைத்த சேரி என்கிற ஊரில் இறைத்தன்மை கொண்ட சிற்பி ஒருவன் வாழ்ந்து வந்தான். எப்போதும் சரவண பவ என்று உச்சரித்தவாறு இருந்த அந்த சிற்பி ஒரு அற்புதமான முருகன் சிலையை செதுக்கினான். அப்போது ஆட்சியில் இருந்த சோழ மன்னன்
அச்சிற்பி வடித்த சிலையில் சொக்கி போனான். இது போன்று தெய்வீகமான வேறு சிலைகளை அச்சிற்பி செதுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் அந்த சிற்பியின் கட்டை விரலை மன்னன் வெட்டி வீசினான். இதனால் வேதனையடைந்த சிற்பி பக்கத்துக்கு ஊருக்கு வந்தான். அந்த ஊரில் தன் விடா முயற்சியால் மற்றொரு அற்புதமான
முருகன் சிலையை வடித்தான். தெய்வீகமான அந்த சிலையில் இருந்து ஒளி வீச தொடங்கியது. சிற்பம் முழுவதுமாக முடிவதற்குள் அச்சிலைக்கு உயிர் வந்து சிலையில் முருகன் அமர்ந்திருக்கும் மயில் பறக்க தொடங்கியது. அதை கண்ட மன்னன் அந்த மயிலை “எட்டிப்பிடி” என உத்தரவிட்டான். அதன் பிறகு அந்த மயில் அங்கேய