அன்பெழில் Profile picture
Apr 20 12 tweets 4 min read Twitter logo Read on Twitter
#வராஹ_அவதார_மகிமை
த்ரிவிக்ரம அவதாரத்தில் உலகெல்லாம் அளந்து நின்றான் எம்பெருமான். அந்த பிரம்மாண்ட ரூபத்தை பெரிது என்று கொண்டாடுகின்றோம். ஆனால் அந்த திரிவிக்ரம அவதாரத்தை விடப் பெரியது வராஹ அவதாரம். உலகத்தை அளப்பதற்குப் பரமாத்மா திருவடியைத் தூக்கி உலகின் மீது வைத்தான். அதே உலகத்தை Image
வராஹ அவதாரத்தில் தன் மூக்கின் மேல் தரிக்கிறான் பகவான், ஆதலால் உலகம் பகவான் மூக்கிலே ஒட்டிக் கொண்டிருக்கிறது. அந்த வராஹ அவதாரிதான் விஸ்வாத்மா – ஜகத்துக்கு தலைவன். திரிவிக்ரமாவதாரத்தை விட பல கோடி மடங்கு நெடிய வராஹ வடிவமானான் பகவான். ஹிரண்யாக்‌ஷனை சம்ஹாரம் பண்ணிய பரமாத்மா, பூமி Image
பிராட்டியை எடுத்துக் கொண்டு மேலே வருகிறார். பூமி பிராட்டி அந்த நேரத்திலே அழுது கொண்டு இருக்கிறாள். பகவானுக்கு வருத்தம். காப்பாற்றுகிற நேரத்திலே அவள் அழுது கொண்டிருக்கிறாளே! தூக்கிவிட்ட பகவானை கொண்டாடி மகிழ்வதல்லவா வழக்கம். நீ சந்தோஷப்பட வேண்டிய நேரத்திலே, இப்படி அழலாமா? என்று
கேட்கிறார் பகவான். அதற்கு பிராட்டி,
நான் கூக்குரலிட்டு அழுதபோது ஓடோடி வந்து ரட்சித்தீர்கள். நான் உங்கள் பார்யை, சிஷ்யை, பத்னி என்பதால் வந்தீர்கள். இந்த பூமியில் இருக்கிற ஜீவன்கள் கூப்பிட்டால், வருவீர்களா? என்னை ரட்சித்த மாதிரி இவர்களை ரக்ஷிப்பீர்களா? என்று கேட்டாள். எத்தனை வித Image
ரூபங்களில் பகவான் வந்தாலும், அவன் பேசுகிற பேச்சிலே மாற்றம் கிடையாது.
வராக அவதாரத்தில், லக்ஷ்மியிடம், எம்பெருமான் கூறியது.

ஸ்திதே மனஸி சுஸ்வஸ்தே; சரிரே சதி யோ நரஹா;
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்தா; விஸ்வரூபம் ச மாமஜம் ;
ததஸ்தம் ம்ரியமாணம் து; காஷ்ட பாஷாண சந்நிபம்;
அஹம் ஸ்மராமி மத்
பக்தம்; நயாமி பரமாம் கதிம்;

“எவனொருவன், தனது உடல் நிலை நல்ல நிலையில் இருக்கும்போது, என்னையே நினத்துக்கொண்டு இருக்கின்றானோ, அவனது கடைசி காலத்தில், மூச்சு, பேச்சின்றி, நாக்கு தடுமாறும் நிலையில், மரக்கட்டையாக இருக்கும் போது, என்னை நினைக்கத் தேவை இல்லை. நானே அவனை வந்து கூட்டிச்
செல்வேன். “அஹம் ஸ்மராமி மத்ப்க்தம், நயாமி பரமாம்கதிம்”.

ஆகையினாலே தான், அதற்கு முன்பே மனத்திலே எம்பெருமானை பிரதிஷ்டை பண்ணி, அவன் திருவடியிலே பக்தியாகிற புஷ்பத்தை இட்டு வணங்க வேண்டும். அந்திம காலம் என்பது எல்லோருக்கும் கட்டாயம் உண்டு. அது நமது கட்டுப்பாட்டிலே இல்லை. வராக சரம
ச்லோகம் சொல்கிறது. அந்திம காலம் என்பது மனிதர்களுக்கு கல் கட்டை மாதிரி விழுந்து கிடக்கும் நிலை வந்து விடும். அப்போது சரணாகதி பண்ண முடியுமா? சுற்றம் அவனைச் சூழ உட்கார்ந்து “சொல்லு, நீ பொருள் வைத்திருக்கிறாயா? ” என்று கேட்டுத் துளைக்கும். அவன் இதற்கு பதில் சொல்வானா? இல்லை நாராயணா
என்று பகவான் நாமத்தைச் சொல்லுவானா? இத்தனை நாள் ஓடி உழைத்துப் பொருள் தேடியும் அதை எங்கே வைத்தோம் என்று அவனுக்கு நினைவு வரவில்லையே அந்தச் சமயத்திலே பகவான் திருப்பெயரை அவன் எப்படிச் சொல்வான்? அதனால் தான், இளமையிலேயே பகவான் நாமாவைச் சொல்ல வேண்டும். என் திருவடியில் ஆத்மா சமர்ப்பணம்
பண்ணினவனைக் கைவிடேன் என்கிறான். அவ்வாறு செய்பவன் என் பக்தன். அவனை ஒருநாளும் நான் கைவிடேன். நானே வந்து அவனை உத்தம கதிக்கு அழைத்துப் போவேன் என்கிறான் வராஹஸ்வாமி. எம்பெருமானின் அப்படிப்பட்ட வாக்கு இந்த வராஹ அவதாரத்திலே வெளிப்பட்டதினாலே அது பெருமையும், சிறப்பும் மிக்க அவதாரம். அந்த
வாக்கை பூமி பிராட்டி மூன்று முடிச்சுகளாக முடிந்து வைத்துக் கொண்டாளாம். #அர்ச்சித்தல் #ஆத்மா_சமர்ப்பணம் #திருநாமம்_சொல்லுதல் என்ற மூன்றுக்கும் மூன்று முடிச்சு.
பகவானின் இந்த மூன்று கட்டளைகளைத் தான் பூமி பிராட்டி தன்னுடைய #ஆண்டாள் அவதாரத்திலே நடத்திக் காட்டினாள்.

ஜெய் ஸ்ரீராம் Image
ஸர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Apr 22
Calyampudi Radhakrishna Rao, a prominent Indian-American mathematician and statistician, will receive the 2023 International Prize in Statistics, the equivalent to the Nobel Prize in the field, for his monumental work 75 years ago that revolutionised statistical thinking. Rao’s Image
work, more than 75 years ago, continues to exert a profound influence on science, the International Prize in Statistics Foundation said in a statement. C Radhakrishna Rao retired at the age of sixty and went to live with his daughter in America along with his grandchildren.
There, at the age of 62, he became a professor of statistics at the University of Pittsburgh and at the age of 70, he became the head of the department at the University of Pennsylvania. US citizenship at the age of 75. National Medal For Science at the age of 82, a White House
Read 5 tweets
Apr 22
#shankaraJayanthi #சங்கரஜெயந்தி 21.04.2023-25.04.2023 Shankara Jayanti Utsavam #மகாபெரியவா

இன்றிலிருந்து 2531 வருடங்கள் முன்பு, கலியப்தம் 2594 (பொயுமு 509) சித்திரை அமாவாஸ்யைக்கு பிறகு வரும் பஞ்சமியான வைஶாக ஶுக்ல பஞ்சமியன்று ஶ்ரீ ஶங்கர பகவத்பாதர் அவதரித்தார். பகவத்பாதரின் Image
அவதாரத்தால் தான் நாம் சிவராத்ரி, ராம நவமி, கோகுலாஷ்டமி முதலியவற்றைத் தொடர்ந்து கொண்டாடுகிறோம். இல்லையேல் அக்காலத்தில் பரவியிருந்த அவைதிக பழக்கங்களால் ஸநாதந ஸம்ப்ரதாயங்கள் அழிந்து போயிருக்கும். ஆகவே மற்ற ஜயந்திகளைக் காப்பாற்றிய ஜயந்தி என்பதே ஶங்கர ஜயந்தியின் முக்கியத்துவம் ஆகும்.
ஆகவே இந்த நாளில் ஶ்ரீ ஶங்கர பகவத்பாதரை நினைவுகூர்ந்து வழிபடுவது நமது கடமையாகும். ப்ரதமையிலிருந்து பஞ்சமி வரை அல்லது பஞ்சமி முதற்கொண்டும் இதை செய்யலாம். இதற்கு உதவுவதற்காக ஆசார்யாளின் நாமாவளி மற்றும் அவரைப் பற்றிய ஸ்தோத்ரங்களுடன் கூடிய இந்த எளிய பூஜா பத்ததியை வெளியிடுகிறோம்.
Read 4 tweets
Apr 22
#MahaPeriyava
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
Namaskaram. I am Dr. Venkataraghavan, an eye surgeon. My wife, Gayathri Venkataraghavan is a musician and both of us owe everything in life to the boundless Grace of Sri Maha Periyava. I have an Image
experience to share with all of you. Many years back a Muslim gentleman walked into my clinic. Seeing Sri Maha Periyava’s photo, he bowed in reverence and mentioned that Sri Maha Periyava is a great sage. I was surprised and asked him how he knew about Sri Maha Periyava. The
Muslim gentleman shared his experience which I shall present in the first person account as narrated to me. "Sir, I was a linesman in electricity board about 30 years back. We, in a group of 5 or 6, went to the Kanchi Matham to attend to a fault. Sri Maha Periyava who was seated
Read 10 tweets
Apr 22
#மகாபெரியவா
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த ஓர் அம்மையார், தரிசனத்துக்கு வந்தாள். அவர்கள் மரபுப்படி சேவித்து விட்டு நின்றாள். அதிகக் கூட்டமில்லாத நேரம். அம்மாளின் கண்களில் ஓர் ஏக்கம், ஆவல், Image
எதிர்பார்ப்பு, நம்பிக்கை எல்லாம் தெரிந்தன. குடும்பத்தில் பலவிதமான கஷ்டங்கள், வியாதி வெக்கை. ஒரு பெண்ணுக்குக் கல்யாணமாகி ஏழெட்டு வருஷமாகியும் குழந்தைகள் இல்லை. இன்னொரு பெண்ணுக்கு வயது எகிறிக் கொண்டே போகிறது. சரியான வரன் கிடைக்கவில்லை. பையனுக்கு படிப்பு வரவில்லை. பணக்கஷ்டம் இன்னும்
என்னென்னவோ. கேரளா சென்று நம்பூதிரியிடம் பிரஸ்னம் பார்த்தாள். பித்ரு தோஷமாம். முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய கர்மாக்களை ஒழுங்காகச் செய்ய வில்லையாம். ராமேஸ்வரம் போய் பரிகாரம் பண்ணணுமாம். வைஷ்ணவ மரபுப் பிரகாரம், ராமேஸ்வர யாத்திரை, பரிகாரச் சடங்குகள் செய்வது வழக்கமில்லை.
"என்ன
Read 9 tweets
Apr 22
#மகாபெரியவா அருள்வாக்கு
சிக்கனம் என்ற பெயரில் தானும் அனுபவிக்காமல், பிறரையும் அனுபவிக்கவிடாமல் கருமியாய் இருக்கக்கூடாது. செலவாளியாக இருப்பவன் பணத்தை எல்லாம் வேண்டாத ஆசைகளுக்காக செலவழித்து விட்டு கடனாளியாகிவிடக் கூடாது.
நாலுபேர் நம்மைப் புகழவேண்டும் என்பதற்காக பலரும் சமூகசேவை Image
செய்கிறார்கள். சேவை என்றால் வீட்டுக்கும் நாட்டுக்கும் தொண்டு செய்யவேண்டும் என்ற உணர்வோடு தன்னால் முடிந்த பணிகளைச் செய்வதாகும்.
தொண்டு செய்பவன், தன்னை பெரியவன் என்று நினைத்து, தலைக்கனம் கொண்டு அலைவதில் பயனில்லை. இன்னும் சொன்னால், #நான்_சிறியவன் என்ற எண்ணம் வேண்டும்.
சங்கீத ஞானம்
இருந்தால் தான், கடவுளைப் பற்றி பாடமுடியும் என்பதில்லை. ஆண்டவன் மீது அன்புணர்வுடன் பாடினாலே போதும். இறைவன் நம் பக்தியை ஏற்றுக் கொள்வான்.
பணத்தில் மட்டும் நாம் கணக்காய் இருக்க எண்ணுகிறோம். பொருளை வீணாகச் செலவழித்தால் வருத்தப்படுகிறோம். ஆனால், காலத்தை தேவையில்லாமல் வீணாக்கி
Read 4 tweets
Apr 21
#Ravana_and_Vali #SrimadhRamayanam
Ravana worshiped Lord Shiva with such devvotion that Lord Shiva being very pleased with him granted him of being more powerful than all the Devas, ganas and yakshas. In his arrogance, Ravana did not ask Lord Shiva to become more powerful than Image
humans or from vanaras. After getting this boon from Lord Shiva, Ravana eyed the heavens. He along with his son Meghanad defeated and routed the Devas. Meghanad brought Indra to his kingdom in Lanka and there tied him up in the court. (He became Indrajit after that) Indra was
desperate and prayed to all the Gods to come to his help. Sometime later, Sage Narada came to talk to Ravana. 'Lord Ravana!' He bowed to Ravana. Ravana's heart swelled with pride. The heavenly sage was bowing to me. Ravana nodded his head as Sage Narada continued, 'I heard how
Read 22 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(