#திரிபுராந்தகர்_திருக்கோயில்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூவம் என்னும் ஊரில் பாடல்பெற்ற திரிபுராந்தகர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலம் ஆகும். இத்தலத்தில் உள்ள விமானம் கஜபிருஷ்ட விமானம் ஆகும். இத்தல மூலவரான சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்
பாலிக்கிறார். சுவாமியின் தலையில் கூரம் பட்ட இடத்தில் காயத்தழும்பு இருப்பதால், லிங்கத்தை தொட்டு பூஜை செய்வதில்லை. இங்கு மூலவரின் தலைக்கு மேல் பச்சை கற்பூரம் மட்டும் தூவி, பாலாபிஷேகம் செய்வது சிறப்பம்சமாகும். திரிபுர அசுரர்களை அழிக்கும் பொருட்டு, இத்தல இறைவனார் மேரு மலையை வில்லாக
ஏந்திய தலம் என்பதால் ’திருவிற்கோலம்’ என்ற பெயர் இத்தலத்திற்கு வந்தது. இங்கு சிவன் தவக்கோலத்தில் காட்சியளிக்கிறார். திருஞானசம்பந்தர் தன்பதிகங்களில் சிவன் திரிபுராந்தக அசுரர்களை வதம் செய்த வரலாற்றை சிறப்பாக பாடியுள்ளார். சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும் வித்யுன்மாலியும் கருவறைக்கு
முன்புறம் துவாரபாலகர்களாக காவல் புரிகின்றனர். திரிபுராந்தக வதத்திற்கு சென்ற சிவன் என்பதால் இத்தல மூலவர் #திரிபுராந்தகர் என்றும், அம்பாள் #திரிபுராந்தகி_அம்மன் என்றும் பெயர் பெற்றுள்ளனர். இத்தல விநாயகர், சிவனின் தேர் அச்சை முறித்த விநாயகர் என்பதால் #அச்சிறுத்த_விநாயகராக தனிச்
சன்னதியில் உள்ளார். இக்கோயிலில் அம்பாள், சுவாமிக்கு வலது புறத்தில் கிழக்கு பார்த்தபடி நின்ற கோலத்தில் தனிச் சன்னதியில் காட்சியளிக்கிறாள். இந்த கோலத்தை, அம்பாளை திருமணம் செய்த கோலம் என்கிறார்கள். இவளை வேண்டிக் கொண்டால் திருமணத்தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். அம்பாளுக்கு முன்புறம்
பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்பாளின் கருவறை விமானமானது, கோபுரம் போன்ற அமைப்பில் வித்தியாசமாக அமைக்கப் பட்டுள்ளது. இத்தல ராஜ கோபுரத்திற்கு நேரே காத்தல் தாண்டவம் ஆடிய நடராஜர் தனிச் சன்னதியில் இருக்கிறார். திருவாலங்காடு நடராசருடன் நடனமாட சிலம்பு முத்துக்கள் விழுந்த இடம் என்பது
ஐதிகம். இத்தல பிரகாரத்தில் ஆறு முகங்களை கொண்ட சண்முகர் வள்ளி-தெய்வானையுடன் தனிச் சன்னதியில் அருள் பாலிக்கிறார். இங்குள்ள பைரவர் நாய் வாகனம் இல்லாமல் காட்சி தருகிறார். சித்திரை பிரம்மோற்சவம், ஆடியில் அம்மனுக்கு பூ பாவாடை திருவிழா, சிவராத்திரி மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகியவை இங்கு
சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆளுமைத் திறன் வளர, தீய குணங்கள் நீங்க, ஆணவம் குறைய, துன்பங்கள் நீங்க, குடும்ப ஒற்றுமை அதிகரிக்க இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமி மற்றும் அம்பாளுக்கு வஸ்திரங்கள் சாற்றியும், சிறப்பு அபிஷேகங்கள்
செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இக்கோயிலில் இருந்து 7 கிமீ தூரத்திலுள்ள பிஞ்சவாக்கம் கிராம வேளாண் பெருமக்கள் உச்சிகால அபிஷேதற்க்கு தேவையான பாலும் பூவும் நெடுங்காலமாக கொடுத்து வருகின்றனர். இக்கோயிலுக்கு வடக்கே 2 கிமீ தொலைவில் கோயிலுக்கு சொந்தமான ‘திருமஞ்சன குழி‘ கொண்டு
வரப்பட்டு ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. இக்கோயில் கிபி 7 ஆம் நூற்றாண்டில் செங்கல் கோயிலாகவும் ,கிபி 1055 ல் கற்றளி கோயிலாகவும் நகரத்தாரால் திருப்பணி செய்யப்பெற்ற கோயிலாகவும் விளங்குகிறது என இங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இரண்டாம்
ராஜேந்திரன் ,ராஜராஜ சோழன், மூன்றாம் ராஜராஜ சோழன், வீரக்கண்ட கோபாலன், விஜயகண்டகோபாலன், முதலாம் குலோத்துங்கன் ஆட்சி காலத்தில் இக்கோயிலின் நிர்வாக செலவிற்காக நிலங்களையும் காசுகளையும் தானமாக அளித்துள்ளார்கள் என்று இங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. திருவள்ளூரில் இருந்து 22 கி.மீ
தொலைவில் கூவம் என்னும் ஊர் உள்ளது. கூவம் நதி உற்பத்தி ஆவதும் இங்கு தான். கூவத்திலிருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன. காலை 6 .00 AM -12 .00 PM வரை மாலை 5 .00 -8 .00 வரை நடை திறந்திருக்கும்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஸ்ரீராமாநுஜர் ஜெயந்தி*
25/4/23
ஒரு பூரண மனித ஆயுளைப் பூர்த்தி செய்த மகான் ஸ்ரீராமானுஜர். அவ்வாறு 120 ஆண்டுகள் வாழ்ந்து ஆன்மிக சமுதாயக் கடமையாற்றிய அப்பெருமகனாரின் வாழ்க்கையை 120 வாக்கியங்களில் தொகுத்தளித்திருக்கிறார் மெய்யூர் ஸ்ரீ நரசிம்மாச்சார்யார்.
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
1. ஸ்ரீ பெரும்பூதூரை பிறப்பிடமாக உடையவர். 2. ஆஸுரிகேசவாசார்யர் மற்றும் காந்திமதிதேவியை பெற்றோர்களாக உடையவர். 3. சித்திரையில் ஆதிரை நாளில் அவதரித்த பெருமையை உடையவர். 4. திருமலை நம்பியை மாதுலராக உடையவர். 5. மாதுலரால் சூட்டப்பட்ட லக்ஷ்மணன் என்ற பெயரை உடையவர். 6. பிற்காலத்தில்
சூட்டப்பட்ட இளையாழ்வான், ராமானுஜர் என்ற பெயர்களை உடையவர். 7. 16 வயதிற்குள் கசடறக் கற்றுக் கொண்ட வேத, வேதாங்க, சாஸ்திர கல்வியை உடையவர். 8. நல்லார் பரவும் ராமானுஜன், கற்றார் காமுறு சீலன் என்று போற்றப்பட்ட பெருமையை உடையவர். 9. வேதாந்த சாஸ்திரத்தை போதித்த யாதவபிரகாசரை குருவாக உடையவர்
#மகாபெரியவா மே 06 2017 தினமலர்.-திருப்பூர் கிருஷ்ணன்
காஞ்சிப் பெரியவரைத் தரிசித்து, சென்னை திரும்பிய அந்த ஓவியர், வீடு வந்தார். சாய்வு நாய்காலியில் சோர்வோடு அமர்ந்தார். அவர் மனைவி ஆவலோடு கேட்டாள், “பெரியவாளை தரிசனம் செஞ்சேளா? 28 வயசாகியும் நம்ம பொண்ணுக்கு இன்னும் கல்யாணம் கூடி
வரலியேங்கற கவலையைச் சொன்னேளா? பொருளாதார பிரச்னை தான் நம்ம பெண் கல்யாணத்தைத் தாமதப் படுத்தறதுன்னு தெளிவாச் சொல்லச் சொன்னேனே? பெரியவர் ஆசீர்வாதம் பண்ணினாப் போதும். நம்ம பெண் கல்யாணம் வெகுசீக்கிரம் நடந்துடும்.” மனைவிக்கு எந்த பதிலும் சொல்லாமல் அவர் அமைதி காத்தார். அவருக்குச் சம்பளம்
குறைவு. அன்றாடச் செலவுக்கே கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம். இதில் கல்யாணத்திற்குப் பணம் சேர்ப்பது எப்படி? மாப்பிள்ளை வீட்டார் கேட்கிற வரதட்சணையைப் பார்த்தால் மனம் மலைக்கிறது. வரதட்சணை வாங்கக் கூடாது என்று பெரியவர் ஓயாமல் சொன்னாலும் யார் கேட்கிறார்கள்?
ஓவியர் பெருமூச்சுடன், “நான்
மகாபெரியவா ஒரு நாள் தினசரி செய்ய வேண்டிய அனுஷ்டானங்களை உரிய நேரம் கடந்தும் செய்யாமல் ஏதோ யோசனையில மூழ்கி இருந்தார். அவரைப் பார்த்தால் மோன நிலையில ஏதோ தியானத்துல ஆழ்ந்து
இருப்பது போல தெரிந்தது.
மடத்தில் உள்ளவர்களுக்கே அது மாதிரியான சூழல் அபூர்வம். கொஞ்ச நேரம் கழித்து மகான், மடத்தோட மேனேஜரைக் கூப்பிட்டார். ரொம்ப காலத்துக்கு முன்னால் மடத்தோட தொடர்புல இருந்த ஒருவரின் முகவரியைத் தேடி எடுத்துக் கொண்டு வரச் சொன்னார். பல காலத்துக்கு முன்னால் மடத்துக்கு
கைங்கரியங்கள் செய்தவர் என்பதால், குறிப்பு நோட்டுகள் பலதையும் தேடி அவரின் விலாசத்தைத் தேடி எடுத்துக் கொண்டு வந்தார், மடத்தின் காரியதரிசி. அந்த விலாசத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்ட பரமாசார்யா அது சரியான முகவரிதான் என்பது போல தலையை அசைத்தார்.
“இந்த விலாசத்துக்கு உடனடியா இவ்வளவு
Acharya’s upanayanam was performed at the age of five itself. When we look at the story of Sambandhar, it is learnt from Periya Puranam that he started singing devotional verses at the age of three,
thereafter undertook pilgrimage to a few kshetrams, when he returned, his Upanayanam was performed. Since it is mentioned “upanayana paruvam eitha” (உபநயன பருவம் எய்த), it hints that the sacred thread ceremony was conducted at the minimum age by which it was appropriate to be
performed. For ‘Nitya Upanayanam it is eight years of age. For ‘Kaamya Upanayanam’ it is only five years of age. There are two types of karmanushtanams. #Nityam and #Kaamyam. For #NityaKarma the fruit (benefit) is only the invigoration of the Atma [Atma shakti] internally. No
#மகாபெரியவா
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஒருசமயம் பெரியவா ஸ்ரீமடத்தில் இருக்கும் போது அவரை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கூட்டத்தில் ஆறேழு பேர் ஒரு குழுவாக வந்து இருந்தார்கள். அவர்கள் நெற்றியில் பளீர் என்று இட்டுக் கொண்டிருந்த திருமண்ணே அவர்கள்
வைஷ்ணவர்கள் என்பதை உணர்த்தியது. தங்களுக்குள்ளேயே எதோ மெதுவாக பேசிக் கொள்வதும் அடிக்கடி ஆசார்யாளை எட்டி எட்டிப் பார்ப்பதுமாக இருந்தார்கள். அதே சமயம் அவர்களில் ஒருவர் மட்டும் தனக்கு இதில் எல்லாம் இஷ்டம் இல்லை என்பது போல நெட்டுக்குத்தான ஒரு பார்வையோட எந்தச் சலனமும் இல்லாமல் நின்று
கொண்டிருந்தார். மடத்துக்கு வைஷ்ணவர்கள் வருவது புதிது இல்லை என்றாலும் அவர்களின் செய்கைகள் கொஞ்சம் வித்யாசமாக இருந்தததால் எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ஒருவழியாக அவர்கள் பெரியவா முன்னால் வந்து நின்றார்கள். யாரும் எதுவும் பேசலை. ஆனால் அவர்கள் கண்ணில் இருந்து ஜலம் மட்டும்
#பக்தி
துக்காராமுக்கு மராத்தியைத் தவிர வேறு மொழி தெரியாது. படிக்காதவர். பரிபூர்ண பக்தியோடு விட்டல ஸ்மரணம் செய்பவர். அபங்கங்கள் இயற்றி பாடுவார். விட்டலன் அவரிடம் அலாதி அன்பு கொண்டவன். அவரோடு பேசுவான் சாப்பிடுவான். உற்ற நண்பர்கள் இவ்வாறு தானே இருப்பார்கள். தேஹு என்ற அக்கிராமத்து
இரு பிரிவினர் துக்காராமை ஒரு விஷ ஜந்துவாகவே பார்த்தார்கள். எரியும் தீயில் எண்ணெயாக துக்காராமோடு சேர்ந்து பாண்டுரங்கன் சாப்பிடுகிறான் என்ற செய்தி அவர்களை வாட்டியது. ஆனால் அண்டை கிராமங்களில் துக்காராம் புகழ் பரவியது. இதனால் எங்கும் அவரை வரவேற்றனர். எங்கு சென்றாலும் யார் என்ன உணவு
அளித்தாலும் துக்காராம் தனக்கு அருகே மற்றொரு இலை போடுங்கள் என்பார்.
"யாருக்கு?"
"என் பாண்டுரங்கனுக்குத்தான்"
எல்லோரும் சாப்பிட்டு முடித்தவுடன் அந்த ஆளில்லாத இலையும் காலியாகத்தான் இருக்கும். விட்டலன் அரூபமாக (மற்றவர் கண்ணுக்கு) அமர்ந்து சாப்பிடுவான். தேஹூவினர் ஒரு திட்டம்