சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகளை இனி தமிழகத்தில் தங்கு தடையின்றி கொண்டு வருவதற்கான தடைகளை தகர்க்கும் வண்ணம் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் #திமுக அரசால் #சட்டமன்றத்தில் கமுக்கமாக குரல் வாக்கெடுப்பில் #நிறைவேறியுள்ளது
இது பாஜக அரசால் பரிந்துரைக்கப்பட்டதாகும்!
TN நில ஒருங்கிணைப்பு சட்டம் (Tamilnadu Land Consolidation (for special projects) Act என்ற பெயரிலான இந்தச் சட்டமானது இனி தமிழ்நாட்டில் பெருநிறுவனங்கள் சுற்றுச்சூழலை அழிக்கக் கூடிய எந்த ஒரு தொழிற்சாலையையும் தங்கு தடையற்ற முறையில் கொண்டு வரலாம் என சகல உத்திரவாதத்தையும் அளிக்கிறது 2+
இது நாள் வரையிலான சட்டங்கள் நீர் நிலைகள், பசுமையான வயல்வெளிகளை பெரு நிறுவனங்கள் ஆக்கிரமிக்க சில தடைகளை கொண்டிருந்தது. இந்த சட்டமானது, எந்த ஒரு பெரு நிறுவனமும் 100 ஏக்கருக்கு மேலாக பல்லாயிரம் ஏக்கர்களில் தொழிற்சாலை அமைக்க விரும்பினால் போதுமானது. 3+ #DMKFailsTN
அரசின் அனைத்து துறைகளும் அவர்களுக்காக நீர் நிலைகள், இயற்கை அரண்கள் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் அனுமதி தந்துவிடும் என்கிறது.
தொழிற்சாலைகளுக்காக இயற்கை வளங்களை தகர்கலாம்! தமிழகத்தின் உற்பத்தி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளார்களாம்! 4+ #DMKFailsTN
அதாவது, உற்பத்தி என்றால், இவர்கள் பார்வையில் விவசாய உணவு உற்பத்தி எல்லாம் ஒரு பொருட்டல்ல போலும். ”விவசாயத்தின் மூலமான பொருளாதார மேம்பாடெல்லாம் ஒரு விஷயமா.?” என்கிறார்கள்
நீர் நிலைகளான ஆறுகள், ஓடைகள், குளம், குட்டை, ஏரிகள் இவை எல்லாம் தொழில் வளர்ச்சிக்கு தடை என்றால் 5+ #DMKFailsTN
இந்த திமுக அரசாங்கம் அதை வேடிக்கை பார்க்காது! சூழலியல் சார்ந்த பாதுகாப்பு அம்சங்கள் எல்லாம் தொழிற்சாலைக்கு முன்பு கால்தூசுக்கு சமானம் என்பதே இந்த சட்டசரத்து சொல்லும் சாராம்சமாக உள்ளது! அதை மிகவும் நாகரீகமாக இந்த உண்மையை எளிதில் யாரும் உணராத வண்ணம் அதில் குறிப்பிட்டு உள்ளார்கள் 6+
அதனால் தான் பிரபல நாளிதழ்கள் எதுவுமே இந்த ஆபத்தான சட்டம் பற்றி எந்த ஒரு செய்தியும் சொல்லவில்லை. இன்னும் ஒரு சில நாளிதழ்களோ ‘நீர் நிலைகளை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக எழுதியுள்ளன! இந்த சட்டம் பற்றிய செய்தியை கூட வெளிப்படுத்தாமல் உள்ளது அரசு. 7+ #DMKFailsTN#AIADMK
இந்தச்சட்டம் இன்னொரு வகையில் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களை செல்லாக்காசாக்கி விடுகிறது. உள்ளாட்சி அமைப்புகள் இனி ”ஐயோ எங்கள் கிராமத்தின் நீர் நிலைகள் ஓடைகள் குளம் குட்டைகள் அழிகின்றனவே ஆகையால், நாங்கள் நிலத்தை தர ஒப்புதல் அளிக்க மாட்டோம்” என உரிமை பேச முடியாது. 8+ #DMKFailsTN
அந்த உரிமையை முற்றிலுமாக அவர்களிடம் இருந்து பறித்து அரசு அமைக்கும் ஒரு குழுவிடம் தரப்பட்டுள்ளது. இந்த சட்டமானது கடந்த 3 ஆண்டுகளாக பாஜக அரசால் பரிந்துரைக்கப்பட்டு வந்தது தான். ஆனால், இதன் ஆபத்து கருதி பாஜக அல்லாத எந்த ஒரு மாநிலமும் இந்த சட்டத்தை நிறைவேற்றத் துணியாத நிலையில்..9+
இந்த மாதிரி தொடர்ந்து ஆபத்தான சட்டங்கள் தமிழக சட்டமன்றத்தில் எந்த கலந்துரையாடலும் இன்றியும், சாதக, பாதகங்களை கணக்கில் கொண்டு விவாதிக்காமலும் கமுக்கமாக நிறைவேற்றப் படுவது தான் சொல்லாததையும் செய்வோம் என்கிற #திராவிட_மாடல் போல..! 10+ #DMKFailsTN@AIADMKOfficial
சட்டமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளான ஏப்ரல் 21 அன்று சட்டமன்றத்தில் மிக அதிரடியாக 17மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன! அதில் தொழிலாளர்களை கடுமையாக பாதிக்கும் தொழிற்சாலை திருத்த மசோதாவும் ஒன்று. இந்த மசோதா தகவல் கூட சொல்லாமல் அதிரடியாக குரல் வாக்கெடுப்பின் மூலமே நிறைவேற்றியுள்ளனர்
அன்று நிறைவேற்றப்பட்ட மற்ற மசோதாக்கள் குறித்த தெளிவான செய்திகளை நாளிதழ்கள், காட்சி ஊடகங்களுமே கூட வெளியிடவில்லை.
நமக்கு தெரிந்து இந்த இரண்டு சட்டங்களுமே மிக ஆபத்தானவை! இந்த ஆபத்தான சட்டங்களை தமிழகத்தில் திமுக அரசைக் கொண்டு மிக சாமர்த்தியமாக பாஜக நிறைவேற்றியுள்ளது 12+#DMKFailsTN
சர்வதேச நிறுவனங்களின் வளர்ச்சிக்காக தமிழக இயற்கை வளத்தை அழிக்க துடிக்கும் திமுகவின் உதவியோடு பாஜகவின் நோக்கங்கள் எந்த தடங்களுமின்றி தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன! 13+ #DMKFailsTN#திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு
இந்த வகையில் இந்தியாவிலேயே மற்ற எந்த மாநிலத்தை விடவும் கிராமங்களை, ஊரக பகுதிகளை விழுங்கிய வண்ணம் நகரமயமாக்கல் அசுரத்தனமாக நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. பரந்தூர் விமான நிலையத்திற்காக 4,000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களை எடுப்பதில்.. 14+#DMKFailsTN
இப்போது இருக்கும் சிக்கல்களை கருத்தில் கொண்டு தான் இது போன்ற படுமோசமான சுற்றுச் சூழலுக்கு ஆபத்தான சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
வெளிநாட்டில் உள்ள பெரு நிறுவனங்கள் TN வந்து இங்குள்ள இயற்கையை அழித்து, மக்கள் வாழ்வாதரங்களை சூறையாடித்தான் மாநிலம் வளர்ச்சி பெற முடியுமோ?#DMKFailsTN
AC, Water Heater உள்ளிட்ட மின்சாரக் கருவிகளை பயன்படுத்தினால் தண்டம் விதிக்க திட்டமா?
தமிழ்நாட்டில் AC , Water Heater உள்ளிட்ட மின்சாரக் கருவிகளை பயன்படுத்தும் வீடுகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மின்சாரம் எடுக்கப்பட்டால், அதற்காக தேவைக்கட்டணம் என்ற பெயரில் 1+ #திராவிட_மாடல்
தண்டம் விதிக்க மின்சாரவாரியம் முடிவு செய்திருக்கிறது. இதற்காக மின்சார வழங்கல் விதிகளில் திருத்தம் செய்ய அனுமதி கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்சாரவாரியம் விண்ணப்பித்துள்ளது.
இது கண்டிக்கத்தக்கது.2+ @V_Senthilbalaji@CMOTamilnadu@EPSTamilNadu@IInbadurai@PThangamanioffl
வரைவு விதிகளின்படி ஒரு வீட்டின் அனுமதிக்கப்பட்ட மின் அளவு 5 KV யாக இருந்து, அதைவிட அதிகமாக 7 KV அளவுக்கு மின்சாரம் எடுக்கப்பட்டால், எத்தனை முறை கூடுதலாக மின்சாரம் எடுக்கப்படுகிறதோ, அத்தனை முறையும் தண்டம் செலுத்த வேண்டும். 3+ #tneb@V_Senthilbalaji@CMOTamilnadu
அவசர நிலை காலத்தில் கருணாநிதி avl டெல்லிக்கு காவடி தூக்கியது, கச்சதீவை தாரை வார்த்தது, காவிரி பிரச்சினையை கையாண்டது, ஈழத்தமிழர்களை போலி உண்ணாவிரதம் இருந்து கொன்று குவித்தது, ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டது என இதெல்லாம் அமைச்சர் @Udhaystalin தெரியுமா? 😆🤦
ஒவ்வொரு காலகட்டத்திலும் டெல்லி சொல்வதை கேட்டு பரிபூரணமாக ஆமோதித்து, தலையாட்டி, சட்டம் இயற்றி விட்டு, ஏன்? கடந்த ஏப்ரல் 21 அன்று கூட தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் (Tamilnadu Land Consolidation (for special projects) Act என்ற பெயரிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது @Udhaystalin