ஒன்றிய அரசின் 'அனைவருக்கும் வீடு' வழங்கும் திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) ஒன்றிய அரசின் திட்டம் என்றாலும் மாநில அரசும் நிதி ஒதுக்குகிறது. இந்த திட்டம், நகர்ப்புறம் (PMAY-U)
கிராமப்புறம் (PMAY-G) என்று இரண்டு வகையாக செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்திற்கு அரசு மானியத் தொகையாக ரூ. 2.75 லட்சம் வழங்கப்படுகிறது. கிராம ஊராட்சி அலுவலங்களில் ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பு மற்றும் தேவையின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் முடிப்பதற்குள் முழுத் தொகையும் பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.
கட்டப்படும் வீடு விண்ணப்பிக்கும் பயனாளிக்கு முதல் வீடாக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 3 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும் என விதிமுறைகள்
எடப்பாடி ஆட்சியில் பயனாளிகள் தேர்வு செய்வதில் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலி ஆவணங்கள் மூலம் தகுதியில்லாத பயனாளிகள் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அந்தப் பயனாளிகள் பட்டியல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி
ஆட்சியில் ரூ.50 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதை இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கை (சிஏஜி) அம்பலப்படுத்தியது.
2016 முதல் 2021 வரை ஒப்புதல் அளிக்கப்பட்டதை விட குறைவாக வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 500000வீடுகள் கட்ட ஒப்புதல் தரப்பட்டது, ஆனால் 200000 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன
இதில் 3,354 வீடுகள் கட்டுவதற்கான ஒப்புதல் வழங்கியதில்தான் முறைகேடு நடந்துள்ளது.
திட்டமிடல் மற்றும் கண்காணிப்புக் குறைபாடுகளால் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான 60% வீடுகளை கட்டவில்லை என்பதையும், இதன்மூலம் ரூ.50 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதையும் சிஏஜி சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ்நாட்டின் 18 ஊராட்சி ஒன்றியங்களில் நடந்துள்ள முறைகேடு பற்றி மட்டும்தான் சிஏஜி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கணக்கிட்டால் முறைகேடு ₹1,000 கோடியைத் தாண்டும். மாநில அளவில் முறையான ஆய்வு மேற்கொண்டால் மேலும் பல முறைகேடு விவரங்கள் வெளியாகும் என்றும் சிஏஜி பரிந்துரை செய்தது
சொந்த வீடு என்பது ஏழைகளின் எட்டாக் கனவாக இருக்கிறது. அந்த கனவு கனிந்து வரும் நேரத்தில் அதிலும் பணம் பார்த்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியை என்னவென்று சொல்வது?
“பல வருடங்களாக பொது வாழ்க்கையில் இருந்தாலும், இந்த நாட்டின் பிரதமராக இருந்தாலும், வாஜ்பாய்க்கென்று சொந்தமாக ஒரு வீடு கிடையாது”
உண்மை :
multi-storeyed apartment in East Kailash, New Delhi இருப்பதாக 2004 ல் வாஜ்பாய் வேட்பு மனு தாக்கல்
2)செப்டம்பர்15,2013,ரேவரி
“ கிழக்கு குஜராத்திலிருந்து மேற்கு குஜராத் அருகே இருக்கும் இந்திய பாகிஸ்தான் எல்லைக்கு 700 கி/மீ குழாய்களை பதிக்கச் செய்து, நர்மதா நதி தண்ணீருக்கு ஏற்பாடு செய்தேன். எல்லையில் நிற்கும் நம் இந்திய சிப்பாய்கள் மீதான மரியாதையால் இதனை நான் செய்தேன்.”
1985 -ல் ராஜீவ் காந்தி ஒரு தொழில் நுட்பக் குழுவை குஜராத்திற்கு அனுப்பி, ஆராய்ந்து, சர்தார் சரோவர் திட்டத்தை துவக்கி வைக்கிறார்.
1999-ல் கட்ச் பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்க வழி செய்யும் இந்த திட்டம் பற்றி பாராளுமன்ற அவை குறிப்பு உள்ளது
பெரும்பாலும் ஸ்டிங் ஆபரேஷனின் நோக்கம், அதிகாரவர்க்கம் கண்டுகொள்ள மறுக்கும், துணைபோகும் குற்றச்செயல்களை அம்பலப்படுத்துவதாக இருக்கும்.
டெகல்கா என்ற செய்திப்பத்திரிக்கைதான் பல்வேறு ஸ்டிங் ஆபரேஷனில் ஈடுபட்டாலும், 'The Truth: Gujarat 2002' என்ற பெயரில் குஜராத் படுகொலைகள் தொடர்பான
உண்மைகளை வெளிக்கொணர, 2007-ல நடத்திய ஸ்டிங் ஆபரேஷன், பரபரப்பை ஏற்படுத்தியது. 6 மாத காலமாக நடத்தப்பட்ட ரகசிய விசாரணையின் முடிவுகளை, 2007 நவம்பரில் வெளியிட்டது. இந்துத்வா அமைப்பைச் சேர்ந்த பலரும் மிகவும் தற்பெருமையுடன் செய்த படுகொலைகள் குறித்துப் பேசிய ஆடியோ பதிவுகள் வெளியாயின.
#நிலஉச்சவரம்பு_சட்டம்
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட காலம் அது. தமிழகத்தில் இருபோக விவசாய நிலம், ஒருபோக விவசாய நிலம் ,மானாவாரி, தரிசு என ஒரு குடும்பத்துக்கு (ஒரு குடும்பம் என்பது ஐந்து நபர்கள்) 60 ஏக்கர் மட்டுமே வைத்துக் கொள்ளலாம் என்பதே இந்த சட்டத்தின் நோக்கம்.
அதிகப்படியான நிலங்களை அரசே எடுத்து அதனை நிலமற்ற ஏழைகளுக்கு பிரித்து வழங்கும். ஆனால் தமிழகத்தில் நிலம் அதிகமாக வைத்திருந்தவர்கள் அதிகம் உள்ள தனது நிலங்களை அரசாங்கத்திற்கு கொடுத்ததாக எந்த ஆவணமும் இல்லை .
அதிக நிலம் வைத்திருந்தவர்கள் நிலமற்ற மற்றும் குறைந்த நிலமுடைய அவர்களது
உறவினர்களுக்கும்,சொந்த சாதியினருக்கும் வேண்டப்பட்டவர்களுக்கும், கோயில் பெயரிலும் எழுதி வைத்துவிட்டனர் .கோவில் பெயரில் எவ்வளவு நிலம் வேண்டுமானாலும் இருக்கலாம் என்கிற விலக்கு அந்த சட்டத்தில் இருந்தது .
இதில் என்ன ட்விஸ்ட் என்றால் ...60 ஏக்கருக்கு அதிகம் உள்ள நிலத்தை கோவில்
மூன்று பேர் 2ஜி ல 1.76 லட்சம் கோடி ஆதாயம் பெற்று இருந்த நிலையில், தற்போது மொத்த திமுக சொத்து 1.34 லட்சம் கோடியாக குறைந்தது எப்படி?
வங்கியில் டெபாசிட் செய்திருந்தாலே பத்து மடங்கு ஆகி இருக்குமே
1970-ல் குற்றம் சுமத்தி 1976-ல்
கமிஷன் அமைத்து 1980ல் ஊழல் நடைபெறவில்லை என அறிக்கை கொடுத்தது
அதை இன்னும் அவதூறாக பரப்பும் தினமலரிடம் எவ்வளவு நட்ட ஈடு பெற்றது?
ஆடு அவதூறுக்கு 500 கோடி நட்ட ஈடு கேட்பது ஏன்?
1991 ராஜிவ் மரணத்தை விசாரித்த ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கையை வைத்து
ராஜீவை கொன்றது திமுக என வீதி வீதியாக அவதூறு பரப்ப ஜெயாவுக்கு உதவியவர் சூனா சாமி.
1998 ல் கலைஞர் விடுவிக்கப்பட்டார்.
சூனா சாமி மீது ஏன் அவதூறு வழக்கு பதியவில்லை?