#சுற்றுலா
மனதை கொள்ளை கொள்ளும் மாவட்டமாக இருக்கும் தேனி அதிகம் செலவில்லாத சுற்றுலா செல்பவர்களுக்கு வரப்பிரசாதம் தான். தேனியில் மலைகள், அருவிகள், ஆன்மீக இடங்கள் என பார்க்க பல இடங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் எல்லா பகுதியிலிருந்தும் தேனியை அடைவது எளிது. தேனியை பற்றி பார்ப்போம்
மேகமலை :
பச்சை பசேல் என கடல் மட்டத்திலிருந்து 1,500 மீ. உயரத்தில் உள்ள மேகமலைக்கு செல்ல தேனியிலிருந்து கார் வாடகைக்கு எடுத்துச் செல்லலாம். மற்றொரு வழியாக சின்னமனூரில் இருந்து, அதிகாலை 4.30, காலை 6, மற்றும் காலை 10 மணிக்கு புறப்படும் பேருந்து, தேனியிலிருந்தும் பேருந்தில் செல்லலாம்
சின்ன சுருளி அருவி :
மேகமலையிலிருந்து கீழே பாய்ந்து, புத்துணர்ச்சியை ஊட்டும் அருவியான சின்ன சுருளி அருவிக்கு செல்ல காலை 7 முதல் மாலை 5 வரை அனுமதி உண்டு. தேனியில் இருந்து 95 கி.மீ. தூரத்தில் கடமலைக்குண்டு அருகே கோம்பைத் தொழு கிராமத்தில் அமைந்துள்ளது.
சண்முகநதி அணை :
உத்தமபாளையத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் இராயப்பன்பட்டி ஊருக்கு அருகே இருக்கிறது 52 அடி உயரம் கொண்ட சண்முகநதி அணை. இந்த அணைக்கு மேகமலை மலையில் இருந்து இந்த அணைக்கு தண்ணீர் வருகிறது.
கொழுக்குமலை தேயிலை தோட்டம் :
பட்ஜெட்டுக்கு ஏற்ற அற்புதமான சுற்றுலா தலமாக இருக்கும் கொழுக்குமலை போடி மெட்டிலிருந்து 12 கி.மீ. தொலைவிலுள்ள சூர்யநெல்லி வழியாக செல்ல வேண்டும். தனியார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. அரசு அங்கீகரித்த ஜீப்புகளில் மட்டுமே செல்ல முடியும்.
கொழுக்கு மலையில் மிகவும் அழகாக காட்சியளிக்கும் தேயிலை தோட்டத்திற்குள் நுழைய கட்டணம் ரூ.75 செலுத்த வேண்டும். காலை 7:00 முதல் மாலை 6:00 வரை சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். கொழுக்கு மலையில் இரண்டு கேம்பிங் இடங்கள் இருக்கின்றன. 2500.ரூ கொடுத்தால் போதும்.
கொழுக்குமலையிலேயே டென்ட் அடித்து தங்கலாம். இரவு-காலை உணவும் உண்டு. இதற்கு ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். கொழுக்குமலையை யொட்டியிருக்கும் மீசைப்புலி மலைக்குச் செல்லும் பயணத்தை கேரள சுற்றுலாத்துறையே ஒருங்கிணைக்கிறது. முன்கூட்டியே பதிவு செய்து பயணிக்கலாம்.
சூரிய உதயத்தை பார்க்க விரும்புவர்கள் முதல் நாளே இடுக்கி அருகேயுள்ள சூர்யநெல்லியில் அறை எடுத்து தங்கி அதிகாலையிலேயே கொழுக்குமலைக்கு கிளம்பிவிடலாம். மூணாறு - தேனி பேருந்தில் பவர் ஹவுஸ் நிறுத்தத்துக்கு 16 ரூபாய் பயணக் கட்டணம். அங்கிருந்து சூர்யநெல்லிக்கு ஷேர் ஆட்டோவில் செல்லலாம்.
வைகை அணை
ஆண்டிபட்டியிலிருந்து 7 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த அணையைச் சுற்றி மிக அழகான பூங்கா உள்ளது. உள்ளூர் மக்களால் 'சிறிய பிருந்தாவனம்” என அழைக்கப்படும் வைகை அணை தமிழ்நாடு அரசால் அதிகம் பிரபலமடையாத சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது
பென்னிகுவிக் மணிமண்டபம்
கூடலூா் நகரில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள லோயா்கேம்பட் பகுதியில் அமைந்துள்ளது. பெரியார் அணையை கட்டிய அவரின் நினைவாக தமிழ்நாடு அரசால் இந்த மணிமண்டபம் நிறுவப்பட்டுள்ளது.
குச்சனூர் சனி பகவான் கோயில்
குச்சனூர் என்ற கிராமத்தில் ஸ்ரீசுயம்பு சனீஸ்வரன் கோவில் உள்ளது. இங்குள்ள மூலவரை குச்சனூரான் என்று அழைக்கப்படுகிறார்கள். இக்கோவில் தேனியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் சின்னமனூருக்கு அருகே உள்ளது. பேருந்து வசதிகள் உள்ளன.
குரங்கனி
அதிகம் அறியப்படாத சுற்றுலா தலமான குரங்கனி, மேற்கு தொடா்ச்சி மலையில் அமைந்துள்ளது. போடியில் இருந்து 16 கி.மீ. தொலைவிலும், தேனியிலிருந்து 31 கி.மீ தொலைவிலும் உள்ளது. சாலை மற்றும் பேருந்து வசதிகள் உள்ளது.
சாம்பல் மற்றும் கொட்டக்குடி ஆறுகள், மலைப் பண்ணைத் தோட்டங்கள், அழிந்த நிலையில் உள்ள கயிறு மூலம் நடைபெற்ற வணிகப்பாதை மற்றும் தண்ணீா் மூலம் நீா் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட கூடங்கள் இப்பகுதியில் உள்ளது. தீ விபத்திற்கு பிறகு கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்கப்பட்டுள்ளன.
அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில்
வீரபாண்டி கிராமத்தில் தேனியிலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பாண்டிய மன்னன் வீரபாண்டியன் அம்மனை பிரார்த்தனை செய்து கண் பார்வை மீண்டும் பெற்றதன் நினைவாக கி.பி.14-ஆம் நூற்றாண்டில் இத்தலத்தில் கௌமாரியம்மன் திருக்கோவிலைக் கட்டியுள்ளார்
மேகமலை
ஹைவேவிஸ் மேலணை, கீழணை, தூவாணம் அணை, மணலாறு அணை, வெள்ளியாறு அணை, இரவங்கலாறு அணை என மேகமலையைச் சுற்றி ஐந்து அணைகள் உள்ளன. ஹைவேவிஸ் அணையில் பிடிக்கப்படும் கோல்டு ஃபிஸ்களை அங்கேயே சூடாகச் சமைத்துக்கொடுப்பார்கள்.
இறைச்சல் பாறை அருவி
ஹைவேவிஸ் அணையைக் கடந்து சென்றால் `இறைச்சல் பாறை` என்ற அழகான அருவி ஒன்றைக் காணலாம். வருடம் முழுவதும் தண்ணீர் வரும் இந்த அருவித் தண்ணீர் மருத்துவக் குணம் கொண்டது என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.
சொந்த வாகனத்தில் செல்பவர்கள், மேகமலை அடிவாரப் பகுதியான தென்பழஞ்சியில் அமைந்துள்ள வனத்துறையின் சோதனைச் சாவடியை கடந்து செல்ல வேண்டும். வன விலங்குகளின் நடமாட்டம் காரணமாக, காலை 6 மணிக்கு மேல் மற்றும் மாலை 6 மணிக்குள் மட்டுமே சோதனைச் சாவடியை கடந்து செல்ல அனுமதிக்கப்படுவர்.
மேகலைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு எனத் தனியாக காட்டேஜ்கள் இருந்தாலும், பேரூராட்சியின் சார்பில் தங்கும் விடுதிகள் உள்ளன. எனினும் போதுமான விடுதிகள் இல்லாததால் நன்கு விசாரித்து செல்ல வேண்டும். அப்புறம் என்ன தேனி மாவட்டத்திற்கு ஜம்முன்னு ஒரு விசிட் போடலாமே?
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்த புகைப்படங்கள் நினைவிருக்கின்றதா?
கலைஞர் 2006ல் ஆட்சிக்கு வந்தவுடன் அனந்தகிருஷ்ணன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு அது கொடுத்த ரிப்போர்ட் அடிப்படையில் Professional கோர்ஸ் அனைத்திற்கும் நுழைவுதேர்வு கிடையாது என்று அறிக்கை அளிக்கப்பட்டது(மருத்துவம், பொறியியல் படிப்புகள் உட்பட)
இந்த நுழைவு தேர்வு இல்லாமையால் என்ன மாற்றங்கள் நடந்து உள்ளது என்று சர்வே நடத்தப்பட்டது(அதாவது 2007 முதல் 2015 வரை) அதில் பல ஆச்சரியங்கள் சமூக நீதியின் வெற்றி எப்படி MBC, SC, ST சமூகத்தில் இருந்து பல முதல் தலைமுறை பட்டதாரிகள் சாதித்து உள்ளார்கள் என்று அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
இது சம்மந்தமாக பிரான்டலைன்(Frontline) பத்திரிகையில் ஒரு அட்டகாசமான கட்டுரை வந்துள்ளது. (இணைப்பு கீழே)
இன்று நீட் உட்பட பல நுழைவு தேர்வால் எப்படி உரிமைகள் மறுக்கப்பட்டு பாஜக அதிமுக கூட்டணி நம்மை அடிமை செய்கிறது என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு நீண்ட பாரம்பரியத்திற்கு பெயர் பெற்றது. ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தனித்துவமான கைவினை பொருட்கள் புகழ் பெற்றவை. #திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் கைவினைஞர்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
கைவினை பொருட்களை மக்களிடையே கொண்டு செல்வதிலும் திமுக தனிக் கவனம் செலுத்தி வருகிறது
🌄சென்னை தீவுத் திடலில் தமிழ்நாட்டு கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் ‘சென்னை விழா’ என்ற பெயரில் சர்வதேச கைவினைப் பொருட்கள் கண்காட்சி
✅திருவாரூரில் பெண்களுக்கு 3 மாத கால தஞ்சாவூர் ஓவியப் பயிற்சி அளிக்கும் திட்டம்
👉🏼தமிழக கைவினைப் பொருட்களை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் முக்கிய 10 நகரங்களில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடத்திட ரூ.1.50 கோடி ஒதுக்கீடு
கொடைக்கானலில் வெறும் 150 ரூபாய் கொடுத்தால் அரசு பேருந்தில் 12 சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கும் அசத்தல் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை. அப்புறம் என்ன ஜம்முன்னு கிளம்புங்க... ஆனா இதை பத்தி தெரிஞ்சுக்க வேணாமா? சொல்லிட்டா போச்சு.
ஆயிரக்கணக்குல செலவு செய்து வேனோ ஜீப்போ வைக்கத் தேவையில்லை. திண்டுக்கல், பழனி, மதுரை, திருச்சி, வத்தலகுண்டுவிலிருந்து கொடைக்கானலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்தில்தான் இந்த ஆஃபர் இருக்கிறது. இந்த பேருந்துகள் முன் பதிவின் பேரில் இயக்கப்படுகின்றன.
1. Upper lake View 2. Moyar Point 3. Pine Forest 4. குணா குகை 5. தூண் பாறை 6. பசுமைப் பள்ளத்தாக்கு 7. கால்ஃப் மைதானம் 8. பாம்பார் ஆறு View 9. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் 10. கோக்கர்ஸ் வாக் 11. Briyant Park 12. லேக் (டிராப்)- Lake (Drop)
ராத்திரி ஆனா போதுமே.. சென்னையில் இரவு நேரங்களில் பாலங்களை மூடுவது ஏன் என தெரியாம பல பேர் குழம்பி போய் இருப்போம். நானும் அதில் ஒருவன். இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரிதத போது பல காரணங்கள் வெளிவந்துள்ளன. பாலங்களை மூடுவது ஏன் தெரியுமா?
சென்னையில பல்வேறு பகுதிகளில் அண்ணா மேம்பாலம், நேப்பியர் பாலம், அடையாறு பாலம், வடபழனி பாலம், தி.நகரில் பாலம், கத்திப்பாரா பாலம், கோயம்பேடு பாலம், லூகாஸ் என்று ஏகப்பட்ட பாலங்கள் திமுக ஆட்சியில் கட்டப்பட்டு போக்குவரத்து நெரிசல் குறைஞ்சு இருக்கு.
ஆனால் இந்த பாலங்கள் மக்கள் பயன்பாட்டில் இருந்தாலும் சென்னையில் இருக்கும் மேம்பாலங்களை இரவு நேரத்தில் அடைச்சு வைக்குற பழக்கம் இருக்கு. இதற்கு என்ன காரணம்னு விசாரிக்குறப்போ இதோட பின்னாடி முக்கிய காரணம் இருப்பதாக போலீசார் தரப்பு பல விஷயங்களை சொல்லுது.
#திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல்வேறு துறைகளிலும் செய்து வரும் சாதனைகள் அளப்பரியது. அதிலும் வேளாண் தொழிலில் திமுக அரசு மேற்கொண்டு வரும் சாதனைகள் அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன
1/8
வேளாண் ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் வகையில் ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன
➡️பாலூர் பலா ஆராய்ச்சி மையம்
✅பண்ருட்டியில் பலா மதிப்புக் கூட்டு மையம்
👉🏼கிள்ளிக்குளம் பனை ஆராய்ச்சி மையம்
➡️கோயம்புத்தூர் பூச்சியியல் அருங்காட்சியகத்தை மேம்படுத்த திட்டம்
2/8
🌄மயிலாடுதுறை மண் பரிசோதனை நிலையம்
✅திருப்பூரில் விதை பரிசோதனை நிலையம்
🖤தருமபுரியில் மா மகத்துவ மையம்
❤️திருநெல்வேலியில் நெல்லி மகத்துவ மையம்
👉🏼மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுதானிய பொருட்களை விற்பனை செய்ய ‘மதி-பூமாலை’ வளாகங்கள்
3/8
#எம்ஜிஆர் மறைந்து, #அதிமுக உட்கட்சி சண்டையால் ஜனாதிபதி ஆட்சி நிகழ்ந்த காலம்.
தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்த ஈழத்தமிழர்களுக்கு கல்வி கற்கும் உரிமையை மறுக்கும் அரசாணை 1988 ஜூலை மாதம் வெளியிடப்பட்டு பின்னர் எதிர்ப்புகளால் அமல்படுத்தப்படவில்லை. 1/6
1989- தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த #கலைஞர் ஈழத்தமிழருக்கு கல்வி கற்கும் உரிமையை உறுதிசெய்யும் அரசாணையை வெளியிட்டு, அவர்களுக்கு இடஒதுக்கீடும் கொடுத்தார். (பொறியியல் 40 இடங்கள், மருத்துவக் கல்வி 20 இடங்கள், விவசாய கல்வி 10 இடங்கள், தொழில்நுட்ப பட்டயகல்வி 40 இடங்கள்) 2/6
ராஜிவ் படுகொலைக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த #ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு செப்.1991யில் ஈழ அகதிகளுக்கான கல்வி உரிமையையும் இடஒதுக்கீட்டையும் தடை செய்தது
பல கோரிக்கைகளுக்கு பின்னர் 1993யில் ஈழத்தமிழர்கள் 12ஆம் வகுப்பு வரை பயிலலாம், ஆனால் கல்லூரியில் சேர முடியாது என அறிவித்தது 3/6