#தேனீகள் தேனீகள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்து விட்டால், மனிதன் வாழ்வதற்கு 4 ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது என்று சொல்லி இருக்கிறார் #ஆல்பர்ட்_ஐன்ஸ்டீன். இது முற்றிலும் உண்மை. தேனீகள் மனித வர்க்கத்துக்கு மிக இன்றியமையாதது. சிறிய அளவில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச்
சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர். தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச்போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய், பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தேனீகள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும் காரணம்.
தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப், வாட்ஸ்அப் முறைகளை விடத் துல்லியமானது. யானை, ஆமைகளுக்கு ஞாபகசக்தி அதிகம். ஆனால் அவற்றை விட கூர்மையான ஞாபகசக்தி கொண்டவை தேனீகள். அந்தத் தேனீகள் இப்போது #அழிந்துவரும்_உயிரினங்கள் பட்டியலில்
இடம் பிடித்திருக்கின்றன. உலகை உலுக்கும் செய்தி என்றால்
நிச்சயம் இதுதான். ஒட்டுமொத்த மக்கள்
தொகையாலும் பூமிக்கு விளையாத நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும். அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு சிறகு அசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப்
போர்வையைப் போத்துகிறது. தேனீகளின் வாழ்க்கை முறையைப் பற்றி தெரிந்து கொண்டால் தான் அது காடுகளின் பெருக்கத்துக்கு
எப்பேர்ப்பட்ட நன்மை விளைவிக்கிறது என்று புரியும். தேனீகளின் வாழ்வியல் குணங்களைப் பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப் பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன். "உலகத்தில் அஞ்சு வகை தேனீகள் உள்ளன. மலைத்தேனீ, இந்தியத்தேனீ
கொம்புத்தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத் தேனீ. இதில் இந்திய, இத்தாலிய மற்றும் கொடுக்கில்லாத் தேனீகளைத் தான் மனிதர்கள் வளர்ப்பார்கள். மத்த தேனீகள் தானாகவே காட்டில் வளரும். ஒரு குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில நூறு ஆண் தேனீகள், பல்லாயிரம் பணித்
தேனீகள் (பெண்கள்) இருக்கும்.
இதில் ஆண் தேனீகளுக்கு 90 நாள்களும், பணித் தேனீகளுக்கு 70 நாள்களும், ராணித் தேனீக்கு 2 வருடங்களும் ஆயுள். ராணித் தேனீகளுக்கு முட்டையிடுவது மட்டும் தான் வேலை. ஆண் தேனீக்கு, ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப் பாதுகாப்பதும் கடமை. மற்ற எல்லா வேலைகளும் பணித் தேனீகள் பொறுப்பு. உணவுச்
சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது,தேனைப் பக்குவப் படுத்துவது, கூட்டைச் சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா வேலைகளையும் பணித் தேனீக்கள்தான் கவனிக்கும். தேனீகளின் பொறியியல் அறிவு அபாரம் ஆனது. தேன் கூட்டை அறுங்கோண வடிவத்தில் கட்டும். அப்பொழுது தான் ஒரு செ.மீ இடத்தைக்கூட வீணாக்காமல் முழுதாகப்
பயன்படுத்த முடியும். ஆண் தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீகளுக்குச் சிறிய அறுங்கோண செல் வடிவத்தில் கூடு கட்டி, ராணித் தேனீக்கு சிலிண்டர் வடிவில் செல் கட்டும். கூட்டின் கட்டு மானம் திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித் தேனீ அதில் முட்டையிடும். பூக்களின் மகரந்தம்,
மதுரம் இரண்டும் தான் தேனீகளின் உணவு. அப்போதைய பசிக்கு அப்போதே சாப்பிட்டு விடும். அப்புறம் ஏன் தேன் சேகரிக்கிறது? குளிர் காலங்கள், பூ பூக்காத காலங்களில் உணவுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன் சேகரிக்கிறது. தேனீக்கள் தேன் சேகரித்துப் பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்த உணவுப் பதப்
படுத்தும் தொழில் நுட்பம். தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள், பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில் இருக்கும் 'தேன் பை’யில் சேகரித்துக் கொள்ளும். அந்த மதுரம் முழுவதும் செரிக்காமல், தேனீயின் வயிற்றில் இருக்கும் நொதிகளுடன் சேர்ந்து திரவமாக மாறிவிடும். கூட்டுக்குத் திரும்பி வரும்
தேனீக்கள், கூட்டின் வாசலில் காத்திருக்கும்
தேனீகளிடம் அந்தத் திரவத்தை ஒப்படைக்கும். அதற்காக ஏப்பமிட்டு
ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து
திரவத்தை வெளியில் கொண்டு வந்து எதிர் தேனீயின் வாயில் கொட்டும். ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால் தான், ஒரு துளி தேன் சேரும். கூட்டைப் பராமரிக்கும்
தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர் ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி, அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச் சேர்க்கும். பிறகு அந்தத் திரவத்தில் இருந்து நீர்த்தன்மை வற்றிப் போவதற்காக தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும். பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை மெழுகைப் பூசி வைக்கும். இத்தனை
நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம் சுவைக்கும் தேன் உருவாகும். தேன் எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை தேனிகளுக்கு எனக் கூட்டில் விட்டுத் தான் எடுப்பார்கள். அதுதான் தேன் சேகரிக்கும் தர்மம்! இந்த வேலை நடக்கும் போது ராணித் தேனீ அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும். இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்
தான் அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில் வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப் பறக்கும். அதை எந்த ஆண் தேனீ துரத்திப் பிடிக்கிறதோ, அதோடுதான் இணை சேரும் ராணி. புணர்ச்சி முடிந்தவுடன்
ஆண் இறந்துவிடும். அதன் பிறகு ராணித் தேனீ முட்டையிட, முட்டையிலிருந்து வரும் தேனீகளைப் பணித் தேனீக்கள் தான்
வளர்ப்புத் தாயாக வளர்க்கும்! தேன் சேகரிப்பதற்கான தகவல்களை தேனீகள் பகிர்ந்து கொள்ளும் முறை அட்டகாசமானது. உணவுத் தேவை ஏற்படும்போது #ஸ்கவுட் ஆக சில தேனீக்கள் முன்னே சென்று பூக்கள் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து விட்டுக்
கூட்டுக்குத் திரும்பும். கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு
ஸ்கவுட் தேனீகள், தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது சோலை எந்தத் திசையில் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித் தெரிவிக்கும். இதில் 2 வித நடனங்கள் உள்ளன. வட்ட நடனம் மற்றும் வாலாட்டு நடனம். வட்ட நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள் இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும்.
வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு
நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது என்றும் அர்த்தம். வாலை வேகமாக ஆட்டினால், சோலை அருகில் உள்ளது என்றும், மெதுவாக ஆட்டினால்,
தொலைவில் உள்ளது
என்றும் அர்த்தம். சூரியன், சோலையின் திசை, தங்கள் கூட்டின் இருப்பிடம் இந்த மூன்றையும் சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும். இந்த நுட்பமான நடன ரகசியத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர் #கார்ல்வான்_ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு கொடுத்தார்கள். தேன் சேகரிக்கும் போது தேனீக்களின் காலில்
ஒட்டிக் கொள்ளும் பூக்களின் மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல் உட்காரும் போது, விதவிதமான கூட்டணியுடன் பரவும். இதுதான் காடுகளின், சோலைகளின் பரவலுக்குக் காரணம். தேனீகளை அதிகம்
காடுகளுக்குள் தான் பார்க்க முடியும். காரணம், தேனீகள் இருக்கிற இடத்திலேயே
இயற்கையாகவே அடர்ந்த காடுகள்
உருவாகிவிடும்!"
"அழியும் உயிரினம் பட்டியலில் இடம்
பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன
ஆபத்து?"
"அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும் உயிரினங்கள். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்துவிட்டன. அதாவது, தேனீகளின்
அழிவு 42 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இன்னும் இந்தியாவில் தேனீகளுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை. ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை வரலாம். தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம், Colony Collapse Disorder சுருக்கமாக, CCD. அதாவது கூட்டில் இருந்து உணவு சேகரிக்கச்
சென்ற பணித் தேனீக்கள் கொத்துக் கொத்தாகக் காணாமல் போய்விடும். ராணி மட்டும் கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால், ராணித் தேனீ என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி, சீக்கிரமே இறந்து விடும். இல்லையெனில் வேறுகூடு தேடிப்
போய்விடும். பணித் தேனீகள் இப்படித் தொலைந்து போவதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப் பட்ட பயிர்கள். செயற்கை உரத்தில் உள்ள நியோ நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப் பொருள் தேனீகளின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத் திறனை
மழுங்கடித்து விடும். இதனால் கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்து போய் பறந்து போய் அலைந்து திரிந்து இறந்து விடும். மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களின் விதைகளை #டெர்மினேட்டர்_சீட்ஸ் என்பார்கள். அதாவது, அந்தப் பயிர்கள் 'விதை தானியத்தை’ உருவாக்காது. மலட்டு விதைகளைத் தான் உருவாக்கும்.
அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீகளிடம் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி, ஒரு கட்டத்தில் தேனீகளைக் கொன்றேவிடும். இப்படி விவசாயத்தில் 'வணிக லாபத்துக்காக’ மனிதன் செய்த பல மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் கடந்த 5 வருடங்களாக
விவசாய உற்பத்தி பெரும் அளவு குறைந்து வருவதற்குக் காரணம் தேனீகளின் இறப்பு எனத் தெரிய வந்தது. அதனால், அங்கு செயற்கை உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள் போன்றவற்றைத் தடை செய்து விட்டனர். வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து தங்கள் வயல்களில் பறக்கவிட்டு மகரந்தச் சேர்க்கை நடத்தி
வருகின்றனர்."
இயற்கை நம் பாதுகாப்பிற்கு இறைவன் கொடுத்த வரம். அதை நன்றாகப் பேணி கார்போம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஸ்ரீராம_ ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே
என்ற ஸ்லோகத்தை மூன்று தடவை
சொன்னால் விஷ்ணு சஹஸ்ரநாமம் முழுதாக சொன்ன பலன் கிடைக்கும்.
#தாயுமானவர் (1705 - 1742) தமிழில் மெய்ப்பொருள் பற்றிப் புகழ்பெற்ற பாடல்களை இயற்றியவர். இவர் தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யத்தில் பிறந்தார். இவர் தந்தையார் கேடிலியப்பர், தாயார் கேசவள்ளி அம்மையார் ஆவார்கள். இவர் தமிழ், வடமொழி
ஆகிய இருமொழிகளிலும் புலமை பெற்றவர். திருச்சிராப்பள்ளியை ஆட்சிபுரிந்த விஜயரகுநாத சொக்கலிங்கரிடம் அரச கணக்கராகப் பணிபுரிந்து, அப்போது முக்கியமான ஆவணம் ஒன்றை அரசவையில் இவர் கையால் கசக்கிப் போட, இவர் தன்னிலை மறந்து இறைவியுடன் ஒன்றிப் போய் இந்தக் காரியம் செய்வதை அறியாத சபையினர்
அரசனுக்கும், அரசிக்கும் அவமரியாதை என அவதூறு பேசினார்கள். ஆனால் அதே சமயம் திருவானைக்கா அகிலாண்டேசுவரி கோயிலில், அம்பாளின் ஆடையில் நெருப்புப் பற்றியதைச் சிவாசாரியார்கள் கவனிப்பதற்குள் தாயுமானவர் நுழைந்து தம் கையால் கசக்கி அந்த நெருப்பை அணைத்ததைச் சிவாசாரியார்கள் கண்டனர். அவர்கள்
#மகாபெரியவா அருள்வாக்கு
நாம் அனைவரும் இறைவனைப் பற்றிய உண்மையான ஞானத்தைப் பெற முயற்சி செய்ய வேண்டும். பரம்பொருளைத் தவிர, வேறெதுவுமே உலகில் நிலையானது அல்ல என்பதை உணர்வதே ஞானம்.
வாழ்வில் இன்பங்களை எல்லாம் வெளியுலகில் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். அவை எல்லாம் நம்மை மயக்கக் கூடியவை.
என்றென்றும் பூரண இன்பம் தருபவர் கடவுள் மட்டுமே.
குழந்தைப் பருவத்தில் இருந்தே தியானம் செய்யப் பழகினால், பாவ எண்ணங்கள் நம் மனதில் உற்பத்தியாவதைத் தடுத்து உயர்ந்த நிலையை அடையலாம்.
உலகில் யாரும் பாவியாக இருக்க விரும்புவதில்லை. ஆனால், பாவச் செயல்களையே நாம் செய்து வருகிறோம். பலன்
மட்டும் புண்ணிய பலன்களை பெற விரும்புகிறோம். மன உறுதியை வளர்த்துக் கொண்டால் மட்டுமே பாவங்களில் இருந்து முற்றிலும் விடுதலை பெறலாம்.
அடர்ந்த மரத்தின் கிளைகள் ஆடுகின்ற போது இடுக்கு வழியாகக் கொஞ்சம் வெளிச்சம் வந்து பாய்ந்து விட்டு, அடுத்த நிமிஷமே நிழல் வந்து மூடிக் கொள்வது போல,
#MahaPeriyava
Author: Prof S.Kalyanaraman, Neurosurgeon, Chennai
Source: Moments of a lifetime
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
In the early 1980’s my income began to increase and I was able to save some money for punya kainkaryam (good deeds
accruing merit). Maha Periyaval was camping in Maharashtra at a place near Sholapur. My father told His Holines “Raman is now getting some good income. Please advise him what is the best punyakainkaryam for which he can spend his money and get the maximum punyam”
His Holiness was
silent for a few minutes and then replied “All of you as Brahmins should have studied the Vedas and spent your life teaching the Vedas to others. It is now too late. Many in your family have become doctors. The next best thing you can do since you have not done Veda Adhyayanam is
#மகாபெரியவா#ஆதிசங்கரர்
திருப்பூர் கிருஷ்ணன்
இது 1983இல் நடந்த சம்பவம். அப்போது பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி. அவர் ஆதிசங்கரருக்கு ஓர் அஞ்சல் தலை வெளியிட விரும்பினார். ஆதிசங்கரருக்கு அஞ்சல் தலை வெளியிடுவதற்கு முன்பாக அதுபற்றி மகாசுவாமிகளின் கருத்தை அறிய விரும்பினார் இந்திரா
காந்தி. சதாராவில் முகாமிட்டிருந்த மகாசுவாமிகளிடம் கருத்துக் கேட்டு வருமாறு அன்றைய மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சி. சுப்பிரமணியத்தை அனுப்பினார். சி.எஸ். ஏன் வந்திருக்கிறார் என்பதை சுவாமிகள் அறிந்து கொண்டார். சற்றுநேரம் கண்மூடி அமர்ந்திருந்த சுவாமிகள் பிறகு சி.எஸ்.ஸிடம்
கேட்டார், “மத்திய அரசு அஞ்சல் தலை வெளியிட முடிவு செய்துவிட்டு என் ஆசியைக் கோருகிறதா அல்லது அஞ்சல் தலை வெளியிடலாமா என்பது பற்றி என் கருத்தைக் கேட்கிறதா?அஞ்சல் தலை வெளியிட முடிவெடுத்திருந்தால் வெளியிடட்டும்! அதில் நான் ஆட்சேபிக்க ஒன்றுமில்லை!”