#முள்ளங்குடி_கோதண்டராமர்
குடும்ப ஒற்றுமை காக்கும் கோதண்டராமர் கோவிலும் கூட. முள்ளங்குடி ஒரு சின்னஞ்சிறு கிராமம். பச்சை பசேல் வயல் வெளிகளும் கரும்பு சோலைகளும் நிறைந்த அழகான ஊரில் பல நூற்றாண்டுகளைக் கடந்த அரிய பழமையான ஆலயமான அருள்மிகு கோதண்டராம ஆலயம் உள்ளது. ஆலயம் கிழக்கு திசை
நோக்கி அமைந்துள்ளது. நுழைவு வாயிலைத் தாண்டியதும் கருடாழ்வார் சன்னிதி உள்ளது. அடுத்துள்ளது மகாமண்டபம். அடுத்து அர்த்த மண்டப நுழைவுவாயிலின் முன்பு இடது புறம் தும்பிக்கை ஆழ்வாரும் வலதுபுறம் ஆஞ்சேநயரும் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் கோதண்டராமர் தனது மடியில் சீதாப்பிராட்டியை
அமர்த்திக் கொண்டு சங்கு சக்கரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்குள்ள கருடாழ்வாருக்கு வியாழன் தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ராமநவமி, அனுமன் ஜெயந்தி, நவராத்திரி ஆகிய நாட்களில் இறைவன், இறைவி மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனைகள் நடை பெறுகின்றன. பிள்ளைப்
பேறு வேண்டுவோர், திருமணம் நடைபெற வேண்டுவோர் இங்குள்ள ஆஞ்சேநயரை பிரார்த்தனை செய்ய அவர்கள் பிரார்த்தனை பலிப்பது நிஜம் என்கின்றனர் பக்தர்கள். தங்கள் பிரார்த்தனை பலித்ததும் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தி புளி சாதம், எள்ளு சாதம், நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வினியோகம் செய்து தங்கள்
நன்றிக் கடனை நிறைவேற்றி கொள்கின்றனர். இங்குள்ள ராமபிரானை பிரார்த்தனை செய்வதால் தோஷ நிவர்த்தி ஏற்படுவதாக சொல்கின்றனர் பக்தர்கள். திவ்ய தேசமான திருவெள்ளியங்குடியில் மூலவர் கோல வில்லிராமர். இங்கு ராமபிரான் சங்கு சக்கரமின்றி, சீதை, லட்சுமணர் இல்லாமல் தனிமையாக சயனக் கோலத்தில் காட்சி
தருகிறார். ராமபிரானை இங்கு தரிசித்த கருடாழ்வாரின் மனம் சங்கடபட்டது. சங்கு சக்கரமில்லாமல் சீதாப்பிராட்டி இல்லாமல் ராமரை தரிசனம் செய்ததில் அவர் மன நிறைவு கொள்ளவில்லை. ராமபிரானை தனித்து பார்த்த தன் கண்களால் அவரை சீதாப்பிராட்டியுடன் இணைத்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. தனது
ஆவலை கயிலாச நாதரிடம் தெரிவித்தார் கருடாழ்வார். கயிலாசநாதர் அவரை முள்ளங்குடிக்குச் சென்று தியானம் செய்யும்படி பணித்தார். அதன்படி முள்ளங்குடி வந்த கருடாழ்வார் ராமபிரானை வேண்டி தியானத்தில் ஆழ்ந்தார். அவர் தியானம் செய்வதைக் கண்டு மனம் இறங்கிய ராமபிரான் சங்கு சக்கரத்துடன் சீதா
பிராட்டியை மடியில் வைத்துக் கொண்டு தரிசனம் தந்தார். கருடாழ்வார் மெய்மறந்து ராமபிரானை தரிசித்தார். ‘புள்’ளாகிய கருடனுக்கு அவர் விரும்பிய அமர்ந்த கோலத்தில் தன் மடிமீது சீதா தேவியை அணைத்துக் கொண்டு ராமபிரான் காட்சி தந்ததால் இந்த ஊர் புள்ளங்குடி என்ற பெயர் பெற்றது. அதற்கு பிறகு
முள்ளங்குடி என்று அழைக்கப் படலாயிற்று. இந்த ஆலயத்தில் ஆஞ்சநேயர் தலையில் கிரீடம் இல்லாமல் இரு கரங்களையும் கூப்பி கண்களை மூடி தியான நிலையில் காட்சி தருகிறார். கருடன் இந்த தலத்தில் தியானத்தில் இருந்த போது அனுமனும் தியானம் செய்து ராமபிரானின் தாம்பத்ய கோல தரிசனம் பெற்றார். இந்த
தலத்தில் ராமபிரான், சீதா தேவியை தன் மடி மீது அமர்த்திய கோலத்தில் அபூர்வமாக சேவை சாதிப்பதால் குடும்ப ஒற்றுமை, இல்லற மகிழ்ச்சி, தாம்பத்ய உறவு ஆகியவைகளை அருளும் தலமாக இத்தலம் விளங்குவது உண்மையே!
சென்னை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள அணைக்கரை என்ற ஊரில் இருந்து 6 கி.மீ. தொலைவில்
உள்ளது முள்ளங்குடி.
ஜெ ஸ்ரீ ராம்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஸ்ரீராம_ ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே
என்ற ஸ்லோகத்தை மூன்று தடவை
சொன்னால் விஷ்ணு சஹஸ்ரநாமம் முழுதாக சொன்ன பலன் கிடைக்கும்.
#தாயுமானவர் (1705 - 1742) தமிழில் மெய்ப்பொருள் பற்றிப் புகழ்பெற்ற பாடல்களை இயற்றியவர். இவர் தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யத்தில் பிறந்தார். இவர் தந்தையார் கேடிலியப்பர், தாயார் கேசவள்ளி அம்மையார் ஆவார்கள். இவர் தமிழ், வடமொழி
ஆகிய இருமொழிகளிலும் புலமை பெற்றவர். திருச்சிராப்பள்ளியை ஆட்சிபுரிந்த விஜயரகுநாத சொக்கலிங்கரிடம் அரச கணக்கராகப் பணிபுரிந்து, அப்போது முக்கியமான ஆவணம் ஒன்றை அரசவையில் இவர் கையால் கசக்கிப் போட, இவர் தன்னிலை மறந்து இறைவியுடன் ஒன்றிப் போய் இந்தக் காரியம் செய்வதை அறியாத சபையினர்
அரசனுக்கும், அரசிக்கும் அவமரியாதை என அவதூறு பேசினார்கள். ஆனால் அதே சமயம் திருவானைக்கா அகிலாண்டேசுவரி கோயிலில், அம்பாளின் ஆடையில் நெருப்புப் பற்றியதைச் சிவாசாரியார்கள் கவனிப்பதற்குள் தாயுமானவர் நுழைந்து தம் கையால் கசக்கி அந்த நெருப்பை அணைத்ததைச் சிவாசாரியார்கள் கண்டனர். அவர்கள்
#மகாபெரியவா அருள்வாக்கு
நாம் அனைவரும் இறைவனைப் பற்றிய உண்மையான ஞானத்தைப் பெற முயற்சி செய்ய வேண்டும். பரம்பொருளைத் தவிர, வேறெதுவுமே உலகில் நிலையானது அல்ல என்பதை உணர்வதே ஞானம்.
வாழ்வில் இன்பங்களை எல்லாம் வெளியுலகில் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். அவை எல்லாம் நம்மை மயக்கக் கூடியவை.
என்றென்றும் பூரண இன்பம் தருபவர் கடவுள் மட்டுமே.
குழந்தைப் பருவத்தில் இருந்தே தியானம் செய்யப் பழகினால், பாவ எண்ணங்கள் நம் மனதில் உற்பத்தியாவதைத் தடுத்து உயர்ந்த நிலையை அடையலாம்.
உலகில் யாரும் பாவியாக இருக்க விரும்புவதில்லை. ஆனால், பாவச் செயல்களையே நாம் செய்து வருகிறோம். பலன்
மட்டும் புண்ணிய பலன்களை பெற விரும்புகிறோம். மன உறுதியை வளர்த்துக் கொண்டால் மட்டுமே பாவங்களில் இருந்து முற்றிலும் விடுதலை பெறலாம்.
அடர்ந்த மரத்தின் கிளைகள் ஆடுகின்ற போது இடுக்கு வழியாகக் கொஞ்சம் வெளிச்சம் வந்து பாய்ந்து விட்டு, அடுத்த நிமிஷமே நிழல் வந்து மூடிக் கொள்வது போல,
#MahaPeriyava
Author: Prof S.Kalyanaraman, Neurosurgeon, Chennai
Source: Moments of a lifetime
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
In the early 1980’s my income began to increase and I was able to save some money for punya kainkaryam (good deeds
accruing merit). Maha Periyaval was camping in Maharashtra at a place near Sholapur. My father told His Holines “Raman is now getting some good income. Please advise him what is the best punyakainkaryam for which he can spend his money and get the maximum punyam”
His Holiness was
silent for a few minutes and then replied “All of you as Brahmins should have studied the Vedas and spent your life teaching the Vedas to others. It is now too late. Many in your family have become doctors. The next best thing you can do since you have not done Veda Adhyayanam is
#மகாபெரியவா#ஆதிசங்கரர்
திருப்பூர் கிருஷ்ணன்
இது 1983இல் நடந்த சம்பவம். அப்போது பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி. அவர் ஆதிசங்கரருக்கு ஓர் அஞ்சல் தலை வெளியிட விரும்பினார். ஆதிசங்கரருக்கு அஞ்சல் தலை வெளியிடுவதற்கு முன்பாக அதுபற்றி மகாசுவாமிகளின் கருத்தை அறிய விரும்பினார் இந்திரா
காந்தி. சதாராவில் முகாமிட்டிருந்த மகாசுவாமிகளிடம் கருத்துக் கேட்டு வருமாறு அன்றைய மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சி. சுப்பிரமணியத்தை அனுப்பினார். சி.எஸ். ஏன் வந்திருக்கிறார் என்பதை சுவாமிகள் அறிந்து கொண்டார். சற்றுநேரம் கண்மூடி அமர்ந்திருந்த சுவாமிகள் பிறகு சி.எஸ்.ஸிடம்
கேட்டார், “மத்திய அரசு அஞ்சல் தலை வெளியிட முடிவு செய்துவிட்டு என் ஆசியைக் கோருகிறதா அல்லது அஞ்சல் தலை வெளியிடலாமா என்பது பற்றி என் கருத்தைக் கேட்கிறதா?அஞ்சல் தலை வெளியிட முடிவெடுத்திருந்தால் வெளியிடட்டும்! அதில் நான் ஆட்சேபிக்க ஒன்றுமில்லை!”