அன்பெழில் Profile picture
Apr 27 6 tweets 2 min read Twitter logo Read on Twitter
#மகாபெரியவா #ஆதிசங்கரர்
திருப்பூர் கிருஷ்ணன்
இது 1983இல் நடந்த சம்பவம். அப்போது பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி. அவர் ஆதிசங்கரருக்கு ஓர் அஞ்சல் தலை வெளியிட விரும்பினார். ஆதிசங்கரருக்கு அஞ்சல் தலை வெளியிடுவதற்கு முன்பாக அதுபற்றி மகாசுவாமிகளின் கருத்தை அறிய விரும்பினார் இந்திரா Image
காந்தி. சதாராவில் முகாமிட்டிருந்த மகாசுவாமிகளிடம் கருத்துக் கேட்டு வருமாறு அன்றைய மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சி. சுப்பிரமணியத்தை அனுப்பினார். சி.எஸ். ஏன் வந்திருக்கிறார் என்பதை சுவாமிகள் அறிந்து கொண்டார். சற்றுநேரம் கண்மூடி அமர்ந்திருந்த சுவாமிகள் பிறகு சி.எஸ்.ஸிடம்
கேட்டார், “மத்திய அரசு அஞ்சல் தலை வெளியிட முடிவு செய்துவிட்டு என் ஆசியைக் கோருகிறதா அல்லது அஞ்சல் தலை வெளியிடலாமா என்பது பற்றி என் கருத்தைக் கேட்கிறதா?அஞ்சல் தலை வெளியிட முடிவெடுத்திருந்தால் வெளியிடட்டும்! அதில் நான் ஆட்சேபிக்க ஒன்றுமில்லை!”

சி.எஸ். பணிவோடு பதில் சொன்னார்,
“இன்னும் முடிவெடுக்கவில்லை. உங்கள் கருத்தைக் கேட்டபின் தான் முடிவு செய்யப் போகிறார்கள்.”
“நல்லது. அப்படியானால் என் கருத்தைச் சொல்கிறேன். என்னைக் கேட்டால் அஞ்சல் தலை வெளியிட வேண்டாம் என்றுதான் சொல்வேன். ஆதிசங்கரர் ஒரு பெரிய அவதார புருஷர். நாம் புதிதாக அவருக்கு மகிமை சேர்க்க
வேண்டியதில்லை. அவர் பிறவியிலேயே மகிமை பொருந்தியவர். அவர் படத்தைத் தபால் தலையில் போட்டு வெளியிட்டால் என்ன ஆகும்? தபால் தலையை ஒட்டுபவர்கள் எல்லாம் நாவினால் பின்புறத்தில் எச்சில் தடவி அஞ்சல் தலையை ஒட்டுவார்கள். பரவலாக இப்படித்தானே நடக்கிறது? அது அந்த மகாபுருஷருக்குச் செய்யும்
மரியாதையாக இருக்காது.”
சுவாமிகளின் பதிலைக் கேட்ட சி.எஸ். இந்தக் கோணத்தில் யாரும் யோசிக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டார். செய்தி சி.எஸ். மூலம் இந்திராகாந்திக்குத் தெரிவிக்கப்பட்டது. அந்த அஞ்சல் தலை வெளியிடப் படவில்லை.
(நன்றி: தினமலர்.)
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Apr 29
#ஆன்மீகத்_தகவல் #ராமநாம_மகிமை

ஸ்ரீராம_ ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே
என்ற ஸ்லோகத்தை மூன்று தடவை
சொன்னால் விஷ்ணு சஹஸ்ரநாமம் முழுதாக சொன்ன பலன் கிடைக்கும்.

வில்வ மரத்தடியில் சொன்னால்1000 தடவை சஹஸ்ரநாமம் சொன்ன பலன்.

பசு நிறைந்து இருக்கும் Image
இடத்தில் சொன்னால் பலகோடி முறை சொன்ன பலன்.

ராம நாமத்தை நாம் முழு பக்தியுடன் ஜபித்தால் நமக்கு மோட்சம் உண்டு. ராம நாமம் எல்லா நாம ஜபங்களை விட இனிமையானது.

ராம நாமம் சொல்வது மகா விஷ்ணுவின் மற்ற 1000 நாமங்களை சொல்வதற்குச் சமம். நன்மையும் செல்வமும் நாளும் நல்குமேதின்மையும் பாவமும்
சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே "ராம" என்ற இரண்டு எழுத்தினால்.

ஆலயங்களில், ஸ்ரீராம நாமம் சொன்னால் மறு பிறவி இல்லாது நம் சந்ததிகள் எல்லா நன்மைகளும் அடைவார்கள் என்று காஞ்சி மகாபெரியவர் சொன்ன அருள் வாக்கு.

ஸ்ரீராம ஜெய ராம
ஜெய ஜெய ராம
Read 4 tweets
Apr 29
#தாயுமானவர் (1705 - 1742) தமிழில் மெய்ப்பொருள் பற்றிப் புகழ்பெற்ற பாடல்களை இயற்றியவர். இவர் தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யத்தில் பிறந்தார். இவர் தந்தையார் கேடிலியப்பர், தாயார் கேசவள்ளி அம்மையார் ஆவார்கள். இவர் தமிழ், வடமொழி Image
ஆகிய இருமொழிகளிலும் புலமை பெற்றவர். திருச்சிராப்பள்ளியை ஆட்சிபுரிந்த விஜயரகுநாத சொக்கலிங்கரிடம் அரச கணக்கராகப் பணிபுரிந்து, அப்போது முக்கியமான ஆவணம் ஒன்றை அரசவையில் இவர் கையால் கசக்கிப் போட, இவர் தன்னிலை மறந்து இறைவியுடன் ஒன்றிப் போய் இந்தக் காரியம் செய்வதை அறியாத சபையினர் Image
அரசனுக்கும், அரசிக்கும் அவமரியாதை என அவதூறு பேசினார்கள். ஆனால் அதே சமயம் திருவானைக்கா அகிலாண்டேசுவரி கோயிலில், அம்பாளின் ஆடையில் நெருப்புப் பற்றியதைச் சிவாசாரியார்கள் கவனிப்பதற்குள் தாயுமானவர் நுழைந்து தம் கையால் கசக்கி அந்த நெருப்பை அணைத்ததைச் சிவாசாரியார்கள் கண்டனர். அவர்கள்
Read 14 tweets
Apr 28
#ஆன்மீக_தகவல்கள்
பூஜை சாமான்களை எவர்சில்வர் தட்டுக்களில் வைக்கக் கூடாது. வெள்ளி பித்தளை, செம்பு, வெண்கலம் ஆகிய தட்டுகளிலேயே வைக்க வேண்டும்.

வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே அணைய வேண்டும். நாம் அணைக்கக் கூடாது.

திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும். Image
அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது.

கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக்கூடாது.

எலுமிச்சை விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது. கோவிலில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய்
தீபம் தான் ஏற்ற வேண்டும். ஒரு போதும் எள் வைத்து ஏற்றக் கூடாது.

சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.

நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக்கூடாது. பேசினால் சுபம் தடைபடும்.
Read 9 tweets
Apr 28
#மகாபெரியவா அருள்வாக்கு
நாம் அனைவரும் இறைவனைப் பற்றிய உண்மையான ஞானத்தைப் பெற முயற்சி செய்ய வேண்டும். பரம்பொருளைத் தவிர, வேறெதுவுமே உலகில் நிலையானது அல்ல என்பதை உணர்வதே ஞானம்.
வாழ்வில் இன்பங்களை எல்லாம் வெளியுலகில் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். அவை எல்லாம் நம்மை மயக்கக் கூடியவை. Image
என்றென்றும் பூரண இன்பம் தருபவர் கடவுள் மட்டுமே.
குழந்தைப் பருவத்தில் இருந்தே தியானம் செய்யப் பழகினால், பாவ எண்ணங்கள் நம் மனதில் உற்பத்தியாவதைத் தடுத்து உயர்ந்த நிலையை அடையலாம்.
உலகில் யாரும் பாவியாக இருக்க விரும்புவதில்லை. ஆனால், பாவச் செயல்களையே நாம் செய்து வருகிறோம். பலன்
மட்டும் புண்ணிய பலன்களை பெற விரும்புகிறோம். மன உறுதியை வளர்த்துக் கொண்டால் மட்டுமே பாவங்களில் இருந்து முற்றிலும் விடுதலை பெறலாம்.
அடர்ந்த மரத்தின் கிளைகள் ஆடுகின்ற போது இடுக்கு வழியாகக் கொஞ்சம் வெளிச்சம் வந்து பாய்ந்து விட்டு, அடுத்த நிமிஷமே நிழல் வந்து மூடிக் கொள்வது போல,
Read 4 tweets
Apr 28
#MahaPeriyava
Author: Prof S.Kalyanaraman, Neurosurgeon, Chennai
Source: Moments of a lifetime
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

In the early 1980’s my income began to increase and I was able to save some money for punya kainkaryam (good deeds Image
accruing merit). Maha Periyaval was camping in Maharashtra at a place near Sholapur. My father told His Holines “Raman is now getting some good income. Please advise him what is the best punyakainkaryam for which he can spend his money and get the maximum punyam”
His Holiness was
silent for a few minutes and then replied “All of you as Brahmins should have studied the Vedas and spent your life teaching the Vedas to others. It is now too late. Many in your family have become doctors. The next best thing you can do since you have not done Veda Adhyayanam is
Read 18 tweets
Apr 27
#முள்ளங்குடி_கோதண்டராமர்
குடும்ப ஒற்றுமை காக்கும் கோதண்டராமர் கோவிலும் கூட. முள்ளங்குடி ஒரு சின்னஞ்சிறு கிராமம். பச்சை பசேல் வயல் வெளிகளும் கரும்பு சோலைகளும் நிறைந்த அழகான ஊரில் பல நூற்றாண்டுகளைக் கடந்த அரிய பழமையான ஆலயமான அருள்மிகு கோதண்டராம ஆலயம் உள்ளது. ஆலயம் கிழக்கு திசை Image
நோக்கி அமைந்துள்ளது. நுழைவு வாயிலைத் தாண்டியதும் கருடாழ்வார் சன்னிதி உள்ளது. அடுத்துள்ளது மகாமண்டபம். அடுத்து அர்த்த மண்டப நுழைவுவாயிலின் முன்பு இடது புறம் தும்பிக்கை ஆழ்வாரும் வலதுபுறம் ஆஞ்சேநயரும் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் கோதண்டராமர் தனது மடியில் சீதாப்பிராட்டியை
அமர்த்திக் கொண்டு சங்கு சக்கரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்குள்ள கருடாழ்வாருக்கு வியாழன் தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ராமநவமி, அனுமன் ஜெயந்தி, நவராத்திரி ஆகிய நாட்களில் இறைவன், இறைவி மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனைகள் நடை பெறுகின்றன. பிள்ளைப்
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(