*ஸ்ரீ சுந்தரவரதராஜ பெருமாள் கோயில் உத்திரமேரூர்.*

மூலவர் 

1. ஸ்ரீ சுந்தரவரதராஜபெருமாள்

2. ஸ்ரீ வைகுந்தபெருமாள்.

3. ஸ்ரீ அரங்கநாதன்

தாயார் 

1. ஸ்ரீ ஆனந்தவல்லிதாயார்

2 ஸ்ரீ நிலமகள்,

3 திருமகள்

1 Image
தீர்த்தம் 

ராஜ கோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்தால் பிரம்மதீர்த்தம் உள்ளது. 

உத்திரமேரூர் ஊரின் பெயர்

உத்து-ஹர-மேரூர் என்றால்
தூண்டுதல் -பாவங்களை போக்குவது- மேன்மை பொருந்திய ஊர்

ஆகவே கடவுளை வணங்க தூண்டுதல் செய்து பாவங்களை
போக்கும் ஊர் இந்த 
உத்திரமேரூர் ஆகும்.

2
பத்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று இவ்வூரை உத்தரமேரூர் சதுர்வேதி மங்கலம் என்று குறிக்கிறது. 

இவ்வூர் பற்பல வம்ச அரசர்களின் ஆடசிக் காலத்தில் பற்பல பெயர்களில் அழைக்கப்பட்டன: 

3
ராஜேந்திரசோழ சதுர்வேதிமங்கலம், விஜயகந்தகோபால சதுர்வேதிமங்கலம், வடமேருமங்கை என்று பல பெயர்கள் இவ்வூருக்கு இருந்திருக்கிறது.

4
பெருமாளின் 9 கோலங்கள் கொண்ட தலம்.

அழகிய அஷ்டாங்க விமானம் கொண்ட அற்புதத் தலம் இது.

இத்தலம் பஞ்சவரதஷேத்ரம் ஆகும்.

இக் கோயில் மரபுரிமை நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டு, இந்திய தொல்லியல் ஆய்வு மையத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

5
திருமங்கைஆழ்வார்

பெரியாழ்வார் 

திருமழிசை ஆழ்வார்களால்

மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள். 

பல்லவ அரசன் இரண்டாம் நந்திவர்மன் (720–796 CE) இவ்வூரை கி.பி. 750 ஆண்டில் ஒரு பிரம்மதேய கிராமமாக உருவாக்கி ஸ்ரீவைஷ்ணவ வேத பிராமணர்களுக்கு நிலக்கொடையாக அளித்துள்ளார்

6
நந்தி வர்ம பல்லவன்
வாஸ்து சாஸ்திரத்தில் பெயர் பெற்ற பரமேசுவரத் தச்சனைக் கொண்டு வைகாஸ ஆகமபடி 
அஷ்டாங்க விமானம் நவமூர்த்தி
பிரதிஷ்டையுடன் 
ஸ்ரீ சுந்தரவரதராஜர் கோவில் நிர்மாணிக்கப்பட்டது.
என்றும் 

7
‘மயன் மதம்‘ என்ற நூலின் அடிப்படையில் இக் கோவில் கட்டப்பட்டிருக்கிறது என்றும் 
வரலாறு தெரிவிக்கிறது. 

சோழர்கள், பாண்டியர்கள், சம்புவராயர்கள், விஜயநகர மன்னர்கள் மற்றும் நாயக்கர்களால் இக்கோவில் விரிவு படுத்தப்பட்டுள்ளது.

8
பஞ்ச வரதராக 
வந்தாரை வாழ வைப்பவராக
மூன்று தலங்களில்

நின்றான்

நடந்தான்

கிடந்தான்

என்று மனிதனின் இளமை நடுத்தர வயோதிக நிலை காட்டி
அருள்தரும் அருளாளனாய் இங்கே அருள்பாலிக்கிறார். 

மூலமூர்த்திகள்.அத்திமரத்தால் ஆனது ஆகும். 

9
வாஸ்து சாஸ்திரபடி இவ்வூர்
நேருக்கு நேரான தெருக்கள் கொண்டு அமைக்கப்பட்டு
அந்த காலத்தில் நான்கு . வேதங்களும் ஒருங்கே ஓதப்பட்ட ஊர்.

பஞ்சபாண்டவர்கள் அஞ்ஞாத வாசத்தில் வணங்கிய பெருமாள் இவர்,

10
தர்மனுக்கு ஸ்ரீ வைகுந்தவரதராக

பீமனுக்கு ஸ்ரீ சுந்தரவரதராக

அர்ஜீனனுக்கு ஸ்ரீ அச்சுதவரதராக

நகுலனுக்கு ஸ்ரீ அனிருத்த வரதராக

சகாதேவனுக்கு
ஸ்ரீ கல்யாணவரதராகவும் காட்சி தருகிறார்.

11
தாயார் 

திரௌபதிக்கு ஸ்ரீ ஆனந்தவள்ளி தாயாக காட்சி தந்து தனிசன்னதியில்
அருள்பாலிக்கிறார். 

இப்பிராட்டியாரின் திருவருளால் மாங்கல்ய பாக்கியம், பிள்ளைப்பேறு முதலியன கிடைப்பதால் இத்தலத்திற்குத் திருமாங்கல்யம் அதிக அளவில் காணிக்கையாகக் கிடைக்கிறது

12
கோவில் வாயிலில் வீர ஆஞ்சநேயர் உள்ளார்.

இடதுகாலை முன் வைத்து இடுப்பில் வாள் ஏந்தி கதாயுதத்துடன் தெற்கு நோக்கி இருந்து அருள்பாலிக்கின்றனர். 

13
கோவில் அமைப்பு 

வைகுண்ட பெருமாள் ஆலயம் சுமார் 0.5 ஏக்கர் (0.20 ஹெக்டேர்) பரப்பளவைக் கொண்டுள்ளது

ஐந்து நிலைகளுடன் கம்பிரமாய் இராஜகோபுரம் விண்ணை முட்டுகிறது. கோவிலைச் சுற்றி உயர்ந்த திருமதில்கள் அமைந்துள்ளன. 

14
கொடி மரமும், கருட சன்னதியும் தாண்டி கிழக்கு நோக்கிய வாயிலின் மூலம் ஸ்ரீ சுந்தரவரதப் பெருமாள் கருவறையை அடையலாம்.

ஸ்ரீஆனந்தவள்ளி தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றார். 

15
கோவிலில் உள்ள அஷ்டாங்க விமானத்தில் ஒன்பது கருவறைகள் உள்ளன. 

இந்தக் கோவிலில் ஒன்றின் மேல் ஒன்றாக செங்குத்து வரிசையில் ஒருங்கிணைக்கப்பட்ட மூன்று முதன்மைக் கருவறைகள் உள்ளன. 

இந்த மூன்று முதன்மைக் கருவறைகளும் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளன.  

16
இந்தக் கோவிலின் மூன்று நிலைகளில் உள்ள மூலமூர்த்திகள் அத்தி மரத்தால் உருவானவை என்பது குறிப்பிடதக்கது. 

17
தரைத் தளம் மற்றும் முதல் தளத்தில் அமைந்துள்ள இரண்டு முதன்மைக் கருவறைகளைச் சுற்றி மூன்று பிரதான திசைகளிலும்  (cardinal directions) திசைக்கொன்றாக மூன்று கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

18
தரைதளத்திலிருந்து முதல் தளம் வரை ஏறுவதற்கும், இறங்குவதற்கும் என தனித்தனியே இரண்டு குறுகிய படிக்கட்டுகள் விமானத்தின் உள்ளேயே அமைக்கப்பட்டுள்ளன. 

19
இதுபோல முதல்தளத்திலிருந்து இரண்டாம் தளம் வரை ஏறுவதற்கும் இறங்குவதற்கும் தனித்தனியே இரண்டு குறுகிய படிக்கட்டுகள் விமானத்தின் உள்ளேயே அமைக்கப்பட்டுள்ளன. 

சுற்றிவர பிரகாரம் மற்றும் சுதை வேலைப்பாடுகளுடன் கூடிய ஆரச்சுவர் எல்லாம் முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் உள்ளன

20
ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள் கருவறை

கீழ்த்தளத்திலுள்ள முதன்மைக் கருவறையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். 

21
நான்கு கரங்களுடன், நின்ற கோலத்தில் காடசி தரும் பெருமாள், மேல் வலது கையில் சக்கரம் மற்றும் மேல் இடது கையில் சங்கு ஏந்தியும், கீழ் கைகள் அபய ஹஸ்த முத்திரையும் கடிஹஸ்த முத்திரை காட்டியபடியும், காட்சி தருகிறார். 

22
மூலவருக்கு வெள்ளைமுர்த்தி எம்பெருமான், வெள்ளைமுர்த்தி ஆழ்வார், ஸ்ரீ இராசேந்திர விண்ணகர ஆழ்வார் மற்றும் சொக்கப்பெருமாள் என்ற பெயர்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த பெருமாளின் தரிசனம் பாண்டவர்களில் ஒருவனான பீமனுக்குக் கிடைத்ததாம்.

23
தரைத்தளக் கருவறைகள்

சுந்தரவரதரின் முதன்மைக் கருவறையைச் சுற்றி தென்திசையில் அச்யுத வரதர் கருவறையும், மேற்கு திசையில் அநிருத்த வரதர் கருவறையும், வடக்கு திசையில் கல்யாண வரதர் கருவறையும் அமைந்துள்ளன. 

24
இந்த மூன்று கருவறைகளில் மூலமூர்த்திகள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்கள். 

விமானத்தைச் சுற்றி மூன்று புறங்களிலும் திருச்சுற்று மாளிகை அழகிய தூண்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. 

25
தரைத்தளத்தில் தென்மேற்கு மூலையில் 

ஸ்ரீஆனந்தவள்ளி தாயரின் (லோகமாதா என்ற பெயருமுண்டு) தனி கருவறையும், வடமேற்கு மூலையில் ஸ்ரீ ஆண்டாள் தனி கருவறையும் அமைந்துள்ளன.

26
முதல் தளக் கருவறைகள்

முதல் தளத்திலுள்ள முதன்மைக் கருவறையில் உபயநாச்சியார்கள் சமேதராய் ஸ்ரீ வைகுண்ட வரதராஜப் பெருமாள் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். இக்கருவறையில் மரத்தால் அமைக்கப்பட்ட மண்டபத்தில் இருந்த (அமர்ந்த) கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.

27
இந்த பெருமாளின் தரிசனம் பாண்டவர்களில் ஒருவனான தர்மனுக்குக் கிடைத்ததாம்.

முதல் தளத்தில் வைகுண்ட வரதரின் முதன்மைக் கருவறையைச் சுற்றி தென்திசையில் கிருஷ்ணர் 
கருவறையும், மேற்கு திசையில் யோக நரசிம்மர் கருவறையும், வடக்கு திசையில் பூதேவி சமேத பூவராக பெருமாள் கருவறையும் அமைந்துள்ளன. 28
இந்த மூன்று கருவறைகளில் மூலமூர்த்திகள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்கள். நன்கு கரங்களுடன் வரத, அபய முத்திரை காட்டும் கிருஷ்ணர், கூப்பிய கரங்களுடன் தன்னை வணங்கும் அர்ஜுனருடன் காட்சி தருகிறார்.

29
இரண்டாம் தளக் கருவறை

இரண்டாம் தளத்திலுள்ள முதன்மைக் கருவறையில் 
ஸ்ரீ அனந்த பத்மநாப பெருமாள், ஆதிசேஷன் என்ற பாம்பணையின் மேல் கிடந்த நிலையில் கிழக்கில் திருமுகம் காட்டி சேவை சாதிக்கிறார். பூதேவி சர்ப்ப மஞ்சத்தில் அமர்ந்துள்ளார். மார்க்கண்டேயருக்கு பெருமாள் காட்சி தருகிறார். 

30
கங்கையும் யமுனையும் பெருமாளின் கருவறை வாசலில் 
அலங்கரிக்கின்றனர்.

இத்தளத்தில் ஒரே ஒரு கருவறை மட்டும் உள்ளது

31
ஷடாங்க (ஆறு அங்க) விமானம்

விமானம் என்பது பொதுவாக அதிஷ்டானம் (அடித்தளம்), பித்தி (சுவர்), பிரஸ்தரம் (கூரை), கிரீவம் (கழுத்து), சிகரம் மற்றும் ஸ்தூபி என்ற ஆறு அங்கங்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது, எனவே அது ஷடாங்க (ஆறு அங்க) விமானம் என்று அழைக்கிறார்கள்.

32
பொதுவாக கருவறைக்கு மேல் அமைந்துள்ள கிரீவம், சிகரம் மற்றும் ஸ்தூபி ஆகிய அங்கங்கள் கொண்ட அமைப்பையே விமானம் என்று தவறாகப் புரிந்து கொள்கிறோம்.

33
அஷ்டாங்க விமானம்

ஆறு அங்கங்களுடன் இரண்டு கருவறைகள் இரண்டு அங்கங்களாகச் சேர்த்து அமைக்கப்படுகின்றன. 

அதாவது பிரஸ்தரத்திற்கும் கிரிவதிற்குமிடையில் ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு சன்னதிகள் அமைக்கப்படும் அமைப்பை அஷ்டாங்க விமானம் என்று தேவாலய வாஸ்து சாஸ்திரங்கள் சொல்கின்றன. 

34
பெருமாள் இந்த அஷ்டாங்க விமான சன்னதிகளில் நின்றான் (நின்ற கோலம்), இருந்தான் (அமர்ந்த கோலம்), கிடந்தான் (சயன கோலம்) என்று மூன்று கோலங்களில் சேவை சாதிக்கிறார். 

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பரமேஸ்வர விண்ணகரம் முதன் முதலில் பல்லவர்களால் கட்டுவிக்கப்பட்ட அஷ்டாங்க விமானம் ஆகும்.

35
இத் திருதலத்தில்
ஜாதகம் வைத்து அர்ச்சனை, செய்து தரப்படுகிறது.

அப்படி செய்வோருக்கு 
திருமணம் சீக்கிரம் நடக்க மார்கண்டேயர் அனுக்கிரகம் செய்கிறார்.

36
மன்னர்கள் கால கல்வெட்டுகள்

உத்திரமேரூர் பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், சமுர்த்தி, விஜயநகர ராயஸ் மற்றும் நாயக்கர்கள் ஆட்சி செய்தனர்.

37
கோயிலின் கல்வெட்டுகளின் படி, பல்லவ மன்னன் நந்திவர்மன் II (பல்லவளல்ல) இரண்டாம் கோபுரம் 730-795 கி.பி 750 ஏ.டீ. ஸ்ரீவிஷ்ஷண சமுதாயத்திலிருந்து வேத பிராமணர்களுக்கு கிராமம் நன்கொடை அளித்ததாக நம்பப்படுகிறது. 

38
சோழர்கள் இப்பகுதியை கைப்பற்றி 9 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தங்கள் ஆட்சியின் கீழ் வந்தனர். 

39
பராந்தக சோழர் I (907-950), ராஜராஜ சோழன் I (985-1014), ராஜேந்திர சோழர் I (1012-1044) மற்றும் குலோத்துங்க சோழன் I (1070-1120) கோவில்களுக்கு பல்வேறு பரிசுகளைக் குறிப்பிடுகின்ற காலப்பகுதியிலிருந்து கல்வெட்டுகள் உள்ளன. 

40
உள்ளூர் பிரதிநிதிகளை சோழ ஆட்சி காலத்தில் குடவோலை என்று அழைப்பதன் மூலம் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கும் செயல்முறை கல்வெட்டுகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

41
பராந்தக சோழன் ஆட்சியின் போது கிராம சபைகளுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான ஜனநாயக நடைமுறைகளை குறிக்கும் கல்வெட்டுகளுக்கு இந்த கோவிலில் அறியப்படுகிறது. 

42
13 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியும் கிராமமும் பாண்டியர்களின் ஆட்சியினுள் சென்று பின்னர் தெலுங்கு சோழ ஆட்சியாளரான விஜய கந்தகோபாலாவிற்கு சென்றன. 

பிற்காலத்தில், பல்லவத் தலைவர்கள், தெலுங்கு சோழர்கள், சம்புராயர்கள் மற்றும் இறுதியாக குமார கம்பன் ஆகியோருக்கு கிராமம் மாறியது. 

43
விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயர் (1502-29) வைகுண்ட கோவில், சுப்ரமண்யா கோவில் மற்றும் கைலாசநாத கோயிலுக்கு பங்களித்தார்.

44
சிறப்புகள்

திரு.T.N.சேஷன் அவர்கள் நமது நாட்டின் தேர்தல் அதிகாரியாக 
பொறுப்பேற்ற போது 
காஞ்சி பெரியவரை சந்தித்து 
அருளாசி பெரும் போது 

45
நீங்கள் உத்திரமேரூர் சென்று
ஸ்ரீ சுந்தரவரதராஜர் பெருமாள் கோவில் கல்வெட்டில் அன்றைய
ஆட்சியாளர்கள் தேர்தல் நடத்திய விதத்தை அங்கே சென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய கல்வெட்டின் சாரம்

46
மக்களாட்சி தேர்தல் முறையில், உலகின் முன்னோடியாக, பழங்கால தமிழகம் விளங்கியதை, கல்வெட்டு விளக்குகிறது.

பல நுாறு ஆண்டுகளுக்கு முன், நேர்மையான முறையில், மக்களாட்சி தத்துவத்தை போற்றும் வகையில், தேர்தல் நடத்தி, மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

47
முதலாம் பராந்தக சோழ மன்னன், கி.பி., 10ம் நுாற்றாண்டில், இப்பகுதியில் ஆட்சி புரிந்துள்ளார். அக்காலத்தில், உத்திரமேரூர், சதுர்வேதி மங்கலம் என, குடும்புகள் எனப்படும், 30 சிறுபகுதிகளுடன் விளங்கியுள்ளது.

48
பொருள், பொன், ஏரி, தோட்டம் போன்ற நிர்வாகத்திற்கு, தனித்தனி வாரியங்களுடன், குடும்புகள் செயல்பட்டுள்ளன. அவற்றை நிர்வகிக்க, மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க, மக்களாட்சி தேர்தல், கி.பி., 919ல், முதலில் நடத்தப்பட்டுள்ளது.

49
தகுதியான நபர்களின் பெயரை, பனையோலையில், எழுத்தாணியால் எழுதி, அவற்றை குடத்தில் இட்டு, விபரமறியா சிறுவன் மூலம், ஒரு ஓலையை எடுக்கச் செய்துள்ளனர்.

50
அந்த ஓலையில் இருக்கும் பெயரை உடையவர், மக்கள் பிரதிநிதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்த தேர்தல் முறை, குடவோலை தேர்தல் என சிறப்பு பெற்றது.

குடத்தில் ஓலைகளில் பெயர் எழுதி போட்டு, அதன்படி மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதால், குடவோலை முறை என, அழைக்கப்பட்டது. 

51
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம், ஓராண்டு. போட்டியிடும் முன், மூன்றாண்டுகள் பதவி வகித்திருக்க கூடாது. 

பதவிக்கு பிறகும், மூன்றாண்டுகள் போட்டியிடவும் தடை இருந்துள்ளது. 

52
பதவியின் போது, தவறிழைத்தால், பதவி பறிக்கப்படும் என, கடுமையான நிபந்தனைகளின் படியே, மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

53
வேட்பாளர் தகுதிகள்:

கால் வேலி, சொந்த நிலத்திற்குரியவர்; 

சொந்த மனை, வீடு வைத்திருப்பவர்; 

வயது, 35 - 70 வரை உள்ளவர்; வேதங்களில் புலமை பெற்றவர் போட்டியிட்டுள்ளனர்.

54
போட்டியிட தகுதியற்றோர்:

பதவி வகித்த பிறகு, நிர்வாக கணக்கு அறிவிக்காதவர் மட்டுமின்றி, அவரின் உறவினர்களும் போட்டியிட தகுதியற்றவர்கள்; 

பிறர் மனைவியை புணர்ந்தவன்; மகா பாவங்களான, கொலை, திருட்டு புரிந்தவன்; பொய் உரைத்தவன்; கள் அருந்தியவன்; உண்ணக்கூடாததை உண்டவன்.

55
இதுகுறித்து பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள், வைகுண்ட பெருமாள் கோவிலில், தற்போதும் உள்ளன. 

இப்போதிலிருந்து, 1,000 ஆண்டுகளுக்கு முன்பே, கடும் நிபந்தனைகள் விதித்து, நேர்மையாளர்களை தேர்ந்தெடுத்து, மக்களாட்சி தத்துவத்தை நிலைநிறுத்தியுள்ளனர், நம் முன்னோர்.

56
கோவில் திருவிழாக்கள்

சுந்தரவரதராஜப்பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் சித்திரை மாதம் கொண்டாடப்படுகின்றது. 

கருடசேவை இவ்விழாவின் சிறப்பு. 

இராமநவமி கொண்டாட்டங்களும் விமரிசையாக நடைபெறுகிறது.  

ஆடி மாதத்தில் பவித்ரோத்சவம் சிறப்புடன் கொண்டாடப்படுகின்றது. 

57
கோவில் காலை 7முதல் 12மணி வரை

மாலை 4 முதல் 8மணி வரை திறந்திருக்கும்.  

கும்பகோணத்தில் இருந்து 
உத்திரமேரூர் 226km.

கும்பகோணத்தில் இருந்து சென்னை சாலையில் மேல்மருவத்தூர் சென்று 
ஆலப்பாக்கம் காட்டுபாக்கம் வழியாக உத்திரமேரூர் 
சென்றடையலாம். 

58
செங்கல்பட்டில் இருந்து 29km.

காஞ்சிபுரத்தில் இருந்து 28km. 🙏

#வாழ்க_பாரதம்
#வளர்க_பாரதம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Apr 30
*சித்ரகுப்தசுவாமி கோவில்*

சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட, மனிதர்களின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதுபவரான, தமிழ்நாட்டில் புகழ்பெற்ற காஞ்சிபுரம் மாவட்டத்தில்
தனிக் கோயிலாக அமைந்த
யம தர்மனின் கணக்கரான
சித்ரகுப்தசுவாமி
கர்ணகிஅம்பிகை

1 Image
திருக்கோயில் வரலாறு:

பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, தர்மங்கள் குறித்த முழு விபரங்களையும் பதிவு செய்துவைப்பது சித்திரகுப்தன் என புராணங்கள் வாயிலாகவும், பல திரைப் படங்களிலும் நாம் கண்டிருப்போம். சித்திரகுப்தன் எமதர்ம ராஜனின் கணக்குப்பிள்ளையாவார்.

2
உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில், காஞ்சிபுரம் நெல்லுக்காரர் தெருவில் அமைந்துள்ள சித்ரகுப்தர் கோயில், கோயில்களில் வித்யாசமான கோவிலாகும். இக்கோயில் சித்திரகுப்தரின் அரிய கோயிலாக விளங்குகிறது.

3
Read 11 tweets
Apr 29
''#நான்'' என்பது அகந்தை மிகையாகக் கொண்டது. அங்கே அன்பு இருக்காது. உண்மை நிலவாது. "நான், எனது” என்னும் உணர்வுகள் நம்மை ஆட்டிப் படைக்கும் தன்மை கொண்டது...
அது உங்களை மற்றவர்களிடமிருந்து பிரித்துத் தனிமைப்படுத்தும் எண்ணத்தை தோற்றுவிக்கக் கூடியது...

நான்!, என்று உச்சரிக்கும் போது நீங்கள் அனைவரையும் விட்டு விலகிச் செல்கின்றீர்கள். அது ஆணவத்தின் ஆரம்பம்...
ஆற்றங்கரை ஓரத்தில் ஓங்கி வளர்ந்து இருந்தது ஒரு அரச மரம், அந்த மரம் மிகவும் உயரமாகவும், மிகுந்த வலிமையுடனும் இருந்தது. ஆனால்!, அதற்கு 'தான்' என்ற அகந்தை அதிகம்...
Read 10 tweets
Apr 29
#பாலம்_கல்யாணசுந்தரம்

நூலகரும், சமூக சேவகரும் ஆவார். பாலம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இவர் நூலக அறிவியலில் தங்கப் பதக்கம் வாங்கியுள்ளார். Image
தனது 35-ஆண்டு கால நூலகப் பணியில் தான் சம்பாதித்த அனைத்தையும் அறக்கட்டளைகளுக்கே கொடுத்து உள்ளார்.. ஏழைகளுக்கு தொண்டு செய்யவேண்டும் என்பதற்காகவே திருமணம் 
செய்து கொள்ளாமல் வாழ்கிறார்.
கல்யாணசுந்தரம் திருநெல்வேலிமேலக்கருவேலங்குளம் என்ற ஊரில் 1940 ஆம் ஆண்டில் பிறந்தவர். திருமணமாகாதவர். 
செயின்ட் சேவியர் கல்லூரியில் தமிழில் படித்து பிஏ இளங்கலைப் பட்டம் பெற்றார். ஒரே ஒரு மாணவராக இருந்ததால் அவரை வேறு பாடம் எடுக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள்.
Read 24 tweets
Apr 29
ஆன்மிகத்தில் ஒளிந்திருக்கும் 10 அறிவியல் உண்மைகள்....

முன்னோர்கள் சொல்லியிருக்கும் ஆன்மிக அறிவுரை ஒவ்வொன்றுக்கும் பின்னால் ஆயிரம் ஆண்டுக் கால அனுபவம் மட்டுமல்ல; அறிவியலும் கலந்திருக்கிறது. அவற்றை ஆராய்ந்து பார்த்தால், நம் முன்னோர்களின் மதிநுட்பம் உங்களை வியக்க வைக்கும். Image
ஒரு சோற்றுப் பதமாக கீழே சில உதாரணங்கள்...

1.விசேஷ வீட்டில் வாழை மரம், மாவிலைத் தோரணங்கள் கட்ட வேண்டும்.
மங்களகரமான விசேஷ நாட்களில் கூடும் மக்கள் கூட்டங்களில் வெளிப்படும் மூச்சுக்காற்றில் கார்பன் -டை- ஆக்ஸைடு மற்றும் வியர்வை நெடி அதிகமாக இருக்கும்.
இதனால் கூட்டத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. மாசுபட்ட காற்றைத் தூய்மைப்படுத்தி, ஆக்சிஜன் நிரம்பிய நல்ல காற்றாக மாற்றி வழங்குபவைதான் வாழை மரமும், மாவிலையும்.
அதனால்தான், இவற்றை விசேஷ நாட்களில் கட்டச் சொன்னார்கள் முன்னோர்கள்.
Read 19 tweets
Apr 29
பல நூற்றாண்டுகளைக் கடந்த அரிய பழமையான ஆலயமான அருள்மிகு கோதண்டராம ஆலயம் உள்ளது. 

குடும்ப ஒற்றுமை காக்கும் கோதண்டராமர் கோவில்....
முள்ளங்குடி.

1 Image
பச்சை பசேல் வயல் வெளிகளும் கரும்பு சோலைகளும் நிறைந்த அழகான ஊர் இது. பல நூற்றாண்டுகளைக் கடந்த அரிய பழமையான ஆலயமான அருள்மிகு கோதண்டராம ஆலயம் இங்குதான் உள்ளது.

2
ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. நுழைவுவாயிலைத் தாண்டியதும் கருடாழ்வார் சன்னிதி உள்ளது.

அடுத்துள்ளது மகாமண்டபம். அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவுவாயிலின் முன்பு இடது புறம் தும்பிக்கை ஆழ்வாரும் வலதுபுறம் ஆஞ்சேநயரும் அருள்பாலிக்கின்றனர்.

3
Read 15 tweets
Apr 28
ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்

ஆனால் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார்
பில்கேட்ஸ் தனது 30 களிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார்

ஆனால் INDITEX SPAIN நிறுவனத்தை தனது 50 ஆவது வயதில் தான் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார்.
இளமை காலங்களில் வாய்ப்பு கிடைக்காமலும் சரியான திரைப்படங்கள் அமையாமலும் தடுமாறிய விக்ரமிற்கு 34 வது வயதில் தான் சேது படம் அமைந்து திருப்பத்தை ஏற்படுத்தியது

24 வயதில் திருமணம் செய்த ஒருவர் தனது 30 வது வயதில் இறந்தார்,
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(