#தாயுமானவர் (1705 - 1742) தமிழில் மெய்ப்பொருள் பற்றிப் புகழ்பெற்ற பாடல்களை இயற்றியவர். இவர் தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யத்தில் பிறந்தார். இவர் தந்தையார் கேடிலியப்பர், தாயார் கேசவள்ளி அம்மையார் ஆவார்கள். இவர் தமிழ், வடமொழி
ஆகிய இருமொழிகளிலும் புலமை பெற்றவர். திருச்சிராப்பள்ளியை ஆட்சிபுரிந்த விஜயரகுநாத சொக்கலிங்கரிடம் அரச கணக்கராகப் பணிபுரிந்து, அப்போது முக்கியமான ஆவணம் ஒன்றை அரசவையில் இவர் கையால் கசக்கிப் போட, இவர் தன்னிலை மறந்து இறைவியுடன் ஒன்றிப் போய் இந்தக் காரியம் செய்வதை அறியாத சபையினர்
அரசனுக்கும், அரசிக்கும் அவமரியாதை என அவதூறு பேசினார்கள். ஆனால் அதே சமயம் திருவானைக்கா அகிலாண்டேசுவரி கோயிலில், அம்பாளின் ஆடையில் நெருப்புப் பற்றியதைச் சிவாசாரியார்கள் கவனிப்பதற்குள் தாயுமானவர் நுழைந்து தம் கையால் கசக்கி அந்த நெருப்பை அணைத்ததைச் சிவாசாரியார்கள் கண்டனர். அவர்கள்
உடனே ஓடோடி வந்து நடந்ததைக் கூற, தாயுமானவரின் சக்தியைப் புரிந்து கொண்டு அனைவரும் வியந்தனர். தம் எளிய பாடல்கள் மூலம் தமிழ்ச்சமயக் கவிதைக்கு ஒரு தூணாக இருந்தவர் தாயுமானவர். வள்ளலாரும், பாரதியாரும் இத்தகைய எளிய கவிதைகள் பாட இவர் முன்னோடியாகத் திகழ்ந்தார் என்று சொல்வதுண்டு. மட்டுவார்
குழலி என்னும் மங்கையை மணந்து கனகசபாபதி என்ற மகனையும் பெற்று வாழ்ந்தார். மனைவி இறந்த பிறகு, துறவு வாழ்க்கையில் நாட்டங்கொண்டு துறவு பூண்டார். அரசவை பதவியைத் துறந்து திருமூலர் மரபில் வந்த, திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த மௌன குரு என்பவரிடம் உபதேசம் பெற்றுத் துறவு பூண்டார். 1736-ஆம்
ஆண்டு துறவு பூண்ட தாயுமானவரை ஒரு சித்தர் என்பார்கள். அவர் சமரச சன்மார்க்க நெறியைப் பரப்பினார். இவர் பாடல்கள் #தாயுமானவசுவாமிகள்_திருப்பாடற்றிரட்டு என வழங்கப்படுகிறது. தமிழ் மொழியின் உபநிடதம் என அழைக்கப்படும். இதில் 56 பிரிவுகளில் 1452 பாடல்கள் உள்ளன. அவற்றில் 771 பாடல்கள்
கண்ணிகளாகவும், (இரண்டடிப் பாடல் வகை) 83 பாடல்கள் வெண்பாக்களாகவும் உள்ளன. ஆழ்வார்களைப் போன்று காதல் துறைகளின் வாயிலாக உயர்ந்த உண்மைகளை உலகுக்கு உணர்த்தினார். சிற்சில இடங்களில் சித்தர் கருத்தை ஒத்துப் பாடும் இவர், தம் காலத்தில் சமயப் போராட்டங்களை, பூசல்களை கண்டு மனம் வெறுத்துச்
சமரச ஒளியையே அதிகம் பாடியுள்ளார். தேசோமயானந்தம், கருணாகரம், பரஞ்சோதி, பரதெய்வம் போன்ற சொற்கள் இவர்க்கே உரியவை. தான் செய்யும் இறை வழிபாட்டை, 'நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே' (பராபரக்கண்ணி -151) என்று பாடியுள்ளார். சும்மா இருக்க அருளாய்
என்று இறைவனிடம் வேண்டுபவர். இவருடைய #பராபரக்கண்ணி மிகவும் புகழ் பெற்றது. இதில் 389 கண்ணிகள் இடம்பெற்றுள்ளன. 'அண்டகோடி புகழ்காவை வாழும்அகிலாண்ட நாயகி என் அம்மையே!' என்று அம்பாளைப் பாடியுள்ளார். மேலும், இவரின் பாடல்களில் உவமைகளும், பழமொழிகளும் மிகுந்துள்ளன. 'சினம் அடங்கக் கற்றாலும்
சித்தியெலாம் பெற்றாலும் மனம் அடங்கக் கல்லார்க்கு #வாயேன் பராபரமே' என்பது இவரின் இன்னொரு தத்துவ பாடல் வரிகள். தவநெறியில் சிறந்து விளங்கிய தாயுமானவர், பல்வேறு திருத்தலங்களுக்கும் சென்று இறைவனைப் பாடி வழிபட்டார். இறுதியில் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரத்தில் 1742-ல் (தை விசாகம்)
சமாதி அடைந்தார். 'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே' என்னும் இவருடைய வரிகள் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. (பராபரக்கண்ணி - 221)
ஒருசமயம், பூக்களைப் பறிக்கு நந்தவனம் சென்றவர் நந்தவனத்தில் முல்லை, பாரிஜாதம், இருவாட்சி, வில்வம், துளசி என பல
மலர்களும், இலைகளும் நிறைந்திருந்தாலும், எதையும் பறிக்காமல், காலி கூடையுடன் திரும்பினார். ஏன் காலி கூடையுடன் திரும்பியுள்ளாய் என்று பெற்றோர் கேட்டதற்கு, அங்குள்ள மலர்கள், என் கண்களுக்கு மலர்களாகத் தெரியவில்லை. எல்லாம் சிவ உருவமாகவே தெரிகின்றன. சிவத்தைக் கிள்ளி எவ்வாறு சிவத்தில்
போட முடியும் என்று பதில் கேள்வி கேட்டார் தாயுமானவர். "பனிமலர் எடுக்க மனமும் நண்ணேன்” என்று கூறிய தாயுமானவர், “ஆடாக, மாடாக, புழு, பூச்சியாகப் பிறந்திருந்தால் எவ்வாறு சிவபூஜை செய்ய முடியும்? அதனால் மனிதப் பிறப்பை நாம் அனைவரும் விரும்புவோம், மனிதப் பிறப்பை அளித்த இறைவனுக்கு நன்றி
சொல்வோம். அன்பு செய்வோம். பண்பு காட்டுவோம். மனக்குரங்கை அடக்க வேண்டும். மனதை அவனை நோக்கிச் செலுத்த வேண்டும்” என்று அருள்கிறார்.
அறிவோம் நம் மகான்களை. அவர்கள் அறிவுரைப் படி வழி நடப்போம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#சிங்கப்பூர்_சாங்கி_ஶ்ரீராமர்_ஆலயம்
ராமருக்கு பாரதத்தில் மட்டுமன்றி உலகம் முழுவதும் புகழ் உண்டு. தாய்லாந்து நாட்டின் மன்னர்கள் தங்களை ராமா என்று அழைத்துக் கொள்கின்றார்கள். தாய்லாந்தில் ஒரு சில ஊர்களுக்கு அயோத்தி, லவபுரி, காஞ்சனபுரி் என்றெல்லாம் பெயர் சூட்டியுள்ளார்கள்.
சிங்கப்பூரில் கடற்கரையை ஒட்டிய இடமாய் விளங்குவது சாங்கி. இந்த இடத்தில் தான் அமைந்துள்ளது பெருமைகள் நிறைந்த ஸ்ரீ ராமர் ஆலயம். இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலக்கட்டத்தில் சிறிய கிராமமாக இருந்த சாங்கியில் தற்போது ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில் மரத்தடியின் கீழ் ஒரு சிறு கோவிலாகத்
தான் ஸ்ரீ ராமர் ஆலயம் முதன் முதலில் இருந்தது. அச்சமயத்தில் அங்கு வாழ்ந்த தமிழர்களுக்கு அது ஒரு மிகச் சிறந்த வழிபாட்டு தலமாக விளங்கியது. இந்திய ராணுவத்தில் அவசர காலங்களில் பாலங்கள் அமைத்திடும் பொறியியல் பிரிவில் பணியாற்றிய திரு. ராம்நாயுடு என்பவர் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு
Devotees saw with their own eyes that water was coming from the corner of Sri Vishnu Durga's eyes in the Pandaadu Nayaki Sameta Pasupatinatha Swami temple at
PandanaiNallur. This happened on 19th Feb.1986. They rushed and reported the matter to me. I went and had a look. Tears were coming out of Ambal's both eyes! There were no words to describe the agony of our heart. I arranged to bestow worship on a young girl, treating her as
Durga, submitting saubhagya dravyas, and performing the Navakshari mantra japam in front of the Kannika Durga.
"Why is this flaw, mother?" I asked her.
The girl who was sitting as Durga told us that she had a vision of a divine girl who wore a green skirt telling her, "Reduce
சில பெரியோர்களை, எளிய ஆனால் அரிய மனித தெய்வங்களை அவர்கள் மறைவுக்குப் பின் தான் தெரிந்து கொள்கிறோம். இவரை வாழுங்காலத்தே அறிந்து போற்றி வணங்குவோம். #பாலம்_கல்யாணசுந்தரம் (பிறப்பு: ஆகஸ்ட்1940) அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் இந்தியா வந்தபோது அரசு சாரா இருவரை சந்திக்க விரும்பினார்.
ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இன்னொருவர் பாலம் கல்யாண சுந்தரம். 35 ஆண்டுகள் பேராசிரியர் பதவியில் பணிபுரிந்து, பெற்ற சம்பளம் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காக செலவிட்டு, தமது சொந்தச் செலவிற்கு ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தவர். இவ்வாறு 35 ஆண்டுகளாகத் தான் பெற்ற ஊதியம்
ரூபாய் முப்பது லட்சத்தையும் முழுமையாகக் கொடுத்து வரலாறு படைத்தார் பாலம் கல்யாண சுந்தரம் ஐயா. உலகில் எந்த நாட்டைச் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்களோ, தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களோ இவ்வாறு செய்ததில்லை என்பதால் அமெரிக்காவில் “ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்”
#ஶ்ரீகிருஷ்ணன்_கதைகள்
குசேலர் என்னும் சுதாமா கிழிசல் துணியில் அவலை முடிந்து வந்தார். அதை ஒரு பிடி வாயில் போட்டுக் கொண்ட அடுத்த நிமிடம் அந்த ஏழையின் குடிசை, மாட மாளிகையாக மாறியது. அவருக்குச் செல்வத்தைக் கொடுத்தார்.
திரௌபதியின் வஸ்திரத்தை துச்சாதனன் உருவிய போது சேலைகளைக் கொடுத்து
அவள் மானத்தைக் காத்தார்.
துரியோதணனும் அர்ஜுனனும் போருக்கு உதவி கேட்டு வந்தனர்.
துரியோதனன் எல்லா படைகளையும்
கேட்டான். எடுத்துக் கொள் என்று சொல்லி எல்லா ஆயுதங்களையும் படைகளையும் துரியோதணனுக்குக் கொடுத்தார். கண்ணன் மீது பரிபூரண பக்தி கொண்ட அர்ஜுனனுக்கு
தன்னையே கொடுத்தார்.
அவனுக்கு சாரதியாக அமர்ந்தார். ஆக உடல் உழைப்பைக் கொடுத்தார்.
கோபியர்கள் மட்டற்ற, மாசு மருவற்ற, தூய, மனம் திறந்த அன்பைப் பொழிந்தனர். அதைப் பன்மடங்கு அவர்களுக்கு திருப்பித் தந்து புல்லாங்குழல் இன்னிசையால் அவர்களை மகிழ்வித்தார்.
#மகாபெரியவா
நன்றி: ஸ்ரீ கணேச சர்மா அவர்கள் சங்கரா தொலைகாட்சியில் செய்த உரையை தழுவியது. எழுதியவர்-கார்த்தி நாகரத்தினம். #சுந்தரகாண்டம் நூறாவது உபன்யாசம் நிகழ்த்தப் போகும் ஓர் உபன்யாசகர், அறிஞர், பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு போய், நமஸ்காரம் செய்தார்.
“என்ன செய்யப் போறே?”
என்றார் ஐயன்.
பத்திரிக்கையிலேயே போட்டிருக்கே, சுந்தரகாண்டம் நூறாவது உபன்யாசம் என்று. அப்புறம் ஏன் பெரியவா கேட்கிறார்?
வேறு ஒன்றும் இல்லை. சுந்தரகாண்டம் என்று பெரிதாக போடவில்லை. நூறாவது உபன்யாசம், இன்னார் செய்கிறார் என்பது பெரிதாக, சுந்தரகாண்டம் என்பது சிறிய எழுத்துக்களில்
இருந்ததால், சூசகமாக தெரிவித்தார் பெரியவா. புரிந்து கொண்டார் உபன்யாசகர்.
“நூறு தடவை சுந்தரகாண்டம் சொன்ன உன் கிட்ட தான் கேட்கணும். ஆஞ்சநேயர் அசோக வனத்திலே எந்த மரத்தின் மேலே உக்காந்துண்டு சீதையை தேடினார்?”
#SitaNavami2023 also known as ‘Sita Jayanti’ or ‘Janaki Navami’ is an important Hindu observance that is dedicated to Goddess Sita, consort of Lord Rama. Sita Navami is today April 29. This day celebrates the birth day of Devi Sita and is observed on the ‘Shukla Paksha’ (the
waxing phase of moon) ‘Navami’ (9th day) tithi in the lunar month of ‘Vaishaka’ as per the Hindu calendar. It is believed that Devi Sita was born on Pushya Nakshatra. Lord Rama was also born on the same tithi in the ‘Chaitra’ month and the celebrations of Rama Navami take place a
month in advance of Sita Navami. Sita Navami holds great religious significance for Hindu devotees as she is an incarnation of Goddess Lakshmi. She is the mother of all mortals and other living creatures. Devi Sita was found by King Janaka and raised by him. So she was also